PDA

View Full Version : ஒரு துளி விஷம்...



வல்லம் தமிழ்
13-09-2011, 02:48 PM
ஒரு துளி மை

ஒரு துளி மது

ஒரு துளி விஷம்

ஒரு துளி விந்து

ஒரு துளி வியர்வை

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி உதிரம்

ஒரு துளி மழை

ஒரு துளியல்ல நான் என

உணர்த்திட

எத்துளியாவது இணைத்திடும் என்னை

உன்னுடன்...உலகுடன்...

அக்னி
13-09-2011, 04:00 PM
ஒரு துளியின் ஈரம்
உலர்ந்திடலாம்...

இத்துளிகள் அனைத்தும்
சேர்ந்தாலும் கூடக் காய்ந்திடலாம்...

ஆகையால்,
தொட்டுணர முடியாத
காதல் சொல்,
உணர்வுணர்ந்து கொள்ளும்...

அமரன்
13-09-2011, 08:16 PM
ஒரு கல அமீபா உயிரின் தொடக்கம்..
ஒரு துளி உயிரின் நீட்சி..
ஒரு இருதயம் இயக்கத்தின் ஆதாரம்..
ஒரு எழுத்து மொழியின் பிறப்புறுப்பு.

இப்படி,
எத்தனையோ ஒருக்கள்..
அட!
கவிதையில் கதைபேசும் ஒருமைப்பாட்டிலும்
முதலுரு ஒருவே..

ஒரு துளி நானேன உணர்த்திட
நீ
சொன்னதில் ஒற்றைத்துளியேனும்
அணைத்திடும் எண்ணை!

வல்லம் தமிழ்
14-09-2011, 03:33 PM
ஒரு துளி நன்றியில் இணைவோம் நண்பர்களே இப்போது...

சிவா.ஜி
14-09-2011, 04:48 PM
ஒரு துளி பல வெள்ளம்....இங்கு வல்லம் தமிழின் ஒரு துளி வெல்லம் தமிழ்.

வாழ்த்துக்கள் நண்பா.

கருணை
14-09-2011, 10:09 PM
ஒரு துளி ஏதும் சாதிக்குமா :sprachlos020: அதே பல துளிகளாய் இருந்தால் நன்று... :)

பிரேம்
21-09-2011, 12:22 PM
கவிதை அருமை...
(ஒரு துளி பீர் சேர்த்து இருந்தீங்கன்னா கவிதை இன்னும் கிக்கா இருந்திருக்கும்ல..)

sarcharan
30-09-2011, 01:47 PM
அதிகமில்லை ஜென்டில்மன்
ஒரு துளி
ஒரு துளி ரின்

sarcharan
30-09-2011, 01:48 PM
பல துளி பெரும் வெள்ளம்...

உண்மை தான் சில கவிதை துளிகள் சேர்ந்து வெள்ளபெருக்கு உண்டாக்கிவிட்டதே

Nivas.T
03-10-2011, 09:33 AM
ஒருதுளியில் உலகம்

கவிதையும் கருத்தும் அருமை

பாராட்டுகள் வல்லம் தமிழ்

jaffer
03-10-2011, 10:21 AM
வாழ்த்துக்கள் தோழரே - ஒரு துளியில் என்னை
உன்னுடன்.........

பென்ஸ்
03-10-2011, 03:46 PM
அனுவை புள்ளியாய் வரைந்து...
பூமியை புள்ளியாய் வரைந்து...
அண்டங்களையும் புள்ளியாக்கி...
எல்லாம் அந்த சிறு துளியான புள்ளிகுள்....

அக்னி .. அமரன்... உங்கள் பின்னூட்டம் "இளசை"யும் பொறாமை பட வைக்கும்...

ஓவியா
04-10-2011, 12:25 AM
பென்சின் பெயரை முகப்பில் காண, உள்ளே வந்தேன்... சிக்கியது இந்த பக்கம்தான் உடனே எலியை உருட்டி பென்சின் பதிவை படித்தேன், பென்சின் வரிகள் அக்கினியையும் அமரனையும் காட்ட அடுத்த பயணம் அக்கினியின் பதிவு பின் அமரனின் பதிவு... பின் மற்ற பின்னூட்டங்கள், முடிவில்தான் கவிதையை வாசித்தேன் ;-) (பென்சோட எஃபெக்ட பாருங்கப்பா, யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.. ;) போல)


கவிதை அருமையாக இருக்கின்றது... அழமான சிந்தனை.

அக்னியின் `காதல்` சூப்பர்.

ப்ரேம் சொன்னது போல அந்த `ஒரு துளி` மிக்ஸிங்க சீ சீ மிஸ்ஸிங், ;-)

Viduthalai
12-10-2011, 05:09 PM
துளித் துளியாக துளிர்த்திடுது
இணைந்திடும் நம்பிக்கை.

vseenu
13-10-2011, 05:57 AM
ஒரு துளி விஷமானாலும் அதன் சக்தி கூடுதல் தான்.கவிதைக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 09:38 AM
ஒரு துளி நீர் தானே ஒன்றாகச் சேர்ந்து இன்று உலகத்தின் 71 விழுக்காட்டை விழுங்கி இருக்கிறது. கடல்கோள்களும் (சுனாமிகள்), எரிமலைகளும் எவ்வளவோ நிலங்களை உட்கொண்டு விட்டது. நமது குமரிக்காண்டமும், கோண்டுவானாவும் அழிந்ததும் இவ்வாறுதான். ஒரு துளியில் ஒரு குறுங்கவிதையை ஆரம்பித்துள்ளீர்கள்...!
வாழ்க:)