PDA

View Full Version : ஆளுங்கவின் புதிர் #003

ஆளுங்க
27-10-2011, 04:16 PM
சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன்..

அவர் என்னிடம் "எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. நான் சில துப்புகள் கொடுத்தால் அவர்களின் வயதைச் சரியாக சொல்ல முடியுமா?"
" நாங்க எல்லாம் கணக்குல பெரிய புலி.. கேளுங்க" என்றேன்

"அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்" என்றார்.
"சரி.. வேறு ஏதாவது க்ளூ?"

"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"

"சான்சே இல்ல... "

சத்தியமாக எனக்கு விடை தெரியவில்லை...
எங்கள் பேச்சின் திசை மாறியது.
எங்கு எங்கோ மாறி இறுதியில் பள்ளிக்கட்டணங்கள் பற்றி வந்தது

"நாங்க காலேஜ் படிக்கும் போது ஒரு செமஸ்டர்க்கு கட்டின பீஸை இப்ப எல்*கே*ஜி க்கே கேக்குறாங்களாமே?" என்றேன்
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
"அரசாங்கம் ஏதாவது பண்ணனும்.. அப்ப தான் சரி வரும்" என்றேன்..
அவரும் ஆமோதித்தார்..

நான் அவரிடம் " சார்... இப்ப உங்க குழந்தைகள் வயதைச் சொல்லட்டுமா?" என்று கூறி விட்டு அவர்கள் வயதையும் சொன்னேன்..
அவருக்கு ஆச்சரியம்... "எப்படிங்க?"என்றார்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்..

அவர்கள் வயது என்ன?
நான் எப்படி கண்டுபிடித்தேன்?
எங்கே.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

(முன்பு வெளிவந்த முத்தண்ணா புதிர்களின் தொடர்ச்சி!!)

கீதம்
27-10-2011, 09:49 PM
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"

மைல்கல்லை உங்களுக்கு மட்டும் காட்டினால் எப்படி? எங்களுக்கும் காட்டுங்க. நாங்களும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்.:)

M.Jagadeesan
28-10-2011, 12:10 AM
2 x 4 x 9 = 72
3 x 4 x 6 = 72
3 x 3 x 8 = 72
குழந்தைகளின் வயது 2 , 4 , 9 ஆகும்.
3 , 4 , 6 மற்றும் 3 , 3 , 8 ஆகியவை குழந்தைகளின் வயதுகளாக இருக்க சாத்தியமில்லை.

vseenu
28-10-2011, 12:26 AM
நீங்க பேசிக்கிட்டே இருக்கும்போது, அப்பா ன்னு கூப்பிட்டுக்கொண்டே அவருடைய குழந்தைகள் எதிரே ஓடி வந்திருப்பார்கள்.அதைப் பார்த்து நீங்க கண்டு பிடுச்சிடீங்க! எப்படி! நான் கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா!

அன்புரசிகன்
28-10-2011, 12:37 AM
"நாங்க காலேஜ் படிக்கும் போது ஒரு செமஸ்டர்க்கு கட்டின பீஸை இப்ப எல்*கே*ஜி க்கே கேக்குறாங்களாமே?" என்றேன்
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
"அரசாங்கம் ஏதாவது பண்ணனும்.. அப்ப தான் சரி வரும்" என்றேன்..
அவரும் ஆமோதித்தார்..

நான் அவரிடம் " சார்... இப்ப உங்க குழந்தைகள் வயதைச் சொல்லட்டுமா?" என்று கூறி விட்டு அவர்கள் வயதையும் சொன்னேன்..
அவருக்கு ஆச்சரியம்... "எப்படிங்க?"என்றார்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்..

அவர்கள் வயது என்ன?
நான் எப்படி கண்டுபிடித்தேன்?
எங்கே.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

(முன்பு வெளிவந்த முத்தண்ணா புதிர்களின் தொடர்ச்சி!!)

கடுப்பேத்துறார் மைலாட்......
----

(இது வடிவேலுவுக்கு இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று சொன்னதை போல இருக்கு...)

-------------

ஜெகதீசன் ஐயாவுக்கு..

2வதும் 3வதும் சாத்தியமாகலாம்.

ஒரே ஆண்டில் தை மற்றும் மார்கழியில் பிறந்த சகோதரர்களை கண்டிருக்கிறேன். :D

sarcharan
28-10-2011, 06:21 AM
நான்கு வயதில் பிள்ளைகளை எல் கே ஜியில் சேர்ப்பார்கள்
எல் கே ஜி அட்மிஷன் சேர இலக்ஷ ரூபாய் வரை ஆகுதாம்

கடைசி பையன் பள்ளிக்கூடம் போக வில்லை. பிளே ஸ்கூல் செல்லுகிற பிள்ளையா?

மூத்த பிள்ளை - ஆறு வயது
இளைய பிள்ளை - நான்கு வயது
கடைசி பையன் - மூன்று வயது

ஆளுங்க
29-10-2011, 02:52 PM
இவற்றில் எதுவுமே சரியான விடை அல்ல..
இன்னும் சற்று முயற்சியுங்கள்!!

ஆளுங்க
06-11-2011, 02:55 PM
புதிர் போட்டு பல காலம் ஆனதால் இப்போது விடையைப் பகிர்கிறேன்

இந்த புதிரின் விடையைப் பார்ப்போமா!!

விடை இது தான்:
அவரது குழந்தைகளின் வயது 2, 6, 6

விளக்கம்:

அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்

மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 .
http://www.torontorealtyblog.com/wp-content/uploads/2009/07/72.jpg

அதற்கான எல்லா சாத்தியங்களையும் பார்ப்போம்.
நமக்கு அடுத்து அவர்களின் வயதின் கூட்டுத்தொகை வேண்டும் ஆகையால், அதனையும் அருகிலேயே எழுதிக்கொள்வோம்!!!

1,1,72 --- 72
1,2,36 --- 39
1,3,24 --- 28
1,4,18 --- 23
1,6,12 --- 19
1,8,9 --- 18
2,2,18 --- 22
2,3,12 --- 17
2,4,9 --- 15
2,6,6 --- 14
3,3,8 --- 14
3,4,6 --- 13

அடுத்து,

"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"

கூட்டுதொகையும் மைல்
கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால்
கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க
வேண்டும் ,

அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 --- 14
3,3,8 --- 14

இரண்டு கூறுகளின் கூட்டுத்தொகையும் 14 (ஆக... மைல்கல்லில் இருந்த எண் 14)

Enlarge this image (http://www.tamilthottam.in/t21989p20-1#)
http://www.batmangiftideas.com/batman%20merchandise%20and%20collectibles%20and%20toys%20and%20batman%20costumes,batman%20gifts,gotham%20city%2014%20miles.jpg

அடுத்த துப்பு இதோ:

"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"

கடைசி குழந்தை மட்டும் பள்ளிக்குச் செல்லவில்லை...
அப்படியெனில், அவனது வயது 2 தான் (இரட்டையராய் இல்லை)

அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6)

அன்புரசிகன்
06-11-2011, 10:39 PM
செல்லாது செல்லாது... இங்க 1 வயது பிள்ளையெல்லாம் விளையாட்டுப்பள்ளிக்கு போகுது... (play school) :D :D :D

ஆளுங்க
07-11-2011, 12:02 PM
செல்லாது செல்லாது... இங்க 1 வயது பிள்ளையெல்லாம் விளையாட்டுப்பள்ளிக்கு போகுது... (play school) :D :D :D

:lachen001:

கௌதமன்
07-11-2011, 04:10 PM
’அந்த’க் கணக்குக்கு விடை இப்படிதான் வந்ததா?