PDA

View Full Version : காதலர் தின கவிதைகளில் ரசித்தவை.



lavanya
07-04-2003, 12:10 PM
ரயில் சென்றுவிட்ட
கடைசி நொடியின்
நிசப்தத்தில் பேச
ஆரம்பிக்கின்றேன்
ரயிலில் சென்றுவிட்ட
உன்னிடம்......
--------------------------------------------------------------------
விபத்தில் அடிபட்ட எவனோ ஒருவனைக்
காட்டிலும் அதிகமாக
அலறிய அன்றுதான்
என் அன்னை என்றும் உணர்ந்தேன் உன்னை.....
----------------------------------------------------------------------
எதிரொலிக்கும் மலைத் தொடரில்
தனித்து நின்று உன் பெயரை
உரத்துக் கூவுகிறேன்
எதிரொலியாக வருகிறது
என் பெயர்....
எங்கிருக்கிறாய் நீ...?
--------------------------------------------------------------
ஈரக் கால்களில் கொலுசு
சளி பிடித்து விடுமோ
சங்கீதத்துக்கு.....!
------------------------------------------------------------
மறந்து விடத்தான்
நினைக்கிறேன்
ஆஷ்ட்ரே நிறைய
உன் ஞாபகங்கள்....!

rambal
07-04-2003, 01:23 PM
* மின்சாரம் எனை
பாதித்ததில்லை...
ஏனெனில்,
மின்னல் கொடியவள்
பார்வை
தினமும் எனை
தாக்குவதால்....

* அவளைக் கைது
செய்யுங்கள்...
கண்களில் RDX...

* கண்களில் ஏதும்
காந்த சக்தி இருப்பதாக
இயற்பியல் சொல்லவில்லையே...
பின் எப்படி
உன் கண்களில் மட்டும்?

காதலைப் பாட வந்த காதல் கவிஞைக்கு வாழ்த்துக்கள்..

poo
07-04-2003, 01:42 PM
உன் மின்னல் சிரிப்பால்
உளறல்கள்..
உன் பார்வை மழையால்
இன்ப பூக்கள்..
உன் நினைவென்றால்
கவிதைகள்..

-லாவண்யாவிற்கு மீண்டும் பாராட்டுக்கள்!!!

இளசு
07-04-2003, 06:18 PM
லாவண்யா அவர்களே
முதல் நான்கு பதிவுகளை உங்களோடு இணைந்து நானும் ரசிக்கிறேன்....
பாராட்டுகள்.

ஆஷ்டிரே வடிகால் வேண்டாமே
புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்ற எண்ணி
புற்று வளர்க்கும் தம்பிகள் கணக்கு
குறைய வேண்டும், மறைய வேண்டும்....

பட்டுத் தெளிந்த அண்ணன் சொல்கிறேன்
கெட்டபின் வந்த ஞானத்தில் சொல்கிறேன்...

chezhian
07-04-2003, 08:13 PM
நல்ல கவிதைகள்....

அருமை லாவண்யாஜி!

anushajasmin
07-04-2003, 11:51 PM
சின்ன சின்ன மொட்டுகளாய் பூத்திருக்கும் உங்கள் அனைத்தும் கவிதையும்
ரசிக்கும்படி உள்ளது

இளசு
08-04-2003, 05:53 AM
சின்ன சின்ன மொட்டுகளாய் பூத்திருக்கும் உங்கள் அனைத்துக் கவிதையும்
ரசிக்கும்படி உள்ளது

அனுஷா அவர்களே

ஐந்தாவது ஆஷ் டிரே கவிதையுமா..???? :(

poo
08-04-2003, 02:09 PM
அண்ணா என்னங்ணா இப்படி மடக்கறீங்களே?!!

anushajasmin
09-04-2003, 09:50 PM
அதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா
நக்கீரரே

இளசு
09-04-2003, 10:29 PM
அதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா
நக்கீரரே

மன்னிக்க வேண்டுகிறேன்....

குமரன்
10-04-2003, 01:34 AM
மெளனமாய்
காதலைப் பற்றி
பேசும் கவிதைகள்...
அனைத்தும்
சிறப்பான தேர்வுகள்.

-குமரன்

Narathar
10-04-2003, 06:38 AM
கண்ணாடியில்
என் பிம்பம்
உன் முகமாய்............

எல்லோரும் பதில் கவிதை எழுதி பாராட்டியதால நானும் ஹீ...ஹீ...நாராயனா
(புலி+பூனை+சூடு கதை நானும் அறிவேன்)

gankrish
10-04-2003, 07:05 AM
லாவண்யா, ராம், பூ கவிதை அருமை. இளசு சொன்னது புண்பட்ட நெஞ்சத்தை புகை விட்டு தான் ஆற்றனும் என்று இல்லை.

மன்மதன்
23-11-2004, 03:13 PM
இன்றைய கவிதைகளுக்கும் இது மாதிரி நல்ல விமர்சனங்கள் கிடைக்க வேண்டும்.. பாராட்டுக்கள் லாவ்.
அன்புடன்
மன்மதன்

அக்னி
01-06-2007, 12:16 AM
ஈரக் கால்களில் கொலுசு
சளி பிடித்து விடுமோ
சங்கீதத்துக்கு.....!
ஆகா! என்னே கற்பனை...!
ஆனாலும் சிறு சந்தேகம்...
சங்கீதத்தின்பால் அக்கறை என்றால்,
ஈரக்கால் மேல் அவதானிப்பு,
கொலுசின் மேல் கவனிப்பு,
இவையெல்லாம் சரிதானோ...?

புண்பட்ட நெஞ்சுக்குப் புகைவிட்டால், வலிகள் ஆறுமா, பழுக்கவைக்கப்படுமா...?

அழகிய கவித்துளிகளுக்கு வாழ்த்துக்கள்...