PDA

View Full Version : நீங்களும் பில்கேட்ஸ் ஆக சில சீரிய(??!) யோசனைகlavanya
15-12-2003, 09:29 PM
நம் வீர்சிங்கும்,பாண்டா சிங்கும் கொஞ்ச நாள் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தில் அவருடன் பணி புரிந்து விட்டு வந்தார்கள் அல்லவா...அவர்கள் இங்கு
பில்கேட்ஸைப் பற்றி தரும் டிப்ஸ்கள் தான் இவை.

1. உங்களுக்கு ஒரு கான்செப்டை பற்றி சிறிதளவு தெரிந்தாலும் கூட அதுபற்றி
முழுமையாக தெரிந்தது போல் நிறைய அலட்டி கொள்ளுங்கள்.கூடுமானவரை உங்களை
விட கொஞ்சம் விஷயம் தெரிந்தவரை பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்.அது நிறைய
இடைஞ்சலை தந்து விடும்.

2. நீங்கள் தப்பி தவறி ஏதேனும் ஒரு சாப்ட்வேரில் பிரில்லியண்ட் ஆக இருந்தால்
அந்த இரகசியத்தை மற்றவர்களுக்கு புரியாதபடி வெளியிடுங்கள்.

3. உங்கள் பெயருடன் Bill ,Voucher, Reciept, Balance என்று எதையாவது இணைத்து
கொள்ளுங்கள். இது விரைவில் நீங்கள் பிரபலமாக பலனளிக்கும்.

4. மிகவும் லூசான பனியன் மற்றும் பர்முடாஸையே அணியுங்கள்.ஜாக்கிரதையாய் மற்றவர்
தவறு கண்டுபிடித்துவிட முடியாதபடி english ல் ஏதாவது உளறிக்கொண்டேயிருங்கள்.

5. முடிந்தவரை எப்போதும் தலையை கலைத்து விட்டு கொள்ளுங்கள்.எப்போதும் சிந்தித்து
கொண்டிருப்பது போல் முகத்தை வைத்து கொள்ளுங்கள்.கண்ணாடி போட்டு கொள்ளுதல்
அவசியம்.

6. ஏதேனும் உங்களுக்கு தெரியாத ஒன்றை பற்றி கேள்வி கேட்கப்பட்டால் கேட்டவரை
அலட்சியமாக பாருங்கள்.'இது கூட தெரியாதா..?' என்ற தொனி அதில் இருக்கட்டும்...
(உங்களுக்கு தெரியாது என்பது வேறு விஷயம்)

7. உங்களை விட அறிவில் குறைந்தவரை எப்போதும் பக்கத்தில் வைத்துகொள்ளுங்கள்.
(ஏனென்றால் எப்போதும் பில்கேட்ஸ் எங்கள் பக்கத்திலேயே இருப்பார்.அதை வைத்து
சொல்கிறோம்).புதிது புதிதாய் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருங்கள்.இது எல்லாவற்றையும் விட விரைவில் பயனளிக்கும்.

puppy
15-12-2003, 09:36 PM
நகைசுவை பகுதியிலே போக வேண்டியது இது லாவஸ்......நல்லா இருக்கு

puppy
15-12-2003, 09:37 PM
முக்கியாமனதை விட்டுடீங்க லாவ்....காப்பி அடிச்சாலும் காப்பி அடிச்ச மாதிரி இல்லாமல் புதுசா இருக்கனும் .......அது தான் முதல் முக்கியம்

முத்து
15-12-2003, 10:06 PM
நல்லா இருக்கு லாவண்யா அவர்களே ...
இதுபோல் உபயோகமான யோசனைகளை
அவ்வப்போது மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள் ... :D

lavanya
15-12-2003, 11:31 PM
நகைசுவை பகுதியிலே போக வேண்டியது இது லாவஸ்......நல்லா இருக்கு

ஆமாம் பப்பி ...அவசரத்திலே பதிச்சிட்டேன்...அங்கேயே
மாற்றி விடுங்கள்

இளசு
16-12-2003, 12:11 AM
ஹாஹ்ஹ்ஹா!

நல்லவேளை .. நம்ம பில்லுக்கு தமிழ் தெரியாது லாவ்.
இல்லன்னா, MS ஐ பண்டா, வீர்கிட்ட ஒப்படைச்சிட்டு
ஆசிரமம் எதிலயாவது அடைக்கலம் ஆகி இருப்பார்.

கலக்குறீங்களே லாவ்.. தொடரட்டும் ..தொடரட்டும்..

மன்மதன்
16-12-2003, 09:41 AM
நீங்கள் சொன்ன அனைத்து தகுதியும் என்னிடம் இருக்கு. நான் பில் கேட்ஸ் ஆக முடியுமா ?
நான் பில்கேட்ஸைவிட அறிவாளின்னு நினைக்கிறேன். ஏனென்றால் நான் அனுப்பிய கடிதத்திற்கு இன்னும் பில் கேட்ஸ் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்.

Vanambadi
16-12-2003, 09:48 AM
அருமையான யோசனைகள் தந்த லாவு(!?) க்கு நன்றிகள் கோடி! நான் சீக்கிரமே ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்!

poo
16-12-2003, 05:28 PM
சமீபகாலமாய் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அபாயம்...
உபயம் "லாவ்ஸ்' அக்கா!

இளசு
16-12-2003, 09:59 PM
சமீபகாலமாய் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அபாயம்...
உபயம் "லாவ்ஸ்' அக்கா!

பூ, ஏற்கனவே அல்சர் பிரச்னை இருப்பதாய் சொன்னதாய் ஞாபகம்! :D

மூர்த்தி
17-12-2003, 12:42 AM
மதனின் கேள்விக்கு பில்கேட்ஸ் பதில் சொல்லமுடியாமல் முழிக்கிறாரா?அய்யகோ...என்ன தமிழில் அவரிடம் கேட்டீர்களா?

மன்மதன்
17-12-2003, 09:35 AM
ஆமாம்..

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2748
[ இந்த சுட்டி விரைவில் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு வேலை செய்யும் ]

இங்கே போயி பாருங்க புரியும்.

poo
17-12-2003, 05:02 PM
பூ, ஏற்கனவே அல்சர் பிரச்னை இருப்பதாய் சொன்னதாய் ஞாபகம்! :D

அதுவும் மன்றத்து மக்கவுலாலத்தான் அண்ணா...

(நேரத்துக்கு சாப்பிடக்கூட போகவிடாம கட்டிப்போட்டுடுது பதிவுகள்!!)

poornima
29-01-2009, 08:45 AM
இன்றைய வரை அவர் பற்றிய நகைச்சுவைகள் குறைவதாய் தெரியவில்லை

சுஜா
29-01-2009, 11:41 AM
சும்மா அசத்திபுடீங்க