PDA

View Full Version : தமிழகத்தின் இந்த வருட டாப் 10lavanya
14-12-2003, 08:55 PM
தமிழகத்தின் டாப்டென் பட்டியல்

(இது சும்மா 'வெளையாட்டுக்கு' ...சீரியஸான டாப் 10 பிறகு தரப்படும்.தமிழ் மன்ற மக்கள்
தங்கள் வசதிக்கேற்ப வரிசைப்படுத்தி கொள்ளலாம்)


[b][size=18]1. புள்ளி ராஜா

சாதாரணமாக டிவி விளம்பரங்களில் தோன்றி பின் சடாரென இந்திய விலைவாசி போல்
உயர்ந்து அனைவரையும் கவர்ந்தவர்.ஒரு பத்திரிகை விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு இவரைப் பற்றி பத்திரிகையும்,டிவியும் இன்னபிற மீடியாக்களும் தந்த விளம்பரத்தில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி விட்டு டாப் டென்னின் முதலுக்கு வந்து விட்டவர்..தற்போது இந்த விளம்பரத்தை நிறுத்தச் சொல்லி அரசு வழக்கு போட்டிருக்கிறது.இது இன்னும் அவரை புகழின்(?!!!) உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

மும்பை போன்ற இடங்களில் 'பீர் பாஷாவுக்கு எயிட்ஸ் வருமா...? 'என்றும் தெலுங்கு,ஆந்திர பிரதேசங்களில் பெத்த ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா( வாசகம் சரியாக நினைவில்லை)
என்று எல்லா இடங்களிலும் வந்தாலும் 'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' தந்த புகழ்
போல் ஏதும் இல்லை என்பதால் இங்கும் அவர் முதலிடம்.

தவிர அடுத்து விளம்பரத்தில் இதை முன்னோடியாக கொண்டு 'அரிப்பு குமார்'என்று
ஒரு விளம்பரம் வந்து தலையை பிய்த்து கொள்ள வைப்பதால் (அரிப்பால் அல்ல), இனி
மெட்ராஸ் ஐ பற்றி வரப்போகும் 'கமா ராணிக்கு கண்வலி வருமா...?( நன்றி :விகடன்) என்ற
விளம்பரத்துக்கும் இனி பிற்காலங்களில் வரப்போகும் விளம்பரங்களுக்கும் முன் மாதிரியாக
இருப்பதால் இந்த பட்டியலில் முதலிடம் பார்க்கிறார்.[/color]


[b]2. மன்மத ராசா

'ரெண்டு கிலோ எலும்பும் - ரெண்டரை மீட்டர் தோலும் ' என உவமானிக்கப்பட்ட தனுஷ்க்கு
நிரந்தர அடையாளம். அமைதியாக அம்முக்குளி போல் தோற்றமுடன் தினம் வரும்
பக்கத்து வீட்டுப் பெண் திடீரென பேயாட்டம் போட்டால் எப்படியிருக்கும் என்பதை காட்டிய
சாயாசிங்குக்கு ஒரு அடையாளம். எல்லாவற்றிற்கும் மேலாக லஷ்மண் சுருதியில் கே.பி.
சுந்தரம்பாள்,மால்குடி சுபா,இன்னபிற கடாமுடா குரல்களை கரைத்து குடித்த
மாலதி பாடிய 'பக்தி பரவச' பாடல் . அந்த குழுவின் நிறுவனர் லஷ்மண் அவர்களின் மனைவி.
டிவி சீரியல் இசை அமைப்பாளர் தினா என எல்லோரையும் ஒரே நேரத்தில் தூக்கி விட்ட
பாடல் ( ஆராரோ ஆரிரோ பாடினாலும் அழுகையை நிப்பாட்டாத பய இந்த பாட்டு போட்டா
என்னா துள்ளு துள்ளுறான்...- ஒரு இடத்தில் கேட்டது). இன்னும் இடைவிடாது எல்லா
இடங்களிலும் கேட்டு கொண்டிருக்கும் பாடல்.


[b]3. சூதாடி சித்தன்

அண்ணாமலை சீரியலின் அத்தியாவசிய கேரக்டர்....சடாரென வந்து ஏதாவது சொல்லி விட்டுப்
போவார். என்ன சொல்கிறார் என்று அவருக்கும் தெரியாது...கேட்கும் நமக்கும் தெரியாது.
நிறைய வீடுகளில் பேய் பூச்சாண்டி இது எல்லாவற்றிகும் உதாரணம் காட்டப்பட்டு குழந்தை
களுக்கு சோறூட்ட பெற்றொர் எடுத்துக் கொள்ள உதவும் உதாரணப்புருஷன் என்பதால் இந்த
டாப் டென்னில் இடம் பெறுகிறார்.


[b]4. சுடுகாட்டு சித்தன்.

முன்னவர் பேசியே கொல்வார்.இவர் பேசாமலே வந்து கொல்வார்.தமிழ் சினிமாவில் கமல
ஹாசனுக்கு பிறகு மேக்கப்பிலிருந்து ஒரு நுண்ணிய பர்பெக்ஷன் என்று சொல்வார்களே
அது வரை தீவிரமாக ரிஸ்க் எடுத்து செய்பவர். இந்த பிதாமகனுக்கான முன்னோட்டம்
பற்றி தீபாவளியன்று பார்த்ததில் இவரின் உழைப்பு மற்றும் தொழில்பக்தி நன்றாகவே
தெரியவந்தது. பிதாமகனின் இறுதிக் கட்டத்தில் வில்லனை கொல்ல துரத்திக் கொண்டு
ஓடும்போது ஒரு மாட்டுக்கு வைக்கும் தண்ணீர்த் தொட்டியில் உள்ள நீரை அருந்தி
விட்டு ஓடுவார். ஆச்சரியம் -இது பாலா சொல்லாத சீனாம். எனவே இது போல் பல
காட்சிகளில் அதிக ரிஸ்கில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதற்காக சித்தனும்
இங்கு சேர்கிறார்.


[b]5. (வீணாப் போன) பாய்ஸ்

சங்கர் படம் அல்ல, பொதுவாக தமிழ்த் திரையுலகம் குறி வைத்திருக்கும் இளவட்டங்கள்.
துள்ளுவதே இளமை வெற்றிக்கு பிறகு பாய்ஸ்,குறும்பு...(இன்னும் இதே போன்ற கதை
அமைப்பில் 7 படங்கள் தணிகைக்காகக் காத்திருக்கிறதாம்- கஷ்டம்டா சாமி...).ஆனால்
தமிழ் சினிமாவில் இது போன்ற கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததற்காக எல்லோரும்
கஸ்தூரி ராஜா மேல் பாய்கிறார்கள்.நமக்கென்னவோ கொஞ்சம் தள்ளிப் பின் சென்று
பார்த்தால் அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்தே பாரதிராஜா ஆரம்பித்து விட்டது...
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றமடைந்துள்ளது எனத் தோன்றுகிறது..
தமிழ் சினிமாவை நாளை காப்பாற்ற போகும் என்று திரையுலகம் முழுமையாக இவர்களை
நம்பியிருப்பதால் இவர்களும் இந்த வரிசையில் இடம் பெறுகிறார்கள்.


[b]6. இடி ராணி - தடை ராணி

சீரணி அரங்கத்தை இடித்தது,குயின் மேரீஸை இடிக்க முயன்று முடியாமல் போனது
இன்னும் பல கட்டடங்களை இடிக்க திட்டமிட்டுச் சாதனை புரிந்தமைக்கு இவர்
டாப்டென் வரிசையில் சேர்கிறார்.புரட்சிகர சட்டங்களை அறிமுகப்படுத்தியதில்
குறிப்பிடத்தக்கது ஆடு கோழி பலியிட சட்டம் கொண்டு வந்தது...சுடலை சாமிகளும்
அய்யனார் ,கருப்ப சாமிகளின் ஏகோபித்த சாபம் இவர் மேல் இருந்தாலும் அவ்வப்போது
யாகம் செய்து எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து கொள்ளும் திட்டத்திற்காகவும் தமிழக
முதல்வர் நமது டாப்டென்னில் சேர்கிறார். அரசாங்கத்தின் நான்காம் தூணான
பத்திரிகையாளர்களையே கைது செய்ய உத்தரவிட்டதின் மூலம் மிகப்பெரும் புரட்சி
செய்து அப்பெயரை நிரந்தரமாக வைத்துகொண்டதாலும் இந்த இடம் அவருக்கு...


[b]7. உலகம் சுற்றும் வாலிபன் - வாஜ்பாய்

திறமையான பிரதமர் - யார் எந்த நேரத்தில் என்ன பிரச்னை செய்தாலும் மிகச் சரியாய்
அதை முன் கூட்டியே ஊகித்து அப்போது வெளிநாட்டில் இருக்குமாறு திட்டமிடும்
அவரின் திறமையே திறமை. 'எல்லாம் நான் ஊர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று
அங்கிருந்தபடியே அறிக்கை விட்டு விட்டு எல்லா பிரச்னைகளும் செத்து சுண்ணாம்பான
பிறகு ஊர் வந்து அரசியல் கூட்டங்களில் பச்ச பிள்ளை மாதிரி சிரிக்கும் அந்த
திறமைக்காகவே இந்த டாப் டென்னில் சேர்த்து கொள்ளப்படுகிறார். மதவாதம் பூசப்பட்ட
கட்சியில் மிதவாத முகத்துடன் வளைய வந்து கூட்டணிக்கட்சிகளை அணைத்து
கொண்டு செல்லும் பங்குக்கு நல்ல மேய்ப்பாளர் (Good Sheperd) என்ற பட்டமும்
பெறுகிறார்.


[b]8.நலிவடைந்த நடிகைகள்

அழகும் இளமையும் இருக்கும்வரை சினிமா, அதற்குப்பின் உபதொழில் என்று செவ்வனே
வாழ்ந்து வந்தவர்கள் மீது எவர் கண் பட்டதோ தெரியவில்லை...இந்த வருடம் நிறைய
கைதுகள். சின்னத்திரையிலிருந்து தொடங்கி 70 மிமீ வரை மாட்டிய அனைவரும் இந்த
பட்டியலில் இடம்பெறுகிறார்கள். எல்லாம் அரசியல்தான் என்று நம்பத்தகுந்த
(அவர்களுக்கு ) வட்டாரங்கள் சொன்னாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பிழந்து
கொண்டிருக்கும் மற்ற நடிகைகளுக்கு புளி கரைத்துக் கொண்டிருப்பதால் பேசாமல்
தமிழ் திரையுலகம் விட்டு வெளியே போய்கொண்டிருக்கும் அவர்கள் மீது கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வர இந்த டாப்டென்னில் சேர்க்கப்படுகிறார்கள்.


[b]9. பண்பலை வானொலி

தொடக்கத்தில் நல்ல ஆதரவு இருக்குமா எனச் சந்தேகப்பட்டு இப்போது மூலைக்கு மூலை
எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க
என எல்லோரையும் தம் பக்கம் இழுத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதால்
இது தானாகவே டாப் டென்னில் சேர்கிறது.கோயம்பத்தூரிலிருந்து கொட்டாம்பட்டி வரை
எல்லா மக்களையும் அடைந்து பயன் தரக் கூடிய நிலையில் இருப்பதால் இதுவும் இங்கு
சேர்கிறது.

[b]10. சிம்ரன்

விஐபி படத்தில் அறிமுகமாகி நியூ படத்துடன் திரைக்கு குட்பை சொல்லும் சிம்ரன் நம்
பட்டியலில் இறுதி இடத்தைப் பெறுகிறார். சினிமாத் திரை ரசிகர்களிலிருந்து தமிழ் மன்ற
இளசு வரை எல்லாராலும் விரும்பப்பட்டவர். ஆட்டக்காரருடன் கூடி வாழ ஆசைப்பட்டார்.
விதி ஆளவந்தான் மூலம் பிரித்தது...பஞ்ச தந்திர நாயகனும் பை சொல்லி விடவே
தீபக்குடன் ஐக்கியமாகி கல்யாணம் முடித்து இந்த வருடத்துடன் செல்லும் சிம்ரனுக்கு நன்றி
சொல்லும் விதத்தில் கதம்ப மன்றம் அவரையும் இந்த டாப்டென் பட்டியலில் சேர்க்கிறது.

முத்து
14-12-2003, 09:09 PM
லாவண்யா அவர்களே ...
நன்றாக இருக்கிறது
டிவி யில் வரும் டாப் -10 போல இந்த
ஜாலியான டாப் - 10 நன்றாக இருக்கிறது ...
சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..
டாப் -10 ல் சேர்த்துவிட்டதற்காய் சிறப்பு நன்றிகள் .. :wink: :D

lavanya
14-12-2003, 11:01 PM
சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..


ஐயோ முத்து நீங்களுமா...?

முத்து
14-12-2003, 11:23 PM
சிமரனை கடைசி இடத்தில் சேர்த்ததில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ..


ஐயோ முத்து நீங்களுமா...?

சும்மா ..சும்மா ...
உங்கள் டாப் - 10 மாதிரி :wink: :D

மன்மதன்
15-12-2003, 07:22 AM
சரியான தேர்வுகள். நானும் வேற எதாவது விட்டு போயிருக்கிறதா என்று பார்த்தேன். சான்ஸே கிடைக்கலை..
பார்த்து பார்த்து செதுக்கிய சிலை மாதிரி ரொம்ப யோசித்து எழுதியுருக்கிறார்.
இதில் வைகோ(பொடா), உயிர்த்தெழுந்த சினிமா, ரேஷன் கடை - கள்ளுகடை, ஜெயமோகன்-கலைஞர்
போன்ற சமாச்சாரங்கள் இதில் வரவில்லையென்றாலும் ஒரு தேர்ந்த பத்திரிக்கை எழுத்தாளர் போலதான் இருந்தது.

இக்பால்
15-12-2003, 07:38 AM
ஆமாங்க மதன் நானும் அதையேத்தான் சொல்லலாம் என நினைத்தேன்.

லாவண்யா வாரப் பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். வேறு

எழுத்தாளர்கள் கூட தேவைப்படாது. சுவாரசியமாக விசயங்களைச் சொல்லும்

திறமையுடன் இருக்கிறார்.-அன்புடன் அண்ணா.

மன்மதன்
15-12-2003, 07:58 AM
சரியா சொன்னிங்க..
இந்த மன்றத்திலேயே அவர் ஆரம்பிக்கட்டும்..
வார வாரம் நாம வாசகர் கடிதம் எழுதலாம்.

mania
15-12-2003, 10:20 AM
அருமை லாவ்ஸ் . டாப் நயன் ஆக பண்ணியிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது
அன்புடன்
மணியா

poo
15-12-2003, 02:24 PM
புள்ளிராஜாவுக்கு 1-வது இடம்...
சிம்ரனுக்கு 10-வது இடம்...

சரி..சரி... 1 பெருசா.. 10 பெருசா?!!!


கலக்கல் பதிவுகள்.. தொடர்ந்து எழுதுங்கள் அக்கா!!

puppy
15-12-2003, 04:17 PM
இதுக்கு எல்லாம் காரணமான நம் சராசரி குடிமகன் தான் டாப் 1ல் இருக்கனும்...அதை விட்டுடீங்க லாவண்யா.......அவன் இல்லை என்றால் டாப் 10ஆவது 20ஆவது...கலக்குங்க லாவண்யா..நீங்க கலக்கிட்டே இருங்க....

Anonymous
15-12-2003, 04:22 PM
நச்-னு சொன்னீங்க பப்பி!!

முத்து
15-12-2003, 04:25 PM
நச்-னு சொன்னீங்க பப்பி!!

ஹலோ .. யாருங்க .. இது ..
மறைஞ்சிருந்து குரல் கொடுப்பது ..
ஒரு வேளை இதுதான் பிண்ணனிக்குரலோ.. ? :wink: :D

puppy
15-12-2003, 04:26 PM
யாருப்பா இந்த விருந்தாளி..பூ மீண்டும் பதியுங்க...இதை எடுத்துடுறேன்

poo
15-12-2003, 05:11 PM
நச்!!!

நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மைங்க...

-முதல் இடம் கிடைக்காத ஒரு சராசரி குடிமகன்!

இளசு
15-12-2003, 05:24 PM
"ஆமாங்க, தமிழ் மன்றம் அலுவலகம்தான்..
நீங்க யார் பேசறது...
ஆ.வி.யில் இருந்தா...
ஆஹா, லாவின் கட்டுரைகளை நாங்க பதிக்கவே
உங்க சர்க்குலேஷன் படுத்துடுச்சேன்னு பதறிப்
போய் போன் பண்ணுவீங்கன்னு தெரியும் பாலா...
என்னது.. ஆ.வி. ஆசிரியர் இல்ல..
நிஜமான ஆவியா?
ஆ.. பண்ணையார் ஆவியா?ஆஆஆஆஆஆ?
என்கௌன்டரில் உயிர் கொடுத்து,
மீடியாவுக்கு பலவாரம் தீனி கொடுத்த உங்க பேர்
டாப் டென்னில் வந்திருக்கணுமா?
சரிங்க.. சரிங்க..ஆவிசார்...ஸாரி..பண்ணையார்..
"சீரியஸ்"ஸான டாப் டென்னில் குடுத்துர்றோம்..
இல்ல..இல்ல... நீங்க நேர்ல வரணும்ன்ற அவசியமே இல்லை...
சரிங்க.. சரிங்க..
(டொக்!) உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

" ஹலோ...
தமிழ் மன்ற ஆட்கள் இனிமே உங்க ஹோட்டலுக்கு வந்தா
எக்ஸ்ட்ரா சட்டினி சாம்பாருக்கெல்லாம் தனி பில்லா?
இல்லீங்க அண்ணாச்சி.. அடுத்த லிஸ்ட்டில்... (டொக்!)

"ஹலோ.. அய்யோ! தோட்டத்து போனுங்களா...
ஓ.. அந்தத் தோட்டங்களா?
சரி...லைனில் இருக்கேன்..
......................................
அய்யா. சொல்லுங்கய்யா?
பத்து வருஷம் படமே எடுக்கக்கூடாதுன்னு அறிக்கை விட்டவருக்கே
பத்தில் இடமில்லையாவா? அய்யா, இது "வெளையாட்டு" லிஸ்ட்டுங்க..
என்னது வெனையாயிடுமா..சரிங்கய்யா..சரி செஞ்சுடறேன்..(டொக்!)

"ஹலோ, டாக்டருங்களா..இப்பத்தானே பேசினேன்..
ஓஓ... இது அந்த டாக்டருங்களா...
சரி..குடுங்க.....
ஹி..ஹி.. அது வந்து சார்..உலகப்புகழ் படங்கள் பேரை
மாத்தி நீங்க பண்ண சாதனை... மறக்கமுடியுமா..பொங்கல் வரை..
நாங்களும் லிஸ்ட்டை மாத்திடுறோம் சார்... (டொக்!)

"ஹலோ...

கட்சி ஒரு பட்சி..பறந்துடுச்சி மச்சி..
பையனை வச்சி புடிப்பேன் ஆட்சி
பாண்டிச்சேரி பஜ்ஜி
உன்னை ஆக்கிடுவேன் புஜ்ஜி...

புரிஞ்சிடுச்சி... சார்..
அலை உங்க பக்கம்தான் இருக்கு..
புரூஸ்லீ புருடா புருடி எத்தனை நாளைக்கு..
மாத்திடுறேன்...

கலக்குவேன் கலக்குவேன்
கட்டம்கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு..(டொக்!)

"ஹலோ.காங்கிரஸ் தலைவரா... எந்த கோஷ்டி..
ஸாரி என்னைக்கு வரைக்கும்..? மறுபடியும் ஸாரி..
எந்தத் தலைவர்..? செயல் படும் தலைவரா.. செயல் படாத
தலைவரா.. செயல் கெடுக்கும் தலைவரா..?
ஓ அவரா...கொடுங்க..
வணக்கம் ஸார்...
ஆமாங்க.. பச்சப்பிள்ள சிரிப்பைச் சொன்ன லாவ்
அன்னை முக தேஜஸ்ஸையும் சொல்லி இருக்கலாம்..
சரி பண்ணிடலாம் ஸார்...
ஸார், பார்லிமெண்ட் தேர்தல் வரைக்கும் நீங்கதானே தலைவர்?
என்னது " தெரியலியேப்பா"வா...????? (டொக்!)

"ஹாலோ .லாவ்...
உங்களைத்தான் நெனச்சுக்கிட்டிருந்தேன்
நீங்க என்ன பண்ணுங்க...
உடனடியா நான் சொல்றா மாதிரி ஒரு டாப் -டென்..
இருங்க லாவ்... இன்னொரு போன் அடிக்குது..
யாரு மூணுஷாங்களா?
...................
லாவ், நீங்க நாளைக்கு போன் பண்ணுங்க.. (டொக்!)
நீங்க சொல்லுங்க ஷா...
..............................
ஓகே..ஓகே..டபுள் ஓகே....

லைன்லியே இருங்க... இன்னொரு கால்...
தலைவர், பப்பியா இருந்து எடுக்கலன்னா வம்பாயிடும்...

ஹலோ.... அமோகமா...ஆஆஆஆஆ!
இரண்டு காது வைச்ச இறைவன்
இரண்டு வாய் வைக்கலியேன்னு
புதுக்கவிதை எழுதணும் போல இருக்கே...ஆபீஸ் பாய் சின்னதம்பி மூச்சிரைக்க ஓடிவந்து..
அண்ணே..அண்ணே..
தமிழ்மன்ற வாசலில்
முதுமலை சென்ற யானைகள் வந்து
மறியல் பண்ணுதண்ணே...
பின்னாடியே ஆட்டோக்கள் நிக்குது...
ஆட்டோவில் உருட்டைக்கட்டைகள் இருக்கண்ணே...

"மதனைக் கூப்பிடு..
தலை, சேரன், பூ எல்லாத்தையும் உடனே கூப்பிடு...."


டிரிங்....................................
ராத்திரி லாவ் லிஸ்ட்டைப் படிச்சுட்டுப் படுத்தா
கனவு வேற எப்படி வருமாம்...? :wink:

முத்து
15-12-2003, 05:28 PM
இளசு அண்ணா ...
பாருங்க .. உங்களையே விருந்தாளியாக்கிடுச்சு ...
நான் கொஞ்ச நேரம் குழம்பிப் போயிட்டேன் ..
ஆனாலும் மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் இருந்தது ..
யாரோ புதுசா கலக்கல் பார்ட்டி வந்துருக்குன்னு ...
அப்புறம்தான் தெரியுது .. அது நீங்கன்னு...

முத்து
15-12-2003, 05:40 PM
இளசு அண்ணா ...
உங்களோட இந்தக் கலக்கல் பதிப்பைத்
தனியாவே பதிச்சுருக்கலாம் ....
அப்புறம் திரிஷா மார்க் பசைக் கம்பெனியில இருந்து
ஏதாவது போன் வந்ததா... ? :wink:

இளசு
15-12-2003, 05:45 PM
பா.கே.பி.ப. ஆரம்பித்த முத்துவுக்கும்
அதைக் களைகட்ட வைத்துக்கொண்டிருக்கும் லாவுக்கும்
என் நன்றியாய் இது இங்கேயே இருக்கட்டும்...முத்து!
உங்களுக்கு நன்றி செய்ய கொஞ்சநேரம் சிரிக்கவைப்பதே
என் பாக்கியம்..

சின்னதம்பியைப் பார்த்துமா
தம்பிக்கு அண்ணனை அடையாளம் தெரியல?

த்ரிஷா பற்பசை எல்லாம் கனவோடு..
காலையில் யதார்த்தம் - கோல்கேட்!

poo
15-12-2003, 05:54 PM
அண்ணா...

இதுக்குதான்.. நீங்க பதில் சொல்லிட்டு போனபிறகு அந்த பதிவை படிக்கிறது நான்...

இல்லாங்காட்டி இன்னொருக்கா...உங்க காலை சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கனும்... அது ஒரு சொகமுங்கோ....

நல்லவேளை நேத்து ராத்திரி புஷ் போன் பண்ணப்போ லைன் கெடைக்கலயாம்...!!!

கலக்கல்ஸ்... தொடரட்டுமே!!!!

puppy
15-12-2003, 07:10 PM
இளசு அசத்துங்க.......

lavanya
15-12-2003, 11:18 PM
நான் டாப்டென் கொடுத்தா இளசு சூப்பர் 10 கொடுத்திருக்கீங்க
நன்றி....

இளசு
15-12-2003, 11:41 PM
உங்கள் டாப் டென் இல்லாமல்
என் டூப் டென் ஏது லாவ்..

அனைவரின் பாராட்டும் உங்களுக்கே உரியது. நன்றி.

சேரன்கயல்
16-12-2003, 03:46 AM
லாவ்ஸின் டாப் டென் ஒரு கலக்கல்னா...இனிய இளசுவின் டாப் டென் கனவு அசத்தல்...
இளசு...தூள் பரத்திட்டீங்க...
(மக்கா...இருங்க இருங்க...வீர்சிங் சுப்ரீம் 10 லிஸ்டோட வராராம்..)

mania
16-12-2003, 03:58 AM
அமர்க்களமான கலக்கல் இளசு.
அன்புடன்
மணியா

Vanambadi
16-12-2003, 09:16 AM
அருமையான கணிப்பு மற்றும் கருத்துக்களுடன் வரிசைப்படுத்திய லாவ் -வுக்குப் பாராட்டுக்கள்!

இளசு
17-12-2003, 12:08 AM
(மக்கா...இருங்க இருங்க...வீர்சிங் சுப்ரீம் 10 லிஸ்டோட வராராம்..)

அப்படி போடுங்க அருவாளை..
வரச்சொல்லுங்க நம்ம ஹீரோ வீரை

(டாப் டென்னில் வீரும் இருக்கணுமே..) :lol:

puppy
17-12-2003, 05:02 AM
மன்றத்து டாப் 10 யார் கொடுக்க போறீங்க

சேரன்கயல்
17-12-2003, 05:26 AM
நம்ம நிலாவை கொடுக்க சொல்லலாமே... :twisted:

puppy
17-12-2003, 05:38 AM
சரியான தேர்வு சே.க....நிலா எங்கிருந்தாலும் வருக

சேரன்கயல்
17-12-2003, 05:43 AM
ஆமாம் பப்பி...
நிலா நிலா ஓடிவா...நில்லாமல் ஓடி வா...
(குண்டூஸ் சாப்பிட்டு குறட்டை அடிக்காமல் உடனே வரவும்.. :mrgreen: )

puppy
17-12-2003, 05:44 AM
நல்லவேளை குண்டூஸ் மாதிரி உருண்டு வான்னு சொல்லாமா போனீங்களே

சேரன்கயல்
17-12-2003, 05:51 AM
அட வேணாம் பப்பி...
தூக்க கலக்கத்தில் அவங்க குண்டூஸ் போல உருண்டு...கீழே விழுந்து...(அவங்களும் குண்டூஸா இருக்க போக)...எதுக்கு வம்பு...
நாம நம்ம நிலா நல்லபடியா இருக்கணும்னுதானே ஆசைப்படுவோம்.... :wink:

(நிலா வந்ததும் முதல் வேலை...என்னை ஒரு வழி ஆக்குறதுதான்... :cry: )

puppy
17-12-2003, 03:27 PM
நிலா வந்தாச்சா ?

poo
17-12-2003, 03:42 PM
டாப் டென்னில் வீரும் இருக்கனுமே...

அண்ணா.. 10-லயும் நானே இருப்பேன்னு அடம்பிடிக்கிறார்..

சேரனும் தலையும் சமாதான முயற்சியில இருக்காங்க!!

mania
18-12-2003, 03:32 AM
அட வேணாம் பப்பி...
தூக்க கலக்கத்தில் அவங்க குண்டூஸ் போல உருண்டு...கீழே விழுந்து...(அவங்களும் குண்டூஸா இருக்க போக)...எதுக்கு வம்பு...
நாம நம்ம நிலா நல்லபடியா இருக்கணும்னுதானே ஆசைப்படுவோம்.... :wink:

(நிலா வந்ததும் முதல் வேலை...என்னை ஒரு வழி ஆக்குறதுதான்... :cry: )

:lol: :lol: இதத்தான் "தடியை கொடுத்து அடியை வாங்கிக்கறது" ந்னு சொல்லுவாங்க. வா வா சேரன்....உனக்கு இருக்கு நல்லா.......இந்த விஷயத்துலே என்னை ஹெல்ப் கேக்காதே...சொல்லிப்புட்டேன்...ஹி...ஹி...ஹி... (ஆனால் நல்லா த்தான் வாரியிருக்கே !!)
:wink:
அன்புடன்
மணியா

mania
18-12-2003, 03:35 AM
டாப் டென்னில் வீரும் இருக்கனுமே...

அண்ணா.. 10-லயும் நானே இருப்பேன்னு அடம்பிடிக்கிறார்..

சேரனும் தலையும் சமாதான முயற்சியில இருக்காங்க!!

:lol: :lol: எல்லாம் பேசியாச்சுப்பா....நேத்து பாருக்கு கூட்டிக்கினு போய்.... அதாவது வெறுமனே டாப் டென்ன்னு போடமே வீர்சிங் டாப் 1, வீர்சிங் டாப்2....ன்னு போட்டா அவருக்கு ஓகேயாம்!!! :wink:
அன்புடன்
மணியா

நிலா
18-12-2003, 03:39 AM
தூக்க கலக்கத்தில் அவங்க குண்டூஸ் போல உருண்டு...கீழே விழுந்து...(அவங்களும் குண்டூஸா இருக்க போக)...எதுக்கு வம்பு...
நாம நம்ம நிலா நல்லபடியா இருக்கணும்னுதானே ஆசைப்படுவோம்....

(நிலா வந்ததும் முதல் வேலை...என்னை ஒரு வழி ஆக்குறதுதான்... )ஹலோ அது குண்டூஸ ஐப்பார்த்து அத்தைப்பொண்னை நினைச்சவரும்,
பஜ்ஜி பவானியை பூஜிப்பவருமான நீங்க பண்றது. :twisted: ஆளில்லாத நேரத்துல மோதிட்டீங்க! :evil: உங்களைப்பழிவாங்குறதுதான் இனி என் வேலை! :twisted:
(ஆனால் நல்லா த்தான் வாரியிருக்கே !!)


இது யாருப்பா சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டறது? :evil:

நிலா
18-12-2003, 03:42 AM
மன்றத்து டாப் 10 யார் கொடுக்க போறீங்க


பப்பி ஒரு மாறுதலுக்கு மன்றத்தின் டவுன்10 கொடுக்கவா?

இந்த லிஸ்ட்ல சேரன்,பூ நீங்க 2பேரும் இருக்கீங்க!கவலைப்படாதீங்க! :wink:

mania
18-12-2003, 04:04 AM
quote]
(ஆனால் நல்லா த்தான் வாரியிருக்கே !!)
[/quote]

இது யாருப்பா சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டறது? :evil:[/quote]

:lol: :lol: நினைச்சென் நான்....ஏதாவது வம்பாயிடுமேன்னு...... நல்ல வாரியிருந்த உன் தலையை பார்த்து (உன் வீட்டிலே கல்யாண ஆல்பத்திலே ) சொன்னதுக்கே இப்படீன்னா................அப்பா..........நான் வல்லேப்பா இந்த ஆட்டத்துக்கு...... :wink: :wink:
அன்புடன்
மணியா

puppy
18-12-2003, 04:08 AM
கொடுங்க நிலா........டாப் 10 லாவண்யா....டவுன் 10 நிலா......
கலக்குங்க....
மன்றத்து டாப் 10 யார் கொடுக்க போறீங்க


பப்பி ஒரு மாறுதலுக்கு மன்றத்தின் டவுன்10 கொடுக்கவா?

இந்த லிஸ்ட்ல சேரன்,பூ நீங்க 2பேரும் இருக்கீங்க!கவலைப்படாதீங்க! :wink:

poo
18-12-2003, 04:50 AM
அவங்களுக்கு பிடிச்சதை செய்யறாங்க....
செய்யுங்க!!

(நிலா.. எங்களைவிட வீரு பயங்கர கோவமா இருக்கார்!!)

சேரன்கயல்
18-12-2003, 05:36 AM
ஹலோ அது குண்டூஸ ஐப்பார்த்து அத்தைப்பொண்னை நினைச்சவரும்,
பஜ்ஜி பவானியை பூஜிப்பவருமான நீங்க பண்றது. :twisted: ஆளில்லாத நேரத்துல மோதிட்டீங்க! :evil: உங்களைப்பழிவாங்குறதுதான் இனி என் வேலை! :twisted:


(ஆனால் நல்லா த்தான் வாரியிருக்கே !!)


இது யாருப்பா சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டறது? :evil:

ஹலோ மிஸ் (அ) மிஸஸ் வில்லி...
:evil: பவானிங்றது யாருன்னு முதல்ல சொல்லிட்டு அப்புறம் நீங்க வாங்க பழிவாங்க...
:roll: ஆள் இல்லாத நேரத்தில மோதிட்டனா...அதுக்குன்னு நீங்க வரும்வரை காத்திட்டுருக்க முடியுமா... :shock: என்னமோ...
நான் ஏதோ நல்ல எண்ணத்தில் சொல்ல போக...இப்போ நீங்க மங்கம்மா சபதம் போட்டிருக்கீங்க...
பார்த்திருவோம்ல... :evil:

சைக்கிள் கேப்ல ஏரோப்ளான் என்ன ஏர்போர்டையே கட்டும் ஆட்கள் இருக்காங்க என்கூட...
(மக்கா...வந்து சைட் நின்னு கவனிச்சுகோங்கப்பா..)

சேரன்கயல்
18-12-2003, 05:43 AM
மன்றத்து டாப் 10 யார் கொடுக்க போறீங்க


பப்பி ஒரு மாறுதலுக்கு மன்றத்தின் டவுன்10 கொடுக்கவா?

இந்த லிஸ்ட்ல சேரன்,பூ நீங்க 2பேரும் இருக்கீங்க!கவலைப்படாதீங்க! :wink:

அடடே...
பூ...பார்த்தீங்களா...
அமைதியா இருக்கும் உங்களையும் லிஸ்ட் போட்டுடாங்க...
பொறுத்தது போதும் பூ...புயலாக புறப்படு...
அப்படியே வரும் வழியில் நம்ம தலை, அலை, மதன், வீர்சிங், முத்து எல்லோரையும் கூப்பிட்டுக்கொள்...

poo
18-12-2003, 07:08 AM
சேரன்..நம்ம கூட்டனியின் பலம்(?) அது...

ஒருத்தரை நினைச்சாலே தன்னால எல்லோர் பெயரும் ஞாபகம் வந்துடும்!!

lavanya
18-12-2003, 11:20 PM
நிலா சீக்கிரம் உங்க பதிவை கொடுங்க...ஆவலாய் இருக்கோம்

நிலா
18-12-2003, 11:24 PM
நிலா சீக்கிரம் உங்க பதிவை கொடுங்க...ஆவலாய் இருக்கோம்


இந்த லொள்ளுதான வேணாங்கிறது.நான் சும்மா எஸ்கேப் ஆகச்சொன்னது!
நீங்க தான் சரியான ஆளு!நான் கூட்டத்திலேயே குந்திக்கறேன்!

lavanya
18-12-2003, 11:34 PM
நிலா ரொம்பத்தான் உங்களுக்கு தன்னடக்கம்...மன்றமே
நிலா நிலான்னு அலைபாயுது...

நிலா
18-12-2003, 11:39 PM
நிலா ரொம்பத்தான் உங்களுக்கு தன்னடக்கம்...மன்றமே
நிலா நிலான்னு அலைபாயுது...நல்லாப்பாருங்க லாவண்யா அலைபாயல அடிக்கப்பாயுறாங்க!அசந்தா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க!ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு(சேரன்-அவரே ஒரு கூட்டத்துக்கு சமம்,உருவத்துல ஹி...ஹி..ஹி)

உங்களைத்தான் மென்மையானவங்கன்னு சொல்லிவச்சுருக்காங்க!நீங்க அப்படியே கடைபிடிச்சு மேலமேல போயிடுங்க!

என்னை கரையேத்தமுடியாது.இவங்களைத்திருத்தறவரை நான் மேல வரமுடியாது!(அப்பாஆஆஅடி ரஜினி மாதிரி வசனம் சொல்றதுக்குள்ள.. :wink: :D

lavanya
18-12-2003, 11:43 PM
உங்க டாப் 10 ல கவனிச்சி விடுங்க...எல்லாம் சரியாயிடும்

நிலா
18-12-2003, 11:46 PM
உங்க டாப் 10 ல கவனிச்சி விடுங்க...எல்லாம் சரியாயிடும்

நிலா
18-12-2003, 11:49 PM
லாவ் உங்க 1000வது பதிப்பிற்கு ஒரு மெகாதிட்டம் வச்சுருப்பீங்களே!

lavanya
19-12-2003, 12:02 AM
அதான் என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டிருக்கேன் நிலா

நிலா
19-12-2003, 12:05 AM
மன்றத்து மகளிர் அணியின் பெருமைகளை அப்படியே அள்ளி அதை ஆயிரமாவது பதிப்புல சொல்லிருங்க லாவ்! :wink:

lavanya
19-12-2003, 12:12 AM
அப்படியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ செஞ்சிருவோம்

( நானும் எஸ்கேப்)

இளசு
19-12-2003, 12:17 AM
நிலா அப்ப்டியே இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுங்க
இப்பவே 1000 வது பதிவை லாவ்கிட்ட இருந்து கறந்துடலாம்.
மகளிர் அணியின் கனவு பணால்!

lavanya
19-12-2003, 09:43 AM
நிலா அப்படி இப்படின்னு எஸ்கேப் ஆகாம சீக்கிரம் பட்டியலை
பதிவு செய்ங்க ஆமா.....

poo
19-12-2003, 10:31 AM
பில்கேட்ஸ்பத்தி சொல்லி... 1000-த்தை பூர்த்தி செஞ்சுட்டாங்கபோல?!!...

வாழ்த்துக்கள்!!

puppy
19-12-2003, 09:04 PM
மன்றத்து மகளிர் அணியின் பெருமைகளை அப்படியே அள்ளி அதை ஆயிரமாவது பதிப்புல சொல்லிருங்க லாவ்! :wink:

மல்லிகையின் வாசனை பற்றி சொல்லி தெரியனுமா ? நான் சொல்றது சரி தானே லாவண்யா.......

lavanya
19-12-2003, 11:01 PM
நச்னு சொன்னீங்க பப்பி....

இளசு
19-12-2003, 11:03 PM
பூக்கடைக்கே விளம்பரம் தேவைன்னு சொல்றாங்களே.. :wink:

mania
20-12-2003, 04:51 AM
நிலா ரொம்பத்தான் உங்களுக்கு தன்னடக்கம்...மன்றமே
நிலா நிலான்னு அலைபாயுது...நல்லாப்பாருங்க லாவண்யா அலைபாயல அடிக்கப்பாயுறாங்க!அசந்தா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க!ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு(சேரன்-அவரே ஒரு கூட்டத்துக்கு சமம்,உருவத்துல ஹி...ஹி..ஹி)

உங்களைத்தான் மென்மையானவங்கன்னு சொல்லிவச்சுருக்காங்க!நீங்க அப்படியே கடைபிடிச்சு மேலமேல போயிடுங்க!

என்னை கரையேத்தமுடியாது.இவங்களைத்திருத்தறவரை நான் மேல வரமுடியாது!(அப்பாஆஆஅடி ரஜினி மாதிரி வசனம் சொல்றதுக்குள்ள.. :wink: :D

நிலாவின் இந்த பதிவுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்(சேரன் என்னை கண்டுக்கிறயா?) . சேரனும் நிலாவும் கொஞ்ச நாளாக யார் குண்டூஸ் என்ற போட்டியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் . அப்பிடியிருக்க சேரனை ஒரு கூட்டத்துக்கே சமானம் என்று நிலா சொல்லியிருக்கிறார்.நான் பர்த்த சேரன் (அவரின் திருமன ஆல்பத்தில் ) மிகவும் அழகான , நல்ல உடல்கட்டு கொண்ட ஆண் சிங்கம் போல் தான் இருக்கிறார் . (இவ்வளவு குண்டூஸ் சாப்பிட்டும்) அதனால் எப்போவுமே நியாயமாக (!!!) இருக்கும் எனக்கு இதை இங்கே கூறாமல் இருக்க முடியவில்லை.
அதனால் இப்போதைக்கு சேரனின் வாதத்திற்கு (நிலா தான் குண்டூஸ்) ,யாராவது நிலாவையோ அல்லது அவருடைய சமீப கால போட்டோவையோ பார்த்து சொன்னால் ஒழிய ,சேரனின் வாதம் சரியோ என்பதே என் கருத்து.!!!(என்ன சேரன் போறுமா...இப்போதைக்கு ........ .
சேரன் இதின் பதில் விளைவுகளுக்கெல்லாம் நீ எனக்கு துனையிருப்பாய் என்கிற நம்பிக்கையில்......???!!!
அன்புடன்
மணியா

Nanban
21-12-2003, 03:12 AM
சேரனே ஒரு கூட்டம் போல...

மணியா என்னடான்னா வீட்டிற்கே போய் வந்து விட்டார்.........

நிலாவைக் குண்டூஸ்ன்னு வேற சொல்றாங்க.....

எப்படிப்பா - ஒருவரை ஒருவர் பார்த்துக்கிறீங்க?

poo
21-12-2003, 08:12 AM
தலை.. எவ்வளவு குண்டூஸ் சாப்பிடும் குண்டாகாத காரணம்.. அந்த அத்தைப்பெண் செய்யும் அடாவடியாம்!!

(சேரன் பாண்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே உளற ஆரம்பிச்சிட்டார் தலை!!)

இளசு
21-12-2003, 08:14 AM
இப்பதான் சுஜாதாவே அவர் டாப் டென்னை ஆ.வியில் குடுக்க ஆரம்பிச்சிருக்கார்.
இங்கே எப்பவோ..
நம்ம லாவ் ..ரொம்ப ஸ்பீடுப்பா.. :D

gankrish
26-12-2003, 09:07 AM
லாவண்யா இன்னிக்குதான் இந்த பதிவை பார்த்தேன். அசந்துப்புட்டேன்.
படித்தேன்.. ரசித்தேன்... பிடித்த டைடில்.. 2கிலொ எலும்பு + இடி ராணி.. .. அப்படியே கீழே வந்தா என் நண்பன் ரவுசு இளசு.. பிண்ணிப்புட்டாரு.. இந்த மாதிரி ஞானம் எல்லாம் எனக்கு தோண மாட்டேங்குதே. அருமையான பதிப்பு.

இந்த மன்றத்தில் ஓடி வரும்..
லாவ் பதிப்புகளை தேடுகிறேன்..
என் கண்ணுக்கு கிடைக்காதா...


இளசு... இளசு... ரவுசு... ரவுசு...
இளசின் பதிப்பு அருமை...

poo
26-12-2003, 03:13 PM
பாட்டாலே பாராட்டு சொன்னார்...

பாட்டு வாத்தியார் கன்கிரீஷ்...கலக்குங்க சாரே!!

aren
27-12-2003, 11:13 AM
லாவண்யா இன்னிக்குதான் இந்த பதிவை பார்த்தேன். அசந்துப்புட்டேன்.
படித்தேன்.. ரசித்தேன்... பிடித்த டைடில்.. 2கிலொ எலும்பு + இடி ராணி.. .. அப்படியே கீழே வந்தா என் நண்பன் ரவுசு இளசு.. பிண்ணிப்புட்டாரு.. இந்த மாதிரி ஞானம் எல்லாம் எனக்கு தோண மாட்டேங்குதே. அருமையான பதிப்பு.

இந்த மன்றத்தில் ஓடி வரும்..
லாவ் பதிப்புகளை தேடுகிறேன்..
என் கண்ணுக்கு கிடைக்காதா...


இளசு... இளசு... ரவுசு... ரவுசு...
இளசின் பதிப்பு அருமை...

பாட்டு நல்லா இருக்குதே. அப்படியே மேலும் எழுதி ஒரு முழுப்பாட்டாக மார்றிவிடுங்களேன்.

இளசு
04-01-2004, 11:10 PM
இந்த வார அல்வா டைம்ஸ் ஜீரோ அவர்ட்ஸில்
(ஆ.வி)
லாவ் சொன்ன
புள்ளிராஜா
விஜயம் செய்யும் பச்சைப்புள்ள வாஜ்பாய்
இடிராணி (கட்டட ப்ளான் ராணி)
ரன்னர் சிம்ரன்
இவை இடம் பெற்றி இருக்குங்கோவ்,....


என்னே நம்ம தீட்சண்யாவின் தீர்க்க தரிசனம்...