PDA

View Full Version : சகோதரி கீதமுடன் ஒரு இனிய சந்திப்பு



மதுரை மைந்தன்
02-10-2011, 10:18 AM
இது நாள் வரை சகோதரி கீதம் மெல்போர்னில் வசித்து வந்தார் என்பதை நான் அறியவில்லை. சமீபத்தில் அவர் ஒரு தனி மடலில் அவர் மெல்போர்னில் இருந்து சிட்னி குடி பெயர இருப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் தந்த அலை பேசி எண்ணில் பேசி இன்று அவர் இல்லம் சென்று அவரை சந்தித்தேன்.

அவருடைய மகனையும் மகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் இனிய முகத்துடன் என்னிடம் உரையாடினார்கள். 12 ம் வகுப்பில் படிக்கும் மகள் வருங்காலத்தில் ஒரு மருத்துவராக வர விரும்புவதாகக் கூறினார். மகன் அனிமேஷன் கலையில் ஈடுபாடு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து நானும் சகோதரி கீதமும் மன்றத்தைப் பற்றி உரையாடினோம். மன்றத்தில் தனது உறவினர்கள் கலையரசி, சொ.ஞானசம்பந்தன் இவர்களைபற்றி கூறினார். மற்றுமொரு மன்றத்து உறுப்பினரான மெல்போர்னில் வசிக்கும் அன்பு ரசிகனை சந்தித்ததைப் பற்றி கூறினார்.

அதற்கு பின் இரண்டு கதாசிரியர்களும் ( இரண்டாவது கதாசிரியன் நான் தாங்க) மன்றத்தில் பதிந்த கதைகளைப் பற்றி பேசினோம். நான் எழுதிய அறிவியல் கதைகளைப் பற்றி கூறிய பொது அவருடைய கணவருக்கு அறிவியலில் நிறைய ஈடுபாடு உண்டு என்று தெரிவித்தார்,

சில மாதங்களுக்கு முன்( வைகாசி மாதம் ) வரை ஒரு மாதப் பதிவுகளை அழகாக தொகுத்து அவர் வழங்கியதை நான் பாராட்டினேன். வேலை மும்முரத்தில் அதை தொடர முடியவில்லை என்றார் அவர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலான இனிய உரையாடலுக்கு பின் அவர் வழங்கிய தேநீரை அருந்தி விடை பெற்றேன்.

aren
02-10-2011, 10:43 AM
உங்கள் சந்திப்பு சிறப்பாக அமைந்தது குறித்து சந்தோஷமெ. இன்னும் மற்ற விஷயங்களையும் எழுதினால் நாங்களும் அந்த சந்திப்பில் கலந்த சந்தோஷத்தை அடைவோம்.

மதுரை மைந்தன்
02-10-2011, 11:23 AM
உங்கள் சந்திப்பு சிறப்பாக அமைந்தது குறித்து சந்தோஷமெ. இன்னும் மற்ற விஷயங்களையும் எழுதினால் நாங்களும் அந்த சந்திப்பில் கலந்த சந்தோஷத்தை அடைவோம்.


நான் வசிக்கும் இடத்திலிருந்து 2 மணி நேரத்திற்கும் மேலான பயணம் செய்து திரும்பியவுடன் இந்த சந்திப்பை பற்றி பதிவு செய்தேன். நாளை மற்ற விவரங்களை பதிவு செய்கிறேன். உங்களுடைய பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி.

innamburan
02-10-2011, 12:47 PM
நாளைய பதிவை எதிர்னோக்கும்
இன்னம்பூரான்

கீதம்
02-10-2011, 09:10 PM
அட, அதற்குள்ளாகவே சந்திப்பின் பதிவா? அசத்திவிட்டீர்கள். எனக்கும் உங்களுடன் உரையாடியது ஒரு சகோதரருடன் உரையாடிய நிறைவையே தந்தது. மன்றத்து உறுப்பினர்களில் என் குடும்பத்தார் தவிர நான் சந்தித்த இரண்டாவது நபர் தாங்கள். நேற்றைய சந்திப்பு இனிதாய் அமைந்தது என் பாக்கியமே.

என்னை சந்திப்பதற்காக நீண்ட பயணம் மேற்கொண்டு வந்திருந்த உங்களை சரிவர உபசரிக்க முடியாமல் (வீடு காலி செய்யும் சமயத்தில் களேபரமாக இருந்ததால்) போனதே என்ற வருத்தமும் உள்ளது.

Nivas.T
03-10-2011, 09:16 AM
இன்னொரு சந்திப்பு பதிவு
மிக அருமை
இன்னும் முழுமையாக பதிவிடுங்கள்
ஆவலுடன் நாங்கள்

ரங்கராஜன்
03-10-2011, 10:39 AM
மதுரை சார்.... நீங்க மட்டும் அக்காவை (அதாவது எனக்கு) பார்த்திட்டு வந்துட்டீங்களே...... ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே

மதுரை மைந்தன்
03-10-2011, 10:40 AM
எங்கள் உரையாடலில் முதலில் மன்றத்துக்கு அறிமுகம் ஆனதைப் பற்றி பேசினோம். அவர் தனது உறவினர் கலையரசி மஊலமாக மன்றத்துக்கு அறிமுகம் ஆனதாக கூறினார். நான் எனது முந்தைய தளமான ஸ்வரங்கள் மூலம் அறிமுகமான நண்பர் செல்வாவின் அறிமுகத்தால் மன்றத்துக்கு வந்ததைப் பற்றி கூறினேன்.

அதையடுத்து கதைகளைப் பற்றி பேசினோம். அவர் வேறொரு தளத்தில் தான் முதன் முதல் கதைகளை எழுதியதாக கூறினார். நானும் அவ்வாறே கதைகள் எழுதும் ஆர்வத்தில் அமெரிக்காவில் பணி புரியும் பொது மகளிருக்கான ஒரு தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் தங்கிலிஸ் முறையில் தட்டச்சு செய்ததாக கூறினேன். பின் தமிழ் மன்றத்தில் இணைந்த பிறகு தான் தமிழில் தட்டச்சு செய்து கதைகளை பதிவு செய்தேன் என்றேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் வந்ததற்கான காரணம் எனது முதாதையர்களில் ஒருவர் தமிழில் முதல் வெளி வந்த பத்மாவதி சரித்திரம் எழுதியதால் என்று கூறினேன்.

நான் சமிபத்தில் எழுதிய தம்பி அவன் தங்க கம்பி ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டது என்றேன். சகோதரி கீதம் அவர் எழுதிய புக்கள் புக்கும் தருணம் தொடர் கதையும் ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என்றார். நான் எழுதிய அறிவியல் கதைகளைப் பற்றி விளக்கினேன். நான் எழுதவிருக்கும் கதைகளைப் பற்றி கூறினேன். என்னை தொடர்ந்து எழுதுமாறு சொல்லி ஊக்குவித்தார்.

மன்றத்தில் பின்னுட்டங்கள் இடுவதைப் பற்றி கூறுகையில் பின்னுட்டங்களில் வெறும் அருமை என்றோ ஸ்மைலிகளை மட்டும் போடமால் ஆக்க புர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மன்றத்து சகோதரி ஓவியாவை லண்டனில் நான் சந்தித்ததைப் பற்றி கூறினேன். அவர் மன்றத்தில் அதிகம் வராவிட்டாலும் சமிபத்தில் அவர் ராக்கி அனுப்பாததைப் பற்றி பதிவிட்டுருப்பதாக கூறினார். லண்டன் சந்திப்பின் போது ஓவியா அவர்கள் என் கையில் ராக்கி கட்டிய புகைப் படத்தை நான் ஏற்கனவே பதிவுசெய்திருப்பதை கூறினேன்.

வீட்டை காலி செய்து சிட்னிக்கு செல்லும் மும்முரத்திலும் எனக்காக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என்னுடன் உரையாடிய அவரின் பண்புக்கு நன்றி .

மதுரை மைந்தன்
03-10-2011, 10:52 AM
மதுரை சார்.... நீங்க மட்டும் அக்காவை (அதாவது எனக்கு) பார்த்திட்டு வந்துட்டீங்களே...... ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே

தகஸ் எப்படி இருக்கீங்க? எங்கள் உரையாடலில் உங்களைப் பற்றியும் பேசினோம். போன வருடம் என நினைக்கிறேன். சென்னையில் மன்றக் கூட்டம் ஒன்றில் நீங்கள் ஆற்றிய பணியையும் அந்த சமயத்தில் பதிவான புகைப் படங்களைப் பற்றியும் நினைவு கூர்ந்தோம். படங்களில் தாமரை மணியா மனோஜி அவர்கள் நினைவில் நின்றார்கள். உங்களையும் பார்த்ததாக நினைவிருக்கிறது.

jaffer
03-10-2011, 11:18 AM
சுவையான சம்பவங்களை அசைபோடுகிறார்கள்....இங்க எனக்கென்ன வேலை?? மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள்