PDA

View Full Version : மூக்கில் பிரச்சனை..ஆலோசனை தேவை.



பிரேம்
24-09-2011, 08:17 AM
நான் கணினி துறையில் பணிபுரிகிறேன்..(குளிர்சாதன அறையில்)..எனக்கு கடந்த ஒரு வருட காலமாக என் மூக்கினுள் சளி கட்டி கொள்கிறது...சளியை உள்ளிழுக்கும்போது தொண்டைக்கு வந்ததும் எழுந்துபோய் துப்பி விடுவேன். இது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது..சளி சிந்தும்போது வெளியே வராது..உள்ளிழுத்தால் மட்டும் வரும். மூச்சு விடுவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. மருத்துவரை பார்த்தபோது இது அலர்ஜி என கூறி மருந்துகள் கொடுத்தார்..ஆனால் எந்த பயனும் இல்லை..இது அலர்ஜி தானாக தான் சரியாகும் என்றார். மேலும் எனக்கு அடிக்கடி சளி பிடித்து கொள்ளும். சீக்கிரம் சரியாகாது. ஏனென்று தெரியவில்லை.மற்றபடி உடலில் ஏதும் காயம் ஏற்பட்டால் உடனே சரியாகிவிடும்.

யாரவது தங்களுக்கு தெரிந்த தீர்வை சொல்லுங்கள்..

பூமகள்
24-09-2011, 01:31 PM
குளிர் சாதன அறையில் நீண்ட நேரம் இருப்பது பலருக்கு இவ்வகை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.. தூசிக்கான ஒவ்வாமை உங்களுக்கு இருக்கிறதா என்று சொல்லவில்லை.. அப்படி இருப்பின் ஆங்கில மருத்துவத்த நாடுவது வீண்.. ஏனெனில் அதில் தற்காலிக தீர்வு மட்டுமே தருவார்கள்.. அடிக்கடி சளி பிடித்துக் கொள்வதும் ஒவ்வாமையால் தான்.. அதற்கு ஆங்கில மருத்துவர்கள் ஆன்டி பயாட்டிக் மாத்திரை அளிப்பர்.. அது உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனை மேலும் மலுங்கடிக்கும் வாய்ப்பு உள்ளது..

முடிந்த வரை நல்ல இயற்கை / சித்த மருத்துவரையோ அல்லது ஹோமியோபதி மருத்துவரையோ நாடலாம்..

அதில் பூரண/ நீண்ட கால குணம் நிச்சயம். :)

நாஞ்சில் த.க.ஜெய்
24-09-2011, 01:50 PM
இது தலையில் நீர் சேர்வதால் ஏற்படும் பிரச்சனை ..இதற்கு சிறிது காலம் குளிசாதன வசதியை தவிர்ப்பது இன்றேல் யோகா செய்வது நிச்சயம்மிகுந்த பலன்தரும் .முயற்சித்துபாருங்கள் ....

seguwera
24-09-2011, 02:28 PM
பிரேம் நீங்கள் நாடி சுத்தி செய்து பாருங்கள்.

இது சளி மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.

அதாவது ஒரு விரலால் மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக்கொண்டு
அடுத்த துவாரத்தின் வழியாக மூச்சை உள் இழுத்து சில நொடிகள் அடக்கி வைத்து பின்பு
அடைத்து வைத்த மூக்கின் துவாரம் வழியாக வெளி விடவேண்டும்
வெளி விடும்போது மூச்சு உள் இழுத்த துவாரத்தை விரலை மாற்றி அடைத்துக் கொள்ள வேண்டும்

இதுபோல் தினமும் பாத்து தடவை செய்து பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.

இது பற்றி பாலகுமாரன் ஒரு நாவலில் சொல்லி இருக்கிறார். நாவலின் பெயர் மறந்து விட்டது.

அன்புரசிகன்
26-09-2011, 01:22 AM
மூக்கிருக்கும் வரைக்கும் சளி இருக்கும். இது பொதுவானது...
பொதுவாக கணிசமான வெப்பநிலைமாற்றத்தை உங்கள் உடல் நிலை கொண்டால் இவ்வாறான பிரச்சனை வரும். இது ஒன்றும் ஒவ்வாமை அல்ல. சிலவேளை சளி சிந்தும் போது இரத்தம் கூட வரும். நண்பர் ஒருவர் புற்றுநோய் என்று நினைத்து வைத்தியரிடம் சென்று அவரிடம் வாங்கிக்கட்டிய அனுபவம் உண்டு. (அமீரகத்தில் இவை பொதுவானது)

நீண்ட நேரம் குளிரூட்டிய அறை (Cooling AC room) அல்லது வெப்பமூட்டிய அறை (Heating AC room) நீண்ட நேரம் மின்விசிறிக்கு அருகில் இருந்தால் இவ்வாறு வரும். இதை நம்மூரில் சூட்டுப்பிரச்சனை என்பார்கள். (ஊரில் குளிர்களி - ice cream சாப்பிட்டால் இவ்வாறு வருவதுண்டு)

Printer or Photo copier போன்றவற்றிற்கு அருகில் இருந்தால் அதிலிருந்து வெளியேறும் சிறு கறுப்பு துணிக்கைகள் உங்கள் சுவாசத்தில் வந்துவிடும். அவை உள்செல்வதை தவிர்க்க மூக்கில் சளி உண்டாகும். வெப்பநிலை மாற்றத்தால் அவை திண்மமாகிவிடும். நீங்கள் சிந்தும் முன் உங்கள் மூக்கு துவாரப்பகுதியை நீர் கொண்டு சற்று ஈரமாக்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும். இல்லாவிட்டால் மூக்கின் தோல் பகுதியை அது நீக்குவதால் இரத்தம் வெளியேறும்.

இதற்கு வைத்தியம் எல்லாம் தேவையில்லை. குறைந்தது ஒன்றுவிட்டு ஒருநாளுக்கு முழுகுங்கள். தயிர் இளநீர் முருங்கையிலை போன்ற ஏதாவது குளிரான சாப்பாடு சாப்பிடுங்கள். (cucumber, watermelon போன்றனவும் சிறந்தது) கோழிஇறச்சி நண்டு குளிர்பானங்கள் தவிர்ப்பது நல்லது.

இது தான் நானறிந்த வைத்தியம்.

vseenu
26-09-2011, 08:27 AM
சிறந்த வைத்யம் போல் தெரிகிறது.அனைவரும் பலன் பெறலாம்.பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

sarcharan
27-09-2011, 11:52 AM
பிரேம்,
எனக்கும் இந்த தொல்லை இருந்தது. இது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இல்லாவிட்டால்
இது சைனசில் கொண்டு போய் விடும்.
உங்களுக்கு அடிக்கடி தும்மலும் வருகிறதா?

நீங்கள் செய்ய வேண்டியது:

காதில் மென்மையான பஞ்சு வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதும் அல்ல. [எப்பொழுதும் வைத்திருந்தால் இகுலிப்ரியம் கிடைக்காது].

சில ஹால்ஸ் மாத்திரைகளை உபயோகியுங்கள். அதிகமாக உபயோகிக்க வேண்டாம். உடலில் கூடுதல் மென்தோல் இருப்பது நல்லதல்ல.

கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் அடிக்கடி வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுங்கள்.

தலையில் உள்ள பொடுகு மற்றும் உதிர்ந்த முடிகள், குப்பை, மற்றும் சிகரெட் மற்றும் வாகன அவுட்லெட் புகை முதலியன மூக்கினுள் நுழையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

சுத்தமான ஆடைகள் மற்றும் சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

குளிரான உணவுகள் (ஐஸ், குளிர்ந்த நீர், பெப்சி, ஃபண்டா) கூடுமான வரை தவிருங்கள்

உணவில் பச்சை காய்கறிகள், வெள்ளரிக்காய், சோயா சேர்த்து கொள்ளுங்கள்

தலைக்கு குளித்தவுடன் நன்றாக துவட்டி விடுங்கள். தலையில் நீர் சேர கூடாது

கிரீன் டீ, எலுமிச்சை டீ, இஞ்சி டீ முதலியனவற்றை அருந்துங்கள். காபி அருந்துவதை தவிருங்கள்

உணவில் இஞ்சி, குறுமிளகு (Pepper) சேர்த்து கொள்ளுங்கள்.

otrivin nasal spray உபயோகியுங்கள்

அடிக்கடி உப்பு சேர்த்த வெந்நீரில் தொண்டையை கொப்புளியுங்கள். (Gargling with hot water and salt)

எனக்கு இப்படி இருந்தது. கவனிக்காமல் விட்டேன். பின்னர் மூக்கில் ஆபரேஷன் செய்தேன். இப்பொழுது சரியானது

பிரேம்
28-09-2011, 03:06 AM
மிக்க..நன்றி நன்பர்களே.நீங்கள் சொன்ன யாவற்றையும் நான் செய்ய முயல்கிறேன்..
இது எதனால் வருகிறது...மேலும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை தர முடியுமா..