PDA

View Full Version : உயிரினில் மெல்ல !



கோபாலன்
03-10-2011, 10:17 PM
முதல் பார்வையிலே என்னுள் நுழைந்து விட்டாய்
குளிர் மேகமாய் அன்பை பொழிந்து விட்டாய்
எந்தன் சோர்வையும் உன்னுள் ஏந்திக்கொண்டாய்
எந்த நிலையிலும் இன்பங்கள் நீ கொடுத்தாய் !

தனிமையை வீசி வாட்டம் தந்து போனாய்
இனிமையாய் பேசி ஊட்டம் தந்தாய் தேனாய்
வசந்தமாய் வந்து வாசம் வீசிப் போனாய்
நிசப்தமாய் வந்து சுவாசம் ஆனாய் நீயாய் !!

எந்தன் நினைவிலும் நீங்கா இடம் பிடித்தாய்
உந்தன் உயிரினில் மெல்ல கலந்துவிட்டேன் நானாய் !!!

பிரேம்
04-10-2011, 04:41 AM
கவிதை அருமை..கடைசி வரி புரியல...:eek:

jaffer
04-10-2011, 07:17 AM
நல்லா இருக்கு எதுகை மோனையாய்

கோபாலன்
04-10-2011, 08:43 PM
நண்பனின் அன்பில் அவனுக்குள்ளே கலந்துவிட்டேன் என்பதைத்தான் கடைசி வரியில் எழுதினேன். ஊக்கத்துக்கு நன்றிகள் .:)

அமரன்
04-10-2011, 08:51 PM
நிலத்தின் உயிர் தெரிவது
முளைக்கும் மரத்தினில்..அம்மர
இலைகளில் கலந்துவிடும்
மழையின் ஈரச் சுவடுகள்.

அன்பென்ற மழையேந்திய மனப்பூமியும்
நட்புச்செடியும் ஈரச்சுவடுகளும்
கவிதையின் நரம்புகளில்..