PDA

View Full Version : கிரிக்கெட் சூதாட்டம்சிவா.ஜி
24-09-2011, 06:02 PM
கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டம் என்று ராஜா சார் அன்றொருநாள் ஆதாரத்தோடு சொன்னார். அன்று அதை உதாசீனப்படுத்தினேன். நமது வீரர்கள் அப்படி செய்வார்களா என நம்பமுடியாமல்...திகைத்தேன். ஆனால் இன்று.....சென்னை சூப்பர்கிங்ஸுக்கும், மும்பைஇண்டியன்ஸுக்கும்....நடந்த போட்டியைப் பார்த்து....நிச்சயமாய் தெரிந்துகொண்டேன்....இது நாம் பார்ப்பதற்கான விளையாட்டல்ல....பணம் கட்டி....விளையாடும் மங்காத்தா மனிதர்களுக்காக என்பதை.

ஒரு சாதாரண பௌலர்....சிக்ஸும், ஃபோரும் அடித்து...தன் அணியை ஜெயிக்க வைக்க உதவும் வகையில்....உலகத்தரமுள்ள பந்துவீச்சாளர்கள் ‘போட்டுக்கொடுக்கும்’ விளையாட்டை இன்றுதான் பார்த்தேன். கோடியில் விளையாடும்...இந்த கிரிக்கெட் எனும் விளையாட்டை....இந்தியாவில்...உடனடியாக தடை செய்ய வேண்டும். எந்த இந்தியனும் இனி இந்த விளையாட்டைப் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் எனும் கேவலமான விளையாட்டை இனி நான் பார்க்க மாட்டேன். யார் பார்த்தாலும்...சரி.....எனது முடிவு இதுதான்.

இது விளையாட்டே அல்ல.....

vseenu
27-09-2011, 12:20 AM
match fixing குறித்து ஏற்கனவே பல முறை செய்திகள் வந்துள்ளனவே அதை தாங்கள் கேள்விப்படவில்லையா?இன்றைக்கு பணம் பண்ணுவதுதான் முதல் குறிக்கோள்.மற்றவை அனைத்தும் அதற்க்கு பின்தான்.

M.Jagadeesan
27-09-2011, 12:41 AM
கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல என்று பெர்னார்ட்ஷா முன்பே கூறிவிட்டார்.

aren
27-09-2011, 12:52 AM
இப்போது இருக்கும் விளையாட்டாளார்கள் கிரிக்கெட்டில் அதிக பணம் பார்க்கிறார்கள். ஆகையால் இந்திய வீரர்கள் இந்த சூதாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை, குறிப்பாக தோனி, ஹர்பஜன் ஆகியோர். அவர்களே தலைவராக இருக்கும் பட்சத்தில் இதற்கு சாத்தியமேயில்லை.

நேற்றைய ஆட்டத்திலும் மும்பை இண்டியன்ஸ் ரொம்பவும் சொதப்பலாகவே ஆடினார்கள்.

ஓவியன்
27-09-2011, 05:07 AM
ஹா, ஹா..!!

அந்த (அ!!!)சாதாரண பெளலர் நேற்றைய போட்டியிலும் ஒரு பவுண்ரி, ஒரு சிக்சர் என விளாசி அருமையாக ஆடியிருந்தார்..!! :)

நேற்றைய போட்டியில் மும்பை அணிசார்பாக இரண்டாவதாக அதிக ஓட்டங்களைக் குவித்தவரும் அவர்தான்..!! :)

jaffer
03-10-2011, 11:22 AM
கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டம்

கிரிக்கெட் எனும் கேவலமான விளையாட்டை இனி நான் பார்க்க மாட்டேன். யார் பார்த்தாலும்...சரி.....எனது முடிவு இதுதான்.

இது விளையாட்டே அல்ல.....

இப்படி ஒரு முடிவை நா எடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது தோழரே

பால்ராஜ்
11-03-2012, 12:50 PM
இப்போதெல்லாம் எந்தத் துறையில் தான் சூதாட்டமும் ஊழலும் இல்லை???

aren
12-03-2012, 04:11 AM
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய உலகக்கோப்பை அரையிறுதியில் சூதாட்டம் நடந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று சொல்கிறதே, உண்மையா?

மிஸ்பா உல் அக், மிகவும் மெதுவாக ஆடினார். அதுவே பாகிஸ்தான் தோற்றது என்று மக்களுக்குத் தெரியும், அதுவும் சூதாட்டத்தின் விளைவாகவா?

arun
16-03-2012, 04:02 PM
கிரிக்கெட்டில் வெற்றி சிலரால் நிர்ணயிக்கப்படுகிறது சீரியசாக மாட்ச் பாத்து பல வருடங்கள் ஆகிறது

சிவா.ஜி
16-03-2012, 04:24 PM
இனிமேலும் பாக்க முடியாதுங்க அருண்....எல்லாமே வியாபாரம்.....!!!

jayanth
17-03-2012, 03:12 AM
கிரிக்கெட்டில் வெற்றி சிலரால் நிர்ணயிக்கப்படுகிறது சீரியசாக மாட்ச் பாத்து பல வருடங்கள் ஆகிறது


இனிமேலும் பாக்க முடியாதுங்க அருண்....எல்லாமே வியாபாரம்.....!!!

நேற்றைய ஆட்டமுமா...???

arun
17-10-2012, 03:14 PM
கிரிக்கெட் சூதாட்டம் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது ! ஆம் அம்பயர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது ..

கொஞ்ச நஞ்சம் பாக்குறதையும் விட்டுடணும் போல !

A Thainis
23-10-2012, 06:16 PM
கிரிக்கெட் என்ற திமிங்கலம் மற்ற விளையாட்டுகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, இப்போது ஊழல் பெருச்சாளிகளின் கூடுராமாக மாறிஉள்ளது. இன்று விளையாட்டை கேவலபடுத்தும் நிலைக்கு மாற்றி உள்ளது இந்த இழி நிலை மாறுவது எப்போது.

அகத்தியன்
24-10-2012, 04:22 AM
உண்மைதான். இப்போதெல்லாம் அணிகள் வெல்லும் போதோ தோற்கும் போதோ, அவர்களின் விளையாட்டுத் திறன் பற்றிய கேள்விகள் போய். ஒரு வேளை இது பிக்ஸிங் ஆக இருக்குமோ என எண்ண வைக்கின்றது. இன்னும் இது நமக்கு பிடித்த அணி யின் வெற்றி மீதான அவ நம்பிக்கையோடு அந்த மகிழ்ச்சியினையும் இல்லாமல் செய்து விடுகின்றது. :)