PDA

View Full Version : படிக்காத மேதை!



ஆளுங்க
02-10-2011, 08:53 AM
படிக்காத மேதை அவர்
படிக்கட்டாய் நின்று பலரைப்
படித்திட வைத்தவர்



http://1.bp.blogspot.com/-V0Q_UvguZHw/ToglZztBogI/AAAAAAAABIA/ATtYTUIw9jg/s320/kamaraj-children%255B9%255D.jpg (http://1.bp.blogspot.com/-V0Q_UvguZHw/ToglZztBogI/AAAAAAAABIA/ATtYTUIw9jg/s1600/kamaraj-children%255B9%255D.jpg)







கல்விக் கண் திறக்க
பள்ளித் திட்டம் தீட்டிட
அள்ளித் தெளித்தவர்!


பசியோடு பள்ளி வந்தவர்கள்
புசித்து படித்திட செய்து
ரசிக்க செய்தவர்


முதல்வனாய் ஆண்ட போதும்
முதல்வானாய் பதவியிலே இருக்காமல்
முதல்வனாய் விலகியவர்.




தாயே ஆனாலும் சரிதான்
வாய் மாறாது - அரசின்
பாய் கிடையாது!



http://4.bp.blogspot.com/-etZkCZm8CJI/ToglYZkeVuI/AAAAAAAABH8/uEkBxduN33U/s1600/2572-KAMARAJ.jpg (http://4.bp.blogspot.com/-etZkCZm8CJI/ToglYZkeVuI/AAAAAAAABH8/uEkBxduN33U/s1600/2572-KAMARAJ.jpg)





அவர் தான் கர்மவீரர் காமராஜர்



அக்டோபர் 2 அவரது நினைவு நாள்!


பி.கு: எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

innamburan
02-10-2011, 12:50 PM
பெருந்தலைவர் காமராஜ் படித்த மேதை ~ வாழ்க்கைப்பாடம்.

vseenu
02-10-2011, 02:04 PM
ஒரு கிங் மேக்கர் ஆக இருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டியவர் கர்ம வீரர் காமராஜர்

சிவா.ஜி
02-10-2011, 05:22 PM
நிஜ மனிதன். அண்ணாந்து பார்க்க வைக்கும் அற்புத தலைவன்....இவரைப்போல யாராவது ஒருவரேனும்....இனி பிறக்க மாட்டார்களா என ஏங்க வைக்கும் தலைவன். அவரது புகழ் ஓங்குக.

jaffer
04-10-2011, 10:12 AM
நல்ல மனிதர் அல்ல அல்ல புனிதர், தமிழ் நாட்டில் தமிழனாய் பிறந்து நமக்கெல்லாம் பெருமை சேர்த்தவர்

ஆளுங்க
04-10-2011, 03:23 PM
படித்து கருத்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகள்!

sures
04-10-2011, 04:36 PM
மிகவும் எளிமையான மனிதர். ஆனால் எல்லோராலும் விரும்பப்பட்டவர்.
எப்படி ஒரு மனிதர் இருக்க வேண்டும் என்று ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர்.

பாலகன்
04-10-2011, 04:48 PM
மாமனிதர் கள்ளங்கபடமற்றவர்