PDA

View Full Version : இரண்டுங்கெட்டவை

கீதம்
12-09-2011, 09:47 AM
அறிந்தோ, அறியாமலோ…
தெரிந்தோ, தெரியாமலோ…
அடுத்திருந்த மனமோ, அவயங்களோ...
காயமுறும்வகையிலோ,
கண்ணீர் உகுக்கும் வரையிலோ…
மிதமாகவோ, தீவிரமாகவோ…
சாடியோ, சண்டையிட்டோ…

தவறிழைத்தத் தருணங்கள் யாவும்
தன்னிச்சையாகவோ, தக்கதோர் தயவாலோ…
அரைமனத்துடனோ, ஆத்மார்த்தமாகவோ…
மன்னிக்கப்பட்டோ, தண்டிக்கப்பட்டோ…
மறந்தோ, மறைத்தோ…
மனம் விட்டகன்றோ, ஆழ்மனம் புதைந்தோ…
அந்தர்தியானமாகிவிட…

தண்டனைக்கும் மன்னிப்புக்கும்
தப்பிய சில தவறுகள் மட்டும்
இரண்டுங்கெட்டவையாய் இன்னமும் வாழ்கின்றன,
துரும்பாய் மனம் உறுத்திக்கொண்டு!

aren
12-09-2011, 09:57 AM
தவறுகள் சகஜமானவை. ஆனால் அந்தத் தவறுகள் தவறுகள் என்று தெரியும் பட்சத்தில் அதை அடுத்த முறை செய்யாமல் இருக்கவேண்டும். அதுவே நமக்கு கிடைக்கும் வெற்றியாகும். மனதில் இருக்கும் பாரமும் குறையும்.

நல்ல கவிதை. இன்னும் நிறைய கொடுங்கள்.

பென்ஸ்
12-09-2011, 01:00 PM
தண்டனைக்கும் மன்னிப்புக்கும் எந்த தவறும் தப்பியதில்லை...

சுயபச்சாதாபமும், மன நெருடலும் தண்டனை அல்லவா....
ஆயுள் தண்டனை...

கீதம்
13-09-2011, 03:59 AM
தவறுகள் சகஜமானவை. ஆனால் அந்தத் தவறுகள் தவறுகள் என்று தெரியும் பட்சத்தில் அதை அடுத்த முறை செய்யாமல் இருக்கவேண்டும். அதுவே நமக்கு கிடைக்கும் வெற்றியாகும். மனதில் இருக்கும் பாரமும் குறையும்.

நல்ல கவிதை. இன்னும் நிறைய கொடுங்கள்.

ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கும் நல்லதொரு கருத்துரைக்கும் நன்றி ஆரென் அவர்களே.

தண்டனைக்கும் மன்னிப்புக்கும் எந்த தவறும் தப்பியதில்லை...

சுயபச்சாதாபமும், மன நெருடலும் தண்டனை அல்லவா....
ஆயுள் தண்டனை...

முதலில் இக்கவிதையின் தலைப்பை 'தப்பியும் தண்டிப்பவை' என்றுதான் வைக்க இருந்தேன். அதன்பின் மேற்கண்ட தலைப்பு சரியாக இருக்குமென்று எண்ணிப் பதிவிட்டேன். உங்கள் கருத்து நான் நினைத்ததையே சொல்லிப்போவதால் மிகவும் மகிழ்கிறேன். நன்றி பென்ஸ் அவர்களே.

சிவா.ஜி
20-09-2011, 04:03 PM
உண்மைதான் தங்கையே. சில தப்பிவிட்ட தவறுகள் பென்ஸ் சொன்னதைப்போல

தன்னிச்சையாகவோ, தக்கதோர் தயவாலோ…
அரைமனத்துடனோ, ஆத்மார்த்தமாகவோ…
மன்னிக்கப்பட்டோ, தண்டிக்கப்பட்டோ…
மறந்தோ, மறைத்தோ…
மனம் விட்டகன்றோ, ஆழ்மனம் புதைந்தோ…

இப்படியாகிவிட்ட தவறுகளை விட அதிக தண்டனையே தருகின்றன. சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு பாராட்டுக்கள்ம்மா. இன்னும் தாருங்கள் தங்கையே.

Ravee
20-09-2011, 07:36 PM
தண்டனைக்கும் மன்னிப்புக்கும்
தப்பிய சில தவறுகள் மட்டும்
இரண்டுங்கெட்டவையாய் இன்னமும் வாழ்கின்றன,
துரும்பாய் மனம் உறுத்திக்கொண்டு!

கொல்வதும் நானே ... கொல்லப்படுவதும் நானே .... செய்த சில தவறுகள் புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகிறது .... அவைகள் புரியும் இடைப்பட்ட காலத்தில் இன்னும் பல தவறுகள் நிகழ்ந்து போய் இருக்கிறது . இதில் எங்கிருந்து விடுதலை பயணம் துவங்கும் ....

இதுதான் வாழ்க்கை இப்படிபட்டவர்களால் மட்டுமே வாழ்வியலில் மாற்றங்கள் வருகிறது. ஆழமான அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் வரிகள் ..... உங்கள் கருத்தை ஒத்த எண்ணங்களை நானும் அனுபவித்து இருக்கிறேன்.

sarcharan
30-09-2011, 01:46 PM
அறிந்தோ, அறியாமலோ…
தெரிந்தோ, தெரியாமலோ…
அடுத்திருந்த மனமோ, அவயங்களோ...
காயமுறும்வகையிலோ,
கண்ணீர் உகுக்கும் வரையிலோ…
மிதமாகவோ, தீவிரமாகவோ…
சாடியோ, சண்டையிட்டோ…

தவறிழைத்தத் தருணங்கள் யாவும்
தன்னிச்சையாகவோ, தக்கதோர் தயவாலோ…
அரைமனத்துடனோ, ஆத்மார்த்தமாகவோ…
மன்னிக்கப்பட்டோ, தண்டிக்கப்பட்டோ…
மறந்தோ, மறைத்தோ…
மனம் விட்டகன்றோ, ஆழ்மனம் புதைந்தோ…
அந்தர்தியானமாகிவிட…

தண்டனைக்கும் மன்னிப்புக்கும்
தப்பிய சில தவறுகள் மட்டும்
இரண்டுங்கெட்டவையாய் இன்னமும் வாழ்கின்றன,
துரும்பாய் மனம் உறுத்திக்கொண்டு!

உண்மையாதலால் உங்களது கவிதையை பாராட்ட மனம் வரவில்லை.

தண்டனைக்கும் மன்னிப்புக்கும் எந்த தவறும் தப்பியதில்லை...

சுயபச்சாதாபமும், மன நெருடலும் தண்டனை அல்லவா....
ஆயுள் தண்டனை...

சரியாய் சொன்னீர்கள்

செல்வா
01-10-2011, 03:14 AM
நல்ல கவிதை அக்கா...

பென்ஸ் அண்ணாவின் பின்னூட்டம்
இளசு அண்ணா இல்லாகுறையை நீக்குகிறது.

வாழ்த்துக்கள் அக்கா!

jaffer
04-10-2011, 10:08 AM
வார்த்தை வார்த்தை சும்மா புகுந்து விளையாடுதுங்க - அடேங்கப்பா அசத்தலுங்க

vseenu
04-10-2011, 02:42 PM
எனக்கும் கவிதைக்கும் காததூரம். படிக்க தெரியும். படித்தேன். ரசித்தேன்.இதுகுறித்து அதிகம் விமர்சிக்க தெரியாது.பகிர்வுக்கு நன்றி..

கீதம்
24-11-2011, 11:33 PM
உண்மைதான் தங்கையே. சில தப்பிவிட்ட தவறுகள் பென்ஸ் சொன்னதைப்போல

தன்னிச்சையாகவோ, தக்கதோர் தயவாலோ…
அரைமனத்துடனோ, ஆத்மார்த்தமாகவோ…
மன்னிக்கப்பட்டோ, தண்டிக்கப்பட்டோ…
மறந்தோ, மறைத்தோ…
மனம் விட்டகன்றோ, ஆழ்மனம் புதைந்தோ…

இப்படியாகிவிட்ட தவறுகளை விட அதிக தண்டனையே தருகின்றன. சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு பாராட்டுக்கள்ம்மா. இன்னும் தாருங்கள் தங்கையே.

ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அண்ணா.

கொல்வதும் நானே ... கொல்லப்படுவதும் நானே .... செய்த சில தவறுகள் புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகிறது .... அவைகள் புரியும் இடைப்பட்ட காலத்தில் இன்னும் பல தவறுகள் நிகழ்ந்து போய் இருக்கிறது . இதில் எங்கிருந்து விடுதலை பயணம் துவங்கும் ....

இதுதான் வாழ்க்கை இப்படிபட்டவர்களால் மட்டுமே வாழ்வியலில் மாற்றங்கள் வருகிறது. ஆழமான அனுபவித்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் வரிகள் ..... உங்கள் கருத்தை ஒத்த எண்ணங்களை நானும் அனுபவித்து இருக்கிறேன்.

ஒத்த எண்ணங்களின் வெளிப்பாடு கண்டு மகிழ்கிறேன் ரவி. பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி.

உண்மையாதலால் உங்களது கவிதையை பாராட்ட மனம் வரவில்லை.

மனம் வராவிட்டால் என்ன? நீங்கள் வந்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்களே.... அது போதுமே எனக்கு.:) நன்றி சர்சரண்.

கீதம்
24-11-2011, 11:38 PM
நல்ல கவிதை அக்கா...

பென்ஸ் அண்ணாவின் பின்னூட்டம்
இளசு அண்ணா இல்லாகுறையை நீக்குகிறது.

வாழ்த்துக்கள் அக்கா!

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி செல்வா.

ஒருத்தர் போனா ஒருத்தர் வரீங்க. எப்பதான் எல்லாருமா சேர்ந்து வரப்போறீங்க?:)

எனக்கும் கவிதைக்கும் காததூரம். படிக்க தெரியும். படித்தேன். ரசித்தேன்.இதுகுறித்து அதிகம் விமர்சிக்க தெரியாது.பகிர்வுக்கு நன்றி..

விமர்சிக்காவிட்டால் என்ன? கவிதையை ரசிக்கத் தெரிவதும் ஒரு கலைதானே!:icon_b:

பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி.

வார்த்தை வார்த்தை சும்மா புகுந்து விளையாடுதுங்க - அடேங்கப்பா அசத்தலுங்க

பாராட்டிப் பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி jaffer.

பூமகள்
27-11-2011, 03:03 AM
ஏனோ நான் எழுதியது போல் இருந்தது இக்கவிதை படிக்கையில்..

பென்ஸ் அண்ணா சொன்னது போல்..

யாருக்கு தெரியாவிட்டாலும் தவறென்று நம் மனசாட்சிக்குத் தெரியுமே.. அது கொடுக்கும் தண்டனை யார் கொடுப்பதை விடவும் கொடிது இல்லையா..??!!

எப்படியக்கா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... அருமை. பாராட்டுகள்.

வெகு நாட்களுக்கு பின் பின்னூட்டமிடுகிறேன்.. மன்னிக்கவும்.. அன்றே படித்திருந்தும் பதிலிட முடியவில்லை..

வாழ்த்துகள் கீதம் அக்கா. தொடருங்கள். :)

கீதம்
30-11-2011, 11:35 PM

நலமா பூமகள்?

தாமதமாய் கருத்திட்டாலும் தவறாமல் கருத்திட்டாயே...:icon_b:

மகிழ்வோடு நன்றி பூமகள்.

M.Jagadeesan
01-12-2011, 12:18 AM
தவறு செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் , மனசாட்சிக்குத் தப்பமுடியாது என்ற கருத்தை விளக்கும் அழகான கவிதை.
கவிதையில்
சீறிக்கொண்டு வரும் வார்த்தைகளில் மனதை
வாரிக் கொடுத்து விட்டேன்.

அக்னி
06-12-2011, 11:20 AM
தவறுகளை மறைப்பவன்
நல்ல மனிதனல்ல...
தவறுகளை (மனதாலும்) உணராதவன்
மனிதனேயல்ல...

வார்த்தைப் பிரயோகங்கள் மிக்க அழகு... கரு மிகவும் செறிவு... பாராட்டுக்கள் அக்கா...

கீதம்
26-12-2011, 04:55 AM
தவறு செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் , மனசாட்சிக்குத் தப்பமுடியாது என்ற கருத்தை விளக்கும் அழகான கவிதை.
கவிதையில்
சீறிக்கொண்டு வரும் வார்த்தைகளில் மனதை
வாரிக் கொடுத்து விட்டேன்.

தங்கள் மனந்திறந்த பாராட்டு கண்டு மகிழ்வோடு நன்றி நவில்கிறேன் ஐயா.

தவறுகளை மறைப்பவன்
நல்ல மனிதனல்ல...
தவறுகளை (மனதாலும்) உணராதவன்
மனிதனேயல்ல...

வார்த்தைப் பிரயோகங்கள் மிக்க அழகு... கரு மிகவும் செறிவு... பாராட்டுக்கள் அக்கா...

அழகான செறிவுள்ள கருத்துக்களை அநாயாசமாக முன்வைக்கிறீர்கள். பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்னி.

நாஞ்சில் த.க.ஜெய்
26-12-2011, 10:48 AM
சரியென பட்ட செய்கைகள் தமக்கு நிகழும் போது அது தவறென படுகையில் மீண்டும் அந்த தவறினை செய்ய மனம் தூடினாலும் தூண்டலாம் அல்லது தவறென உணரலாம்..ஆனால் மனம் உணர்ந்த தவறினை மீண்டும் மற்றவருக்கு இழைக்க தூண்டுமோ உண்மை உணர்ந்த மனசாட்சி...