PDA

View Full Version : காதலாகி....



inban
17-11-2011, 02:49 PM
1

"எப்போது வருவாய்"
என்கிறேன்
"நாளைக்கு"
என்கிறாய்
பாதகி
இன்றிரவு
நான் எப்படி உறங்குவது?

2

'சந்தடி மிகுந்த சாலையில்
வேகமாக ஓட்டாதிர்கள்'

பின்னால் அமர்ந்தபடி
பயத்தோடு புலம்புகிறாய்

அடியே
சாலைக்கு ஒன்று
சரசத்துக்கு மற்றொன்றா?!

3

'மெதுவாகப் படியேறு'
செல்லமாய் நான் சொன்னதும்

'என்மீது
எவ்வளவு கரிசனம்'
பாசத்தோடு தழுவுகிறாய்

முட்டாள் பெண்ணே

குலுங்கும் அடிமனத்தின்
குமுறல் தெரியுமா உனக்கு !?

4

முத்தத்துக்கான
ஒரு மெல்லிய போராட்டத்தில்
உன் நகம் பட்டு
என் உதடு கிழிந்தது
ரத்தம் வழிந்தது

ஆமாம்
வழியும் ரத்தத்துக்கு
தேனின் சுவை
எங்கிருந்து வந்தது?!

பிரேம்
21-11-2011, 11:58 PM
கவிதை அத்தனையும் சூப்பர் சார்..:)

inban
01-12-2011, 06:53 AM
நன்றி நண்பரே .....

sarcharan
02-12-2011, 11:38 AM
கவிதைகளை படித்தவர்கள் கைக்குட்டை கொண்டு வாயை துடைக்கவும் :D:D:D:D:D:D

அருள்
04-12-2011, 01:29 PM
அருமை ......

inban
08-12-2011, 06:40 AM
நன்றி நண்பர்களே.....

Ravee
08-12-2011, 07:53 AM
கவிதைகளை படித்தவர்கள் கைக்குட்டை கொண்டு வாயை துடைக்கவும் :D:D:D:D:D:D


:aetsch013: கை துண்டு மேல் ... :lachen001: :D ...........:icon_b:

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 03:19 PM
கவிதைகள் அருமையாக உள்ளன....காதல் வயப்பட்டவர்களாலதான் இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக எழுதமுடியும்:)