PDA

View Full Version : அழகிய பூவை



இன்பக்கவி
08-10-2011, 09:39 AM
http://i1132.photobucket.com/albums/m577/iniya1/Child_Labour_in_India_Are_you_working_hard__4.jpg

வாடிய பூவைக் கையில்
வாடாத பூக்கள்..

எதை நோக்கி உனக்குள் தேடல்??
உள்ளத்து தேடல் அறியா
ஊமை நெஞ்சம் உள்ளே உள்ளதோ??

பூக்கள் விற்று தீருமோ ??
பசி மயக்க முற்று பெறுமோ ??
உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??

கண்ணாடி திறந்தால் குளிர் காற்று
கசிந்து விடும் என மூடிவைக்கும்
பகட்டு மனிதர்களுக்கு
உன் கண்கள் கசியும்
கண்ணீர் அறிய வாய்ப்பில்லை
கண்ணீரில் கலங்கும் ஓவியம் நீ..

தந்தையின் தேக பசியில்
தாய் வறுமையாகி
உன்னை ஈன்றாலோ??

அழகிய பூவை உன்னை
தெருக்களில் உலா வர செய்த
அன்னைக்கு கல் நெஞ்சமோ??

புத்தகம் ஏந்த வேண்டிய கைகள்
இன்று பூக்களை ஏந்தி
வாழும் போராட்டமோ??

ஒருநாள் வாழ்ந்து மடியும்
மலராய் இருந்து விடாதே...
நம்பிக்கை மலர்க்கொண்டு
புது மணம் வீசி
நீ புன்னகைக்கும் நாள்
வெகுதொலைவில் இல்லை..

கூண்டுக் கிளியாய் இருந்து விடாதே
கூண்டுக்குள்ளும் சில கழுகுக் கூட்டம்
உன்னைக் களவாடக் கூடும்.

jaffer
08-10-2011, 10:24 AM
கண்ணாடி திறந்தால் குளிர் காற்று
கசிந்து விடும் என மூடிவைக்கும்
பகட்டு மனிதர்களுக்கு
உன் கண்கள் கசியும்
கண்ணீர் அறிய வாய்ப்பில்லை
கண்ணீரில் கலங்கும் ஓவியம் நீ..


நெஞ்சை பிழிந்த வரிகள், அருமையான கவிதை படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

vseenu
08-10-2011, 04:55 PM
உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??
கண்ணீர் வரவழைக்கும் கவிதை வரிகள். ஆக்கியோனுக்கு நன்றி

பிரேம்
09-10-2011, 06:09 AM
அருமையான கவிதை..மனம் கனக்கிறது..

Ravee
10-10-2011, 05:25 PM
இந்த படம் ஆழமான பாதிப்பை எனக்கு ஏற்ப்படுத்தி இருந்தது இணையத்தில் கண்டபோது ... அதை உன் கவிதையில் காணும் போது கனக்கிறது நெஞ்சம் ....உன்னை ரொம்பவே இழந்து இருக்கிறோம் கவிமா ... எப்போதும் எங்களோடு இரு ... :(

இன்பக்கவி
11-10-2011, 01:13 PM
நெஞ்சை பிழிந்த வரிகள், அருமையான கவிதை படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்


உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??
கண்ணீர் வரவழைக்கும் கவிதை வரிகள். ஆக்கியோனுக்கு நன்றி


அருமையான கவிதை..மனம் கனக்கிறது..



இந்த படம் ஆழமான பாதிப்பை எனக்கு ஏற்ப்படுத்தி இருந்தது இணையத்தில் கண்டபோது ... அதை உன் கவிதையில் காணும் போது கனக்கிறது நெஞ்சம் ....உன்னை ரொம்பவே இழந்து இருக்கிறோம் கவிமா ... எப்போதும் எங்களோடு இரு ... :(

அனைவருக்கும் நன்றிகள்

ரவி அண்ணா,
நல்ல படைப்பை போடாம இங்க வந்து என்ன செய்ய..
உங்களுக்கு தெரியும் தானே வேலை அதிகமா ஆகிடுச்சு..
அது தான்..

இந்த படத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சிறு தாக்கம் தான் இந்த கவிதை..

நன்றிகள் அண்ணா:)

Viduthalai
11-10-2011, 01:31 PM
பூவையோ வாட
பூக்களோ சிரிக்க
பூவினை ரசித்து
வாங்க மனம் இல்லியே
பூவை சிரிக்க வாய்ப்பில்லையே.

இன்பக்கவி துயரக் கவி பாடி
மனதை வருத்தி விட்டீர்கள்
பூவையின் வருத்தம் / வறுமையை
விடவா? இல்லவே இல்லை.

இன்பக்கவி
12-10-2011, 10:39 AM
பூவையோ வாட
பூக்களோ சிரிக்க
பூவினை ரசித்து
வாங்க மனம் இல்லியே
பூவை சிரிக்க வாய்ப்பில்லையே.

இன்பக்கவி துயரக் கவி பாடி
மனதை வருத்தி விட்டீர்கள்
பூவையின் வருத்தம் / வறுமையை
விடவா? இல்லவே இல்லை.

நன்றிகள் :icon_b::icon_b:

ஜான்
12-10-2011, 02:00 PM
பூக்கள் விற்று தீருமோ ??
பசி மயக்க முற்று பெறுமோ ??
உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??
கொஞ்சம் மனத்தைக் கனக்கத்தான் செய்கிறது

இன்பக்கவி
12-10-2011, 04:33 PM
பூக்கள் விற்று தீருமோ ??
பசி மயக்க முற்று பெறுமோ ??
உன் கண்கள் ஆயிரம் கதை பேச
கண்ணீரோடு எதை காண்கிறாய்??
கொஞ்சம் மனத்தைக் கனக்கத்தான் செய்கிறது

நன்றிகள்:)

ஆதி
18-10-2011, 12:00 PM
//வாடிய பூவைக் கையில்
வாடாத பூக்கள்..//

இந்த இருவரியே முழு கவிதையையும் சொல்லிவிட்டது..

வாழ்த்துக்கள் இன்பக்கவி...

dhilipramki
18-10-2011, 02:22 PM
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

இன்பக்கவி
23-11-2011, 01:41 PM
//வாடிய பூவைக் கையில்
வாடாத பூக்கள்..//

இந்த இருவரியே முழு கவிதையையும் சொல்லிவிட்டது..

வாழ்த்துக்கள் இன்பக்கவி...


:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

நன்றிகள் :icon_b: