PDA

View Full Version : யார் பொருளாதார விற்பனர்கள்?



Vijisri
16-11-2011, 03:58 AM
படிப்பறிவில்லாத சாமான்யரும் மெத்த படித்த மேதாவிகளும் ஒருங்கே விவாதிக்க கூடிய ஒரு தலைப்பு என்றால் அது பொருளாதார கல்வியில் மட்டுமே சாத்தியம். கற்றவர்கள் புத்தகம் படித்து மனனம் செய்து வைத்ததை கருத்து என்றும் கல்லாதவர்கள் பட்டறிவால் கண்டதை கருத்து என்றும் சளைக்காமல் விவாதிக்கலாம். ஆனால் சில தனியார் மற்றும் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதாயம் கிட்டும் வகையில் சிலர் தங்களை பொருளாதார மேதாவி என்று கூறிக்கொண்டு கருத்து திணிப்பு நடத்தவும் செய்கின்றனர். Lobbyist எனப்படும் இம்மாதிரியான நீரா ராடியாக்களை தமிழ் கூறும் நல் உலகம் இனம் கண்டு கொள்கிறதா? துக்ளக் 'சோ', சுப்ரமணிய சுவாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி, காங்கிரஸ் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் விற்பனர்களா? இல்லை இவர்கள் கூறுவது கூறட்டும். எங்களுக்கு சரியானது எது என்று நாங்கள் சத்தமின்றி தீர்மானம் செய்வோம் என்று தமிழ் கூறும் நல் உலகம் உஷாராக உள்ளதா? விவாதிப்போமா?

vseenu
16-11-2011, 03:15 PM
யார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே ஏற்பதை நாம் நிறுத்திக்கொண்டால்
எந்த பிரச்சனையும் இல்லையே.Leaders destroy the followers and followers destroy the leaders என்பதற்கேட்ப நம் செயல்கள் இருக்கலாகாது.அனைத்தையும் அறிவு பூர்வ சிந்தித்தால் நமக்கே விளங்கும்

Nivas.T
17-11-2011, 08:06 AM
இலவசம் என்னும்ஒரு விடயமே இல்லை என்றால் யார் நம்பப் போகிறார்கள். தனியார் துறை எதுவாக இருந்தாலும் லாபநோக்கம் மட்டுமே கொண்டு செயல் படும் என்ற அடிப்படி விடயத்தை தெளிவுபடுத்திக் கொண்டாலே போதும். யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவோம் என்று என்று அவர்கள் நினைக்கிறார்களோ அன்றே அவர்களுக்கு சரிவு தொடங்கிவிடும்.

தனியார்மயம் இந்திய வர்த்தகக் கம்பெனியாக இருந்தால் கூட பரவாயில்லை. வெளிநாட்டு வர்த்தக துறையாய் இருந்தால் அது கண்ணுக்கு புலப்படாத ஒரு அடிமைத்தனமே ஒளிந்திருக்கும்

Nokia மொபைல் போன் இந்தியாவில் தயாரிக்கப் படுகிறது என்பதற்காக Nokia இந்திய கம்பெனி ஆகிவிடாது.