PDA

View Full Version : இராமனைத் தேடி!!!!

அல்லிராணி
11-10-2011, 05:01 AM
எப்படிக் கிடைப்பான்
ஏகபத்தினி விரதன்
இராமன்...?

இல்லாத சீதைக்கு..

vseenu
11-10-2011, 05:23 AM
அருமையான கேள்விதான்?

சீதையே இல்லையென்றால் ராமன் மட்டும்
எதற்கு?

Viduthalai
11-10-2011, 06:04 AM
ராமனும் இல்லை
சீதையும் இல்லை
மாய மான் எனும்
காமனும் போதையும்
தலைக்குள் இருந்தால்.

அல்லிராணியின் கேள்வி அசத்தல்.

dhilipramki
11-10-2011, 06:08 AM
ராமனும் சீதையும் இருப்பதை விட காமனும் போதையும் இருப்பது; தேவலாம்

ஜான்
11-10-2011, 07:18 AM
சீதை ராமன் போன்ற கற்பு உருவகங்கள் தேவையில்லை இந்த நூற்றாண்டில் என்பது என் கருத்து
கவிதை நன்றாக இருக்கிறது

பென்ஸ்
11-10-2011, 08:29 AM
அட ராவணன் இருக்கிறானே...
...

அல்லிராணி
11-10-2011, 08:50 AM
கவிதைக்குப் பின்னுள்ள முரண் கருத்துகள்..

இராமனுக்கு பல குணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஏக பத்தினி விரதம்..

எந்தப் பெண்ணைக் கேட்டாலும் என் கணவன் இராமன் மாதிரிக் கணவன் வேண்டும் என்பாள்..

இராமனின் ஏக பத்தினி விரதத்திற்கும் மேலான ஒரு குணம் மூத்தோர் சொல் தட்டாமை..

ஆனால் எந்தப் பெண்ணும் இந்தக் குணமுள்ள கணவனை ஒப்புக் கொள்வதில்லை.

அதாவது மாமியார் சொன்னால் கானகம் விரும்பிச் செல்லும் பெண் எங்குமில்லை.

இராமன் தான் ஏகபத்தினி விரதனாயிற்றே..

இப்படி சீதையாக இல்லாத பெண்கள் தேடினால்.. கிடைத்து விடுவானா என்ன?

சீதை ராமன் போன்ற கற்பு உருவகங்கள் தேவையில்லை இந்த நூற்றாண்டில் என்பது என் கருத்து
கவிதை நன்றாக இருக்கிறது

இது தேவையில்லை என்று நாம் நமக்கு உரியதை மட்டுமே சொல்ல முடியும். மற்ற எல்லாவற்றிற்கும் அவற்றின் இருப்பிற்கான உரிமை உண்டென்பதே பொதுநீதியாகும்.

பிரேம்
11-10-2011, 11:54 AM
சரியான கேள்வி...மிகச் சரியான விளக்கம்...அருமை..

ஜான்
11-10-2011, 12:07 PM
கவிதைக்குப் பின்னுள்ள முரண் கருத்துகள்..

இராமனுக்கு பல குணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஏக பத்தினி விரதம்..

எந்தப் பெண்ணைக் கேட்டாலும் என் கணவன் இராமன் மாதிரிக் கணவன் வேண்டும் என்பாள்..

இராமனின் ஏக பத்தினி விரதத்திற்கும் மேலான ஒரு குணம் மூத்தோர் சொல் தட்டாமை..

ஆனால் எந்தப் பெண்ணும் இந்தக் குணமுள்ள கணவனை ஒப்புக் கொள்வதில்லை.

அதாவது மாமியார் சொன்னால் கானகம் விரும்பிச் செல்லும் பெண் எங்குமில்லை.

இராமன் தான் ஏகபத்தினி விரதனாயிற்றே..

இப்படி சீதையாக இல்லாத பெண்கள் தேடினால்.. கிடைத்து விடுவானா என்ன?

இது தேவையில்லை என்று நாம் நமக்கு உரியதை மட்டுமே சொல்ல முடியும். மற்ற எல்லாவற்றிற்கும் அவற்றின் இருப்பிற்கான உரிமை உண்டென்பதே பொதுநீதியாகும்.

ஆணாக இருந்தாலும் சரி பெண் என்றாலும் சரி கற்பு என்பது ஒரு மாய உருவகம் என்ற என் கருத்தை தாழ்மையுடன் உறுதிப் படுத்துகிறேன்
நான் சொல்வது ராமன் சீதையின் கற்பு சார்ந்த கருத்து மட்டுமே....மூத்தோர் சொல் தட்டாமை போன்ற மகத்தான அறக் குணங்களை அல்ல.....தூய்மையை நிரூபிக்க தீயில் இறங்கச் சொன்னால் இன்றைய பெண் இரண்டு கேள்விகள் கேட்பாள் .....1. நீயும் சேர்ந்து இறங்கு ...2.மாட்டேன்...விவாகரத்துக்கு தயாரா ?

தாமரை
11-10-2011, 02:06 PM
நல்ல கேள்வி..

அல்லிராணி
11-10-2011, 02:08 PM
ஆணாக இருந்தாலும் சரி பெண் என்றாலும் சரி கற்பு என்பது ஒரு மாய உருவகம் என்ற என் கருத்தை தாழ்மையுடன் உறுதிப் படுத்துகிறேன்
நான் சொல்வது ராமன் சீதையின் கற்பு சார்ந்த கருத்து மட்டுமே....மூத்தோர் சொல் தட்டாமை போன்ற மகத்தான அறக் குணங்களை அல்ல.....தூய்மையை நிரூபிக்க தீயில் இறங்கச் சொன்னாள் இன்றைய பெண் இரண்டு கேள்விகள் கேட்பாள் .....1. நீயும் சேர்ந்து இறங்கு ...2.மாட்டேன்...விவாகரத்துக்கு தயாரா ?

எங்கு எது முன் வைக்கப் படுகிறதோ அங்கு அதை விவாதித்தல் நலம். இங்கு முன் வைக்கப்பட்டிருப்பது மூத்தோரை மதிக்கும் குணம் / தன் கணவன் தன்னைத் தவிர வேறு யாரையும் நோக்கக் கூடாது என்ற ஆசை.

இராமன் போலக் கணவன் வேண்டுமெனக் கேட்பவளே!
நீ சீதை போலவா?

இராமன் - சீதை என்றால் கற்பு என்ற கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பார்க்க வேண்டும் என்பது உங்கள் ஆவலாய் இருக்கலாம். ஆனால் இக்கவிதையோ இராமாயணமோ அப்படி அல்ல. அதை மட்டும் காட்டுவதாய் இல்லை. கற்பு என்பது என்ன என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளக்கம் உண்டு.

உங்கள் விவாதங்களை எங்கு கற்பு சிறந்தது என்ற கருத்து வைக்கப்படுகிறதோ அங்கே எழுதவும்.. திரியினை திசை திருப்ப வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

ஜான்
11-10-2011, 03:58 PM
நல்லது
திரியினைத் திசை திருப்பவில்லை ....
உங்கள் வரிகளில் ஏக பத்தினி விரதன் என்கிற வாக்கியம் வருவதால் படிப்பவர்க்கு கற்பு என்கிற கருத்தாக்கம் முன்வைக்கப் படுவதாகத் தோன்றுவது இயல்பானதும் சரியானதும்தானே ....
உங்கள் கவிதையில் மூத்தோரை மதித்தல் என்கிற வார்த்தைகள் வந்திருந்தால் நாங்களும் அதையே எதிரொலித்திருப்போம்
நன்றி
ராமன் ,சீதை என்கிற கடவுள் தன்மை நிறைந்த இரண்டு தெய்வீகக் குணங்களில் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏன் ஏகபத்தினி விரதன் என்ற வார்த்தைகளை மட்டும் கையாண்டீர்கள் என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும் ....எ , ஏ என்கிற மோனை நயத்துக்காக எழுதியிருப்பீர்கள்...இன்னும் ஓரிரு வரிகள் சேர்த்திருக்கலாம்

அல்லிராணி
11-10-2011, 04:55 PM

உங்களால் இயலாவிட்டால் விட்டு விடுங்கள்.. அதற்காக உலகில் எல்லோருமே இப்படித்தான் என்று கூறுவது தவறு.

நான் சமூக வழக்கத்தில் உள்ள பொருளைத்தான் சொன்னேன். உனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்ற கேள்விக்கு 100 க்கு 70 சதம் இந்துப் பெண் இராமன் போல வேண்டும் என்றே பதில் சொல்கிறாள்.

அந்த இராமனைப் போல என்பதில் ஏக பத்தினி விரதன் என்ற ஒரே ஒரு குணம்தான் அவர்களால் சொல்லப்படுவதாகும். இதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் அறிவார்கள்.

இராமன் என்றால் இன்னும் பல குணங்கள் உண்டு என அவர்கள் மறந்து விடுகிறார்கள். அதே சமயம் இராமன் போன்ற குணங்களை கொண்டவனுக்கு ஏற்றவளாக தங்களை மாற்றிக் கொள்ளவும் செய்வதில்லை..

இதனால் இன்று சீதையில்லை - அதனால் இன்று இராமனுமில்லை என்பது கவிதையின் முழுப் பொருள் என்பதையே .நீங்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

வார்த்தை நயம் என்பது புத்தம் புதிதாய் எழுதத் தொடங்குபவர்கள் ஏன் போடுகிறோம் எதற்குப் போடுகிறோம் எனப் புரியாமல் செய்வதாகும். பெண்கள் அந்த ஒரு குணத்தை மட்டும் கூறுவதால் அந்த வார்த்தையைத்தான் போட இயலும். வேறு எந்த வார்த்தையும் அங்கு பொருந்தாது.

கடவுள் இல்லை என்று எழுதக் கூட கடவுள் என்று எழுதித்தான் வேண்டும்.

கடவுள்தான் இல்லையே, ஏன் கடவுள் என எழுதினாய் என்று கேட்பது எவ்வளவு அறியாமையோ அப்படிப்பட்ட அறியாமையே ஏக பத்தினி விரதன் என்பதை எந்தக் கோணத்தில் நான் அணுகி இருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்ளாமல் விவாதிப்பதாகும்.

நீங்கள் சொல்வது போல் எழுதினால் அதற்குப் பெயர் கவிதையல்ல. துணுக்கு... பெட்டிச் செய்தி...

ஜான்
11-10-2011, 05:02 PM
நன்றி
நிறைய எழுதுங்கள்
நிறைவாய் எழுதுங்கள்
வாசகன் புரிந்து கொள்ளாததில் தவறில்லை
கவிஞர்கள் புரிந்துகொள்வது நல்லது

Viduthalai
11-10-2011, 05:36 PM
எழுதியவரின் கருத்தை படிப்பவர் அப்படியே புரிந்து கொள்வார் என சொல்வதற்கில்லை.
எனவே இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் நன்று என கருதுகிறேன்.
அதுவே எழுதப் பட்ட கவிதைக்கும், கவிஞருக்கும் வெற்றி, வாசிக்கும்
வாசகர்களுக்கும் வெற்றி என நான் நம்புகிறேன்.

கோபாலன்
11-10-2011, 08:23 PM
இதிகாசங்கள் , புராணங்கள் போன்றவை நம்மை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை .
அனால் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் இந்த காலத்திற்கும் பொருந்துமா என்பது கேள்விக்குறியே ?:)

vseenu
12-10-2011, 12:12 AM
இதிகாசங்களிலிருந்து சாறை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கையை நீக்கிவிடவேண்டுமென்று எங்கோ படித்த ஞாபகம்.

ஜான்
12-10-2011, 03:24 AM
மன்னிக்கவும்

இது கருத்துக்களம் நண்பரே ...போர்க்களமல்ல...

வெற்றி தோல்வி என்ன இருக்கிறது இதில்.....ஏற்றுக்கொள்ளக் கூடாத கருத்து என்று எதுவும் இல்லை.....

ஜான்
12-10-2011, 03:29 AM
எழுதியவரின் கருத்தை படிப்பவர் அப்படியே புரிந்து கொள்வார் என சொல்வதற்கில்லை.
எனவே இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் நன்று என கருதுகிறேன்.
அதுவே எழுதப் பட்ட கவிதைக்கும், கவிஞருக்கும் வெற்றி, வாசிக்கும்
வாசகர்களுக்கும் வெற்றி என நான் நம்புகிறேன்.

வாசகர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ambiguity இன்றி எழுதி விட்டால் நலம் என்பது எனது தாழ்மையான கருத்து

அல்லிராணி
12-10-2011, 04:04 AM
வாசகர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ambiguity இன்றி எழுதி விட்டால் நலம் என்பது எனது தாழ்மையான கருத்து

ஆம்பிகியூட்டி அழகு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. எளிமையான கவிதைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். எளிமையாய் எழுதுபவர் எளிமையாய் எழுதட்டும்.

இது போன்ற கவிதைகளுக்குத் தனி வாசகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகத்தான் இக்கவிதை..:D:D:D

ஜான்
12-10-2011, 04:50 AM
விவாதம் முடிந்தது என்று நினைத்தேன் !இன்னும் தூவானம் விடவில்லையா!!

கவிஞரே நீங்கள் உங்கள் கவிதையில் 'ஏக பத்தினி விரதன் --அது இல்லாத சீதை 'என்று சொல்லிவிட்டு பின்பு "நான் மற்ற குணங்களை சொன்னேன்"என்பது உங்கள் கருத்திலிருந்து நீங்களே நழுவுவது ஆகும் ...மன்னிக்க.....

கவிஞர் முதலில் என்ன சொல்ல வந்தார்.....மற்ற வாசகர்களுக்கு
அது எவ்விதம் அர்த்தமாயிற்று என அறிய விரும்புகிறேன் .....கொஞ்சம் சொல்லுங்கள் நண்பர்களே .....

"அந்த" வாசகர்களுக்காக "அந்த" வட்டத்தில் நீங்கள் எழுதினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் ..."இந்த"வாசகர்களுக்காக "இந்த" வட்டத்தில் நீங்கள் எழுதினால் நாங்கள் தானே பதிலிட முடியும் ...!!!!!!
''அந்த வட்டத்தைச் சேர்ந்தவர்கள்" மட்டும் பதில் சொன்னால் போதும் என்று நீங்கள் திர்யின் ஆரம்பத்தில் சொல்லிவிட்டால் போதும் அல்லவா!!!!!

செல்வா
12-10-2011, 08:20 AM
இது போன்ற கவிதைகளுக்குத் தனி வாசகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகத்தான் இக்கவிதை..:D:D:D

"அந்த" வாசகர்களுக்காக "அந்த" வட்டத்தில் நீங்கள் எழுதினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் ..."இந்த"வாசகர்களுக்காக "இந்த" வட்டத்தில் நீங்கள் எழுதினால் நாங்கள் தானே பதிலிட முடியும் ...!!!!!!
''அந்த வட்டத்தைச் சேர்ந்தவர்கள்" மட்டும் பதில் சொன்னால் போதும் என்று நீங்கள் திர்யின் ஆரம்பத்தில் சொல்லிவிட்டால் போதும் அல்லவா!!!!!

மேற்கூறிய வாசகங்களை விட்டுவிடலாமே....

தமிழில் கவிதைகளுக்கு ஆழமளிப்பவை இணைப்புச்சொற்களை நீக்கி விடுவதாகும்.

தாமரையண்ணாவின் கவிதையைப் பிரித்து மேய்ந்திடுவோம் திரியில் அழகாக இதன் விளக்கத்தைக் காணலாம்.

வார்த்தைகளுக்கிடையே இணைப்புச் சொற்கள் விடுபடும் போது வாசகன் தானாகவே இணைப்புச் சொற்களை உருவாக்கி பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

வாசகனின் அப்போதைய மனநிலை... கவிதைகள் வாசித்தலில் அவனுக்கிருக்கும் பயிற்சி அவனது பல்கோண அலசல் திறன் இவற்றைப் பொறுத்து கவிதையின் பொருள் விளங்கிக் கொள்ளப்படலாம்.

அவை கவிஞன் நினைத்த அதே கருத்தாக இருக்கலாம் அல்லது வேறு புதிய ஒரு கருத்தாகவும் இருக்கலாம். அப்படிப் பல்பொருள் கொள்ளப்பட்ட எத்தனையோ கவிதைகள் மன்றில் உள்ளன.

எப்படிக் கிடைப்பான்
ஏகபத்தினி விரதன்
இராமன்...?

இல்லாத சீதைக்கு..

இப்போ இந்தக் கவிதையை நான் எப்படிப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று பார்க்கலாமா?

இங்கே இரண்டு குறியீடுகள் இராமன் மற்றும் சீதை
இராமன் என்ற குறியீட்டின் குணத்தை 'ஏகபத்தினி விரதன்' என்ற வார்த்தைகள் சுட்டுகின்றன.
ஆனால் சீதையின் குணநலனை சுட்ட எந்த வார்த்தையும் இல்லை

பதிலாக இல்லாத சீதைக்கு என்று வருகிறது.

இல்லாத சீதையை - 'எது' (அ) 'என்ன' இல்லாத சீதை என்று கேள்வி எழுப்பலாம்.

உலகில் இல்லாத (காணப்படாத) என்ற பொருளும் கொள்ளலாம்.

சீதையே இல்லாத உலகில் இராமனை மட்டும் தேடுகிறீர்களே? என்ற கேள்வி.

ஏக பத்தினி விரதன் என்ற குணக் குறியீட்டினால் பத்தினித் தன்மை என்ற குணத்தை சீதைக்கும் பொருத்திப் பார்க்கச் சொல்கிறது. அதோடு கூட ஏக பத்தினி விரதன் இராமனில் இருக்கும் கேள்விக் குறி... இந்த கேள்வியை இன்னும் வலிமையாக்குகிறது.

ஏகபத்தினிவிரதன் இராமன் வேண்டுமா? பத்தினித்தன்மை இல்லாத சீதைக்கு?

அல்லிராணி
12-10-2011, 09:42 AM
செல்வா இன்னும் சற்று சிந்தியுங்கள்..

சீதை இராமனை எதிர்த்து ஒரு சொல்லும் சொல்லாதவள்..

காட்டுக்குப் போனான்
கூடவே வந்தாள்...
அக்னியில் இறங்கு .. இறங்கினாள்..
காட்டுக்குப் போ... போனாள்..

ஏகபத்தினி விரதனாக இராமன் இருந்தான்.. கணவனை தெய்வமாகக் கண்டவளாக சீதை இருந்தாள்..

இதை யாருக்குச் சொல்வதாக பார்க்கிறோமோ அதற்கேற்ப பொருள் வேறுபடும்..

இதை பொதுவில் தனக்கு இராமன் போல் கணவன் வேண்டும் என்று சொல்லிக்கொள்ளும் பெண்களுக்கு முன் வைத்திருப்பதால்தான் ஏகபத்தினி விரதன் என்ற சொல் உள் நுழைந்தது.. ஏனென்றால் முன்னரே விளக்கியபடி இராமன் என்ற சொல் சமூகத்தில் அப்படித்தான் இன்று இருக்கிறது.

இதை குறிக்கும் நோக்கம் இல்லாவிடில்

இராமன் கிடைப்பானா
சீதை அல்லாத
அவளுக்கு!

என முடித்து விடிலாம்.

மிக எளிய முறையில் இந்தக் கேள்வியை ஒரு அறிவுரையாக மாற்றவேண்டும் என்றால்

இராமன் வேண்டுமானால் சீதையாக இரு....

எதற்கு ஆசைப்படுகிறாயோ அதற்கு உன்னைத் தகுதியாக்கிக் கொள்..

பிறிது மொழிதல் அணியின் பாற்பட்டதாகும் இது...

sarcharan
12-10-2011, 10:21 AM
இராமன் போலக் கணவன் வேண்டுமெனக் கேட்பவளே!
நீ சீதை போலவா?

பெண்களது விருப்பு வெறுப்புகள் ரொம்பவே வித்தியாசமானது.

என்னை பொறுத்த வரையில் நினைப்பு போல் அமைப்புன்னு சொல்லுவாங்க. அது முற்றிலும் சரி.

நம்ம கண்ணோட்டத்துல, எண்ணங்களில சரின்னு பட்டா, நமக்கு கிடைப்பதும் அப்படியே தான் இருக்கும்.

ராமன் ஏக பத்தினி விரதானாய் இருந்தான், அவ்வணமே அவனுக்கு சீதை கிடைத்தாள்.

இதிகாசங்களிலிருந்து சாறை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கையை நீக்கிவிடவேண்டுமென்று எங்கோ படித்த ஞாபகம்.

சீதை ராமனை விட வயதில் பெரியவள் என்று நினைக்கிறேன்.

கல்யாணம் முடிஞ்சா கையோட (தேன்நிலவுக்கு) காட்டுக்கு அனுப்பீட்டாங்க, அப்புறம் எங்க வேற பெண்களை நோக்க...

அது தவிர, பல பெண்களை மணந்த தனது தந்தை தசரதனின் நிலைமை ராமனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு போல...;)

ஒரு வேலை அரண்மனையிலேயே இருந்திருந்தால் மாமியார் மருமகள் பிரச்சனையில் கணவனை கல்லாய் நினைத்தாளா இல்லை கண்கண்ட தெய்வமாக நினைத்தாளா என்று அறிந்திருக்கலாம்.

மேலும் பெண்களுக்கு அடக்க ஒடுக்கமாய் இருக்கும் ஆண்களை (அறவே) பிடிக்காது.:confused:

உதாரணத்திற்க்கு,

௧) ஒரு ஆண் பார்க்க வாட்ட சாட்டமாய் இருக்கிறான். ஆனால் அப்பாவி, அம்மாஞ்சி என்று வைத்து கொள்வோமே.

௨) ஒருவன் ஆஜானுபாகுவாக இருக்கிறான், ஆனால் பெண்களை வளைப்பதில் கில்லாடி

௩) ஒருவன் சிரித்து பேசும் குணம் கொண்டவன், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சபல குணம் உள்ளவன்

என்னுடைய கண்ணோட்டத்தில், இவர்களில் முதல் தர ஆணை நிச்சயம் பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

மாடர்ன்னா, ஃபன்னி (பன்னி அல்ல)யாய் இருப்பவனே பெண்களால் ஈர்க்கப்படுகிறான்.
(பன்னியை இருந்தாலும் ஃபன்னியாய் இருக்கணும் போல!!).

அந்நியன் படம் பாத்திருப்பீங்கன்னு நினைக்கறேன்...

இதை பத்தி (நான்) பேசுனா சாறை எடுத்துட்டு (என்னை) சக்கையா பிழிஞ்சுடுவாங்க..

sarcharan
12-10-2011, 10:34 AM
தலைப்புச்செய்திகள்: ஒரு கலவரம் உருவாகிறது :p:p

அல்லிராணி புள்ளி வெச்சுட்டாங்க... :D

இனி பலபேரு பாடில கோலம் போடபோறாங்க...:D;);)

rema
14-10-2011, 04:51 AM
எப்படிக் கிடைப்பான்
ஏகபத்தினி விரதன்
இராமன்...?

இல்லாத சீதைக்கு..

சீதைகள் இன்று இல்லையா ???!!!!

Viduthalai
14-10-2011, 05:00 AM
ஆகா இன்னொரு ரவுண்டா?
அவங்க என்ன சொல்லறாங்கன்னா -
சீதையாக இல்லை எனில் ராமனை எதிர்பார்க்காதேன்னு..

vseenu
15-10-2011, 12:37 AM
ராமன் சீதை குறித்த விவாதங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன.நிறைய பின்னோட்டங்களை கருத்துக்களை எதிர்நோக்கலாம்

அக்னி
15-10-2011, 01:49 PM
இராமன் தேடியது அன்று...
இராமனைத் தேடுவது இன்று...

இனி இராமர்களும் தீக்குளிக்க நேரிடலாம்...

dhilipramki
15-10-2011, 03:15 PM
இராமன் தேடியது அன்று...
இராமனைத் தேடுவது இன்று...

இனி இராமர்களும் தீக்குளிக்க நேரிடலாம்...

தேடினாலும் கிடைப்பார ....:eek:

அமரன்
19-10-2011, 09:10 PM
சீதைகள் இன்று இல்லையா ???!!!!

இருக்க விடுகிறார்கள் இல்லை..

ஆதி
20-10-2011, 08:16 AM
//இங்கே இரண்டு குறியீடுகள் இராமன் மற்றும் சீதை
இராமன் என்ற குறியீட்டின் குணத்தை 'ஏகபத்தினி விரதன்' என்ற வார்த்தைகள் சுட்டுகின்றன.
ஆனால் சீதையின் குணநலனை சுட்ட எந்த வார்த்தையும் இல்லை
//

எலேய், குணத்தைச் சொன்னப்பிறகு எப்படிடா குறியீடாகும்..

இங்கு சீதை மட்டுமே குறியீடு... இராமன் குறிப்பீடு

குறியீடுகள் சொல்வதே குறிப்பீடுகளோடு வாசகன் எடுத்துக் கொள்ளத்தானே.. சீதை எனும் குறியீட்டுக்கு உன்னிடம் எத்தனை குறிப்பீடு இருக்கிறதோ, அத்தனை கோணங்கள் கவிதையிலும் இருக்கிறது..

நீ யோசித்த விதங்களும் சரி, அதுதானே கவிதையின் தன்மை..

சொல்லாததும் சொல்லும் கவிதை இல்லையாடா...

Nivas.T
01-11-2011, 10:14 AM
ராமன், சீதை என்னும் குறிப்புகள் கற்பை முதற்க் கொண்டு சொல்லப் பட்டாலும் அல்லது பெரும்பாலும் அதற்காகவே இந்த இரண்டு குறிப்புகளையும் முதன்மை தந்து அனைவரும் கருத்துக் கொண்டாலும்

அதனை மட்டுமே கொண்டு பார்த்தல் என்பது விசாலமாகது. ராமன், சீதை என்று சொல்லிவிட்டால் அவர்களின் ஒரு குணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லிவிட முடியாது. ராமனிடமும் சீதையிடமும் இருந்த அனைத்து குணங்களும் இருந்தால் மட்டுமே ராமனாகவும், சீதையாகவும் இருக்க முடியும். (அதற்காக அயோத்தியில் பிறந்திருக்க வேண்டுமா?, வில்லோடு திரிய வேண்டுமா? என்று கேட்கக் கூடாது:D)

உண்மையில் இன்றைய கால கட்டத்தில் ராமனும் இல்லை சீதையும் இல்லை அப்படி தப்பித்தவறி இருந்தார்கள் என்றால் இங்கு வாழ இயலாதவர்களாகி விடுவார்கள் என்னும்போது கற்ப்பிர்க்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 09:16 AM
சரியான கேள்விதான் கேட்டுள்ளீர்கள், நல்ல விளக்கமும் கொடுத்துள்ளீர்கள் அல்லிராணி அவர்களே. நன்றி.:)