PDA

View Full Version : வேண்டிப்ப்பெறுவோம் விடுதலை ..........



Ravee
20-09-2011, 09:13 PM
http://blog.anthonycoletraining.com/Portals/10395/images/hands%20slipping%20away-resized-600.jpg


வேண்டிப்பெறுவோம் விடுதலை ..........


இயற்கை சிறையில்

செயற்கையாய் ஒரு ஒப்பந்தம்

கையோடு கை பிணைத்திருக்க

இதை காதல் என்று சொன்னார்கள்

சிகரம் தொட நான் அழைக்க

சிதைந்து போக நீ அழைக்க

பாதாளம் கடந்து வந்த எனக்கு

படுகுழியில் விழ ஆசை இல்லை

விரும்பினால் விலகிக்கொள்

உன் விருப்பத்துக்கு நான் தடை இல்லை

மனதை திறக்கவும்

வாழ்வை மூடவும்

இருக்கும் கதவுக்கு

ஒரே தாழ்ப்பாள்

விளக்கங்கள் வேண்டா மனதே

விரும்பினால் விலக்கிக் கொள்

நீ விலகிச் சென்றாலும்

விலக்கிச் சென்றாலும்

வேதனைகள்தான் தொடரும்

விருப்பங்கள் நிறைவேறாது ....

seguwera
20-09-2011, 09:38 PM
நீ விலகிச் சென்றாலும்

விலக்கிச் சென்றாலும்

வேதனைகள்தான் தொடரும்


நல்லா யோசிச்சிருக்கீங்க ரவி வாழ்த்துக்கள்

சிவா.ஜி
21-09-2011, 12:35 PM
உண்மைதானே....சிகரம் தொட விரும்பியவருக்கு படுகுழி பிடிக்குமா....இருந்தாலும்...பிரிவு பிரிவுதானே என காதல் மனம் காயப்பட்டாலும்...சுயம் நிச்சயம் மகிழும்.

நல்லாருக்கு ரவீ. வாழ்த்துக்கள்.