PDA

View Full Version : அண்ணனுக்கு ஒரு மடல்



sree sree
25-10-2011, 11:30 AM
அண்ணனுக்கு ஒரு மடல்



வாழ்க்கை எனும் பாதையில் பல மனிதர்களை சந்திகின்றோம்.சில மனிதர்கள் நினைவில் நிற்பதில்லை.சில மனிதர்களோ நினைவை விட்டு என்றும் விலகுவதில்லை.அப்படி நினைவை விட்டு விலகாத மனிதர்களில் ஒருவன் தான் அண்ணன் சிவன்.சிவன் என் வாழ்வில் கிடைத்த மிக பொ¢ய உறவு.சிவன் என் உடன் பிறந்த சகோதரன் அல்ல.ஆனால் சிவனை வெளி மனிதராக பார்க்க என் மனம் ஒரு போதும் இடம் கொடுப்பதில்லை.சிவன் என் உடன் பிறவ விட்டாலும் என்னை பொருத்தவரை அவன் என் உண்மையான சகோதரன்.சிவன் என்ற பெயரை உச்சா¢க்கும் போது அவனை பற்றிய நினைவுகள் கண் முன்னே நிழலாடுவதை தடுக்க முடிவதில்லை தான்.சிவன் மீது எனக்கு ஏன் அளவு கடந்த பாசம்?இதற்கான பதில் எனக்கே தொ¢யவில்லை.வாழ் க்கையில் சில சமயங்களில் சில கேள்விகளுக்கு நமக்கே பதில் தொ¢வதில்லை.அது போல் தன் இதுவும் . சிவனை நான் எங்கு சந்திதித்தேன்?எப்படி அவன் என் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தினான்?பழைய நிகழ்வுகளை நான் கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்...........

அப்பொழுது, நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.அது தொலைபேசி மூலம் ஆய்வு செய்யும் நிறுவனம்.வாழ்க்கையில் ஏனோ எனக்கு ஒரு வித பிடிப்பு இல்லாத காலம் கட்டம் அது.வேலை செய்யும் இடத்தில் அதிகமாக வேற்று இனத்தவர்களே இருப்பர்.மனம் விட்டு பேச யாருமே அங்கு இல்லை.ஒரு
நண்பன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய காலம் அது.வழக்கமாக பணி தொடங்குவதற்க்கு சில மணி நேரங்களுக்கு முன்பே நான் அலுவலகதிற்க்கு சென்று விடுவேன்.அன்று மிக முக்கியமாக ஒரு வேலை இருந்ததால் வழக்கதிற்க்கு மாறாக சற்று தாமதமகவே வேலைக்கு சென்றேன்.அன்று அலுவலகத்தில் நேர் முக தேர்விர்க்காக ஒரு ஆடவன்
வந்திருந்தான்.நீல நிற ஆடையில் அவன் அழகாக தோற்றம் அளித்தான். அவன் எனக்கு புதியவனாக தோன்றவில்லை.பல வருடங்களாக அவனுடன் பழகியது போல் தோன்றியது.இவன் நேர்முக தேர்வில் தேர்வானால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.நேர்முக தேர்வு முடிந்து அவனும் வீடு திரும்பி விட்டான்.மறு நாள் நான் காலையிலிருந்தே வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.சில மணி நேரங்கள் கழித்து ,மீண்டும் அதே ஆடவன் அலுவலகத்தில்.மேலதிகா¡¢களி¢டம் பேசி விட்டு என் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தான்.என்னால் அதை நம்ப முடியவில்லை.நான் நினைத்ததை போலவே அவன் வேலைக்கு தேர்வாகி இருந்தான்.மனதுக்குள் ஒரு நண்பன் கிடைக்க போகிறான் என்ற ஒரு வித மகிழ்ச்சி.

சில மணி நேரம் கழித்து நான் என்னை அவனிடம் அறிமுகம் செய்து கொண்டேன். 'ஹாய் என் பெயர் ஸ்ரீ.வேலை பிடித்திருகிறதா?'என்று நான் அவனை வினாவினேன்.'பிடித்திருக்கிறது'என்று பதில் அளித்தான்.'உங்கள் பெயர்?' 'ஓ,சா¡¢,என் பெயர் சிவன்'என்று அவன் பதில் அளித்தான்.ஆம்.இது தான் அண்ணன் சிவன் உடனான என் முதல் சந்திப்பு.அன்று அவன் பெயரை மட்டுமே நான் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் தத்தம் வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டோம்.தினமும் நாங்கள்அலுவலகம் சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேசிக் கொள்வோம்.இப்படியாக சில நாட்கள் உருண்டு ஓடியது.அன்று டிசம்பர் ஒன்றாம் தேதி.இன்னும் அந்த நாள் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.அன்று
தான் நாங்கள் இருவரும் முதன் முதலாகஒன்றாக உணவு அருந்த சென்றோம்.சொல்ல போனால் அன்று தான் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாக அறிமுகம் ஆனோம் எனலாம்.

சிவன் என்னை விட மூன்று வயது அதிகமானவன்.அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் சுங்கைப்பட்டாணி மாநகரத்தில்.அவனுக்கு இரு சகோதா¢கள் உள்ளனர்...அவன் ஒர் பள்ளி ஆசி¡¢யர்.விடுமுறை காலத்தை கழிக்கவே அவன் தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்க்கு இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கின்றான்.அன்று முதல் எங்கள் நட்பு ஆழமாக தொடங்க ஆரம்பித்தது.நட்பு என்று சொல்வதை விட அண்ணன் தங்கை உறவு ஆரம்பித்தது என்று சொல்வதே மிக சிறப்பாக இருக்கும்.எனக்கும் அவனை போல் இரு சகோதா¢கள் மட்டுமே.சகோதரன் இல்லாத எனக்கு அவன் என் சொந்த அண்ணணாகவே தோன்றினான்.

தினமும் நாங்கள் உணவு அருந்த செல்வது வழக்கமாகி போனது.நாங்கள் இருவரும் தினமும் பல கதைகளை பேசிக் கொண்டோம்.அவன் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.அவன் எனக்கு எதிர்ப்பதம்.எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்காது.அவனுக்கோ ஊர் சுற்றுவது பிடித்தமான ஒன்று.நம் அனைவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள்.அவனுக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். அவனோ உள்ளுக்குள் பிரச்சனைகள் இருந்தும், வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களையும் ரசித்து ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் குட்டி குட்டி சண்டைகள் போட்டுக் கொள்வோம்.என்னை போலவே அவனுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போனது.அன்றாடம் நாங்கள் அலுவலகத்தில் செய்யும் சேட்டைகளை அவன் ஷாலினியிடம் சொல்லி சொல்லி மகிழ்வான்.ஷாலினி வேறு யாறும் அல்ல.அவன் விரைவில் திருமணம் செய்து கொள்ள்ப் போகும் பெண் தான் அவள். நான் அவளை செல்லமாக அண்ணி என்றே நான் கூப்பிடுவேன்.

நாட்கள் இவ்வாறே உருண்டு ஓடின.அன்று ஒரு நாள் நான் அவனுக்கு ஒரு பா¢சளித்தேன்.ஏன் தேவை இல்லாத செலவு என்று அதை அவன் வாங்க மறுத்து விட்டான்.நான் கட்டாயப் படுத்திக் கேட்டு கொண்டதால்,அதை பெற்று கொண்டான்.அதை பெற்று கொள்ளும் போது,என் தலையில் கை வைத்து ஆட்டி,'ஏன் இப்ப்டியெல்லாம் செய்றே?'என்று கூறினான். அந்த தருணம் அவன் கண்களில் என் மீது அவன் கொண்டுள்ள் பாசம் தொ¢ந்தது.அதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.அவன் காட்டிய பாசம் எனக்கு புதுமையான ஒன்றாக தோன்றியது.மீண்டும் நாட்கள் உருண்டோடின.ஒரு மாத காலம் எப்படி முடிந்தது என்றே தொ¢யவில்லை.பள்ளிகள் மீண்டும் தொடங்குவதற்க்கு இன்னும் ஒரு நாட்களே மிஞ்சி இருந்தன.அவன் தன் சொந்த ஊர்க்கு திரும்பி செல்ல வேண்டும்;தன்னுடைய ஆசி¡¢யர் பணியை தொடங்க வேண்டும்.அவனுடன் நான் அலுவலகத்தில் செலவிட போகும் கடைசி நாளும் வந்தது.

அன்று தான் கடைசி நாள்.அந்த நாளும் பசுமையாக இன்னும் நினைவில் இருக்கிறது.அன்று மீண்டும் நாங்கள் இருவரும் உணவு அருந்த ஒரு உணவகதிற்க்கு சென்றோம்.திடிரென்று என்ன நினைத்தான் என்று தொ¢யவில்லை.அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு,உணவை எனக்கு ஊட்டி விட்டான்.இது நான் எதிர்ப்பர்க்கவே இல்லை என்பது தான் உண்மை.நடப்பது நிஜமா இல்லை கனவா என்று ஒரு நிமிடம் யோசிக்கத் தோன்றியது.அது நாள் வரை திரைப்படங்ககளில் மட்டுமே அண்ணன் தங்கை பாசத்தை பார்த்திருக்கிறேன்.முதல் முறையாக நிஜத்தில் அப்போது தான் அதை உணர்ந்தேன்.இது போன்ற தருணங்கள் மீண்டும் வராதா என மனம் ஏங்கியது.....

அண்ணனும் தன் சொந்த ஊர்க்கு சென்று விட்டான்.பள்ளி தவணையும் ஆரம்பித்தது.பள்ளி ஆரம்பித்த சில நாட்களில் அவனுக்கு வேலை பளுவும் அதிகம் ஆனது.மற்றவர்களுக்காக நேரம் கூட அவனால் ஒதுக்க முடியவில்லை.அவ்வப்போது குறுஞ்செய்திகள் மட்டுமே எனக்கு அனுப்பினான்.ஒரு மாதம் காலம் கழிந்தது.அவனிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.அவன் என்னை மறந்து விட்டான் என்று மனதுக்குள் நினைக்க தோன்றியது.ஒரு சிறு குழந்தை கையில் ஒரு பொம்மையை கொடுத்து விட்டு,அதை மீண்டும் பிடிங்கி கொண்டால்,அந்த பிஞ்சு மனது எவ்வளவு துடிக்குமோ அந்த நிலமை தான் எனக்கும் அப்பொழுது.அவனுக்கு என்னை பற்றி சிந்திக்க நேரமே இல்லை.எனக்கோ தினமும் அவனை பற்றிய சிந்தனை தான்.தினமும் என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன்.ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்பதை என்னால் பு¡¢ந்து கொள்ள முடிந்தது.

அவனுக்கென்று தனி குடும்பம்,கடமை அனைத்தும் இருக்கிறது.அவன் வாழ்க்கை பாதையில் நான் ஒரு அங்கம் மட்டுமே.நான் அளவுக்கு மீறிய உ¡¢மை எடுத்துக் கொள்ள கூடாது என்பது அறிவுக்கு பு¡¢ந்தது.இருந்தும் என் மனதால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.அவன் காட்டிய பாசத்தை மறககவும் இழக்கவும் கூடாது என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தது.அவன் காட்டிய அன்பு உண்மையானது.ஆனால் அவன் என்னை தன்னுடன் பணிபு¡¢யும் ஒரு சகோதா¢யாக மட்டுமே நினைத்திருந்தானோ?நான் தான் அவனை என் உடன் பிறந்த சகோதரனாக நினைக்கிறேனோ?இவ்வாறு பல வித கேள்விகளை நானே என்னை கேட்டுக் கொண்டேன்.அவனை ஒரு நண்பனாக என்னால் பார்க்க முடியவில்லை.அவனுடன் பழகியது இருபது நாட்கள் மட்டுமே.ஆனால் இருபது வருடங்கள் என்னோடு பிறந்து வளர்ந்தவனாகவே அவன் தோன்றினான்.என் மனதில் நினைப்பதை அவனிடம் வெளிப்படுத்த தோன்றியது.என் அண்ணனுக்கு முதல் முறையாக ஒரு மடல் எழுதினேன்....

" அன்புள்ள அண்ணா,
நலமா?என்றும் நீ நலமாக இருக்கவே ஆண்டவனை பிரார்த்தினை செய்கிறேன்.உன்னுடன் பழகிய நாட்கள் நெஞ்சில் பசுமையாக உள்ளது.அது போன்ற தருணங்கள் மீண்டும் வராதா என மனம் ஏங்குகின்றது.உன்னை பொறுத்த மட்டும் நான் உன் வானில் வந்த ஒரு மேகமாக இருக்கலாம்.ஆனால் என்னை பொறுத்தவரை நீ என் வானில் ஒரு பகுதி.நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவ மாட்டேன்.உன் வாழ்க்கை முறை வேறு ,என் வாழ்க்கை முறை வேறு என்று என்னால் உணர முடிகிறது.ஆனால் உன்னை வேறு மனிதராக பார்க்க மட்டும் என்னால் முடியவில்லை.இப்புவியில் இல்லாத உறவை நிலை நிறுத்தவே அனைவரது மனமும் ஏங்கும்.அது போலவே நானும் உன்னை என் வாழ்வில் உடன் பிறந்த அண்ணனாக நிலை நிறுத்த நினைக்கிறேன்.நீ என்றும் என் அண்ணன்.ஆனால் நான் உன் தங்கையா என்று தொ¢யவில்லை...என்னை போல் நீயும் நினைக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.அப்படி நடந்தால் அதை விட பொ¢ய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.நீ விரும்பினாலும் இல்லாவிடிலும் நான் ஒரு தங்கையாக செய்ய வேண்டிய கடமையை கண்டிப்பாக செய்வேன்.இது சத்தியம்.அன்று ஒரு நாள் உன்னிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி.''ஐ மிஸ் யூ சிஸ்''என்ற வாசகம்.அதை படித்த அடுத்த கணம் என் விழிகளில் ஆனந்த கண்ணீர்.மீண்டும் ஒர் ஆனந்த கண்ணீர்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்...''
இப்படிக்கு உன் சகோதா¢.

கீதம்
26-10-2011, 11:37 PM
தொய்வில்லாத எழுத்து நடைக்கு என் முதல் பாராட்டு. மனத்தின் ஏக்கத்தை அழகாய்ப் பிரதிபலிக்கின்றன வார்த்தைகள்.

பல குடும்பங்களில் உடன்பிறந்த உறவுகளுக்குள்ளேயே சரியான புரிதல் இன்றி பிரச்சனைகள் உண்டாகும் நிலையில் இருபது நாட்கள் பழக்கத்திலேயே ஒரு திண்ணிய நட்பும் பாசமும் உருவாகி இன்றும் உங்களை ஏங்க வைக்கிறது என்றால் அந்த அன்பின் வலிமையை, அது உண்டக்கும் வலியை உணரமுடிகிறது.

உடன்பிறந்திருந்தாலும் கூட ஒரு காலக்கட்டத்தில் பிரிவு என்பது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மனத்தின் பிணைப்பைப் பிரிக்க யாரால் முடியும்? உங்கள் அன்பு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

vseenu
28-10-2011, 12:56 AM
அக்காலத்தில் அண்ணன் தங்கை பாசம் விழிகளில் நீர் வரவழைத்தது பாசமலர் திரைப்படம்.அந்த கை வீசம்மா கைவீசு பாட்டிற்கு கண்ணீர் சிந்தாதோர் யாரேனும் உளரோ? இம்மாடலும் அதை உணர்வை வெளிக்கொணர்ந்தது.நன்றி

M.Jagadeesan
28-10-2011, 01:38 AM
//எனக்கும் அவனை போல் இரு சகோதா¢கள் மட்டுமே.சகோதரன் இல்லாத எனக்கு அவன் என் சொந்த அண்ணணாகவே தோன்றினான்.//

ஏன் இந்த முரண்பாடு?

sarcharan
28-10-2011, 06:23 AM
இக்காலத்தில் சமுத்திரம் என்று ஒரு படம் வந்ததே...

அந்த படம் பார்க்க முடியவில்லை. கண்ணீரே வந்துவிட்டது

sarcharan
28-10-2011, 06:31 AM
அக்காலத்தில் அண்ணன் தங்கை பாசம் விழிகளில் நீர் வரவழைத்தது பாசமலர் திரைப்படம்.அந்த கை வீசம்மா கைவீசு பாட்டிற்கு கண்ணீர் சிந்தாதோர் யாரேனும் உளரோ? இம்மாடலும் அதை உணர்வை வெளிக்கொணர்ந்தது.நன்றி


இது என் விஷயத்தில் மிகச்சரி.

பொதுவா சிவாஜி நடிச்ச படம்னாலே தாய்குலங்கள் போர்வை எடுத்துகிட்டு போயிருவாங்க. (கைக்குட்டை பத்தாது):aetsch013:

அப்புறம் நனைந்த போர்வையை வீட்டுக்கு வந்து பிழிஞ்சு உலர்த்தி விடுவார்கள். :redface:

ஆண்களோ,அது தான் வீட்டுலே கண்ண கசக்கிகிட்டு இருக்கோமே (வெங்காயம் உரிக்கும்போது வரும் கண்ணீரும் இதில் உள்ளடக்கம்), காசு கொடுத்து வேறே அழணுமாக்கும்னு சொல்லி எம் ஜி ஆர் படம் பாக்க போயிருவாங்க.;)

ஆனால் எல்லோரையும் அழவைத்த ஒரு படம் "பாசமலர்". அப்புறம் 'கிழக்கு சீமையிலே', 'சமுத்திரம்' போன்ற படங்கள். அவைகள் எல்லாம் இன்றைக்கு பாடாவதி படங்கள் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.:frown:

sarcharan
28-10-2011, 06:35 AM
வடஇந்தியர்கள் கையில் கட்டும் ராக்கி இதை பற்றி இன்னும் சொல்லும்

vseenu
28-10-2011, 07:32 AM
சமுத்ரம் நானும் பார்த்தேன் .ஆனால் பாசமலரோடு சிவாஜி சாவித்ரி நடிப்போடு அதை ஒப்பிட இயலாது என்பது என் கருத்து.

sarcharan
28-10-2011, 08:41 AM
சமுத்ரம் நானும் பார்த்தேன் .ஆனால் பாசமலரோடு சிவாஜி சாவித்ரி நடிப்போடு அதை ஒப்பிட இயலாது என்பது என் கருத்து.

பலரும் இப்படி சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை சிவாஜியின் நடிப்பா, அல்லது பழைய படம் என்பதாலா தெரியவில்லை. :confused:

vseenu
28-10-2011, 11:24 AM
நானும் சமுத்ரம் படத்தை இரு முறைக்கு மேல் தொலைகாட்சியில் கண்டுள்ளேன்.ஆனால் முதல் முறைக்கு பிறகு கண்ணீர் வரவில்லை.ஆனால் இப்போது சமீபத்தில் பாசமலரை பார்த்தபோது கூட கண்களில் நீர். காரணம் நெஞ்சை நெகிழ செய்யும் காட்சிகளா அல்லது சிவாஜியின் நடிப்பா?

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2011, 05:36 AM
தங்களின் மனவுணர்வுகளை எழுத்து நடையில் வெளிகொணர்ந்து சிறப்புற அமைந்த உரைநடைக்கு என் வாழ்த்து ..பெண்ணிடம் பழகுவது காதலாகவே காணும் இன்றைய சூழலில் பழகிய சிறிது காலத்தில் உண்மையில் தோன்றிய இதுவரை நீங்கள் அறியாத சகோதர பாசம் இந்த மடலில் தெரிகிறது ...தொடருங்கள் ...

குணமதி
17-11-2011, 07:18 AM
உங்கள் மடலைப் பார்த்துவிட்டு வந்து படித்தேன்.

வழக்கமான காதல் உணர்வுகள் தொடர்பான கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாராட்டத்தக்க கதைக்கரு.
நிகழ்ச்சிகளை, உணர்வுகளைச் சரியாக விளக்கியிருக்கிறீர்கள்.

***நமக்கே பதில் தொ¢வதில்லை***
மேலே கண்டவாறு 'ரி' பல இடங்களில் சரியாகத் தட்டப்படவில்லை. 'தெ' ... 'தொ' ஆகத் தட்டப்பட்டுள்ளது.
***பள்ளி தவணையும் ஆரம்பித்தது*** - இங்குத் தவணை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை.
***சிவன் என்னை விட மூன்று வயது அதிகமானவன்*** - இதைச், 'சிவன் என்னை விட மூன்று வயது மூத்தவன்' என்று எழுதலாம்.

உடன்பிறவாத் தங்கையின் பாசத்தை வெளிகொணர்வதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றே சொல்லவேண்டும்.

மொழிநடையில் நாளடைவில் முன்னேற்றம் வரும். பிழை நீக்கி எழுதக் கருத்துச் செலுத்துங்கள்.
நல்ல சிறுகதை தந்ததற்குப் பாராட்டும் வாழ்த்தும்!

vahini
10-01-2012, 03:50 AM
அழகிய சிறுகதை. உடன் பிறவா அண்ணன் தங்கை பாசம் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.நிலையில்லாத உறவுகள் உள்ள இந்த உலகதில் இது போன்ற அழகிய உறவுகள் ஏக்கத்தை உண்டாக்குகின்றன.பாராட்டுகள்....

tamilvaanan
23-01-2012, 06:06 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த அழகிய சிறுகதை.இது போன்று ஒரு தங்கை இல்லயே என்று ஏங்க வைக்கிறது இந்த கதையின் கதாபாத்திரம்.மாறுபட்ட கோணத்தில் அண்ணன் தங்கை பாசம் கண்ணீரை வர வைக்கிறது.உறவுகளின் அருமை இல்லாதவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் இந்த கதை...இந்த அண்ணன் தங்கை உறவு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 09:11 AM
மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்....விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது ...இவைகளில் அன்பே பெரியது என்று விவிலியம் சொல்கிறது. அதைத்தான் உங்களின் கதை தெளிவாக உணர்த்துகிறது. நன்றி.:)

aren
20-03-2012, 11:50 AM
ஒரு அருமையான தங்கையின் பாசத்தை உங்கள் எழுத்தில் கண்டேன். நானும் உங்களுடன் அருகில் இருந்து இந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டதுமாதிரி இருந்தது. இது உங்களுடைய எழுத்துக்கு கிடைக்கும் பாராட்டு. பாராட்டுக்கள். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.