PDA

View Full Version : தீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ!! ( இது ஏமாந்தவனின் புலம்பல்..)



அகத்தியன்
30-10-2011, 04:34 AM
இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் வாங்கும் அனைத்து ஆபரணத் தங்கங்களுக்கும் நிச்சயமான பரிசுகள்.
5,000 திர்ஹம்களுக்கு மேல் கொள்வனவு செய்தால் ஒரு தங்க நாணயம் பரிசு…
பண்டிகையினை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்

இது இந்த வார நாட்களில் இங்குள்ள தினசரி பத்திரிகைகளில் ஒரு நகைக் கடையின் விளம்பரம். ஏன் சன் டீவி தொடக்கம் அனைத்து தமிழ் சனல்களிலும் இதே பாட்டுத்தான்.


எனக்கும், நகை வாங்கும் தேவை இருந்ததால், இப்போது வாங்கினால்த்தான் என்ன! அதுவும் இதே ஜூவலரியில் வாங்கினால், தங்க காசு, பரிசு என கிடைக்குமே என்ற பேராசையில் ( பேராசைதான் வேறு என்ன?? ) நேற்று அங்கு போனேன்.

கடைக்குள் நுழைந்தால், ஒரே குழப்பமாகிவிட்டது. இது நகைக்கடைதானா? இல்லை மீன் சந்தையாவென!! அப்பிடி ஒரு சனத்திரள், பெண்கள்… பெண்கள்.. பெண்கள்.. கணவர்கள் வழமை போல, பில்லுக்கு பணம் கட்டிக்கொண்டும், குழந்தைகளுக்கு பராக்கு காட்டிக் கொண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

தங்க நாணயம் கொடுக்கிறான்தானே அதான் இவ்வளவு கூட்டம் என எண்ணிக் கொண்டே, ஒரு அகலமான பெண் , கௌண்டரை விட்டு விலகிய இடம் பார்த்து இடம் பிடித்துக் கொண்டேன். அப்பா!! நமக்குத்தான் தெரிவதில் நிறைய சிக்கல் இருப்பதில்லையே! ஐந்து நிமிடங்களுக்குள் பில் கட்ட ரெடி. மனம் முழுக்க அவன் தரப்போகும் தங்க நாணயமும் , பரிசும் தான் நிறைந்திருந்தது.

காட்சிக்கு வைத்திருந்த நகைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கண்ணாடி கூண்டினுள் நிறைய தங்க நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஓ! இதுதான் எனக்கு கிடக்கப் போகின்றதா! என ஒரே சந்தோசம்..

அப்படி என்ன தரப்போகின்றான் என்ற ஆவல் இன்னும் வேகமாக வளர, விற்பனையாள் என்னை நோக்கி வந்தான்.

“ஐயா, இதோ உங்களது நகை மற்றும் பில்” என்றான்.

அது கெடக்கட்டும் கழுத, எங்கடா என்ட தங்க நாணயமும் மற்ற பரிசும் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.
திடீரென குனிந்து ஒரு அட்டையினை எடுத்து என்னிடம் நீட்டினான். விசிட்டிங்க் கார்ட் போல இருந்தது.
இவன் தங்க நாணயத்தை தரமாட்டான் போல என எண்ணிக் கொண்டே.

எங்கே என் கோல்ட் கொயின் என கேட்டேன்.

அதுதான் சார் இது என பதில் வந்தது ….

என்னாது???

லெமினேற் பண்ணப்பட்ட ஒரு அட்டையின் நடுவில் சிறிய ஒரு பொட்டு போல அது இருந்தது. நிறை 250 மில்லி கிராம்!!!!!!!! அடப்பாவிகளா!!

இதுதானாடா தங்க நாணயம்!! நாசமா போயிடுவீங்களா! என திட்டிக்கொண்டே

வலிக்காத மாதிரியே மொகரைய வச்சிக்கு எங்கடா என் கிப்ட் என்றேன்.

அது உள்ளே உள்ளது என பதில் வந்தது.

அதாவது தேறுமா என வெளியில் வந்து பார்த்தேன்.

லட்டு பாக்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லாருங்கடே!!!!!!!!!!!!! வேற என்னத்த சொல்ல .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


நீதி : வெளம்பரம் பார்த்து போவியா?? போவியா?? :traurig001::traurig001::traurig001:

vseenu
30-10-2011, 06:38 AM
கொஞ்சம் யோசிக்கணும்.வியாபாரம் செய்றவங்க எங்கேயாவது சும்மா எதையாவது தருவாங்களா?ஒண்ணு விலையை எதிலாவது ஏத்திட்டு தருவாங்க.இல்லைன்னா நம்மை ஏமாத்துவாங்க! இதை நாம புரிஞ்சிக்கணும்.

nandabalan
30-10-2011, 06:49 AM
எங்கள் ஊரிலும் புதியதாய் ஒரு நகைக் கடை திறந்தார்கள். எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் போய் பார்த்தேன், அவர்களின் சேதாரக் கணக்கை பார்த்ததும் பர்ஸ்க்கு மிகுந்த சேதாரமாகி விடும் என்று விட்டேன் ஒரு ஓட்டம்.

xavier_raja
04-11-2011, 10:58 AM
ஆதாரம் இல்லாமல் யாரும் செய்வதில்லை.. நமக்கு சேதாரம் வராமல் பார்த்து நடந்துகொள்ள வேண்டும்..

ஆதவா
06-11-2011, 05:59 AM
ஆமாம்... இதில் நீங்கள் எங்கே ஏமாந்தீர்கள்? :confused:

Nivas.T
06-11-2011, 07:12 AM
1000 ரூபாய் மதிப்புள்ளப் பொருள்கள் 50% தள்ளுபடி

இத நம்பனுமா? இல்ல நம்பனுமா?

நம்பி நம்பித்தானே கும்பல் கும்பல் போறாங்க, உண்மையில் இது பேராசையா? இல்ல அற்ப ஆசையா?

ஏமாற்றுபவனை விட, ஏமாறுபவர்களைத்தான் சொல்ல வேண்டும்.

தனிமனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

vseenu
06-11-2011, 02:43 PM
14 பொருள் 1001 ரூ. இதைக்கேட்டால் நம்ம மக்கள் என்ன செய்கிறார்கள்.பொருள் தேவையா அது சிறப்பான தயாரிப்பா என்றெல்லாம் பார்ப்பதில்லை.உடனே அதை வாங்க விரும்புகிறார்கள்.இதைதான் இந்த weakness தான் வியாபாரிகளின் மூலதனமாகிறது.

கௌதமன்
06-11-2011, 06:18 PM
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீங்கன்னு ஏற்கனவே ஒரு பதிவு போட்டாச்சு.

இப்ப ஆபரணங்கள் வாங்காதீங்கன்னு போட்டாச்சு.

துணிமணியும் வாங்காதீங்கன்னு யாராவது போட்டுருங்க.....புண்ணியமாப் போகும்.

vseenu
07-11-2011, 06:19 AM
மீதமான பணத்தை எதில போட்டு மோசம் போலாமுன்னு ஒரு பதிவையும் போட்டுட்டா நல்லது.

lolluvathiyar
08-11-2011, 11:46 AM
இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை அரசாங்க தரும் இலவங்கள் கூட வேறு ஏதாவது வழியில் நம்மிடம் இருந்து வரியாக பெறபட்டவையே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 09:05 AM
இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் இல்லை...இது தான் மெய். அகத்தியன் அவர்களின் எச்சரிக்கைக்கு நன்றி:)

arun
24-03-2012, 01:06 PM
இது தான் வியாபார சூட்சுமம் ..

ஒரு தங்க நாணயம் என்று தானே சொன்னார்கள் எத்தனை கிராம் என்று சொன்னார்களா .. :D :D

ஸ்ரீசரண்
01-04-2012, 01:03 AM
எல்லாம் மக்களை ஏமாத்தறதுக்கு ஒரு வழி தான்..........