PDA

View Full Version : உபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்



ஆளுங்க
16-10-2011, 09:29 AM
உபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்
http://1.bp.blogspot.com/-ELN-sBK88is/TpqAzG8H6uI/AAAAAAAABIM/JGcnaXQ_klM/s1600/Ubuntu-Oneiric-Ocelot-11.10.jpeg
உபுண்டு (Ubuntu) என்கிற ஒப்பற்ற இயங்கு தளத்தின் அருமை பெருமைகளை அதனை பயன்படுத்துபவர்கள் அறிவர்!!

திறமூல இயங்குதளங்களில் ஒன்றான உபுண்டுவின் முக்கிய சிறப்பம்சங்கள்:

* விண்டோஸ் தளத்தில் இருந்தே நிறுவ முடியும்
* எந்த மென்பொருளையும் அதிக சிரமம் இன்றி எளிதாக நிறுவவும், பயன்படுத்தவும் முடியும்.
* MP3 முதலிய காப்புரிமை பெறப்பட்ட கோடெக் போன்றவற்றுக்கும் நல்லதொரு ஆதரவு தருகிறது. (சில வகை லினக்ஸ் இயங்குதளங்களில் இது கடினம்!)
* மிகவும் முக்கியமான சிறப்பம்சம்- கணிணி உங்கள் தாய் மொழியில் உங்களுடன் உரையாடும் (விண்டோஸ் தளத்தில் இதனைப் பெற எவ்வளவு கடினம் என்பதை பயனாளர்கள் அறிவர்)

"பாமரர்களின் லினக்ஸ்" என்று புகழ் பெற்ற உபுண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய பதிப்பை வெளியிடுவது வழக்கம்..

2011 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் வெளியான பதிப்பு தான் உபுண்டு 11.10
ஒவ்வொரு பதிப்பிற்கும் வித்தியாசமான ஒரு பெயர் இடுவது உபுண்டு குழுவின் சிறப்பு. உபுண்டு 11.10 Oneiric Ocelot என்று பெயரிடப்பட்டு உள்ளது..

http://2.bp.blogspot.com/-W-j9awFHG6E/TpqAylc1OhI/AAAAAAAABIE/s0lmt-go18M/s1600/images.jpeg

உபுண்டு 11.10 Oneiric Ocelot பதிப்பின் சிறப்பம்சங்கள்:

* மிகவும் அருமையான உள்நுழைதல் மேலாண்மை (Login Manager)
* எளிதாக மென்பொருள் கண்டறியும் வசதி
* தேஜா டப் (Deja Dup) என்கிற காப்புப்படி (Backup) வசதி
* எளிமையாக்கப்பட் ட கோப்பு மேலாண்மை
* உபுண்டு முகப்பு Unity ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட அணுகுமுறை.
* பாரம்பரியம் மிகுந்த க்னோம் (Gnome Classic) இனியும் முகப்பில் இருக்கப்போவதில்லை. அதற்குப் பதில், Gnome 3.2 உள்ளது.
* விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ளது போலவே, Alt + Tab அழுத்தி பல வேளைகளுக்கு இடையில் மாறலாம்!!
* 64- பிட் கணிணிகளில் 32-பிட் ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
* தமிழ் மொழியில் படிக்க மற்றும் எழுத முழு ஆதரவு

http://2.bp.blogspot.com/-FnV55CwWoNs/TpqMkt0V67I/AAAAAAAABIc/6VqxU0-raVw/s1600/ubuntu-unity.png

பதிப்புடன் வரும் திறமூல மென்பொருட்கள்:

இணைய உலாவி : பயர்பாக்ஸ் 7.0
இசைப்பான்: பேன்ஷீ (Banshee)
படங்கள் ஒருங்கிணைப்பு: ஷாட்வெல் (Shotwell)
ஆவணங்கள்: லிப்ரே ஆபிஸ் (Libre Office)
வட்டு எழுதி: பிரசரோ (Brasero)
மின்னஞ்சல்: தண்டர்பேர்ட் (Thunder bird)
டொரெண்ட்: பிட் டிரான்ஸ்மிஷன் (Bit Transmission)
ஆவணக்காப்பு (Archive): Archive Manager
சமூக தொடர்பு (Chat, Face Book போன்றவை): கிவிப்பர் (Gwibber)

மேலும் பல....

இப்போதே உபுண்டு 11.10 தரவிறக்கம் செய்யுங்கள்..
அதன் பிரம்மாண்டத்தில் உங்களை உணருங்கள்!!

http://2.bp.blogspot.com/-Iexs5GrFbHY/TpqMjyOMVPI/AAAAAAAABIU/bbFkdfYN08g/s1600/Ubuntulogin-640x480.jpg

நான் இந்த பதிவை எழுதுவதே அதனைக் கண்ட பின் தான் என்று சொல்லவும் வேண்டுமா??

என்ன உபுண்டு 11.10 இல் நுழைய தயாராகி விட்டீர்களா?
http://4.bp.blogspot.com/-sSGQmxq8wZ0/TpqNKu2Ab0I/AAAAAAAABIk/m1bxV99T858/s1600/image.jpeg

பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறு பதிப்பு செய்யப்பட்டது

வியாசன்
16-10-2011, 10:54 AM
நன்றி நண்பரே என்னுடைய கணனி அதை தானாகவே மேம்படுத்திவிட்டது. 11.04 க்கும் இதற்குமிடையில் நிறைய வித்தியாசங்கள். பல விடயங்களை தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. ஆனாலும் இலவசமாக ஒரு இயங்குதளம். அதில் எத்தனைவிடயங்கள். நன்றி தகவல்களுக்கு

vseenu
16-10-2011, 01:08 PM
என் கணினியிலும் நிறுவ ஆசைதான்.தகவல்களுக்கு மிக்க நன்றி.

ஆளுங்க
16-10-2011, 03:36 PM
இலவசமாக ஒரு இயங்குதளம். அதில் எத்தனைவிடயங்கள். நன்றி தகவல்களுக்கு

நண்பரே,
இலவசம் என்கிற சொல்லைப் பயன்படுத்தாதீர்.
இதனைக் கொண்டு வர பல தன்னார்வ தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள்!!
இலவசம் என்று கூறி அவர்கள் உழைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

"திறமூலம்" என்கிற சொல்லைப் பயன்படுத்துங்கள்!!

ஆளுங்க
16-10-2011, 05:56 PM
பதில் இட்ட வியாசன் மற்றும் சீனு ஆகியோருக்கு என் நன்றி!!!

ஸ்ரீதர்
17-10-2011, 04:17 AM
என் கணினியில் விண்டோஸ் 7 64 பிட் பயன்படுத்தி வருகிறேன். அதில் உபுண்டுவை ஒரே சமயத்தில் பயன்படுத்துமாறு நிறுவ முடியுமா?

ஆளுங்க
17-10-2011, 06:32 AM
என் கணினியில் விண்டோஸ் 7 64 பிட் பயன்படுத்தி வருகிறேன். அதில் உபுண்டுவை ஒரே சமயத்தில் பயன்படுத்துமாறு நிறுவ முடியுமா?

நிச்சயம் முடியும்..
சிறிதளவு இடம் மட்டுமே தேவை!!

வியாசன்
17-10-2011, 09:04 AM
நண்பரே,
இலவசம் என்கிற சொல்லைப் பயன்படுத்தாதீர்.
இதனைக் கொண்டு வர பல தன்னார்வ தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள்!!
இலவசம் என்று கூறி அவர்கள் உழைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

"திறமூலம்" என்கிற சொல்லைப் பயன்படுத்துங்கள்!!

நான் அவர்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தவில்லை. அவர்களுடைய உழைப்பின் பயன் எங்களுக்கு இலவசமாகத்தானே கிடைக்கின்றது.

ஆளுங்க
17-10-2011, 03:02 PM
நான் அவர்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தவில்லை. அவர்களுடைய உழைப்பின் பயன் எங்களுக்கு இலவசமாகத்தானே கிடைக்கின்றது.

விருப்பம் இருந்தால், நீங்களும் பங்கேற்கலாம்...

"சிறு துரும்பும் பல் குத்த உதவும் தானே!"

lkmar
22-10-2011, 09:28 AM
do .avi format support in ubuntu 11.1 OS ?
will wireless support in ubuntu 11 ?

ஆளுங்க
22-10-2011, 06:34 PM
do .avi format support in ubuntu 11.1 OS ?
will wireless support in ubuntu 11 ?

கண்டிப்பாக ஆதரவு உண்டு.

nandabalan
11-12-2011, 09:11 AM
சமீபத்தில் இதை நண்பர் ஒருவர் தனது கணனியில் நிறுவி இருந்ததைப் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது.

matheen
21-01-2012, 02:30 PM
அன்பரே இலவசமாக cd பெறக் கூடிய வசதி தற்பொழுதும் உண்டா? ஏனெனில் எனது இணைய இணைப்பு வேகம் மிகவும் குறைவானது