PDA

View Full Version : கூக்கூ... குயிலின் குரலோசை (எனது கவிதைகள்)



கிரிகாசன்
27-09-2011, 08:32 AM
1. காலையில் காணும் கவிதைகள்

தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல் தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழுந் துயிலும்
நெளிந்தது ஆறும் நிமிர்ந்தன மரங்கள்
நின்றிடும் நிரையழகும்
அழிந்தது பனிநீர் அதுவென்ன பசும்புல்
அணைசுகங் கசந்ததுவோ

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்எழிலும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
செழித்தன பெண்கள் சிகையிடை மலர்கள்
செவ்விழி மலர்தாவிப்
பழித்தன இரவின் பலமழி தோள்கள்
பாங்குடை ஆடவரை

செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயம்
சிவந்திடுங் காலைதனில்
குளித்தன இறைவன் கோவில் மணித்திரு
கொள்மறை சுகராகம்
வழித்தெரு நீளம் வண்ணமென் சிறுவரின்
வளமெடு குறுநடையும்
விழித்திட, அறிவென் விதையிட நடைகொள்
வீறெடு சந்தங்களே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு மணிலதுவும்
கழுத்திடு மணிகள் கலகல ஒலியிடும்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்தன மூச்செழ
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையொலி தாளம்
இவைதரும் சுகம்பெரிதே

எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொளும் மனதில் கவிதைகள் தோன்றும்
கருவென உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிடும் சுகம்காணும்
ஒழிந்தது துயரம் உயர்ந்திட மனமென,
உளமங்கு புதிதாகும்

வெங்கி
27-09-2011, 08:39 AM
சிரித்திடும் இதயம்.... நல்லதொரு வார்த்தை உபயோகம்... பாராட்டுகள்

vseenu
28-09-2011, 12:39 AM
ஒழிந்தது துயரம்................. மனதிற்க்கு ஒரு டானிக், புத்துணர்ச்சி அருமை