PDA

View Full Version : ..!!..!!..

கலாசுரன்
04-11-2011, 05:52 AM
*
உடலில் ஓடும் நதிகளை
ஒவ்வொன்றாக நசுக்கி
மனக்கடலினடியில்
எறிந்துகொண்டிருக்கிறான்

தாயொருத்தி ஆறுதலுக்கு நீட்டிய
பிச்சைப் பாத்திரத்தை
உடைத்தெறிய புதுவிதமானதொரு
முகபாவத்தை அணிந்தபடி
விழியோங்கி நிற்கிறான்

தாயவளுக்கு நிம்மதி
படைப்பு மிகவும்
விசித்திரமானதாக இருக்கிறது

அவள் தன்னிலிருந்து
தன் உடலைப் பிடுங்கி
குவித்துப்போட்டு எரிக்கத் தொடங்கினாள்..
*
***
கலாசுரன்

பூமகள்
18-11-2011, 07:37 AM
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லையே.. ஒருவேளை எனக்கு கவிதை மறந்து விட்டதா?? :eek::eek:

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2011, 10:13 AM
தோழர் கலாசுரன் தலைப்பாக கொடுத்துள்ளது அட்சுரம் பிசகாமல் கவிதையில் பொருந்துகிறது...

Nivas.T
18-11-2011, 11:21 AM
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லையே.. ஒருவேளை எனக்கு கவிதை மறந்து விட்டதா?? :eek::eek:

கலாசுரன் கவிதைய படிச்சா இப்படித்தான்

தலையபோட்டு பிச்சுகிட்டத்தான் கொஞ்சம் புரியும். :sprachlos020::sprachlos020::sprachlos020:

M.Jagadeesan
18-11-2011, 02:55 PM
எனக்கும் எதுவும் புரியவில்லை.

jaffer
19-11-2011, 04:42 AM
போட்டு தாக்கு - உலக நடப்பு என்ன செய்ய????!!!!

கீதம்
20-11-2011, 09:58 PM
கவிதையின் பொருளை பலவாறாக விளங்கிக் கொள்கிறேன்.

1. உலகவெப்பமயமாதல் குறித்துச் சொல்வதாக நினைத்துக் கொள்கிறேன். நதிகளையும், மழையையும் அலட்சியப்படுத்துவதால் உண்டாகும் பெருந்தணலின் தகிப்பைக் காட்டுவதாகப் புரிந்துகொள்கிறேன்.

2. மரத்துப் போன மனிதமும், தியாகத்தில் ஊறிய தாய்மையும் சந்திக்கும் தருணங்களைக் காட்சிப்படுத்துவதாக நினைக்கிறேன்.

3. கவிஞரின் குழம்பிய மனநிலையைக் குறிப்பிடுவதாகவும் எண்ணத் தோன்றுகிறது. (கலாசுரன் கோபிக்காமலிருப்பாராக!):)

கலாசுரன்
21-11-2011, 11:47 AM
பூமகள்;537932]என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லையே.. ஒருவேளை எனக்கு கவிதை மறந்து விட்டதா?? [/B]:eek::eek:

கவிதை புரியாமை பற்றி சொல்வது தான் பெரிய சிரமம்..

கவிதையில் செவ்வனே பயணிக்கும் பட்சத்தில் எதுவும் புரியாமல் போய்விடுவதில்லை :)

கவிதை இது தான் சொல்வதென்று எழுத்தாளன் சொல்வதென்பது எனக்கு முரண்பட்ட விஷயமாகவே இருக்கிறது. மொழியற்றிருக்கும் கவிதைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அது கொண்டிருக்கும் அர்த்தத்தை புரிதல் ஒரு நெடிய வாசிப்புப் பயணத்தின் இறுதியில் நிச்சயம் புரிதலுக்கு வரும் என்பது எனது அனுபவம்..:)

எனது கூற்றில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும் .. :)

நன்றி :)

கலாசுரன்
21-11-2011, 11:50 AM
தோழர் கலாசுரன் தலைப்பாக கொடுத்துள்ளது அட்சுரம் பிசகாமல் கவிதையில் பொருந்துகிறது...

இது ஒரு வஞ்சப் புகழ்ச்சியணி இல்லை என்று நான் நினைத்துக்கொள்ளலாமா?

பின்னூட்டத்திற்கு நன்றி :)

கலாசுரன்
21-11-2011, 11:53 AM
கலாசுரன் கவிதைய படிச்சா இப்படித்தான்

தலையபோட்டு பிச்சுகிட்டத்தான் கொஞ்சம் புரியும். :sprachlos020::sprachlos020::sprachlos020:

என்னைப் போன்றே என் கவிதையையும் கொஞ்சமாவது புரிந்துகொள்ளவேண்டுமென முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

அப்படியானால் மிக்க மகிழ்ச்சி ..!
மற்றும் நன்றி ..:)

கலாசுரன்
21-11-2011, 11:55 AM
எனக்கும் எதுவும் புரியவில்லை.

பூமகளிடம் சொன்னதையே உங்களிடமும் சொல்ல விரும்புகிறேன்..

நன்றி.. :)

கலாசுரன்
21-11-2011, 11:57 AM
போட்டு தாக்கு - உலக நடப்பு என்ன செய்ய????!!!!

நானும் உலக நடப்பில் உட்பட்டவன் தானென்று நிச்சயமாக சம்மதிக்கிறேன்.. :)

நன்றி.. :)

கலாசுரன்
21-11-2011, 12:11 PM
கவிதையின் பொருளை பலவாறாக விளங்கிக் கொள்கிறேன்.

1. உலகவெப்பமயமாதல் குறித்துச் சொல்வதாக நினைத்துக் கொள்கிறேன். நதிகளையும், மழையையும் அலட்சியப்படுத்துவதால் உண்டாகும் பெருந்தணலின் தகிப்பைக் காட்டுவதாகப் புரிந்துகொள்கிறேன்.

2. மரத்துப் போன மனிதமும், தியாகத்தில் ஊறிய தாய்மையும் சந்திக்கும் தருணங்களைக் காட்சிப்படுத்துவதாக நினைக்கிறேன்.

3. கவிஞரின் குழம்பிய மனநிலையைக் குறிப்பிடுவதாகவும் எண்ணத் தோன்றுகிறது. (கலாசுரன் கோபிக்காமலிருப்பாராக!):)

ஒவ்வொரு கவிதையிலும் உங்களது வாசிப்பு பயணத்தை நான் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் கீதம்.

அந்த விடா முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்..!!

நீங்கள் உங்கள் சிந்தனைகளை இக்கவிதையில் பலகோணங்களில் பாய்ச்சி பின்நூட்டமளித்திருக்கிரீர்கள்.

இக்கவிதை ஒற்றை அர்த்தத்தை மட்டும் தருவதல்ல என்ற உங்களது சூக்குமமான உள்ளுணர்வை பாராட்டாமல் இருக்கவே முடியாது என்பது உண்மை.

மூன்றாமது நீங்கள் சொல்லும் இக்கவிதையின் விளக்கத்திற்காக நான் ஏன் கோபப்படவேண்டும் கீதம்.

விளக்கம் உங்களுடையது .. :)

கூர்ந்து கவனித்தல் ஆராய்தல் மற்றும் அறநெறிகளுடனும் சூழல்களுடனும் வார்த்தைகளை இணைத்தும் பிரித்தும் பார்த்தல் போன்றவற்றை கவிதை வாசிப்பில் மிகவும் தேவை என்பதை உங்களுக்கு எவரும் சொல்லித் தரவேண்டியதில்லை என்பது உங்களது பின்னூட்டங்களிலிருந்து நன்றாகவே புரிகிறது.. வாழ்த்துக்கள் :)

மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகள் .. :)