PDA

View Full Version : அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 27innamburan
27-09-2011, 08:27 PM
அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 27
பகுதி 1: ஐன்ஸ்டீன்
‘கடந்த காலம் ~நிகழ்காலம் ~வருங்காலம் என்று பகுப்பது ஒரு மாயை, எத்தனை அழுத்தம் திருத்தமாக சொன்னாலும்.’
~ ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்.
விஞ்ஞானம் ‘இதோ பிடி! யாம் செப்பியது அழிவிலா உண்மை. கல்வெட்டில் பதிப்பிக்கவும்’ என்று அடம் பிடிக்காது. இதோ பாருங்கள்.

“விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி! பிரபஞ்சத்தை பற்றி புதிய கருத்து!! நியூட்டனின் கருத்துக்கள் தூக்கியடிக்கப்பட்டன!!!”
~ லண்டன் டைம்ஸ்: ஐன்ஸ்டீனை பற்றி: நவம்பர் 7, 1919
“ஓஹோ! இந்த CERN ஐன்ஸ்டீனின் தவறை நிரூபித்து விட்டதோ?
~ லண்டன் டைம்ஸ்: ஐன்ஸ்டீனை பற்றி: ஸெப்டம்பர் 24, 2011
 என்ற மந்திர தந்திர யந்திர உபாசனையை உச்சரித்து, விஞ்ஞான உலகை ஐன்ஸ்டீன் புரட்டி எடுத்த தினம்: ஸெப்டம்பர் 27, 1905. அநாவசியமாக தலையை உரலில் கொடுத்து, யாராவது மாவாட்டி விடப்போகிறார்களே என்று அஞ்சி நடுங்கி, ஐன்ஸ்டீனை பற்றி சில வரிகள் சம்பிரதாயமாக எழுதி விட்டு, உங்களை நண்பர் ராஜ சங்கரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
ஐன்ஸ்டீன் விஞ்ஞானிகளில் தத்துவமேதை; தத்துவமேதைகளில் விஞ்ஞானி. ஒரு தத்துவத்தை/சிந்தனையை/கோட்பாட்டை அடித்தளமாக அமைத்து விஞ்ஞானம் படைத்த மேதை அவர். மேற்படி மந்திர தந்திர யந்திர உபாசனைக்கு அளவுகோல் கிடையாது. அத்தனை உன்னதம் அதன் பொதுமை. சிலர் அவரை சித்தபுருஷன் என்கிறார்கள். சிலர் கல்லுளிமங்கன் என்கிறார்கள். அவர் ஒரு ஷைலஜம். யாரும், எதுவும் அவரை அசைக்கமுடியாது.
ரிலேட்டிவிட்டி பற்றி, சம்பிரதாயமாக:
1.அப்படி என்ன சிறப்பாக?
மனோதர்மம் எனலாம். ஒரு சிந்தனைக்கதிரொளி புத்தம்புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பை கொணர்ந்தது தான், இதன் தனிச்சிறப்பு.
அதென்னெ சிறப்பு ரிலேட்டிவிட்டி?
புவி ஈர்ப்பை அது கண்டுகொள்ளாததால் தான் அந்த சிறப்பு. புவி ஈர்ப்பு இல்லாத விஞ்ஞானம் என்றாலே தனி சிறப்புத்தான். அது ஒரு புலிப்பாய்ச்சல் தான். விஞ்ஞானத்தைப் புரட்டி எடுத்து விட்டது அல்லவா!
விளக்குக:
ஒரு பந்தை 40 மைல் வேகத்தில் வீசுகிறேன். ஐந்து மைல் வேகத்தில் ஓடிக்கொண்டே வீசினால், அதன் வேகம் 45 மைல். இது தான் கலிலியோவும், ந்யூட்டனும் சொல்லிக்கொடுத்த விஞ்ஞானம், சுருக்கமாகச்சொன்னால். ஐன்ஸ்டீனின் சிந்தனையும், சோதனையும் கூறியது: இதெற்கெல்லாம் மேல், வீசியது பாட்ஸ்மென்னா, பெளலரா என்பதை பொறுத்து இருக்கும். படுவேகமாக வீசுபவருக்கு பந்து சுருங்கியதோ, அதன் தோல் கவசம் கொஞ்சம் குறைந்து சுருங்கியதோ என்று தோன்றும். பந்தைக்கேட்டால், ஒன்றும் மாறவில்லை என்று சொல்லும்!
புரியவில்லை!
மேற்கோளை மறுமுறை படிக்கவும். காலம் என்ற மாயம், தொலைவு என்ற தோற்றம். அவை இரண்டுமே, பார்வையாளனை பொறுத்து; அவனுடைய இடத்தை பொறுத்து.எல்லாமே ரிலேட்டிவ். அதாவது, இதை பொறுத்து அது. அதை பொறுத்து, இது. இது கூட புரியவில்லை எனின், மின் தமிழர் ராஜ சங்கரை கேட்கவும். நாம் அரைத்த மாவுக்கு உதவியவர் டாம் விப்பிள்.

மின் தமிழில் திரு.ராஜ சங்கர் பதித்த விஞ்ஞான தொடர் கட்டுரையின் சில பகுதிகளை, அவருடைய முன் அனுமதியுடனும், நன்றியுடனும் மீள்பதிவு செய்கிறேன்.
பயன் பெறுவீர்களாக.
இன்னம்பூரான்
http://www.emersonkent.com/images/einstein_stamp_1981.gif

**********************
1.’...குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-20

குவாண்டம் இயற்பியலின் தந்தை நு மேக்ஸ் பிளாக்ங் க சொன்னாலும் அதுக்கு ஒரு வடிவம் கொடுத்தவர் ஐன்ஸ்டைன் தான். அது எப்படிநு பார்ப்போம்.*

ஒளி ஒரு பொருள் மீது விழுந்தா அந்தப்பொருள் எலக்ராட்ன்களை உமிழும் என்பது 1887 லிலேயே ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தான் மேக்ஸ்வேல்லின் மின்காந்தகொள்கைக்கான சமன்பாடுகளை எளிமைப்படுத்தியவர். இந்த விளைவு கொஞ்சகாலத்திற்கு அப்புறம் தூசு படிய ஆரம்பித்தது மறக்கப்பட்டது. 1902 ல்லில் தனிமங்களின் மீது விழும் ஒளியின் அலைவரிசை அதிகரிக்கப்படும் போது அதில் இருந்து உமிழப்படும் எலக்டரான்களின் ஆற்றலும் அதிகரித்தது என அறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஒரு சிக்கல கொண்டுவந்தது.*

இது ஒளியின் அலைக்கோட்பாட்டுக்கு ஒத்து போகல. ஒளியின் அலைக்கோட்பாட்ட சுருக்கா சொல்லனும் னா அவை நீரின் பரப்பில் அலை வந்தா எப்படி இருக்குமோ அப்படி இயங்கும். மேக்ஸ்வெல் ஒளி அலைகளும் மின்காந்த அலைகளும் ஒன்றே போல் இயல்பு கொண்டவை நு நிரூபித்து இருந்தார். இந்த கொள்கை எல்லா வகையான ஒளி விளைவுகளையும் விளக்கியது. இப்பதான் ஐன்ஸ்டைன் உள்ளே வரார். அவர் இந்த எலக்ட்ரான்கள் எப்படி உமிழப்படுகின்றன நு விளக்கினார். இந்த விளக்கத்திற்கு தான் அவருக்கு 1921 னின் நோபல் பரிசு கிடைத்தது. ஆமா அவர் சொன்ன சிறப்பு சார்பியல் தத்துவத்திற்கோ அல்லது பொது சார்பியல் தத்துவத்திற்கோ கிடைக்கல. :-)

ஐன்ஸ்டைன் சொன்னது மிக எளிது. ஒளி குவாண்டாவா (குண்டாவா இல்ல, துகள்கள் ) பயணப்படுது. அந்த ஒளித்துகள்கள் தனிமத்தின் மீது விழும் போது அந்த துகள்களின் ஆற்றலுக்கு ஏற்ப எலக்ரான்கள் உமிழ்ப்படுகின்றன. நமக்கு எலக்ட்ரான்கள் மின்சாரம் மற்றும் வெப்பம் கடத்துதலுக்கு காரணம் நு தெரியும். அதனால இது ஒளி-மின் விளைவு நு அழைக்கபடுகிறது.*

அறிவியலில் இப்ப நாம பார்த்தது ஒரு எப்போதும் நடக்கும் நிகழ்வு. ஒரு நிகழ்வு நடக்கும்போது அதை கொள்கைரீதியா விளக்க முடியாம போலாம். இந்த மாதிரி விளக்கம் இல்லாத நிகழ்வுகள் முதலில் ஆராயப்பட்டு பின் விளக்கப்படும். மருத்துவத்தில் ஏன் புற்று நோய் வருது அப்படீனு யாருக்கும் தெரியாது. சிலருக்கு வந்து குணமாகும் அதுவும் ஏன் நு தெரியாது :-) இந்த மாதிரி நிறைய குவாண்டம் பத்தி படிக்கறப்ப அடிக்கடி வரும்.*
போட்டான் பத்தி நாளைக்கி.*
*
https://docs.google.com/View?id=dvx8x92_30gm64cbf9&pli=1
*
Sunday, August 22, 2010
குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்-41 ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை

இந்த பதிவில் ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கைகளை பத்தியும் அதுக்கும் குவாண்டம் தியரிக்கும் என்ன சம்பந்தம் என பார்க்கலாம்.

ஐன்ஸ்டைன் பத்தியும் அவருடைய புகழ்பெற்ற சூத்திரம் ஆன E=mc2*பற்றியும்
அறிவியல் படிச்சவங்க எல்லோருமே படிச்சிருப்பாங்க. சும்மா ஒளியோட வேகம் தான் பெரிசு அதுக்கும் மேல வேகம் கிடையாது என்று சொல்வதற்கு பதிலாக இந்த கொள்கைகள் எவ்வாறு உருவாயின யார் யார் எல்லாம் அதில் பங்கெடுத்தாங்க என்பதை பற்றி எல்லாம் பார்க்கலாம். ஆனா அதுக்கும் முன்னாடி ஒரு சின்ன விளக்கம் தேவைப்படுது.

சார்பியல் கொள்கையையும் சார்பு தத்துவத்தையும் போட்டு குழப்பிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அது என்னங்க சார்பு தத்துவம்? அழகு பார்பவர்களை பொறுத்தது. ஓருவருக்கு அழகாக தெரியும் ஒன்று இன்னொருவருக்கு அழகாக தெரியாது போன்றவை தான் சார்பு தத்துவம். இந்த சார்பு தத்துவம் எல்லாத்துக்கும் சொல்லலாம். ஆனா இது வேறு சார்பியல் கொள்கை வேறு. இந்த குழப்பத்தை ஒரு மதக்கருத்துக்கோ அல்லது அறிவியலை தாக்குவதற்கோ பயன் படுத்துபவர்கள் நிறைய பேர். அதுனால அடுத்த வாட்டி யாராச்சும் ஐன்ஸ்டைனை துணைக்கு இழுத்தா கீழே படிக்கப்போகும் கருத்துக்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என யோசிங்க.

ரிலேட்டிவிட்டி என்பதை சார்பியல் சொல்வது ஏன் பொருந்தும் என்றால் அது இயற்பியல், வேதியியல் மாதிரி பரிசோதனை செய்து ஒப்பீடு செய்யக்கூடிய ஒரு கொள்கை. சரி இப்போ அது என்ன என பார்க்கலாம்.

முந்தைய பதிவுகளில் படிச்சிருக்கோம் நியூட்டன் தான் புவியீர்ப்பு விசை என ஒன்னு இருக்கு என கண்டுபிடிச்சவர், அவருடைய மூன்று விதிகள் தான் இயற்பியலை முன்னே கொண்டு சென்றன என எல்லாம் பார்த்தோம். ஆனா நியூட்டனின் விதிகள் பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லா விளைவுகளையும் விளக்க முடியலை. அதுக்கா என்ன பண்ணினாங்கனா ஒரு கற்பனை விசைகள் இருப்பதாக சொல்லி இந்த விளைவுகளை கணக்குக்கு கொண்டுவந்தாங்க. நம்மூர்ல வரவு செலவு கணக்கு ஓரு ஓரமா உதைச்சா இன்னொரு வரவை வச்சு அந்த ஓட்டைய அடைக்கற மாதிரின்னு வச்சுக்கோங்க.

எந்தெந்த விளைவுகளை விளக்க முடியலை அப்படீங்கறதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம். பூமியை சந்திரன் சுற்றும் போது அதன் சுழற்சி ஒரு நீள்வட்ட பாதையில் இருக்கும். இப்போ பூமியும் சந்திரனும் மட்டும் தான் கிட்ட கிட்ட இருக்கு வச்சுக்கோங்க. இந்த நீள்வட்ட பாதையானது மாறாம இருக்கும். ஒரு வாட்டி எப்படி சுத்துதோ அதே மாதிரி தான் சுத்தும். ஆனா பூமி சூரியனை சுத்துது கூடவே கிட்ட நிறைய கோள்களும் இருக்கு. இதெல்லாம் சேர்ந்து இந்த நீள்வட்ட பாதைய மாற்றும். எப்படி மாற்றும் என்பதை கீழே இருக்கும் படத்தை பாருங்க.
சுற்றும் திசை மாறுது இல்லையா? இதே மாதிரி இன்னும் சில விளைவுகள் இருக்கு. இதை நியூட்டனின் விதிகளை கொண்டு கணக்கிட முடியல. புதன் கோளுடைய இந்த விளைவை ஐன்ஸ்டைனுடைய சார்பியல் கொள்கைகள் தான் விளக்கின. ஐன்ஸ்டைன் இரண்டு சார்பியல் கொள்கைகளை வெளியிட்டார். இரண்டும் சேர்ந்து இப்போது சார்பியல் கொள்கை என்றே அழைக்கப்படுகின்றன. ஒன்று சிறப்பு சார்பியல். இன்னொன்று பொது சார்பியல். முதலில் சிறப்பு சார்பியல் கொள்கையை பார்க்கலாம்.

ஐன்ஸ்டைன் 1905 இல் தன்னுடைய சிறப்பு சார்பியல் கொள்கையை விளக்கும் இரண்டு கட்டுரைகளை எழுதினார். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சுருக்கமாக கீழே இருக்கின்றன.

1. ஒளியின் மாறாவேகம் - ஒரு வெற்று ஊடகத்தில் ஒளியின் வேகம் அது வெளிப்பட்ட இடம் நிலையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே அளவாகத்தான் இருக்கும்.

2. சார்பு கருத்து - இரண்டு பொருட்கள் ஒரே வேகத்தில் இயங்கும் போது ஒன்றில் ஏற்படும் மாற்றத்திற்கான இயல்பியல் விதிகள் இன்னோரு பொருளிலும் அதே மாற்றத்தை கொண்டுவரும். *அதாவது பார்ப்பவருடைய பார்வையை பொருத்து இயற்பியல் விதிகள் மாறு படாது.

இந்த இரண்டு கட்டுரையில் இன்னோரு கட்டுரையில் அந்த சமன்பாடு இருந்தது. இது மட்டும் இல்லாது அதே வருடம் இன்னும் இரண்டு கட்டுரைகளை எழுதினார். இந்த நான்கு கட்டுரைகளால் அந்த வரும் அதிசிய வருடம் என அழைக்கப்படுகிறது

இந்த சிறப்பு சார்பியல் கொள்கை இன்னும் சில கருத்துக்களை முன் வைத்தது.

1. ஒளியின் வேகத்தை விட எந்த பொருளும் போக முடியாது
2. அதிக வேகத்தில் சென்றால் நேரம் வழக்கத்தை விட மெதுவாக செல்லும்

இதுல புவியீர்ப்பு விசை பற்றி ஏதும் இல்லை. அதுக்கப்புறம் எட்டு வருடங்கள் புவியீர்ப்பு விசையை இதுக்குள்ள கொண்டு வர உழைச்சார். அதில் இருந்து வந்தது தான் பொது சார்பியல் கொள்கை. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
https://writer.zoho.com/public/rajasankar/குவாண்டம்-தியரியும்-இருக்கும்-துகள்களும்

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-23

இன்னும் என்னென்ன கண்டுபிடிச்சாங்க என பார்ப்போம்.*

1924 சத்யேந்திர நாத் போஸ்சும் ஐன்ஸ்டைனும் சேர்ந்து போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளிவிவரம் வெளியிடுறாங்க. போசான் எனும் புதிய துகள் ஊகிக்கப்படுகிறது. (கொசுறு - இந்த போசான் துகளதான் இன்னும் தேடறாங்க)