PDA

View Full Version : அற்ப ஆசைகள்M.Jagadeesan
30-09-2011, 03:19 AM
வண்ணக் காட்சிகளைக் கண்டு மகிழவும்
தின்னும் வெற்றிலை எச்சில் துப்பவும்
இன்னல் ஏதும் இருக்காது என்பதால்
ஜன்னல் ஓரத்தைப் பேருந்துகளில் விரும்புவர்.

அட்சய திருதியையில் நகையை வாங்கினால்
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாளென
லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டி
இச்சைக்கு இனிய நகைகளை வாங்குவர்.

குங்குமப்பூ தின்றால் கொழுகொழு குழந்தை
மங்கையர் வயிற்றில் நாளும் வளர்ந்து
செங்குருதி நிறத்தில் செக்கச் செவேலென
மங்கள முகத்துடன் பிறக்கும் என்பர்.

பூஜை பண்டிகையில் சரஸ்வதி முன்னே
மேஜையின் மீது புத்தகங்கள் அடுக்கி
அள்ளி சந்தனத்தை அதன்மீது தெளித்தால்
கல்வி வருமெனக் கடவுளை வணங்குவர்.

வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டினால்
ஆஸ்தி பெருகுமென்று யாரோ சொல்ல
மாசுமறு இல்லாமல் கட்டிய வீட்டைக்
காசுபல செலவிட்டு இடித்துத் தள்ளுவர்.

அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை.

aren
30-09-2011, 05:39 AM
இந்தக் கவிதைப் பக்கமெல்லாம் நான் அவ்வளவாக வருவது கிடையாது, காரணம் எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் ஞானம் கிடையாது. தெரியாமல் இன்று வந்துவிட்டேன்.

நல்ல சிந்தனையில் உதித்த அழகான கவிதை. சில அற்ப ஆசைகளும் நமக்கு வேண்டும் அல்லவா. எனக்கும் சில அற்ப ஆசைகள் உள்ளன, சிலவற்றை அடைந்திருக்கிறேன் சிலவற்றிற்காக ஏக்கங்களுடன் காத்திருக்கிறேன்.

இன்னும் கொடுங்கள்.

வெங்கி
30-09-2011, 06:19 AM
அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால் அறிவுக்கு அங்கே என்ன வேலை?....சிந்திக்க வேண்டிய வரிகள். பாராட்டுக்கள்

M.Jagadeesan
30-09-2011, 07:14 AM
Aren, vengki ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

செல்வா
01-10-2011, 03:19 AM
மூடப் பழக்கங்களை
எதுகை கூட்டி எட்டியுதைக்கும் கவிதை...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்..!

M.Jagadeesan
01-10-2011, 04:35 AM
செல்வா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

seguwera
01-10-2011, 12:42 PM
அற்ப ஆசைக்கு அழகிய செருப்படியாய் வந்த கவிதை நல்லா இருக்கு.

M.Jagadeesan
01-10-2011, 01:55 PM
சேகுவேரா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

Nivas.T
03-10-2011, 09:30 AM
மூட நம்பிக்கைகாக சில செயல்கள்
தனது அற்ப ஆசைகளை நிறைவேற்றிகொள்ள மூடி மறைக்கப்பட்ட செயல்கள்

என்றுதான் மாறும் இந்த மூடர் கூட்டம்
அறிவிலியாய் வாழ்வதற்கு
அக்தினையாய் வழ்ந்துபோக்கலாமே?

மீண்டும் ஒரு சுய சிந்தனைக் கவிதை

நன்றி ஐயா

jaffer
03-10-2011, 10:27 AM
வண்ணக் காட்சிகளைக் கண்டு மகிழவும்
தின்னும் வெற்றிலை எச்சில் துப்பவும்
இன்னல் ஏதும் இருக்காது என்பதால்
ஜன்னல் ஓரத்தைப் பேருந்துகளில் விரும்புவர்.


இது ஒருவகையில் ஆசை தான்
அட்சய திருதியையில் நகையை வாங்கினால்
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாளென
லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டி
இச்சைக்கு இனிய நகைகளை வாங்குவர்.

குங்குமப்பூ தின்றால் கொழுகொழு குழந்தை
மங்கையர் வயிற்றில் நாளும் வளர்ந்து
செங்குருதி நிறத்தில் செக்கச் செவேலென
மங்கள முகத்துடன் பிறக்கும் என்பர்.

பூஜை பண்டிகையில் சரஸ்வதி முன்னே
மேஜையின் மீது புத்தகங்கள் அடுக்கி
அள்ளி சந்தனத்தை அதன்மீது தெளித்தால்
கல்வி வருமெனக் கடவுளை வணங்குவர்.

வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டினால்
ஆஸ்தி பெருகுமென்று யாரோ சொல்ல
மாசுமறு இல்லாமல் கட்டிய வீட்டைக்
காசுபல செலவிட்டு இடித்துத் தள்ளுவர்.


மன்னிக்கவும் இது ஆசை அல்ல தோழரே, மூட நம்பிக்கை, மூட நம்பிக்கை, மூட நம்பிக்கை தவிர வேற ஒண்ணுமில்லைங்கோ.

படிப்பறிவு இல்லாத வரை???????????????????

பென்ஸ்
03-10-2011, 03:55 PM
மிக நேர்த்தியான கவிதை...
சொல்லிய கருவும்ம்... சொல்லிய விதமுன்... வடிவமும்... கலக்கல்...
ரசித்தேன்....

மழைகால ஜன்னல் பயணம்...
ஆடி தள்ளுபடி...
என்று கிடைத்தாலும் விரும்புவதில்லையே....

போர்களத்தில் மனம் பிஸ்லரி தண்ணிர் கேட்க்காது அல்லவா..
அது போல், எல்லாம் எளிதாக கிடைக்கும் போது... "பல்லை பிடித்து பாக்கிறது" நம்ம மரபுதானே....

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 03:34 PM
அற்ப ஆசைகளும் மூட நம்பிக்கைகளும் நமது முன்னேற்றத்திற்கு தடையை உள்ள காரணிகள் ஆகும். அழகாய் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள் ஐயா.:)

கீதம்
02-04-2012, 01:01 AM
இருப்பதில் திருப்தியுறா மனத்திற்கு தீனி போட்டுக் கட்டுப்படியாகுமா? அற்ப ஆசைகளால் நிறைந்த மனமும் அப்படித்தானே? மெய்ப்பொருள் உரைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

vasikaran.g
02-04-2012, 03:37 AM
அற்ப ஆசை ,சொற்ப நாழிகை ..கவிதை நன்று .