PDA

View Full Version : இறுதியில் நிலையானது?? :(



PremM
30-09-2011, 09:32 PM
சரக்கு ஒரு புறம்,
ஊறுகாய் மறு புறம்..
நண்பர்கள் முன்புறம்,
கவலைகள் பின்புறம்..

சூழ்ச்சிகள் ஒரு புறம்,
வீழ்ச்சிகள் மறு புறம்..
அவள் பார்வைகள் முன்புறம்,
நண்பர்கள் பின்புறம்..

கனவுகள் ஒரு புறம்,
உன் நினைவுகள் மறு புறம்..
கவிதைகள் முன்புறம்,
உன் பார்வைகள் பின்புறம்..

நான் ரசித்தவள் ஒரு புறம்,
எனை விதைத்தவள் மறு புறம்..
பிரிவுகள் முன்புறம்,
கவிதைகள் பின்புறம்..

வீழ்ந்தவள் ஒரு புறம்,
எனைச் சூழ்ந்தவள் மறு புறம்..
மலர்,மாலைகள் முன்புறம்,
பிரிவுகள் பின்புறம்..

கண்ணீரில் ஒரு புறம்,
காதலில் மறு புறம்..
புது மயக்கங்கள் முன்புறம்,
மலர்,மாலைகள் பின்புறம்..

பிள்ளைகள் ஒரு புறம்,
அதன் சிறகுகள் மறு புறம்,
தேவைகள் முன்புறம்,
புது மயக்கங்கள் பின்புறம்..

உயர்வை சரித்தவன் ஒரு புறம்,
பறித்தவன் மறு புறம்,
கவலைகள் முன்புறம்,
தேவைகள் பின்புறம்..


சரக்குஒரு புறம்,
ஊறுகாய் மறு புறம்..
நண்பர்கள் முன்புறம்,
கவலைகள் பின்புறம்..

செல்வா
01-10-2011, 02:57 AM
வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சுழற்சியாக்கி முன்புறம் பின்புறமாக வடித்த கவிதை அருமை.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.!

பென்ஸ்
05-10-2011, 06:15 AM
பிரேம்...
கண்ணதாசன் கவிதைகளின் பலத்திற்க்கு
உங்கள் கவிதைகளின் முதல் வரிகளே காரணம் என்பார்கள்...

உங்களுக்கு எப்படியோ..???
அடடே உங்க மூண்றாவது பத்தியின் முன்றாவது வரியை திரும்ப வாசிக்கிறேன்....:)

வாழ்க்கையின் எத்தனையோ இடர்கள் நம்மை எல்லா புறமும் சூழ்ந்தாலும் ,
பிறமுதுகில் "கவலைகள்" நின்று முன் தள்ளும் போது வாழ்க்கை ஓடிதான் போகிறது....

நல்ல கவிதை...

jaffer
05-10-2011, 06:26 AM
சரக்கு ஒரு கையில் முறுக்கு மறு கையில், சும்மா முறுக்கலா இருக்கு வாழ்த்துக்கள்

PremM
05-10-2011, 09:42 AM
நன்றி செல்வா,பென்ஸ்,jaffer

பென்ஸ்,
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..ஆனால் இவைகள் அந்தத் தருணங்களில் பிறந்தவை அல்ல.. :)

செல்வா சொன்னது போல் வாழக்கையின் ஒரு பகுதியை சுழற்ச்சி முறையில் சொல்ல வேண்டும் என எழுதத் தொடங்கினேன்..அதன் விளைவே இக்கவிதை..

Nivas.T
05-10-2011, 01:42 PM
தொடக்கமும் அதிலே
முடிவும் அதிலே

சுழற்சி என்பதே நிலையான மாற்றம்தான்
மாற்றத்தின் தத்துவம் இதுவும் கடந்துபோகும் என்பதே ஆனால் அடுத்த சுழற்ச்சியில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்

கவிதை மிக அருமை

vseenu
05-10-2011, 04:01 PM
முன் புறம் பின்புறத்திலேயே ஒரு மொத்த கவிதையை முடிச்சிட்டீங்க.சிறப்பான வரிகள். ரசித்தேன்.நன்றி