PDA

View Full Version : சர்வதேச மாணவர்கள் தின குறட்கவிதை



அதி. இராஜ்திலக்
17-11-2011, 06:16 AM
தூய அறிவு தொய்யா முயற்சியே
துன்பமிலா மாணவன் மாண்பு.

கௌதமன்
17-11-2011, 12:26 PM
தூய அறிவு தொய்யா முயற்சியே
துன்பமிலா மாணவன் மாண்பு.

தூ-வுக்கு து என்பது சரி. ஆனால் துன்பம் என்பது பொருளளவில் பொருத்தமில்லையே. பொறுங்கள் நண்பர் குணமதியோ, ஜெகதீசன் ஐயாவோ, நண்பர் கீதமோ பொருத்தமான சொல் தருவார்கள்.

M.Jagadeesan
17-11-2011, 02:50 PM
தூய அறிவுடன் தொய்வில்லா நன்முயற்சி
ஆய கலைபயில்வான் மாண்பு.

நண்பர் கெளதமன் கேட்டுக் கொண்டதால் இக்குறட்பா எழுதினேன். நண்பர் ராஜ்திலக் பொறுத்தருள்க.

அதி. இராஜ்திலக்
19-11-2011, 04:56 AM
மிக்க மகிழ்ச்சி தங்கள் குறட்மிகச்சிறப்பே. நான் அறிவியல் மாணவன் எனவே இலக்கணம் அறியும் ஆவல் உள்ளது. பொருட் பொருத்தம் உணர்த்தியமைக்கு நன்றி. இது உணராமல் வெவ்வேறு இணையதளங்களில் பல பொருட்கொண்ட குறள்வரி கவிதைகளை பதிவு செய்துவிட்டேன் திருத்தி கொள்கிறேன். நன்றி நன்றி ஐயா !