PDA

View Full Version : தலைமுடி ..!!

vasikaran.g
31-10-2011, 03:57 AM
உயரத்தில் இவன் குடியிருப்பு ,
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு ,
தலையில் இருக்கும் வரை
அப்படி ஒரு கவனிப்பு ,
தவறி உணவில் விழுந்தால்
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!!

இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..!
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை
இவர்களின் கணக்கெடுப்பு ..!!
உள்ளவரை தலைக்கு
அழகான கரும்பொன் காப்பு ...!!!
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன்
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!!

பெண்ணின் அழகுக்கு வேண்டும்
இவன் அருள்பாலிப்பு .!
மனமிருந்தால் கொடுக்கலாம்
சிறப்பு பாதுகாப்பு .!!
மணமில்லை என்பது
இவனின் தனிச்சிறப்பு ..!!!

இளமையில் இவன்
நிறமோ கருப்பு .!
நடுதர வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
இவனை வைத்து
கொலையாளியை பிடிக்கலாம் என்பது
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!!

மொத்தத்தில் இவனை
பேணிகாப்பது என்பது
நம் பொறுப்பு .!
இருப்பதை விட்டு
இழந்தபின் புலம்புவது என்பது
பொறுப்பற்ற பிழைப்பு ..!!

உங்கள் வசிகரன்.க

குணமதி
31-10-2011, 04:07 AM
உப்பு சப்பு நிறைந்து
நன்றாயிருக்கிறதப்பு...!

M.Jagadeesan
31-10-2011, 04:26 AM
அழகான வார்த்தைகளால் " தலை முடிக்கு" மகுடம் சூட்டியுள்ளீர்கள். வசீகரனுக்கு வாழ்த்துக்கள்.

Nivas.T
31-10-2011, 01:02 PM
பிரமாதம் வசிகரன்

பாராட்டுகள்
தொடர்ந்து எழுதுங்கள்

vseenu
31-10-2011, 01:09 PM
வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
கலர் டை அடித்தால் மாற்றலாம் கருப்பு. இதையும் சொல்லியிருக்கலாமே!
மொத்தத்தில் ரசனை அருமை

கீதம்
02-11-2011, 05:27 AM
இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே என்பதுபோல் தலையில் இருக்கும்வரைதான் இதற்கு சிறப்பு. உதிர்ந்துவிட்டால் இல்லை மதிப்பு.

மிகச் சரியாகச் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

vasikaran.g
13-11-2011, 11:37 AM
உப்பு சப்பு நிறைந்து
நன்றாயிருக்கிறதப்பு...!
நன்றி குணமதி ..

vasikaran.g
13-11-2011, 11:38 AM
அழகான வார்த்தைகளால் " தலை முடிக்கு" மகுடம் சூட்டியுள்ளீர்கள். வசீகரனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஜெகதீசன் ..
வசிகரன்.க

vasikaran.g
13-11-2011, 11:39 AM
பிரமாதம் வசிகரன்

பாராட்டுகள்
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி நிவாஸ் ..
வசிகரன்.க

vasikaran.g
13-11-2011, 11:40 AM
வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
கலர் டை அடித்தால் மாற்றலாம் கருப்பு. இதையும் சொல்லியிருக்கலாமே!
மொத்தத்தில் ரசனை அருமை
நன்றி சீனு. டை அடிப்பது இயற்கை நிகழ்ச்சி அன்று .அதனால் தான் அதைப்பற்றி குறிப்பிடவில்லை .
வசிகரன்.க

vasikaran.g
13-11-2011, 11:41 AM
இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே என்பதுபோல் தலையில் இருக்கும்வரைதான் இதற்கு சிறப்பு. உதிர்ந்துவிட்டால் இல்லை மதிப்பு.

மிகச் சரியாகச் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
நன்றி கீதம் உண்மைதான் . .
வசிகரன்.க

jaffer
14-11-2011, 03:46 AM
அருமையான கவி - தலைமுடிக்கு இவ்வளவு அழகாக ஒரு கவி. நன்றி

sarcharan
14-11-2011, 04:52 AM
கருப்பு கலராய் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் கலரு கொஞ்சம் வெளுத்துவிட்டால் கிழ ஃபிகர்கள் கூட மிதிக்கும்
விக்கினுள்ளே சேர்த்துவிட்டால் உலகம் உன்னை ரசிக்கும்
ஹேர் பிளாண்டிங் கடைகள் பின்னால் லைன் கட்டி நிக்கும்

அருமையான கவிதை வசீ. தலைமுடி மட்டுமல்ல மனிதர்களும் கூடத்தான்

சொ.ஞானசம்பந்தன்
14-11-2011, 06:09 AM
அருமையான கவிதை . பாராட்டுகிறேன் . வெள்ளையர் தலையில் செம்பட்டை உண்டு . முடியை அவ்வப்போது ஒழுங்கு பண்ணும் சீப்புக்கு நன்றி சொல்லியிருக்கலாம் .

vasikaran.g
17-11-2011, 02:53 AM
அருமையான கவி - தலைமுடிக்கு இவ்வளவு அழகாக ஒரு கவி. நன்றி
நன்றி ஜாபர் ..

vasikaran.g
17-11-2011, 02:55 AM
கருப்பு கலராய் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் கலரு கொஞ்சம் வெளுத்துவிட்டால் கிழ ஃபிகர்கள் கூட மிதிக்கும்
விக்கினுள்ளே சேர்த்துவிட்டால் உலகம் உன்னை ரசிக்கும்
ஹேர் பிளாண்டிங் கடைகள் பின்னால் லைன் கட்டி நிக்கும்

அருமையான கவிதை வசீ. தலைமுடி மட்டுமல்ல மனிதர்களும் கூடத்தான்
நன்றி சர்சரண் ..இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை நான் எழுதவில்லை ..

vasikaran.g
17-11-2011, 02:56 AM
அருமையான கவிதை . பாராட்டுகிறேன் . வெள்ளையர் தலையில் செம்பட்டை உண்டு . முடியை அவ்வப்போது ஒழுங்கு பண்ணும் சீப்புக்கு நன்றி சொல்லியிருக்கலாம் .
நன்றி ஞானசம்பந்தன் ..உணமைதான் சீப்பை மறந்துவிட்டேன் ..

kulandaivel
05-12-2011, 06:21 AM
வசிகரன் அவர்களே,
உடம்பில் இரு பொருட்கள்
இருக்கும் வரை உயர் மதிப்பு
இறங்கிய பின் மண் மிதிப்பு
ஒன்று ... முடி
மற்றது ...எச்சில்
அன்புடன்,
குழந்தைவேல்.மு

Ravee
05-12-2011, 11:33 PM
உதிர்ந்த பின் இவனுக்கு இருக்கும் மதிப்பை பார்க்க திருப்தியில் ஏலம் நடக்கும் போது போய் பாருங்கள் அப்போது தெரியும் இவன் மதிப்பு. இவன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

வாழ்த்துக்கள் நண்பரே .... :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-12-2011, 09:25 PM
கரு மயிராய் இருந்தாலும் ஆட்கொண்ட விதம் உயிராய் இருந்தது . நல்லதொரு கவிதைக்கு நன்றி.

அக்னி
07-12-2011, 01:24 AM
காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்
என்பது இவன் விடயத்தில் இல்லை...

தலைமுடியை பிரித்து மேய்ந்த கவிதை...

பாராட்டு...

vasikaran.g
07-12-2011, 02:59 AM
வசிகரன் அவர்களே,
உடம்பில் இரு பொருட்கள்
இருக்கும் வரை உயர் மதிப்பு
இறங்கிய பின் மண் மிதிப்பு
ஒன்று ... முடி
மற்றது ...எச்சில்
அன்புடன்,
குழந்தைவேல்.மு
உண்மைதான் குழந்தைவேலு அவர்களே .. நன்றி
வசிகரன்.க

vasikaran.g
07-12-2011, 03:00 AM
உதிர்ந்த பின் இவனுக்கு இருக்கும் மதிப்பை பார்க்க திருப்தியில் ஏலம் நடக்கும் போது போய் பாருங்கள் அப்போது தெரியும் இவன் மதிப்பு. இவன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

வாழ்த்துக்கள் நண்பரே .... :)
அட இதுவும் கூட உண்மைதான் ரவிச்சந்திரன் அவர்களே .. நன்றி
வசிகரன்.க

vasikaran.g
07-12-2011, 03:01 AM
கரு மயிராய் இருந்தாலும் ஆட்கொண்ட விதம் உயிராய் இருந்தது . நல்லதொரு கவிதைக்கு நன்றி.
நன்றி சுனைத் .
வசிகரன்.க

vasikaran.g
07-12-2011, 03:02 AM
காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்
என்பது இவன் விடயத்தில் இல்லை...

தலைமுடியை பிரித்து மேய்ந்த கவிதை...

பாராட்டு...
நன்றி அக்னி .. .
வசிகரன்.க