PDA

View Full Version : பின்வானத்து தேவதை



VISHNU ROCKY77
05-10-2011, 09:12 AM
இறக்கை கட்டிய நைல் நதி அவள்

எல்லோரா சிற்பங்களின் இறுதி வடிவம் அவள்

பௌர்ணமி வானத்து முழு நிலவு அவள்

வண்ணத்து பூச்சிகளின் வண்ணக்கலவை அவள்

போர்க்களம் ஊடுருவிச் செல்லும் பூங்காற்று அவள்

எனை வருடிச் செல்லும் மயிலிறகு அவள்

எனை திருடிச் செல்லும் கொள்ளைக்காரி அவள்

எனை கடந்து செல்லும் வெண்மேகம் அவள்

அவள் விழிகள் விரைவாய் ஊடுருவும் கதிர்வீச்சு

அவள் இதழ்கள் தேன் நிரம்பிய பலாச்சுளை

அவள் விரல் நீட்டும் இடமெல்லாம் வீண்மீன்கள் பூக்கின்றன

அவள் பாதம் பட்டால் பாலைவனமும் பசுஞ்சோலையாய் மாறிப்போகும்

அந்திவானத்து சிவப்பு அவள் வெட்கம்

முல்லை பூக்களின் வெண்மை அவள் சிரிப்பு

அவள் இமை மூடி திறக்கும் நேரம் இருண்டு போகிறது எனது உலகம்

அவள் கூந்தல் கொண்டு எனை மூட பார்க்கிறாள்

என் முகம் புதைக்க அழைக்கின்றன அவளது அசைவுகள்

ஒவ்வொரு வினாடியிலும் அவள் நினைவுகள்

வானின் பின்புறம் எங்கும் முழுதாய் அவள்
பின்வானத்து தேவதையாய்...

vseenu
05-10-2011, 09:17 AM
நல்ல கவிதை வரிகள். ஆமாம் அந்த அவள் யார்?

jaffer
05-10-2011, 09:50 AM
யாருங்க உங்க காதலி?? அடேங்கப்பா ரொம்பவே ரசிப்பு, கொடுத்துவைத்தவள் அவள்

ரசித்து எழுதிய வரிகளுக்காகா வாழ்த்துக்கள்

கௌதமன்
05-10-2011, 01:20 PM
உங்க பிரச்சனை புரியுது விஷ்ணு. தூக்கம், பசி எல்லாம் போயிருக்குமே?

Nivas.T
05-10-2011, 01:35 PM
பிரமாதம் விஷ்ணு
காதலின் ஏக்கம் வரிகளில் வழிகிறது

பாராட்டுகள்

vseenu
05-10-2011, 04:05 PM
விஷ்ணு அனைவரின் அனுதாபத்தையும் அதற்க்குள்பெற்றுவிட்டீர்களே?கௌதமன் கூறியது போல் தூக்கம் இல்லையா?

கோபாலன்
05-10-2011, 07:30 PM
கவிதையின் தலைப்பே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுகின்றது . அருமையான வர்ணிப்பு... :)

வெங்கி
06-10-2011, 06:11 AM
இந்த வரிகளினால் உங்களின் காதல் வெற்றி பெற்றிருக்கும் என நம்புவோம் தோழரே....

VISHNU ROCKY77
12-10-2011, 04:13 AM
மிக்க நன்றி என் நண்பர்களே ...

ஆதி
18-10-2011, 11:58 AM
//எல்லோரா சிற்பங்களின் இறுதி வடிவம் அவள்//
//அவள் விரல் நீட்டும் இடமெல்லாம் வீண்மீன்கள் பூக்கின்றன//
//வானின் பின்புறம் எங்கும் முழுதாய் அவள்
பின்வானத்து தேவதையாய்...//

நான் ரசித்த வரிகள் இவை..

காதலியையும், காதலையும் எவ்வளவு ரசித்தாலும் சலிப்பதே இல்லை..

வாழ்த்துக்கள் விஷ்ணு

dhilipramki
18-10-2011, 02:19 PM
பெண்களை பற்றி கவிதை பாடுவோர் பலர்...
ஆனால்
ஆண்களை பற்றி கவிதை பாடினோர் எவர்...
......நன்றி நல்ல படைப்பு.

அக்னி
14-02-2012, 11:43 AM
ரசிப்பிற்குரிய வரிகள்...

இக்கவிதையை வாசிக்கையில் அவளுக்கு உருக்கொடுக்க இயலவில்லை.
ஆனால் அவள் உயிர்கொடுக்கும் விதமுணர முடிகின்றது.

நீங்கள் மட்டும் அவளைக் கண்டு ரசித்து,
எங்களுக்கு அவளைக் காட்டாத,
வித்தியாசமான விவரிப்புக்கள்...

"உன்னை நினைவுபடுத்தும் அனைத்தும் அழகானவையாக இருக்கின்றன"
என்பது போல...

பாராட்டுக்கள்...