PDA

View Full Version : ஒற்றைச் சாவி



கலாசுரன்
19-10-2011, 06:43 AM
அழகற்றதொரு குவியலிலிருந்து
எனது மனச் சீவல்களை
ஒன்றின்மேல் ஒன்றாக
சீரமைத்துக் கொள்கிறாய்..

என் வீட்டு அலமாரிப் புத்தகங்களை
அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்

அப்புத்தகங்களை குலைத்து நீ
குவித்துப் போடுகிறாய்..

மனதை ஒரு முறைகூடத் திறந்து பார்க்க
ஆசைப்படுகிறது

கதவிழந்ததொரு அலமாரியின்
ஒற்றைச் சாவி
*
***

Nivas.T
19-10-2011, 08:27 AM
கவிதை அருமை கலாசுரன்

பாராட்டுகள்

vseenu
19-10-2011, 10:16 AM
ஒற்றைச் சாவி கவிதை அருமை.பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி

கலாசுரன்
03-11-2011, 01:38 PM
நன்றி நிவாஸ் மற்றும் vseenu :)