PDA

View Full Version : நிச்சயமாக



VISHNU ROCKY77
12-10-2011, 05:03 AM
http://i.imgur.com/Djd1i.jpg

நிச்சயமாக உணர்ந்திருக்ககூடும்
பிரிவின் வலியை
நான் இல்லாத இந்த நாட்களில்

நிச்சயமாக அறிந்திருக்ககூடும்
வார்த்தைகளின் கூர்மையை
இந்த மௌனத்தில்

நிச்சயமாக கேட்டிருக்ககூடும்
மௌனத்தின் விசும்பல்களை
இந்த இரவுகளில்

நிச்சயமாக புரிந்திருக்ககூடும்
வாழ்க்கையின் நிதர்சனங்கள்
இத்தருணங்களில்

நிச்சயமாக தேடியிருக்ககூடும்
எனது அருகாமையை
மனது இவ்வேளைகளில்

நிச்சயமாக கடந்திருக்ககூடும்
நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த
பூங்காவினை

நிச்சயமாக பூத்திருக்ககூடும்
நான் தினமும் உனக்காய் பறித்து வரும்
மஞ்சள் ரோஜா.

நிச்சயமாக பெய்திருக்ககூடும்
அந்த சாலையில் நம்மை
நனைத்த ம்ழை

நிச்சயமாக தொடங்கியிருக்ககூடும்
நாம் சென்று திரும்பிய
அந்த மலைச்சாரல்

இவை அனைத்தும்
நிச்சயமாக நடந்திருக்ககூடும்

நீ எனை பிரிந்து சென்றதை போல.......:traurig001:

vseenu
12-10-2011, 05:31 AM
இதை படிக்கும் அனைவரும் நிச்சயமா இவருக்கு நன்றி சொல்லணும்.என் பங்குக்கு நன்றி