PDA

View Full Version : என்னுள் நீ



இன்பக்கவி
23-10-2011, 02:12 PM
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/pic2.jpg

ஈருயிர் எழுதிய ஓவியமாய் நீ...
என் உயிரின் ஒரு பாதி
உன்னை சுமக்க
கருவறை
தவமிருந்து காத்து கிடக்க
எட்டாத வரமாய்
என்னை ஏங்க வைத்தாய்...

ஒரு முறை கருவில்
வந்துவிடு என கதற
கூக்குரல் கேட்டு ஓடிவந்தாயோ
கருவறையில் வாசம் செய்ய...

செல்லமே
என்னுள் நீ உருவாக
ஆனந்தம்
சொல்ல வார்த்தை இல்லை
கண்ணீரே காணிக்கையாக்கி
காத்திருந்தேன்
உன் இன்முகம் காண...

உன்னை சுமந்த
ஒவ்வொரு நொடியையும்
மீண்டும் சுமக்கும்
வரம் கிடைக்குமா??

கருவறை இருள் கூட
ஒளியில் ஒளிர்ந்தது
அழகிய நிலவாய்
உன்னை சுமந்த போது..

உன் பிஞ்சு பாதம்
எட்டி உதைக்கையில்
இதயம் படபடத்தது
பிஞ்சு பாதம்
காயமுற்றதோ என எண்ணி...

நீ பூமியை எட்டி பார்த்த பொழுதில்
உன்னை நான்
கண்ட நொடி மறக்க முடியுமா??

பாசத்தை மட்டுமே உரியதாக்கி
என் உயிராய் கொஞ்சி மகிழ
இன்று நீ என்னை கொஞ்சுகிறாய்

கொஞ்சி பேசி
திட்டி அடிக்கையில்
அன்னையாய் நீ மாற
சேயாய் நான் மாறி
செல்லமாய் சிணுங்க
நீ அரவணைக்கும் போது
மேனி சிலிர்த்து அளவில்லா
சந்தோசம் எனக்குள்

பல பெயர்கள் கொண்டு
அழைத்த போதும் மகிழாத
என் மனம்
"ம்மா" என்று நீ அழைக்கையில்
வேறு பெயர் வேண்டுமோ
இனி எனக்கு..


என் வாழ்வின் வசந்தம் நீ
இனி ஒரு பிறவி
எனக்கிருந்தால்
மீண்டும் நீயே என்
மகளாய் வந்துவிடு....
என் பெண்மையின்
முழுமை நீ..

அக்னி
23-10-2011, 02:52 PM
கருவறை இருள் கூட
ஒளியில் ஒளிர்ந்தது
அழகிய நிலவாய்
உன்னை சுமந்த போது..

இரவல் கொடுத்தது தாய்மையல்லவா...

காத்திருந்த கருவறை
ஏளனங்களால் நிரப்பி நெருக்கப்பட்ட வலி,
நீக்கவந்த வலியுணர்ந்த கணம்,
பூரிக்கும் தாய்மைதான்,
பெண்மையின் முழுமை என்றால்..,
அக்கணம்தான்
ஆண்மைக்கும் முழுமை...

தாயின் சந்தோஷ சாரல்,
எம்மையும் நனைக்கின்றது...

ஒவ்வொரு வரியையும் மிகவும் ரசித்தேன்... பாராட்டு...

பிரேம்
24-10-2011, 12:50 AM
ரொம்ப அருமையா இருக்கு தல..
உன்னை சுமந்த
ஒவ்வொரு நொடியையும்
மீண்டும் சுமக்கும்
வரம் கிடைக்குமா??

ஜானகி
24-10-2011, 01:27 AM
அம்மம்மா....! அநுபவம் ஓர் பிறவியெடுத்ததோ......கவிதையாக.....அருமை ! தாய்மைக்கு நிகரேது ?

VISHNU ROCKY77
24-10-2011, 04:57 AM
மிகவும் அருமையாக உள்ளது

கீதம்
02-11-2011, 05:31 AM
தாய்மையுணர்வின் உச்சப் பிரதிபலிப்பு உங்கள் வரிகளில் காண்கிறேன்.

அகம் கொண்ட ஆனந்தத்தை அணு அணுவாய் உணர்த்துகிறது கவிதை. பாராட்டுகள் இன்பக்கவி.

Nivas.T
02-11-2011, 06:23 AM
தாய்மையின் சிறப்பு, அதில் வரும் உணர்ச்சி ஆகா அருமையான கவிதை, என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது பலமுறை

மிக்க நன்றி இன்பக்கவி

சுடர்விழி
06-11-2011, 01:32 AM
அருமையான கவிதை ..தாய்மை உணர்வுகள் அழகான வார்த்தைகளில் கவிதையாக ..
வாழ்த்துக்கள்!

இன்பக்கவி
23-11-2011, 01:44 PM
தாமதமாய் நன்றிகள் அனைவருக்கும்:icon_b::icon_b::icon_b:

வெங்கி
24-11-2011, 06:15 AM
நன்றாக இருந்தது... பாராட்டுக்கள்

கலாசுரன்
26-11-2011, 05:39 AM
உன் பிஞ்சு பாதம்
எட்டி உதைக்கையில்
இதயம் படபடத்தது
பிஞ்சு பாதம்
காயமுற்றதோ என எண்ணி..

மென்மை என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறீர் ..!!!

வெகுவாக ரசித்தேன் ..!!!

ஆர்.ஈஸ்வரன்
26-11-2011, 09:24 AM
கவிதை மனதிற்கு என் வாழ்த்துக்கள்