PDA

View Full Version : புலம்பல்



M.Jagadeesan
01-10-2011, 02:14 PM
பிரிகின்ற வேளை வந்ததை எண்ணி
பித்தம் பிடித்தவன்போல் நித்தமும் உளறுகின்றேன்
உன்னோடு நான் உறவாடிய நாட்களெல்லாம்
வாழ்க்கையில் என்றும் மறவாத நாட்கள்.

நான்செய்த குற்றமோ நீசெய்த குற்றமோ
நாள்குறித்து விட்டார்கள் நம்மைப் பிரிப்பதற்கு
வான்முகிலும் நிலவும்போல் வாழ்ந்திருப்போம் என்றெண்ணி
கண்ட கனவெல்லாம் கானல்நீர் ஆயிற்று.

நாளை காலையிலே விடிகாலை வேளையிலே
நாலுபேர் சூழ்ந்திருக்க நாடெல்லாம் பார்த்திருக்க
கழுத்திலே கயிறு ஏறுகின்ற வேளையிலே
காற்றோடு காற்றாக நானும் கலந்திருப்பேன்.


(நாளை காலையிலே தூக்கிலே ஏறப்போகும் உடலைப் பார்த்து அரற்றிய ஓர் உயிரின் புலம்பல் இது.)

Nivas.T
03-10-2011, 09:24 AM
தவறுகளுக்கு மரணதண்டனை என்றுமே தீர்வாகாது

நல்ல கவிதை ஐயா

jaffer
03-10-2011, 10:03 AM
காலத்திற்கு ஏற்ற கவிதை - புலம்பலில் தாக்கம் புரிகிறது

sarcharan
11-10-2011, 04:22 PM
வேதனையில் ஒரு கவிதை

vseenu
12-10-2011, 12:26 AM
உயிர் உடலை பார்த்து புலம்புகிறது. உடலுக்குத்தானே அழிவு. உயிருக்கு அல்லவே.கவிதையில் புலம்பலை ரசித்தேன். ஆக்கியோனுக்கு நன்றி

Viduthalai
12-10-2011, 05:04 PM
உடலைப் பிரியும் உயிரின் புலம்பல்
உயிரின் உயிரான உயிர்களை
பிரிவது அதனினும் கொடிதே
நல்ல உயிராக இருந்திருப்பின்.