PDA

View Full Version : வேண்டுகிறேன்



அதி. இராஜ்திலக்
08-11-2011, 09:33 AM
அம்மா அப்பா வணங்குகிறேன்
அறிவு குருவே வணங்குகிறேன்
பரம் பொருளே வணங்குகிறேன்
பைந்தமிழே வணங்குகிறேன்
உலககெங்கும் நன்மை வேண்டும்
ஒற்றுமையால் வாழ்வு வேண்டும்
ஆக்கத்தினால் அமைதி வேண்டும்
அன்பினால் உறவு வேண்டும்
எல்லா வளத்திலும் இருப்பு வேண்டும்
இப்பிறவிபயனை அடைய வேண்டும்.

கீதம்
08-11-2011, 07:46 PM
நல்ல சிந்தனையோடு கூடிய கவிதை நன்று.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

vseenu
09-11-2011, 01:16 AM
நல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை. பாராட்டுக்கள். .நன்றி.

சான்வி
09-11-2011, 03:12 AM
வேண்டுவன, அனைத்தும் வேண்டிய வண்ணமே கிட்ட வாழ்த்துக்கள்.

அழகான கருத்துக்கள் கொண்ட அருமையான வரிகள்.

அதி. இராஜ்திலக்
09-11-2011, 04:50 AM
அனைத்து பின்னோட்டம் நல்கிய அன்பு உள்ளங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன் !

Nivas.T
09-11-2011, 08:53 AM
பாராட்டுகள் நண்பரே

தொடர்ந்து எழுதுங்கள்

M.Jagadeesan
09-11-2011, 11:19 AM
தொடர்ந்து எழுதுங்கள். கவிதை நன்று.

பிரேம்
09-11-2011, 11:43 AM
வேற என்ன வேணும்..சொல்லிடுங்க..எல்லாமே கிடைக்கும்..:)

அதி. இராஜ்திலக்
10-11-2011, 03:04 AM
தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி
மங்கலமாய் மா பல கவிதை மடை திறந்து வருமே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 09:59 AM
வேண்டும் வணக்கமே வேண்டும் எனக்கும்தான்
யாண்டுமின் பம்வேண்டும் இங்கு
நன்று இராஜ்திலக் அவர்களே :)