PDA

View Full Version : iOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது?



dhilipramki
19-10-2011, 02:52 PM
iOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது?

ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று சொல்வது போல், கீழ் காணப்போகும் விடயம் ஒன்று போதும், அதாவது, iOS5 விடம் நீங்கள் உங்கள் குரலில் அநேகமாக எதைக்கேட்டாலும், உடனே iPhone பதிலளிக்கும். இப்பொழுது வானிலை என்ன, எத்தனை குறுந்தகவல் வந்து இருக்கிறது. நாளை காலை 9 மணிக்கு ஆர்ப்பொலியை (alarm) தயார் செய்.... போன்ற கேள்விகளை கெட்டு கொண்டே இருக்கலாம். பதில் உடனே மிகத் துல்லியமாய் வெளிவரும்.(இது உலகில் iPhone 4Sஇல் மட்டுமே இருக்கிறது.)

நிலையாயிருத்தல்- அதாவது, iOS ஒருத்தயாரிப்பிடமிருந்து வருகிறது, ஆனால் Android அவ்வாறு இல்லை. Android
வகை OS கள் அவரவர்க்கேற்ப மாற்றம் செய்யபடுகிறது.

iOS இல் பயனர் இடைமுகம் (user interface) மிக அர்புதுமாகவும், மிக எளிய வகையிலும் பயன்படுத்த இயலுகிறது, மற்றும் நேர்த்தியான ஆற்றலுடையது.Android ஐ விட அதிகபடியான பயன்பாட்டு தளங்கள் (Applications) இருக்கிறது, இலவச தளங்களும் மிகுந்து இருக்கிறது.

iOS இல் தீங்குநிரலுக்கு (malware) வழியே இல்லை. ஆனால், Android-லோ மூன்றாந்தரப்பு அங்கரிக்கப் படாதவைகள்
உள்ளது, மற்றும் இணையத்திலிருந்து இறக்கம் செய்வதற்கும் எவ்வித இடர்காப்புறுதி இல்லாததால், எவ்வைகை
வைரஸ்களும் பாதிக்கப்படலாம்.

iTunes Media Manager இருப்பதால், உங்கள் ஊடகங்களை எளிய முறையில் நிர்வகிக்க முடியும். iTunes இருப்பதால்
உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கணிணி இல்லாமல் நீங்கள் உங்களின் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது
தரவிறக்கம் செய்யப்பட்டவைகளை அடையலாம்.

ஆப்பிள் நிறுவனம் மின்கல நிர்வாகத் திறமையை உபயோகிக்க சில விடயங்களை புகுத்தியுள்ளது. ஆனால் Android இயங்குதளத்தில் அவ்வாறு ஒன்று காணபடுவதில்லை. iPad தொடர்ந்து பத்து மணிநேரம் இயங்கும் என்பது ஆச்சரியம்.

iOS க்கு உலகில் உள்ள எந்த ஆப்பிள் ஆதரவுக் குழுமம் மையத்திலும் உங்கள் உதவியை நாடலாம். ஆனால் Android OS கள் அவ்வாறு இல்லாமல், நீங்கள் யாரிடம் வாங்குநீர்களோ அவர்களிடம் அந்த குறிப்பிட்ட OS மாடலுக்கு நீங்கள் உதவியை நாட வேண்டும்.

iOS யில் Find My iPhone என்ற ஒரு பயன்பாட்டு தளம் இருப்பதால், களவுப் பொண்ண உங்களின் iPhoneஐ விரைவில்
கண்காணித்து பெற்று விடலாம். அந்த பயன்பாட்டை நீங்கள் இயக்கி வைத்திருக்கும் பொழுது, நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்களின் தடத்தை பின்தொடர முடியும். ஒரு வேலை உங்களின் iPhone கலவுப்போனால், அதைக்கொண்டு கண்டுவிடலாம். அது சுவிட்ச் ஆப் செயப்படாலும் GPRS இயங்கிக்கொண்டே இருக்கும்.

முன்பே கூறியது போல iTunes இருப்பதால் நீங்கள், உங்களுக்கு தேவையான பாடல்கள், காணொளிகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் ஒருமித்த வரிசைப்படி அமைத்துகொள்ளமுடியும். அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். iTunes களஞ்சிய கிடங்குமூலம் உங்களின் தேவையை பூர்த்திசெய்திட முடியும்.

AirPlay என்ற பயன்பாட்டுத் தளம் இருப்பதால், கம்பியில்லா ஒளிபரப்பையும், மற்ற i கருவிகளுக்கு உங்களின் கோப்புகளையும் மற்ற ஒலி-ஒளிகளையும் எளியமுறையில் பரிமாற்றம் செய்யமுடியும்.


மேற் எடுத்துக்காட்டப் பட்ட விடயங்களை விட இன்னும் ஏராளம் இருக்கிறது. இது போன்றவற்றைகளால்
Androidலிருந்து iOS வேறுப்பட்டு உலகில் முதன்மையாக திகழ்கிறது.

vseenu
19-10-2011, 04:35 PM
அருமை! இவ்வளவு வேறுபாடு உள்ளதா?நான் Android தான் சிறந்ததென இதுகாறும் எண்ணியிருந்தேன்.

dhilipramki
20-10-2011, 04:24 AM
அருமை! இவ்வளவு வேறுபாடு உள்ளதா?நான் Android தான் சிறந்ததென இதுகாறும் எண்ணியிருந்தேன்.

Android உம் கூகுளின் அருமையான படைப்பே, ஆனால் iOSக்கு நிகராக வருவதற்கு இன்னும் அவர்கள் பலவற்றை தரத்தில் உயர்த்த வேண்டும்.நன்றி

கிஷோர்
23-10-2011, 04:06 AM
அன்ரோயிட் , அப்பிளை பிடிக்க ரோம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எப்பவும் இலவசங்களில் உரிமையை *எதிர்பார்க்க முடியாது. இந்த கருத்தை கூட அப்பிளில் இருந்துதான் வரைகிறேன்.

dhilipramki
23-10-2011, 05:57 AM
இந்த வீடியோ லிங்க் ஐ கிளிக் செய்து, iPhone 4S எவ்வாறு பதில் கூறுகின்றது என்று பாருங்கள். நன்றி.

http://www.youtube.com/watch?v=Bz-fmXX9QDI

மயூ
25-10-2011, 06:30 PM
iOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது?

ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று சொல்வது போல், கீழ் காணப்போகும் விடயம் ஒன்று போதும், அதாவது, iOS5 விடம் நீங்கள் உங்கள் குரலில் அநேகமாக எதைக்கேட்டாலும், உடனே iPhone பதிலளிக்கும். இப்பொழுது வானிலை என்ன, எத்தனை குறுந்தகவல் வந்து இருக்கிறது. நாளை காலை 9 மணிக்கு ஆர்ப்பொலியை (alarm) தயார் செய்.... போன்ற கேள்விகளை கெட்டு கொண்டே இருக்கலாம். பதில் உடனே மிகத் துல்லியமாய் வெளிவரும்.(இது உலகில் iPhone 4Sஇல் மட்டுமே இருக்கிறது.)

அன்ரொயிட் வொயிஸ் அக்சன் என்று ஒரு விசயம் கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா?? அப்பிள் iOS 5 உடன் அறிமுகப் படுத்திய இந்த சிறி எனும் விடையம் அன்ரொயிட்டில் முதலே உள்ளது. சிறி அளவிற்கு அன்ரொயிட் வொயிஸ் அக்சன் சிறப்பானது இல்லை என்று ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் சிறி போல ஐரிஸ் போன்ற செயலிகள் இப்போது அன்ரொயிட் சந்தையில் கிடைக்கின்றன.



நிலையாயிருத்தல்- அதாவது, iOS ஒருத்தயாரிப்பிடமிருந்து வருகிறது, ஆனால் Android அவ்வாறு இல்லை. Android
வகை OS கள் அவரவர்க்கேற்ப மாற்றம் செய்யபடுகிறது.
அன்ரொயிட்டின் பலமும் அதேதான். ஐபோன் யார் செய்தாலும் அது அப்பிள்தான். மற்றவர்கள் ஐபோன் மாதிரி போன் செய்தால் நீதி மன்றத்தில் தவம் கிடக்க வேண்டும்.

பல நிறுவனங்களும் அன்ரொயிட்டை எடுத்து தமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான் ஆனால் அவர்கள் கூகிளால் நிர்ணயிக்கப்பட்ட சில தரக்கட்டுப்பாடுகளுக்கு உள்ளமைவது அவசியம்.

இதன் காரணமாகவே Sony Ericson போனுக்கு எழுதிய அன்ரொயிட் மென்பொருளை சாம்சுங் அன்ரொயிட் போனிலும் இயக்ககூடியதாக உள்ளது.


iOS இல் பயனர் இடைமுகம் (user interface) மிக அர்புதுமாகவும், மிக எளிய வகையிலும் பயன்படுத்த இயலுகிறது,
பாஸ் அன்ரொயிட் பாவிப்பவர்களுக்கு அன்ரொயிட் பயனர் இடைமுகம் மிக அர்புதமாகவும் மிள எளிய வகையிலும் பாவிக்கக் கூடியதாகத்தான் இருக்கின்றது ;)


மற்றும் நேர்த்தியான ஆற்றலுடையது.Android ஐ விட அதிகபடியான பயன்பாட்டு தளங்கள் (Applications) இருக்கிறது, இலவச தளங்களும் மிகுந்து இருக்கிறது.
நேர்த்தியானது ஆற்றலுடையது ஐபோன் என்று கூறுவது அப்பட்டமான பொய். இரண்டு இயங்கு தளங்களுமே ஒன்றிறகு ஒன்று சளைக்காத இயங்கு தளங்கள்.

அதிகமாக இலவச செயலிகளை வழங்குவது அன்ரொயிட்தான். அப்பிள் செயலிகள் பெருமளவில் பணம் செலுத்த வேண்டிய செயலிகள்.


iOS இல் தீங்குநிரலுக்கு (malware) வழியே இல்லை. ஆனால், Android-லோ மூன்றாந்தரப்பு அங்கரிக்கப் படாதவைகள்
உள்ளது, மற்றும் இணையத்திலிருந்து இறக்கம் செய்வதற்கும் எவ்வித இடர்காப்புறுதி இல்லாததால், எவ்வைகை
வைரஸ்களும் பாதிக்கப்படலாம்.
ஜெயில் பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களிலும் இதே பிரைச்சனை உள்ளது. மல்வேர்கள் அன்ரொயிட்டிலேயே அதிகம் உள்ளன என்பது கசப்பான உண்மையே. அடியேன் ஒத்துக் கொள்கின்றேன்.




iTunes Media Manager இருப்பதால், உங்கள் ஊடகங்களை எளிய முறையில் நிர்வகிக்க முடியும். iTunes இருப்பதால்
உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கணிணி இல்லாமல் நீங்கள் உங்களின் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது
தரவிறக்கம் செய்யப்பட்டவைகளை அடையலாம்.
கூகிள் மியூசிக் என்று ஒரு செயலி வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலம் இதை செய்யலாம். Cloud இல் இருக்கும் இசை மெட்டுக்களை அமெரிக்காவில் இருந்தால்ம் அத்திப் பட்டியில் இருந்தாலும் கேட்டு இரசிக்கலாம்.


ஆப்பிள் நிறுவனம் மின்கல நிர்வாகத் திறமையை உபயோகிக்க சில விடயங்களை புகுத்தியுள்ளது. ஆனால் Android இயங்குதளத்தில் அவ்வாறு ஒன்று காணபடுவதில்லை. iPad தொடர்ந்து பத்து மணிநேரம் இயங்கும் என்பது ஆச்சரியம்.
இது பற்றிய தகவல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் Battery Management அன்ரொயிடிலும் கண்டிப்பாக இயங்குதளத்தினால் கண்காணிக்கப்படுகின்றது.



iOS க்கு உலகில் உள்ள எந்த ஆப்பிள் ஆதரவுக் குழுமம் மையத்திலும் உங்கள் உதவியை நாடலாம். ஆனால் Android OS கள் அவ்வாறு இல்லாமல், நீங்கள் யாரிடம் வாங்குநீர்களோ அவர்களிடம் அந்த குறிப்பிட்ட OS மாடலுக்கு நீங்கள் உதவியை நாட வேண்டும்.
இது உண்மைதான். ஆனால் ஒரு விடையத்தில் எங்களுக்கு தெரிவுகள் அதிகமாகக் கிடைக்கின்றன என்பது சிறப்பான விடையம்.

குறிப்பாக உலகில் டொயாட்டா இரக வாகனங்கள் மட்டுமே உள்ளன என்று வைத்தால் என்ன நடக்கும்? நாட்டாமை நடத்துவார்கள் டொயாட்டா காரர்கள். இப்போது பல கம்பனிகளும் இருப்பதனால் போட்டி காரணமாக எல்லாரும் சிறப்பான பயனர் சேவை வழங்குவர்.



iOS யில் Find My iPhone என்ற ஒரு பயன்பாட்டு தளம் இருப்பதால், களவுப் பொண்ண உங்களின் iPhoneஐ விரைவில்
கண்காணித்து பெற்று விடலாம். அந்த பயன்பாட்டை நீங்கள் இயக்கி வைத்திருக்கும் பொழுது, நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்களின் தடத்தை பின்தொடர முடியும். ஒரு வேலை உங்களின் iPhone கலவுப்போனால், அதைக்கொண்டு கண்டுவிடலாம். அது சுவிட்ச் ஆப் செயப்படாலும் GPRS இயங்கிக்கொண்டே இருக்கும்.
இதே விடையங்களைச் செய்ய இலவர அன்ரொயிட் செயலிகள் பல இருக்கின்றன.


முன்பே கூறியது போல iTunes இருப்பதால் நீங்கள், உங்களுக்கு தேவையான பாடல்கள், காணொளிகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் ஒருமித்த வரிசைப்படி அமைத்துகொள்ளமுடியும். அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். iTunes களஞ்சிய கிடங்குமூலம் உங்களின் தேவையை பூர்த்திசெய்திட முடியும்.
கூகிள் புக்ஸ், கூகிள் மியூசிக், யூடியீப் போன்ற தளங்கள் மூலம் இதே வேலையை அன்ரொயிட்டிலும் செய்யலாம்.

[
B]AirPlay[/B] என்ற பயன்பாட்டுத் தளம் இருப்பதால், கம்பியில்லா ஒளிபரப்பையும், மற்ற i கருவிகளுக்கு உங்களின் கோப்புகளையும் மற்ற ஒலி-ஒளிகளையும் எளியமுறையில் பரிமாற்றம் செய்யமுடியும்.
Bluetooth, Wifi, NFC என்று அன்ரொயிட்டிலும் கம்பியில்லா தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் ;)



மேற் எடுத்துக்காட்டப் பட்ட விடயங்களை விட இன்னும் ஏராளம் இருக்கிறது. இது போன்றவற்றைகளால்
Androidலிருந்து iOS வேறுப்பட்டு உலகில் முதன்மையாக திகழ்கிறது.[/QUOTE]
அதான் ஒன்று கூட செல்லாக் காசு ஆகி விட்டதே இப்போது??

அப்பிள் தயாரிப்புகள் எப்போதும் கொள்ளை அடிக்கும் நோக்கில் (Over Priced) தயாரித்து பிரான்ட் பெயரைச் சொல்லி விற்கும் வியாபாரிகள். யார் மறுத்தாலும் எதிர்த்தாலும் ஐபோனிற்கு ஆப்பு அன்ரோயிட்டால்தான். இப்போது உலக சந்தையில் ஐபோனை விட அன்ரொயிட்டே அதிகமாக விற்றுத் தீர்க்கின்றன. 2012 நடுப்பகுதியில் ஐபோனை விட அன்ரோயிட் போன்களுக்கு அதிகமான செயலிகள் இருக்கும். மற்றும் பல...!

மயூ
25-10-2011, 06:43 PM
அன்ரோயிட் வொயிஸ் அக்சன் 1 வருடத்திற்கு முன்னமே வந்தாகிவிட்டது.
http://www.youtube.com/watch?v=gGbYVvU0Z5s

நான் குறிப்பிட்ட ஐரிஸ் செயலி (அல்பா பதிப்பு)
http://www.youtube.com/watch?v=fxWNkTIlc8I

மயூ
26-10-2011, 03:59 AM
அன்ரோயிட் , அப்பிளை பிடிக்க ரோம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எப்பவும் இலவசங்களில் உரிமையை *எதிர்பார்க்க முடியாது. இந்த கருத்தை கூட அப்பிளில் இருந்துதான் வரைகிறேன்.

ஐபோனை மட்டும் பாவித்தவர்கள் அல்லது அன்ரொயிட்டை வாழ்க்கைக் காலத்தில் பாவிக்காதவர்கள் அடிக்கடி சொல்லும் கருத்து இது. கடைசியாக வந்த ஒரு அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிப் பாவித்துப் பாருங்கள் எத்தனை தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்று.

3 வருடங்களுக்கு முன்னர் இருந்த அன்ரொயிட் வேறு இன்று கிடைக்கும் அன்ரொயிட் வேறு. சகல விதத்திலும் ஐபோன் களிற்கு போட்டியாக அமைந்து விட்டன. Galaxy Nexus கடைசியாக வந்த தொலைபேசி. இணையத்தில் தேடி திரைக்காட்சிகளைக் காணவும். :)