PDA

View Full Version : பரிந்துரை கடிதம்!!!



dhilipramki
01-10-2011, 03:26 AM
பரிந்துரை கடிதம்
என் நண்பனின் வேலைக்கு ஒரு பெரிய மனிதர் ஒருவரிடம் இருந்து பரிந்துரை கிடைத்து. நண்பன் அப்பரிந்துரை கடிதத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு சென்று கடிதத்தை கொடுப்பதிர்கு பதிலாக, விளையாட்டாக "உங்கள் நிறுவனத்தில் குறிப்பிட்ட வேலைக்கான காலி இடம் இருக்கிறதா?" என்று கேட்டார்!!
உடனே "இப்பொழுது இல்லை" என்றார் அந்நிறுவன அதிகாரி!!:frown:

அதை கேட்டு சற்றும் யோசிக்காமல் உடனே, தான் கொண்டு வந்த பரிந்துரை கடிதத்தை அதிகரிடம் கொடுத்தார்.

அதை வாங்கி படித்தவர், வேறு ஏதும் சொல்லாமல், "நீங்கள் இப்பொழுது செல்லலாம் இடம் இருந்தால் நாங்கள் உங்களை அழைப்போம்" என்று வெளியே சென்று விடு என்று கூறுவது போல் கூறினார். :traurig001:

வியந்து! பயந்து! :fragend005:மயக்க நிலையாய் வெளியே வந்தார் என் நண்பர்.
உரிய இடத்தில் கேட்க வேண்டியதை கேட்காததால், வந்த விளைவை பார்த்தீர்களா!!
எதை செய்ய வேண்டுமோ, அதைத் தான் செய்ய வேண்டும். அதை விடுத்து வீண் ஆராய்ச்சி செய்தால் இப்படிதான்.

இது போன்ற விளையாட்டால், நமக்கு பரிந்துரை செய்தவர் நற்பெயரும் வீனாகுமே! :icon_b:

sures
03-10-2011, 12:08 PM
என்ன செய்வது, சில சில இடங்களில் எதை எப்படி, எந்த முறையில் கையாள்வது என்ற பிரச்சனை எங்களிடம் இருக்கிறதே.
உங்கள் நண்பருக்கு சீக்கிரமே அதே வேலை கிடைத்தால் நன்று.

dhilipramki
03-10-2011, 01:59 PM
அதே வேலை கிடைக்கும், ஆனால் அதே நிறுவனத்தில் கிடைக்க வாய்ப்பு குறைவே. அந்த அதிகாரி மாறினால் வாய்ப்பு கிடைக்கலாம். :D:smilie_abcfra:

சிவா.ஜி
03-10-2011, 04:27 PM
இதுக்குப் பேர்தான்....குசும்புங்கறது....அது இளைமையில் ரொம்ப அதிகமாவே இருக்கும்....அதனால இழப்புகளும் அதிகமாவே இருக்கும்.

Nivas.T
03-10-2011, 04:31 PM
இதைத்தான்

"தவளை தன் வாயால் கெடும்"ன்னும் சொல்லுவாங்க

சிந்திக்க வைக்கும் பதிவு

ஓவியன்
03-10-2011, 04:38 PM
ஆஹா, இதுக்கு பேர் குசும்பு இல்லைணா...

விஷமம்னு கூட சொல்லலாம், நாமளும் பெரிய ஆளுங்கதான் நமக்கு யாரோட தயவும் வேண்டியதில்லைனு நினைப்பதால் வரும் பிரச்சனைனும் சொல்லலாம்..!! ;)

dhilipramki
04-10-2011, 05:41 AM
Nivas.T, ஓவியன் மற்றும் சிவா.ஜி அவர்களுக்கு நன்றிகள்.:)

jaffer
04-10-2011, 06:42 AM
ஓவர் லொள்ளு - தானும் கெட்டு மத்தவன் பெயரையும் கெடுத்து....சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

aren
04-10-2011, 07:11 AM
இதுக்குப் பேருதான் பைத்தியக்காரத்தனம் என்பது. யாரோ ஒருவர் சிபாரிசு செய்கிறாரே அதன் மூலம் வேலை கிடைத்தால் போதும் என்று நினைக்காமல் உதார்விட்டால் இப்படித்தான் நடக்கும்.

vseenu
05-10-2011, 09:09 AM
நண்பருக்கு வேலையை பெறுவதில் அவ்வளவாக நாட்டம் இல்லையோ

dhilipramki
05-10-2011, 01:54 PM
நண்பருக்கு வேலையை பெறுவதில் அவ்வளவாக நாட்டம் இல்லையோ

வேலை வாங்குவதில் நாட்டம் இல்லை என்றல்லாம் இல்லை. ஆனால் சிறிது குறும்புகாரர், இபொழுது ஒரு நல்ல நிறுவனத்தில் உயர் ஊதியத்தில் பணியில் இருக்கிறார்.

குறிப்பு:-
(அவர் இப்பொழுது இருக்கும் வேலை, பரிந்துரை செய்து கிடைக்கும் வேலையின் இடத்தை விட மிக உகந்தது. இப்பொழுது இருக்கும் வேலை பரிந்துரை இல்லாமல், உடனே சரியான முறையில் கிடைத்தது.)

vseenu
05-10-2011, 04:09 PM
அப்ப இது அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு. அவருக்கு என் வாழ்த்துக்கள்

dhilipramki
05-10-2011, 04:32 PM
அப்ப இது அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு. அவருக்கு என் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களை அனுப்பிவிட்டேன்... மின்னஞ்சலில்

இராஜேஸ்வரன்
15-02-2012, 08:08 AM
இந்த அனுபவம் உங்களின் நண்பருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-03-2012, 09:43 AM
இந்தக் குணம் நமக்கு மிக அதிகமாகவே உள்ளது. அணிலும் தன் வாயால் கேடும் என்பார்களே...அது இது தான்.:frown:

jayanth
21-03-2012, 01:26 PM
இந்தக் குணம் நமக்கு மிக அதிகமாகவே உள்ளது. அணிலும் தன் வாயால் கேடும் என்பார்களே...அது இது தான்.:frown:

ஐயா, வாயால் கெட்டது அணிலா அல்லது நுணலா...!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-03-2012, 02:03 PM
ஐயா, வாயால் கெட்டது அணிலா அல்லது நுணலா...!!!

பழமொழி சொல்வது போல் 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதே சரி. நுணல் என்பது தவளை அல்லவா. ஆயினும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நுணல் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் அணிலும் தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அணில்களை அடித்துப்பிடிக்க ஒண்டிவில்லுடன் அலைவோம் சிறுவயதில். சிறிய கல்லை வில்லின் இடையில் வைத்து மரங்களில் இருக்கும் அணில்களை/குருவிகளை குறிவைத்து அடிக்க ஆரம்பிப்போம். எல்லா அணில்களும் அருகில் உள்ள பனை மரங்களில் போய் மட்டைகளுக்கு இடையில் ஒளிந்துகொண்டு விடும். சிறிது நேரம் அமைதியாக இருக்கும். ஆனால் ஒரு சில அணில்கள் சத்தம் போட்டு எந்த மரத்தில் உள்ளோம் என்பதை காட்டிக்கொடுத்து விடும். அப்போது அந்த மரத்தின் கீழ் போய் நின்று ஒரு கல்லை எடுத்து 'டக்,டக் டக் ' என தொடர்ந்து மரத்தின் அடிப்பகுதியை தட்டுவோம். அப்போது அணில்கள் இந்த மரத்தை வெட்டப்போகிறார்கள் என்று தப்பாக புரிந்துகொண்டு எல்லாம் கிழே வரத்துவங்கும். அல்லது அடுத்த மரத்துக்குத் தாவ எத்தனிக்கும். அப்போது ஒண்டிவில்லால் அதை அடித்து விடுவோம். ஜெயந்த் அவர்களே இப்படித்தான் அணில் தன் வாயால் கெடும் என்பது :)

jayanth
21-03-2012, 02:27 PM
பழமொழி சொல்வது போல் 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதே சரி. நுணல் என்பது தவளை அல்லவா. ........................ அணில் தன் வாயால் கெடும் என்பது :)

விளக்கத்துக்கு நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே

தாமரை
21-03-2012, 05:24 PM
பரிந்துரை கடிதம்
என் நண்பனின் வேலைக்கு ஒரு பெரிய மனிதர் ஒருவரிடம் இருந்து பரிந்துரை கிடைத்து. நண்பன் அப்பரிந்துரை கடிதத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு சென்று கடிதத்தை கொடுப்பதிர்கு பதிலாக, விளையாட்டாக "உங்கள் நிறுவனத்தில் குறிப்பிட்ட வேலைக்கான காலி இடம் இருக்கிறதா?" என்று கேட்டார்!!
உடனே "இப்பொழுது இல்லை" என்றார் அந்நிறுவன அதிகாரி!!:frown:

அதை கேட்டு சற்றும் யோசிக்காமல் உடனே, தான் கொண்டு வந்த பரிந்துரை கடிதத்தை அதிகரிடம் கொடுத்தார்.

அதை வாங்கி படித்தவர், வேறு ஏதும் சொல்லாமல், "நீங்கள் இப்பொழுது செல்லலாம் இடம் இருந்தால் நாங்கள் உங்களை அழைப்போம்" என்று வெளியே சென்று விடு என்று கூறுவது போல் கூறினார். :traurig001:

வியந்து! பயந்து! :fragend005:மயக்க நிலையாய் வெளியே வந்தார் என் நண்பர்.
உரிய இடத்தில் கேட்க வேண்டியதை கேட்காததால், வந்த விளைவை பார்த்தீர்களா!!
எதை செய்ய வேண்டுமோ, அதைத் தான் செய்ய வேண்டும். அதை விடுத்து வீண் ஆராய்ச்சி செய்தால் இப்படிதான்.

இது போன்ற விளையாட்டால், நமக்கு பரிந்துரை செய்தவர் நற்பெயரும் வீனாகுமே! :icon_b:

அந்த அதிகாரியின் இடத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிறேன்..

என்னிடம் ஒருவர் வருகிறார்.

"உங்கள் நிறுவனத்தில் குறிப்பிட்ட வேலைக்கான காலி இடம் இருக்கிறதா?" என்று கேட்கிறார்!!

அந்தப் பதவி உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயமான பதவி அல்ல. அதுவுமில்லாமல் அதை நிரப்புவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

எனவே நான்
"நீங்கள் இப்பொழுது செல்லலாம் இடம் இருந்தால் நாங்கள் உங்களை அழைப்போம்" என்று சொல்கிறேன்.

அதை முழுமையாக கேட்டாரா இல்லையா தெரியாது ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

சிபாரிசுக் கடிதம். பெரிய மனிதரிடம் இருந்துதான். என்ன செய்யலாம்? ஒரு வினாடி யோசிக்கிறேன்.

முதலாவதாக இந்த சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பேனோ தெரியாது. ஆனால் வேலை இப்பொழுது காலி இல்லை என்ற பின்னால் கொடுக்கிறாரே.. இதில் எதாவது சதி இருக்குமோ?

என்னை யாரிடமாவது மாட்டி விட முயற்சிக்கிறாரோ?

இவரை பாம்பென்று அடிக்கவும் முடியலை.. பழுதென்று தாண்டவும் முடியலையே.. சரி சரி அப்படியே மெயிண்டெய்ன் செய்வோம்..என்று எண்ணிக் கொண்டு

"நீங்கள் இப்பொழுது செல்லலாம் இடம் இருந்தால் நாங்கள் உங்களை அழைப்போம்" என்று சொல்கிறேன்..

ஆனால் இதென்ன இவர் இப்படி பேஸ்தடிச்ச மாதிரி போறாரே...:rolleyes::rolleyes::rolleyes:

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-03-2012, 02:55 AM
தாமரை அவர்களே உங்களுடைய கருத்தும் சிறப்பாக உள்ளது...நன்றி:)