PDA

View Full Version : எப்போது நான் இல்லாமலிருந்தேன்சிவா.ஜி
12-09-2011, 04:05 PM
நான் முழுதாய் மறைந்த நாள் அமாவாசையாம்....
அங்குலங்களாய்க் கூடி
அங்கம் வளர்க்கும் நாட்கள் வளர்பிறையாம்...
முழுதாய் என்னைக் காட்டி...
மறுநாள் தொடர்ந்து மறையத்தொடங்கும் நாள்
தேய்பிறையாம்....!

நானில்லா நாள்...அசைவமில்லா நாள்...
அமாவாசையில் அதை உண்ணக்கூடாதாம்....
நான் தேயும் நாள்...தேய்பிறையாம்
நல் காரியங்கள் நடைபெறக்கூடாதாம்...

அடக்கடவுளே.....நான் என்றுதான் இல்லாமலிருந்தேன்?
என்றும் பூமி பார்க்கும் முழு நிலவுதானே நான்
நான் பூமிபார்க்கா தினமுண்டோ...
என்னைப் பார்க்காத மக்கள்
என்னையே இல்லையென்று தீர்மானித்தால்
என் தவறு இதிலெங்கே....

தலைமறைவாகிடவும்,
முகம் காட்ட முடியாதவளாய்
முக்காடு போட்டுக்கொள்ளவும்,
தேய்ந்து உருமறையவும்
நான் அலைக்கற்றை ஊழல் செய்த அரசியல்வாதியல்லவே
பிறகு என்னைக் காரணித்து
எதற்கிந்த அமாவாசை....
ஏனிந்த தேய்பிறை......

எந்நாளும் நான் இந்நன்னிலம் பார்ப்பதைப்போல
எந்நாளும் உன்நாளே என அறிந்திடு
உன்னை நீ நம்பினால்
இந்நாள் மட்டுமல்ல
எந்நாளும் உன்நாளே........
எனக்கில்லை தேய்பிறையும், வளர்பிறையும்
உனக்குமில்லை...நல்ல நாளும் கெட்ட நாளும்....!!!

அக்னி
12-09-2011, 06:10 PM
அட...
சூரியனைப் பூமி சுற்ற
பூமியை நிலவு சுற்ற
சூரியனும் நினைக்கலாம் இதுபோல...

நாம் சுற்றிக் காக்காய் பிடிப்பதும்,
நம்மைச் சுற்றினால் பந்தா காட்டுவதும்,
சகஜம் தானே...

என்ன நாஞ் சொல்றது சரிதானே சிவா.ஜி...
:)

சிவா.ஜி
12-09-2011, 06:39 PM
வாங்க வாங்க....அக்னியப் பாத்ததுல அம்புட்டு சந்தோஷம். ஆமா....சூரியனும் சொல்லலாமில்ல...நான் எப்பய்யா மறைஞ்சேன்னு......சரிதான்.

ரொம்ப நன்றி அக்னி. நலம்தானே.

அக்னி
12-09-2011, 06:50 PM
அட...
சூரியனைப் பூமி சுற்ற
பூமியை நிலவு சுற்ற

பூமி ஏன் நினைக்கவில்லை இதுபோல...

என்றுதான் எழுத நினத்தேன்.

நீங்க சொன்னதுக்கப்புறம்தான், சூரியன் அப்படி ஏன் நினைக்கவில்லை என்பது என் மண்டையில் கொக்கியானது...

நலம்தான் சிவா.ஜி... இப்போ நீங்க எங்கே..?

கீதம்
13-09-2011, 03:45 AM
நிலவின் பார்வையிலிருந்து ஒரு தர்க்கம். சரிதானே, நிலவு சொல்வது. அதை சிவாஜி அண்ணாவின் வார்த்தைகளால் கேட்பது அழகு. அதிலும் இடையில் அரசியல் நையாண்டி, அண்ணாவின் 'டச்'.

பகுத்தறியும் சிந்தனைக்கு ஏது வளர்பிறையும் தேய்பிறையும்! எந்நாளும் முழுநிலவாய் வலம் வருமே மனவானில். பாராட்டுக்கள் அண்ணா.

அமாவாசையன்று அசைவம் செய்யமாட்டேன்று அண்ணி சொன்னதன் விளைவாய் உதயமானதோ இக்கவிதை?:)

ஜானகி
13-09-2011, 05:07 AM
அமாவாசை இரவில் நிலவின் குமுறலிலும் ஓர் உண்மை வெளிச்சமிட்டு உதயமாகிறதே.....

aren
13-09-2011, 07:56 AM
சனிக்கிழமை நீங்க முழுப்பட்டினியாமே, அதனால் வந்த விணையோ இந்தக் கவிதை.

கவிதை நன்றாக இருந்தது, பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

சிவா.ஜி
13-09-2011, 01:36 PM
மிக்க நலமே அக்னி. இப்போது பணியிடத்தில்.

(இங்க இருந்தாத்தானே மூளை கொஞ்சமாவது வேலை செய்யுது...ஹி...ஹி...)

சிவா.ஜி
13-09-2011, 01:37 PM
ரொம்ப நன்றிம்மா கீதம்.

சிவா.ஜி
13-09-2011, 01:41 PM
ஆமாம் ஜானகி அவர்களே...இருப்பவளை இல்லையென்று சொன்னால்...கலக்கமாய் இருக்காதா...

மிக்க நன்றி.

சிவா.ஜி
13-09-2011, 01:44 PM
சனிக்கிழமை செமக் கட்டு கட்டினேன்...அடுத்தநாள் ஞாயிறன்றும் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டினேன். அன்று ஒரு நண்பருக்கு அலைபேசியில்...என்ன ஸ்பெஷல் எனக் கேட்டபோது...இன்று அமாவாசை...அதனால் சைவமென்றார்....அப்போதே தோன்றியதுதான்....வார்த்தைகளைப் பிடிக்க இத்தனைநாள் ஆகிவிட்டது.

ரொம்ப நன்றி ஆரென்.

கலையரசி
13-09-2011, 02:38 PM
தலைமறைவாகிடவும்,
”முகம் காட்ட முடியாதவளாய்
முக்காடு போட்டுக்கொள்ளவும்,
தேய்ந்து உருமறையவும்
நான் அலைக்கற்றை ஊழல் செய்த அரசியல்வாதியல்லவே” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.
வளர்ந்து தோன்றுவதும் தேய்ந்து மறைவதும் பார்வை மயக்கமே என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொல்வது போல் நல்ல நாள் என்பதும், கெட்ட நாள் என்பதும் நம் மனதைப் பொறுத்த விஷயமே தவிர வேறில்லை. நல்ல கருத்துடன் கூடிய கவிதை. பாராட்டுக்கள் சிவாஜி சார்!

அமரன்
13-09-2011, 08:02 PM
நிலவுப் பூவிலிருந்து வடிவது
கள்ளோ? அல்லோ?
காலடியில் ஓடுவதென்னவோ
வாழ்வோட்டமே.

"துணை"க்கோளின் மன அதிர்வும்
அகநக உறவின் உயிர்ப்பும்
கவிதையின் கருவோட்டம்.

அசத்தல்!


பாராட்டுகள் பாஸ்.

meera
15-09-2011, 06:24 AM
சிவா அண்ணா, நீங்க என்ன தான் சொன்னாலும் நாங்க என்ன திருந்தவா போறோம். அமாவாசை அமாவாசைதான் பௌர்னமி பௌர்னமிதான் நீங்க பட்டினி பட்டினிதான்.:lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
20-09-2011, 03:51 PM
மிக்க நன்றிங்க கலையரசி மேடம். காரண காரியம் தெரியாமல் எல்லாவற்றையும் நம்புவதை ஏற்க முடியவில்லை.

சிவா.ஜி
20-09-2011, 03:52 PM
அதென்ன பாஸ்...நிலவு என்றதுமே கவி வரிகள் கள்ளாய் ஊறுகிறது....அசத்துறீங்க. ரொம்ப நன்றி அமரன்.

சிவா.ஜி
20-09-2011, 03:54 PM
ஹா...ஹா...நான் எதுக்கு மீராம்மா பட்டினி கிடக்கனும்.....அண்ணியையே மாத்திட்டமில்ல. அமாவாசைன்னா...எனக்கு முன்னாலேயே அண்ணி பையை எடுத்துக் கையிலக் கொடுத்து கறி வாங்கிட்டு வரச் சொல்றாங்க.

அன்னிக்குத்தான் நல்ல கறி கிடைக்கும்ன்னு அவங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சே......

நன்றிம்மா தங்கையே.

Ravee
20-09-2011, 08:08 PM
இயற்கை, இயற்கையாகவே இருக்கிறது அண்ணா .... நடக்கும் தேய்பிறை , அமாவாசை எல்லாம் நம் விழித் திரையிலும் , மனத்திரையிலும் மட்டுமே ....

vseenu
21-09-2011, 07:31 AM
அழகான கவிதை. அனைவரும் ரசிக்கலாம் அலைக்கற்றை ஊழல் செய்த அரசியல்வாதிகள் உட்பட

சிவா.ஜி
21-09-2011, 12:30 PM
ஆமாம் ரவீ...எல்லாமே நம் பார்வையில்தான். மிக்க நன்றி.

சிவா.ஜி
21-09-2011, 12:30 PM
ஊக்கப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் சீனு ஐயா.