PDA

View Full Version : சாபக்கேடு

கீதம்
02-11-2011, 05:21 AM
செவ்வனே திரிகிறேன்,
சிற்றுயிர்கள் தயவால் ஜீவித்திருக்கிறேன்,
அங்ஙனமே விட்டுவிட்டால்
ஆர்க்கும் தொந்தரவில்லை,
அறியாது என்னை தொடர்கிறார்,

பாதையிலே குறுக்கிட்டால்
பதறிக் கழியெடுக்கிறார்,
தலையுயர்த்தி எதிர்கொண்டால்
உச்சியில் நச்சென்றடித்து வீழ்த்துகிறார்.

அற்பமெனவும் விலக்காமல்
ஆனையெனவும் விலகாமல்
அடித்தே கொல்வதென்று
அநியாயத்துக்கு வன்மம் காட்டுகிறார்.

புற்றினுள் புகுந்தாலும்
போகட்டுமென்று விடுவாரில்லை.
பாலூற்றி என் நிம்மதி பறிக்கிறார்.
சர்ப்பமாய்ப் பிறந்ததேயென் சாபக்கேடோ?

Nivas.T
02-11-2011, 06:33 AM
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்

இங்கு பாம்பு அதன் நிலமையைசொல்லி வருந்துகிறது

என்ன செய்வது, வழியும் வருத்தமும் அவரவருக்கு வந்தால்தானே தெரியும்

அருமையான கவிதைங்க

vseenu
02-11-2011, 03:51 PM
பாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு கவிதை.அருமை.எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறது.

ஆதி
02-11-2011, 04:00 PM
உழலும் மனம் ஒவ்வொன்றிக்கும் இந்த கவிதை பொருந்தும்..

பாம்பிற்கு சாபம் ஏதேன் கிடைத்த கதை விவிலியத்தில் உண்டு, அதையும் சேர்த்து கொடுத்திருக்கலாம்..

பாம்புகள் நிஜத்தில் மிக பயந்த பிராணி, அதைவிட பயந்தவர்கள் நம்மில் சிலர்.. இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது எதிரெதிர் திசையில் ஓடுவார்கள்..

உயிரி தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒரு முறைப்பார்த்தேன், ஒரு வகை பாம்பு காட்டில் தனக்கான எல்லை கொண்டு வாழ்க்கிறது, அந்த எல்லைக்குள் யார் புகுந்தாலும் வந்து கொத்திவிட்டு திரும்புகிறது. ஏரியா விட்டு ஏரியா வந்தா இதான் கெதி, என்று சொல்லாம* சொல்லும் போலும்..

வாழ்த்துக்க*ள் அக்கா...

ஜானகி
02-11-2011, 11:49 PM
மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் ஜீவ சக்தியின் நிலையினைச் சுட்டுகிறதோ....?....நன்று !

பிரேம்
03-11-2011, 09:51 AM
இரங்கல் கவிதையா..அருமை..

கீதம்
20-11-2011, 11:20 PM
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்

இங்கு பாம்பு அதன் நிலமையைசொல்லி வருந்துகிறது

என்ன செய்வது, வழியும் வருத்தமும் அவரவருக்கு வந்தால்தானே தெரியும்

அருமையான கவிதைங்க

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நிவாஸ்.

பாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு கவிதை.அருமை.எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறது.

கருத்திட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி சீனு அவர்களே. .

உழலும் மனம் ஒவ்வொன்றிக்கும் இந்த கவிதை பொருந்தும்..

பாம்பிற்கு சாபம் ஏதேன் கிடைத்த கதை விவிலியத்தில் உண்டு, அதையும் சேர்த்து கொடுத்திருக்கலாம்..

பாம்புகள் நிஜத்தில் மிக பயந்த பிராணி, அதைவிட பயந்தவர்கள் நம்மில் சிலர்.. இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது எதிரெதிர் திசையில் ஓடுவார்கள்..

உயிரி தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒரு முறைப்பார்த்தேன், ஒரு வகை பாம்பு காட்டில் தனக்கான எல்லை கொண்டு வாழ்க்கிறது, அந்த எல்லைக்குள் யார் புகுந்தாலும் வந்து கொத்திவிட்டு திரும்புகிறது. ஏரியா விட்டு ஏரியா வந்தா இதான் கெதி, என்று சொல்லாம* சொல்லும் போலும்..

வாழ்த்துக்க*ள் அக்கா...

நீங்கள் சொல்வதுபோல் கடவுளின் முதல் சாபத்துக்கு ஆளான கதையையும் சேர்த்திருக்கலாம். எழுதும்போது நினைவுக்கு வரவில்லை ஆதன். வாழ்த்துக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி ஆதன்.

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் ஜீவ சக்தியின் நிலையினைச் சுட்டுகிறதோ....?....நன்று !

எவரும் காணாத ஒரு விசேடக் கோணத்தில் பார்வையைச் செலுத்தி, தாங்களிடும் பின்னூட்டக் கருத்துக்கள் என்னை எப்போதுமே வியக்கவைக்கும். இப்போதும் அப்படியே. நன்றி ஜானகி அம்மா.

இரங்கல் கவிதையா..அருமை..

ம்... அப்படியும் சொல்லலாம். பின்னூட்டத்துக்கு நன்றி பிரேம்.