PDA

View Full Version : ஒலி அலைகள் - எனக்கு தெரிந்தவை !!

dhilipramki
01-11-2011, 11:12 AM
ஒலி அலைகள் - எனக்கு தெரிந்தவை !!

ஒலி, அதிர்வுகளால் உண்டாக்க படுபவை. அதிர்வுகளால் உருவாகும் அலைகள், ஊடகங்கள் (காற்று, தண்ணீர், உலோகம்..)மூலம் நம் காதுகளை வந்து சேர்கின்றன.

நம் காதுகளும் அவ்வளைகளுக்கு ஏற்ப அதிர்ந்து ஒலியை உண்டாக்குகிறது.

நாய்களால் மனிதர்களை விட அதிகளவு ஒலி அலைகளை உணர முடியும்.

வெற்றிடத்தில் ஒளி (light)அலைகள் பயணிப்பது போன்று ஒலி அலைகள் பயணிக்க இயலாது. ஒலியை ஒரு இடத்தில் இருந்து மறு இடம் கடத்த, ஒரு ஊடகம் தேவை.

ஒலி அலைகள் நிமிடத்திற்கு 340 மீட்டர்கள் வரை செல்லும். தண்ணீரில் நான்கு மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். மழைக்காலத்தில் தூரத்தில் இருந்து வரும் சப்தம், மிக விரைவில் கேட்பதற்கு காரணம் இது தான்.

ஒலியை பற்றி அறிவியலின் படிப்பிற்கு, அகோஸ்டிக்ஸ் (acoustics) என்று பெயர்.

ஒரு வரையறுக்கப்பட்ட, நேர்த்தியான ஒலிகளின் அமைப்பே, இசை என்கிறோம்.

மின்னலால் ஏற்படும் கடும் வெப்பத்தால், திடீரென விரிவடையும் காற்றின் ஒலியே இடி முழக்கம்.

நன்றி

Nivas.T
01-11-2011, 11:43 AM
நல்ல தகவல்கள்
நன்றி

dhilipramki
01-11-2011, 02:47 PM
பாராட்டுக்கு நன்றி தோழரே. :)

vseenu
01-11-2011, 05:22 PM
அறிந்திராத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

அன்புரசிகன்
02-11-2011, 02:16 AM
மல்லிகைச்செடி அருகில் நாயை கட்டிவைத்தால் அது இரவு முழுவதும் குரைத்துக்கொண்டிருக்குமாம். காரணம் அந்த மொட்டுவிரியும் சத்தத்தை கூட நாயால் உணரமுடியும் என்று சொல்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

dhilipramki
02-11-2011, 05:33 AM
மல்லிகைச்செடி அருகில் நாயை கட்டிவைத்தால் அது இரவு முழுவதும் குரைத்துக்கொண்டிருக்குமாம். காரணம் அந்த மொட்டுவிரியும் சத்தத்தை கூட நாயால் உணரமுடியும் என்று சொல்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

சரியான விளக்கமாகத் தெரிகிறது. நன்றி.

குணமதி
13-11-2011, 02:21 AM
மல்லிகைச்செடி அருகில் நாயை கட்டிவைத்தால் அது இரவு முழுவதும் குரைத்துக்கொண்டிருக்குமாம். காரணம் அந்த மொட்டுவிரியும் சத்தத்தை கூட நாயால் உணரமுடியும் என்று சொல்கிறார்கள்.

இது நம்பிக்கை அடிப்படையிலான செய்தியா, இல்லை அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதா?

அன்புரசிகன்
13-11-2011, 03:35 AM
இது நம்பிக்கை அடிப்படையிலான செய்தியா, இல்லை அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதா?
எமது விஞ்ஞான பாடவிதானத்தில் படித்தது. சாதாரண மனிதனால் கேட்க்கக்கூடிய ஒலியின் அளவு 20Hz - 20kHz... இந்த வரையறைக்கு அப்பாற்பட்டதை நம்மால் உணரமுடியாது. ஆனால் நாய் பூனை புலி சிங்கம் டொல்பின் போன்றவற்றிற்கு அப்படி அல்ல. அவற்றால் இவற்றிற்கு அப்பாற்பட்ட சில எல்லைகளையும் கேட்க்க முடியும். அதாவது மல்லிகை மொட்டு விரியும் போது எழும் சத்தத்தை உணரும் வலிமை நாய்க்கு உண்டு.

சில இடங்களில் நுளம்பை விரட்டுவதற்கு ஒரு மின்சாதனம் பயன்படுத்துவார்கள். அது ஒருவித ஒலியை எழுப்புமாம். ஆனால் அதை எம்மால் உணரமுடியாது. ஆனால் நுளம்பை பொறுத்தவரை அது அவர்களின் உச்ச வரப்பு ஒலி. அந்த எரிச்சல் தரும் ஒலியால் நுளம்பு ஓடிவிடும் என்கிறார்கள்.

dhilipramki
13-11-2011, 05:07 AM
இது நம்பிக்கை அடிப்படையிலான செய்தியா, இல்லை அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதா?

நம்பிக்கை என்றால்? எந்த விதமான நம்பிக்கை? புரியவில்லை.

பூகம்பம் வருமுன் சில நிமடங்கள் முன் நாய்கள் போன்ற மிருகங்கள் குறைத்துக்கொண்டு ஓடி விடுகிருதே, அது இதன் காரணம் தான். டெக்டானிக் தரைத்தகுடுகள் நகரும் அதிர்வையும், சிறு ஒலி அலைகளையும் அவைகளால் உணரமுடியும் என்ற காரணத்தினால்.

ஆனால் மனிதர்களால் அவ்வாறு உணரமுடியாது. நன்றி.