PDA

View Full Version : தகித்துக்கொண்டிருந்தது பகல்



கலாசுரன்
27-10-2011, 04:00 AM
மண்ணில் விழுந்து
தகித்துக்கொண்டிருந்தது
பகலின் கோரப்பார்வை

எட்டி நடக்க எத்தனிக்கும் கால்கள்
சுட்டெரிக்கும்
கனல் மணல்ப் பரப்பில்
கரை தேடி மடியட்டும்

பிடிமானங்களை நசுக்கி
நச்சரிக்கத் தொடங்கியது
காலத்தின் கருவறையில்
அமிலத்தை ஊற்றும்
பொறுமையின் சிறிதான மரணம்

நதியொன்றோ
நிழல் மரமொன்றோ
லட்சிய்யத்தின் எல்லையாகத்
தொடர்கிறதிந்த
பாலைவனப் பரவசங்கள்..
***
கலாசுரன்

ஜானகி
27-10-2011, 05:15 AM
லட்சியப் பாதையில் குத்தும் முட்கள்கூடப் பரவசங்களாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, தகிக்கும் பகல் கூட, குளிரும் நிலவாக மாறலாம் ! முள்ளும் மலராகலாம் !

vseenu
27-10-2011, 09:27 AM
தகித்துக்கொண்டிருந்தது பகல்.சுட்டெரிக்கும்
கனல் மணல் பரப்பு..........
லட்சிய்யத்தின் எல்லையாகத்
தொடர்கிறதிந்த
பாலைவனப் பரவசங்கள்.. கவிதை அருமை. நன்றி

கீதம்
27-10-2011, 10:19 PM
நதியோ, நிழல் மரமோ
நாடுபவை யாவும் கிட்டாமலும் போகலாம்.
நல்லவேளை,
பகலைத் தொடரும் இரவுக்கு
பணிநேர விடுப்பொன்று
எந்நாளும் இல்லாமற்போனது.
லட்சியங்கள் நிறைவேறக்கூடும்
நள்ளிரவிலுங்கூட.

நல்ல கவிதை. பாராட்டுகள் கலாசுரன்.

கலாசுரன்
03-11-2011, 01:40 PM
லட்சியப் பாதையில் குத்தும் முட்கள்கூடப் பரவசங்களாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, தகிக்கும் பகல் கூட, குளிரும் நிலவாக மாறலாம் ! முள்ளும் மலராகலாம் !

நன்றி உங்களது இந்தப் பின்னூட்டத்திற்கு :)

கலாசுரன்
03-11-2011, 01:41 PM
தகித்துக்கொண்டிருந்தது பகல்.சுட்டெரிக்கும்
கனல் மணல் பரப்பு..........
லட்சிய்யத்தின் எல்லையாகத்
தொடர்கிறதிந்த
பாலைவனப் பரவசங்கள்.. கவிதை அருமை. நன்றி

பாராட்டிற்கு மிக்க நன்றி இந்த இலக்கியத் தோழமைக்கும்..:)

கலாசுரன்
03-11-2011, 01:44 PM
நதியோ, நிழல் மரமோ
நாடுபவை யாவும் கிட்டாமலும் போகலாம்.
நல்லவேளை,
பகலைத் தொடரும் இரவுக்கு
பணிநேர விடுப்பொன்று
எந்நாளும் இல்லாமற்போனது.
லட்சியங்கள் நிறைவேறக்கூடும்
நள்ளிரவிலுங்கூட.

நல்ல கவிதை. பாராட்டுகள் கலாசுரன்.

குறைந்த வார்த்தைகளில் வலிமைமிகுந்த அர்த்தங்களளிக்கிறது உங்கள் பின்னூட்டம் :)

மிக்க மகிழ்ச்சி கீதம் ..:)

மற்றும் பாராட்டுக்களுக்கு நன்றிகள் ..:)

சிவா.ஜி
03-11-2011, 02:31 PM
சிந்திக்க வைக்கும் வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள் கலாசுரன்.

கலாசுரன்
21-11-2011, 12:14 PM
சிந்திக்க வைக்கும் வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள் கலாசுரன்.

பாராட்டிற்கும் இப்பின்நூட்டத்திற்கும் மிக்க நன்றி.. :)