PDA

View Full Version : நான் ரசித்த சில நகைச்சுவை கவிதைகள்மதுரை மைந்தன்
22-09-2011, 10:57 AM
இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

மதுரை மைந்தன்
22-09-2011, 10:57 AM
Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்…

மதுரை மைந்தன்
22-09-2011, 10:58 AM
என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை…

மதுரை மைந்தன்
22-09-2011, 10:59 AM
காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

காய்கறி வாங்க அவன் நெனச்சதில்லே
கனா கூட இதுவரைக்கும் கண்டதில்லே

ஆயாசம் அடிக்கடி வருதுன்னு
நோயாளியாப் போனான் வைத்தியரத் தேடி .

சூப்பு வச்சு குடிச்சா சரியாப் போகுமின்னு
சொல்லிப் போட்டாரய்யா வைத்தியரய்யா.

சூப்புக்குக் காய் வாங்கப் போன மச்சான்
துவண்டு போனான் வெலையக் கேட்டு.

வெங்காயம் வெல மட்டும் நூறு ரூவாயாம்
வெல சொல்ல பீசு மட்டும் பத்து ரூவாயாம்

சொத்தையில்லாத கத்தரிக்கா வேணுமின்னா
சொத்தையெல்லாம் வித்துப்புட்டுப் போகணுமாம்.

கம்மலை அடகு வச்சு மகராசிங்க
காரட்டு வாங்கிக்கிட்டுப் போனாங்க

மூக்குத்திய வித்துட்டு வந்த புள்ளத்தாச்சிக்கு
முள்ளங்கிப் பத்த மட்டுந்தான் அகப்பட்டுச்சு.

பச்சைப் பட்டாணி பாக்கட்டுக்குக் காவலா
பக்கத்துலயே நிக்கிறான் போலீசுக்காரன்

எடை போட்டுக் குடுத்த பழக்கமெல்லாம்
எப்பவோ மலையேறிப் போயிருச்சாம்

ஒத்த தக்காளியோட வெல மட்டும்
ஒம்போது ரூவாய்னு சொன்னாக.

பூண்டு வெல கேட்டுப் போனவுக
பூதம் அடிச்சாப்ல வந்தாக

எல்லா வெலயையும் கேட்டுப்புட்டு
என்னமோ பண்ணுதுன்னு சொன்ன மச்சான்

மண்டை கிறுகிறுத்து மயங்கிப் போயி
மந்தையிலே விழுந்தான் குப்புறடிச்சு.

தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ட ஒரு பெரிசு
தன்மையா சொல்லிச்சு அவன் காதுக்குள்ள

"பலகீனம் மட்டும்தாம்பா ஒன்னோட வியாதி
பயப்படாதே , காய் கறி துன்னு, சரியாப் போகும்."

திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தான் மச்சான்
தெளியறதுக்கு யாராச்சும் வழி சொல்லுங்கோ .

மதுரை மைந்தன்
22-09-2011, 11:00 AM
மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் - சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் 'வைத்திருப்பது'
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:01 AM
இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால் பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ..
கல்லை தூக்கி எறிந்தோ..
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு..,

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..!

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை;
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:02 AM
ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:03 AM
திரும்பி...
திரும்பி
பார்க்க வைத்தது...
அவளின்
திரும்பாத முகம்...
ஆனால்...
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்...
ஏனெனில்
சப்பை பிகர் மா.

மதுரை மைந்தன்
22-09-2011, 11:04 AM
நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்....
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்...
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்... நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்...
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு

மதுரை மைந்தன்
22-09-2011, 11:04 AM
ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்...
உனக்கு படபடப்பா இருக்கும்..
அது உன்ன பார்த்து சிரிக்கும்..
உனக்கு கை கால் லேசா நடுங்கும்...
அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்...
அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி
''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது
உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டா

மதுரை மைந்தன்
22-09-2011, 11:05 AM
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............

மதுரை மைந்தன்
22-09-2011, 11:06 AM
நீ என்னை ஒரு சீட்டு கற்றாக மாற்றினாய்

என் ஹார்ட்டை தா என்று கேட்டாய்

டைமைன்ட் கொடுத்து உன்னை மணந்தேன்

நாம் சண்டையிட்டபோது ஒரு க்ள்ப் கொண்டு அடித்தாய்

இப்போது ஒரு ஸ்பேடை எடுத்து எனக்கு குழி தோண்டுகிறாய்

மதுரை மைந்தன்
22-09-2011, 11:07 AM
வயிறு காலியாக
இருக்கும்போது
சத்தம் போடுகிறது

அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:08 AM
கள்ளக்காதலி வீட்டிற்கு

கள்ளக்காதலன்

தேடி அலைந்து

வாங்கிச் சென்றான்

ஒரிஜினல் திருநெல்வேலி

அல்வாவை.!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:09 AM
பச்சைவிளக்கு

எரிவதை

கோபத்துடன் பார்த்தான்

சிக்னலில் நிற்கும் வாகனங்களில்

பிச்சை எடுக்கும்

பிச்சைக்காரன்..!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:10 AM
அரிதாகி விட்டன

சிட்டுக்குருவிகள்…

குறைந்தபாடில்லை

சந்தையில்…

மலிவு விலையில்

அமோக விற்பனை…

சிட்டுக் குருவி லேகியம்..!

மதுரை மைந்தன்
22-09-2011, 11:10 AM
அன்பே...
உன் அளவுகளை வர்ணிக்க
வார்த்தைகளை தட்டு தடுமாறி
தேடினேன்-தமிழில்
முட்டிவிட்டு போகின்றன
அகப்படாமல் முரட்டு
தனமாய் என்னிடம்
வேறு
என்ன செய்ய நான்
ஆங்கிலத்தில் தேடுகிறேன்
அதுவரை காத்திரு அன்பே.... .

மதுரை மைந்தன்
22-09-2011, 11:12 AM
வேலையின்றி சும்மா இருந்தேன்
தொப்பை போட்டது
வேலை கிடைத்தது
போலீஸாக

மதுரை மைந்தன்
22-09-2011, 11:14 AM
தியேட்டருக்கு வெளியே மழை
உள்ளே திரையிலும் மழை
ஓடுகிறது பழைய படம்

பிரேம்
22-09-2011, 12:00 PM
ஹி..ஹி..அருமை..அருமை..
எல்லாமே நச்-ன்னு இருந்திச்சி தல..
அதிலும் அந்த தட்டு காமெடி...அதுகப்ரம் சந்தனக்கட்டை கவிதை எல்லாமே அருமை..

sarcharan
22-09-2011, 01:27 PM
இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

(மனசுக்குள்ள)சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன்... :redface::confused:Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்…

ஆனா ஜெர்ரி மவுசு டோம் காட்டோட கண்ணுல வெரல விட்டு ஆட்டுமே. டோம் காட்டுக்கு ஜெர்ரி மவுசு ஒரு சிம்ம சொப்பனம் :aetsch013:


என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை…

சிவகாமி ஜோசியன் சொன்னது லைட்ட வொர்க் அவுட் ஆகா ஆரம்பிச்சுடுச்சே :confused:


காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

காய்கறி வாங்க அவன் நெனச்சதில்லே
கனா கூட இதுவரைக்கும் கண்டதில்லே

ஆயாசம் அடிக்கடி வருதுன்னு
நோயாளியாப் போனான் வைத்தியரத் தேடி .

சூப்பு வச்சு குடிச்சா சரியாப் போகுமின்னு
சொல்லிப் போட்டாரய்யா வைத்தியரய்யா.

சூப்புக்குக் காய் வாங்கப் போன மச்சான்
துவண்டு போனான் வெலையக் கேட்டு.

வெங்காயம் வெல மட்டும் நூறு ரூவாயாம்
வெல சொல்ல பீசு மட்டும் பத்து ரூவாயாம்

சொத்தையில்லாத கத்தரிக்கா வேணுமின்னா
சொத்தையெல்லாம் வித்துப்புட்டுப் போகணுமாம்.

கம்மலை அடகு வச்சு மகராசிங்க
காரட்டு வாங்கிக்கிட்டுப் போனாங்க

மூக்குத்திய வித்துட்டு வந்த புள்ளத்தாச்சிக்கு
முள்ளங்கிப் பத்த மட்டுந்தான் அகப்பட்டுச்சு.

பச்சைப் பட்டாணி பாக்கட்டுக்குக் காவலா
பக்கத்துலயே நிக்கிறான் போலீசுக்காரன்

எடை போட்டுக் குடுத்த பழக்கமெல்லாம்
எப்பவோ மலையேறிப் போயிருச்சாம்

ஒத்த தக்காளியோட வெல மட்டும்
ஒம்போது ரூவாய்னு சொன்னாக.

பூண்டு வெல கேட்டுப் போனவுக
பூதம் அடிச்சாப்ல வந்தாக

எல்லா வெலயையும் கேட்டுப்புட்டு
என்னமோ பண்ணுதுன்னு சொன்ன மச்சான்

மண்டை கிறுகிறுத்து மயங்கிப் போயி
மந்தையிலே விழுந்தான் குப்புறடிச்சு.

தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ட ஒரு பெரிசு
தன்மையா சொல்லிச்சு அவன் காதுக்குள்ள

"பலகீனம் மட்டும்தாம்பா ஒன்னோட வியாதி
பயப்படாதே , காய் கறி துன்னு, சரியாப் போகும்."

திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தான் மச்சான்
தெளியறதுக்கு யாராச்சும் வழி சொல்லுங்கோ .

இந்த மச்சான் நிலைமை ரொம்ப பாவம். :icon_ush:

seguwera
22-09-2011, 01:48 PM
பச்சைவிளக்கு

எரிவதை

கோபத்துடன் பார்த்தான்

சிக்னலில் நிற்கும் வாகனங்களில்

பிச்சை எடுக்கும்

பிச்சைக்காரன்..!


அருமை மதுரை மைந்தன்

sarcharan
23-09-2011, 06:44 AM
தியேட்டருக்கு வெளியே மழை
உள்ளே திரையிலும் மழை
ஓடுகிறது பழைய படம்


சின்னத்திரை விளம்பரதாரர் நிகழ்ச்சிகளிலும்.

lolluvathiyar
24-09-2011, 11:37 AM
இத்தனை கவிதைகளை தனி தனி பதிப்பாக போடாமல் தலைப்பு போட்டு ஒரே பதிப்பில் போட்டிருக்கலாமே. அனைத்து கவிதைகளுமே ரசிக்கும் படியு சிரிக்கும் படி இரு ந்தது. ஆனாலும் இத்தனை கவிதைக்கு வராத பின்னூட்டம் நமிதா பேர போட்டதும் அந்த கவிதைக்கு அதிகமா வந்திருக்கு அதான் நமிதாவின் புகழோ.

அருள்
25-09-2011, 11:23 PM
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............

அருமை .........

வெங்கி
27-09-2011, 08:52 AM
ரசித்து படித்தேன்... மதுரை மைந்தன் அவர்களே...

vseenu
05-10-2011, 09:01 AM
இப்புதுக்கவிதைகளை ஆக்கியோனுக்கு அன்பான வாழ்த்துக்கள்.நன்றிகள் பல.

dhilipramki
05-10-2011, 02:52 PM
எனக்கு அந்த பிரியாணி கவிதை தான் பிடித்தது...அருமை அருமை
கவித கவித!!:lachen001: