PDA

View Full Version : அமெரிக்கா



ஆளுங்க
18-09-2011, 05:32 AM
விமானம் தரையிரங்கியது...
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..

http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s320/113282931.jpg (http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s1600/113282931.jpg)


ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..



நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************


[/URL] வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்

[URL="http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s1600/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg"]http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s320/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg (http://www.blogger.com/blogger.g?blogID=6629156072116429095)


"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்


*************************************




"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”

http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg (http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg)




*************************************




"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி.ஐ.பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”

http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg (http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg)

*************************************

"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”

*************************************


மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!


வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.


"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”


"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!”


"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"


"என்ன சொல்ற மச்சி?”


"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”

http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg (http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg)




ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!




பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

aren
18-09-2011, 06:09 AM
நல்ல படிப்பினை. இருந்தாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே. அதற்காக எங்கே வேலை கிடைக்கிறதோ அங்கே சென்று வேலை செய்ய வேண்டியிருக்கிறதே.

ஒன்று தெரியுமா?

வெளிநாட்டில் போய் வேலை செய்யும் இந்தியர்கள் அனைவரின் மனதும் இந்தியாவிலேயே இருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்களைவிட வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்கள்.

வெளிநாடு சென்றாலும் அவர்களுடைய இந்திய தேசபக்தி எள்ளளவும் குறையவில்லை என்பதே உண்மை.

seguwera
18-09-2011, 02:03 PM
நண்பரே வெளிநாடு வாழ் இந்தியர் அனைவருக்கும் மூளையை இந்தியாவுக்கு செலவு செய்ய விருப்பம் தான்.யாரும் இந்தியாவில் செலவிடக்கூடாது வெளியில் தான் செலவிடனும் என்று கொள்கைகள் ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க தொழில் வளத்தை பொருளாதார வளத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்யும் அரசியல் அமைப்போ தலைவர்களோ இல்லை அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதில்லை.

நம்ம ஊருல முன்னெல்லாம் குண்டு சோடா என்பது மிக பிரபலமாக இருக்கும் அதையே தொழிலாக கொண்டு நிறைய குடும்பங்கள் வாழ்ந்தது . இப்ப அதை பார்க்க முடிவதில்லை காரணம் என்ன என்றால் பெப்சி கோக் போன்ற அந்நிய நாட்டு பாணங்களால் இதுபோல உள்ளூர் தொழில்கள் நழிந்து போனதற்கு பல உதாரணம் சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த அரசாங்கமானது வேலையும் கொடுக்காது, சிறு தொழில்கள் செய்யவும் முடியாது அப்புறம் என்ன செய்வார்கள் மக்கள். நம்மால் தயாரிக்கக்கூடிய பொருள்களுக்கெல்லாம் வெளிநாட்டவரை அனுமதித்தால் அப்புறம் எங்கே தொழில் துறை விளங்கும். இவர்கள் பெருமை பேசிக்கொள்ள நம்முடைய வரிப்பணத்தில் அனாவசியமாக இலவசங்களை அள்ளி விடுவார்கள் அதற்க்கெல்லாம் சேர்த்து எல்லா மக்களும் கடனை சுமக்க வேண்டும்.
வெளிநாடு போகும் ஒவ்வொரு இந்தியனும் தானாக போகவில்லை. மறைமுகமான மறுக்கமுடியாத உண்மை இந்த நாட்டு அரசியல்வாதிகளின் கையால் ஆகாத ஆட்சிமுறைகளினால்தான் துரத்தப்படுகிறார்கள்

சிவா.ஜி
18-09-2011, 02:11 PM
அந்த அமெரிக்காவுல வேலை செய்யுறவங்க...எப்பவுமே...இந்தியாவை நினைக்க மாட்டாங்க....அவங்க நினைப்புல...அவங்க அமெரிக்கா புடலைகாய்ங்க....

நாமதான் நம்ம நாட்ட காப்பாத்தனும்...அமெரிக்க சிட்டிஸன் ஆன எந்த பரதேசிங்களையும் நாம இந்தியனா நினைக்கவே கூடாது.

அருமையான கதை. வாழ்த்துக்கள்.

ஆளுங்க
18-09-2011, 02:37 PM
அந்த அமெரிக்காவுல வேலை செய்யுறவங்க...எப்பவுமே...இந்தியாவை நினைக்க மாட்டாங்க....அவங்க நினைப்புல...அவங்க அமெரிக்கா புடலைகாய்ங்க....

நாமதான் நம்ம நாட்ட காப்பாத்தனும்...அமெரிக்க சிட்டிஸன் ஆன எந்த பரதேசிங்களையும் நாம இந்தியனா நினைக்கவே கூடாது.

அருமையான கதை. வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே!!!

ஆளுங்க
18-09-2011, 02:42 PM
வெளிநாட்டில் போய் வேலை செய்யும் இந்தியர்கள் அனைவரின் மனதும் இந்தியாவிலேயே இருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்களைவிட வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்கள்.

வெளிநாடு சென்றாலும் அவர்களுடைய இந்திய தேசபக்தி எள்ளளவும் குறையவில்லை என்பதே உண்மை.


நண்பரே வெளிநாடு வாழ் இந்தியர் அனைவருக்கும் மூளையை இந்தியாவுக்கு செலவு செய்ய விருப்பம் தான்.யாரும் இந்தியாவில் செலவிடக்கூடாது வெளியில் தான் செலவிடனும் என்று கொள்கைகள் ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க தொழில் வளத்தை பொருளாதார வளத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்யும் அரசியல் அமைப்போ தலைவர்களோ இல்லை அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதில்லை.


வெளிநாடு போகும் ஒவ்வொரு இந்தியனும் தானாக போகவில்லை. மறைமுகமான மறுக்கமுடியாத உண்மை இந்த நாட்டு அரசியல்வாதிகளின் கையால் ஆகாத ஆட்சிமுறைகளினால்தான் துரத்தப்படுகிறார்கள்

நண்பர்களே, நான் வெளிநாடு செல்லும் அனைவரையும் குறை கூறவில்லை.. சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் அதிகம். அவர்களில் பலர் இந்திய மண்ணை மறப்பதில்லை..

இந்திய கல்வியில் , இந்திய அரசின் செலவிலேயே, பட்டம் பயின்று, இந்தியாவில் தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் உழைப்பை அடகு வைக்கும் சில ஜென்மங்கள் உண்டு.. அப்படி சென்றவர்கள் பலரும் தாய்நாடு திரும்பாமல், புகுந்த இடத்தில் குடியுரிமை பெற்று இந்தியாவை மறந்து விடுகிறனர்.. அப்படி, நாட்டை மறக்கும் சிலருக்குத் தான் இந்த சாட்டையடி!!

Nivas.T
18-09-2011, 04:15 PM
சாட்டையடி கதைதான்

மிக அருமை ஆளுங்க

ஆளுங்க
19-09-2011, 01:32 PM
நன்றி நிவாஸ்

tduraisamy
02-11-2011, 10:13 AM
நல்ல கதை

lolluvathiyar
08-11-2011, 11:48 AM
அங்கிருந்து இங்க வருபவர்கள் நம் நாட்டின் தரத்தை குறிப்பாக டிராபிக் போலீஸ் பத்தி சொன்னது எல்லாம் வெட்ககேடானதாக இருந்தாலும் உன்மைதானே.


இந்திய கல்வியில் , இந்திய அரசின் செலவிலேயே, பட்டம் பயின்று, இந்தியாவில் தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் உழைப்பை அடகு வைக்கும் சில ஜென்மங்கள் உண்டு
அது செலவு செஞ்ச திருட்டு பசங்க தப்புக்கு அதுவுக்கு அவுங்க காரனமாக மாட்டாங்க.

அன்புரசிகன்
08-11-2011, 11:11 PM
இந்திய கல்வியில் , இந்திய அரசின் செலவிலேயே, பட்டம் பயின்று, இந்தியாவில் தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் உழைப்பை அடகு வைக்கும் சில ஜென்மங்கள் உண்டு.. அப்படி சென்றவர்கள் பலரும் தாய்நாடு திரும்பாமல், புகுந்த இடத்தில் குடியுரிமை பெற்று இந்தியாவை மறந்து விடுகிறனர்.. அப்படி, நாட்டை மறக்கும் சிலருக்குத் தான் இந்த சாட்டையடி!!

சாட்டை அடி போன்றது. அதற்காக உருவாக்கிய கதாபாத்திரமாக (ரகுவரன்) தான் தோன்றுகிறது. யதார்த்தத்தை விஞ்சிய கதை. ஒருவேளை ஓரிரண்டு பேர் அப்படி விதிவிலக்காக இருப்பார்களோ தெரியவில்லை.

இந்தியாவில் படிச்சவங்களுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் ஏனுங்க அவுங்க வெளியில போகப்போறாங்க...?
----------------
சரி சொந்த தொழில் தொடங்கலாம் என்று சொல்பவர்களுக்கு... சுண்டங்காய் காப்பணம். சுமைகூலி முக்காப்பணம் என்ற கதை தான் அங்கு. அரசியல் வாதிகளுக்கும் இதர அரச ஊழியர்கள (???!!!) க்கும் லஞ்சம் கொடுத்தே இலாபம் போயிடும். இது இலங்கைக்கும் பொருந்தும்.
வீதி புனரமைப்புக்கு என ஒப்பந்தம் பெற்றது 10 கோடியில் 8 கோடி லஞ்சங்களுக்கு சென்று மீதியில் லாபம் பெற்றால் வீதியை வரைபடத்தில் மட்டும் தான் புனரமைப்பு செய்யலாம். (இதற்கு இலங்கையில் A9 வீதி புனரமைப்பு சிறந்த சான்று... எனக்கு இந்தியா லஞ்ச லெவல் பற்றி தெரியாது)
சரி லஞ்சம் ஏன் குடுக்குறீங்க என்றால் ... குடுக்காதவர் உயிருடன் இருக்க முடியாது. அல்லது தொழில் செய்ய முடியாது. உயிருடன் இல்லாதவர் தாய்நாட்டில் இருந்தால் என்ன வேற்று நாட்டில் இருந்தால் என்ன...

இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று கேட்டால் பிச்சை எடுக்காதவரை எல்லாம் பொழைப்பு தான்...
------------------
குடியுரிமை பெறுவது பற்றி....................
இந்தியா இலங்கை கடவுச்சீட்டுடன் எந்த நாட்டுக்கு போறத்துக்கும் விசா தேவை. அதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி...ஏன் இந்தியாவையே உதாரணத்துக்கு எடுக்கலாம்.
இலங்கை கடவுச்சீட்டுடன் விசா கேட்டால் அலுவலக கடிதம், சம்பள கொடுப்பனவு உத்தரவாதம், தங்குமிடம் இருக்கா தேவைப்பட்டால் காவல்துறை சான்றிதழ். இதையே அவுஸ்திரேலியா கடவுச்சீட்டுடன் அல்லது சிங்கை ஐரோப்பிய அமெரிக்க பகுதிகளினுடைய கடவுச்சீட்டுடன் என்றால் ஒரு விளக்கமும் இல்லை. வீசா விண்ணப்பக்காசுடன் சென்றால் அடுத்தநாள் விசா ரெடி...

இல்லாவிட்டால் அம்மா அப்பா பகவான் கோயிலுக்கு போறதுக்காக வீசா கேட்டாலும் உடனே தருவாங்க... இப்படியெல்லாம் அமெரிக்காவில் இருக்காது. :D

jey
06-02-2012, 04:32 PM
இந்தியாவில் படிச்சவங்களுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் ஏனுங்க அவுங்க வெளியில போகப்போறாங்க...?
----------------
சரி சொந்த தொழில் தொடங்கலாம் என்று சொல்பவர்களுக்கு... சுண்டங்காய் காப்பணம். சுமைகூலி முக்காப்பணம் என்ற கதை தான் அங்கு. அரசியல் வாதிகளுக்கும் இதர அரச ஊழியர்கள (???!!!) க்கும் லஞ்சம் கொடுத்தே இலாபம் போயிடும்.


யார் சொன்னது இந்தியாவில் சொந்த தொழில் தொடங் கஸ்டம் என்று இதற்கு பல வழிகள் உள்ளன ஆனால் அந்த வழிகள் நாம் அறியாமல் இருப்பதுதான் நமது பலவினம் லஞ்சம் வாங்குபவர்களுக்கு பலம்

அன்புரசிகன்
06-02-2012, 10:48 PM
யார் சொன்னது இந்தியாவில் சொந்த தொழில் தொடங் கஸ்டம் என்று இதற்கு பல வழிகள் உள்ளன

அதில் சிலவற்றை சொல்லுங்கள்...

தொழில் தொடங்குவது கஷ்டம் என்கவில்லை. அதை கொண்டு நடத்துவது தான் கஷ்டம் என்கிறேன்... பல நாடுகளில் ஒரு இரவில் வியாபாரத்தை பதிவுசெய்திடலாம். நாறிந்தவரை அது இலங்கையில் சாத்தியமில்லை. இந்தியாவில் சாத்தியம் என்றால் .......... (No more comments)

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 01:53 PM
அருமையான கதை...மிகவும் நல்ல படிப்பினை ...நன்றி :)