PDA

View Full Version : கடாபியின் இறுதி நிமிடம்!! வீடியோ காட்சியுடன்



dhilipramki
22-10-2011, 04:17 PM
கடாபியின் இறுதி நிமிடம்
கடந்த ஆகஸ்ட் மாதம் த்ரிபோலி மாகாணம் புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. அதன் பின், சிர்டே மாகாணம் மட்டுமே மீதமிருந்தது. இவ்வாரம் லிபியா புரட்சிப் படையில் வேறு வழியின்றி மாட்டிக் கொண்ட கடாபியும் அவரது பாதுகாப்பு துனைவீரர்களும், கொல்லப்பட்டனர்.

டிஸ்ற்றிக்ட் 2 (District 2) நகரத்திலிருந்து, மிச்ரட்ட வழியே தப்பி செல்ல தம் பாதுகாப்புகளுடன் வாகனங்களில் செல்கிறார் என்று தெரிந்த பின்னர், பிரெஞ்சு படையின் விம்மான தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில், 75 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன என அறிவிக்க பட்டது. சேதம் மட்டும்மின்றி, கடாபியின் இளைய மகனான முடாசிம் மற்றும் கடாபி படைத் தளபதியாகிய அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக லிபியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பின் கடாபியின் கூட்டத்தினர், ஓடி ஒரு கழிவுநீர் வடிகால் மதுவின் உள்ளே ஒழிந்து கொண்டதை அறிந்து, நாடோ படையினர் விரைந்து அவ்விடத்தை அடைந்து சுற்றி வலைத்ததாக தெரிகிறது. சிறு போராட்டத்திற்கு பிறகு இரத்த வெள்ளத்திலிருந்த கடாபி பிடிபட்டார். அவரிடமிருந்து ஒரு தங்க சுழல்துப்பாக்கி கைப்பற்றப் பட்டதாக அல்-ஜசீரா தொலைக்காட்சியில் அறிவிக்க பட்டது.

பார்வையாளர் தன்விருப்புரிமை பெற்றது, விரும்பாதோர் பார்க்கவேண்டாம்.

http://www.youtube.com/watch?v=ONbvNV10K2A
பின்பு சில மணிநேரத்தில் அவர் இறந்து விட்டதாக (சுட்டுக் கொல்லப்பட்டதாக) தெரிவிக்கப் பட்டது. சம்பவத்தின் இடையே குண்டு பாயிந்து இறந்ததாக மருத்துவ தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டது, மற்றும் அக்குண்டு புரட்சியாளரிடமிருந்து சுடப்பட்டதா அல்லது கடாபியின் படை ஆட்களிடமிருந்து சுடப்பட்டதா என்று புலப்படவில்லை.

ஆனால், பிடித்த சில மணித்துளி நேரத்திலே, புரட்சி படி வீரர் ஒரு கடாபியை சுட்டதை பார்த்ததாக உள்ளூர் வாசி ஒருவர் கூரிவுள்ளார். கடாபியின் இறுதி நிமிடம் என்ற விடியோ காட்சிகள் இணைய தளத்தில் ஒளிபரப்ப படுகின்றது.

தூயவன்
24-10-2011, 09:06 AM
சில ஆண்டுகளுக்கு முன் நான் கடாபியை சந்தித்த போது அவர் எனக்கு வழங்கிய தேனீர் விருந்தை மறக்க முடியவில்லை. :frown::frown::frown::frown::frown: