PDA

View Full Version : சுவை



ஆதி
07-11-2011, 03:00 PM
என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை

தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன

பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது

மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய்
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

கூட்டித்தள்ளிவிட முடிகிற
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.

யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!

கீதம்
08-11-2011, 03:33 AM
அழுத்தும் தனிமையின் பாரம் தாங்கவியலா மனம் கொண்ட கழிவிரக்கத்தின் வெளிப்பாடாய் அழுகைப்புலம்பல்கள். இறுகிக் கிடக்கும் பாறையையும் உடைத்துக் கிளம்பலாம் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கண்ணீரின் ஜீவநதி, ஆனந்தத்தின் அடையாளத்துடன்! அப்போது அழுகையின் சுவையும் வேறுபடலாம்.

தனிமை பற்றிய உங்கள் பார்வை என்னிலும் முரண்பட்டது என்றாலும் அழகாய் காட்சிப்படுத்தியதை ரசித்தேன். ஒதுக்கிவிட இயலாததும், பெயர்த்துவிட இயலாததுமாய் மனதில் படிந்த உவமைகள் வெகு பொருத்தம். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள் ஆதன்.

சான்வி
09-11-2011, 03:16 AM
தனிமை உணர்வு கொடிதெனினும், அதை வரிகளில் வடித்த விதம் இனிமை. :aktion033:

Nivas.T
09-11-2011, 08:49 AM
விரட்டியடித்தாலும் விடுவதில்லை
இந்தத் தனிமை என்னை
தண்ணீர்த் தொட்டியை நாடிவரும்
தேனீயோ என்பதுபோல்

கனத்தாலும் சரி கரைத்தாலும் சரி
ரசிக்கமுடிகிறது என்னால்
சிலநேரம் தேனின் சுவையை நினைவுபடுத்தினாலும்
பல நேரம் கொட்டிவிடவே செய்கிறது

இருந்தாலும் என்னால் ரசிக்க முடிகிறது
தேன்சுவை நினைவையும், மரண வலியையும்

பிரேம்
09-11-2011, 11:48 AM
தனிமையை பற்றி நிறையவே யோசித்து இருக்கிறீர்கள்..தனிமையில்..! அருமை...

jaffer
19-11-2011, 04:39 AM
தனிமையிலே இனிமை காண முடியுமா..........

matheen
20-11-2011, 08:26 AM
துயரம் வந்து உயரங்கள்
வராமல் போவதில்லை.....
துயரத்தை விட்டு உயரத்தைப்பார்
அது எங்கோ இருக்கையில்
நீ மட்டும் ஏன்???

கலாசுரன்
26-11-2011, 05:23 AM
என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!


மிகவுன் ரசித்தேன் இந்த வரிகளை... :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-11-2011, 02:21 PM
தனிமை கொடிதுதான். ஆதை கவிதையில் கொடுவித்த விதம் இன்னும் கொடிது.
தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன

அழுகைக்கு தனிமை அவசியமில்லை. ஆனால் சில தனிமையில் அழுகை கட்டாய அவசியங்களாகின்றன. நன்றாய் தனிமையை அழுது வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.