PDA

View Full Version : பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் !!!Ravee
10-09-2011, 03:00 AM
http://1.bp.blogspot.com/_YSkWnKuSOXg/S6kv7uanmsI/AAAAAAAAABc/RrydFa_Dd_I/s640/tagreed.jpg

பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் !!!


கைக் குழந்தையாய் கவிழக்கூட தெரியாத போதில்

கைக்கெட்டும் தூரத்தில் தேடியது உன்னைத்தான்

கட்டி அனைத்து முத்தமழை பொழிந்து

நான் அழுதால் நீ அழுது நடமாடிய தெய்வம் நீ

பருவத்து காலமாற்றம் போல உறவு மாற்றங்களாய்

ஆச்சி , அத்தை , சித்தி என வரிசை கட்டி வந்தாய் நீ

வளர்ந்து வந்து வாசல் படிதாண்டி

கல்விக்கூடம் சென்ற போது

என் கை பிடித்து எழுதி ... விரல் மடக்கி கணக்கிட்டு ...

தாவி குதித்து பாடல்கள் பாடி ... கல்வி கண் திறந்த

சரஸ்வதியே ... குருவாய் என் வாழ்வில் நீ

வளர்ந்த வாலிப வயதில் வாழ்க்கை பயணத்தின் அர்த்தம் சொல்ல

என்னை கவர்ந்த ... நேசித்த எத்தனையோ பெண் வடிவாய்

எனக்குள் இருந்த என்னை என் முன் காட்டிய தோழிகளாய் நீ

வாழ்க்கையில் முன்னும் பின்னும் இடறும் போது

" என்னப்பா .... என்ன ஆச்சு " என்ற கனிவில்

காதலியாய் ... மனைவியாய் அன்றும் இன்றும் என்றும்

என்னுள் குடி கொண்ட இதயம் கவர்ந்த பெண்ணாய் நீ

கண் மூடி காணாமல் போய்

உன்னை தேடி நான் அழுத போது

கலகலப்பாய் சிரித்து முன் வந்து

போக்கு காட்டி போகும் என் பெண்ணும் நீ

இன்னும் வாழ்வில் எத்தனை வடிவில் நீ வருவாய்

மனம் இனிக்க இன்பங்கள் தருவாய்

என்று ஏங்கி ஏங்கி மயங்கிய போது

மாயா உருவத்தில் கோர முகம் காட்டி

கனவில் என்றும் என்னை கலைக்கும் பெண்ணே

கடவுளாய் வந்தால்

உனக்கு காளி முகம் எதற்கு

கனிவாய் காமாட்சியாய் வா ....

இறைவியாய் இருந்தால் என்னுள் இறங்கி

பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் என்று காட்டு !!!

கீதம்
10-09-2011, 06:53 AM
மாயா உருவத்தில் கோர முகம் காட்டி

கனவில் என்றும் என்னை கலைக்கும் பெண்ணே

கடவுளாய் வந்தால்

உனக்கு காளி முகம் எதற்கு

கனிவாய் காமாட்சியாய் வா ....

இறைவியாய் இருந்தால் என்னுள் இறங்கி

பெண்மைக்கு இன்னும் எத்தனை முகங்கள் என்று காட்டு !!!காணாத முகங்களைக் காட்டச் சொல்கிறீர்,

காளியாயிருந்துவிட்டால் மாற்றச் சொல்கிறீர்,

காளியாய் இருந்தால் என்ன? காமாட்சியாய் இருந்தால் என்ன?

கனிவாய் நோக்குங்கள், கனிவாள் அவளும்!

காரணம் அவளும் பெண்தானே!

கருணை
10-09-2011, 07:15 AM
காணாத முகங்களைக் காட்டச் சொல்கிறீர்,

காளியாயிருந்துவிட்டால் மாற்றச் சொல்கிறீர்,

காளியாய் இருந்தால் என்ன? காமாட்சியாய் இருந்தால் என்ன?

கனிவாய் நோக்குங்கள், கனிவாள் அவளும்!

காரணம் அவளும் பெண்தானே!


அதானே .... சரியாய் சொன்னீங்க அம்மா .......... அங்கிள் யாரை பார்த்து பயந்து போனீங்க .... :lachen001: :D :lachen001:

Ravee
10-09-2011, 07:22 AM
காணாத முகங்களைக் காட்டச் சொல்கிறீர்,

காளியாயிருந்துவிட்டால் மாற்றச் சொல்கிறீர்,

காளியாய் இருந்தால் என்ன? காமாட்சியாய் இருந்தால் என்ன?

கனிவாய் நோக்குங்கள், கனிவாள் அவளும்!

காரணம் அவளும் பெண்தானே!


ஹா ஹா ஹா .... அந்த அளவு வலிமையான இதயம் இல்லையே அக்கா ... பார்க்க பயமா இருக்கே ... :p

Ravee
10-09-2011, 07:26 AM
அதானே .... சரியாய் சொன்னீங்க அம்மா .......... அங்கிள் யாரை பார்த்து பயந்து போனீங்க .... :lachen001: :D :lachen001:


என்ன அதானே சிங் சா ... போடாதே :icon_nono: ... பார்த்து :sprachlos020: பயந்தது நான்தானே... :eek:

Nivas.T
10-09-2011, 12:20 PM
ஆவதும் பெண்ணாலே என்று சொல்வது தவறு

ஆவது அனைத்தும் பெண்ணாலே என்றால் தகும்.

கவிதை பிரமாதம் அண்ணா, அனுபவித்து எழுதியது நன்கு தெரிகிறது.

அண்ணனுக்கு வீட்ல ஏதோ பிரச்சன போல, அண்ணிகிட்ட சொல்லி ரொம்ப பயமுருத்தாதிங்கன்னு சொல்லி வைக்கணும், எப்டி பயந்திருக்காறு மனுஷன், ஐயோ பாவம் :D:D:D:D:D:D:D

seguwera
10-09-2011, 01:40 PM
கவிதை நன்றாக இருக்கிறது பெண்மை பற்றிய கவிதையில் காதலையும் காதலின் ஏக்கத்தையும் அருமையாய் தந்திருக்கிறார்

Ravee
10-09-2011, 09:32 PM
கவிதை நன்றாக இருக்கிறது பெண்மை பற்றிய கவிதையில் காதலையும் காதலின் ஏக்கத்தையும் அருமையாய் தந்திருக்கிறார்


நன்றி சேகுவாரா ........ கனிவான கனியாக இருந்தால் நலம் காயாய் இருப்பதால் ஏது பயன் சொல்லுங்கள் ... :p

Narathar
10-09-2011, 09:36 PM
நம்ம ரவீ ஆத்துக்காரியோட தொலைபேசி இலக்கம் யாருக்காவது தெரியுமா???
நாராயணா!!!! பாவம் ரவீக்கு அடிக்கடி கனவு வருதாம் என்னன்னு கவனிக்கச்சொல்லனும்!

Ravee
10-09-2011, 09:43 PM
ஆவதும் பெண்ணாலே என்று சொல்வது தவறு

ஆவது அனைத்தும் பெண்ணாலே என்றால் தகும்.

கவிதை பிரமாதம் அண்ணா, அனுபவித்து எழுதியது நன்கு தெரிகிறதுகவிதை நன்றாக இருக்கிறது பெண்மை பற்றிய கவிதையில் காதலையும் காதலின் ஏக்கத்தையும் அருமையாய் தந்திருக்கிறார்

அட உங்க கண்ணுக்கு பெண்மையில் காதலும் ஏக்கமும் தான் தெரிந்ததா .... ம்ம்ம்ம் வயசு அப்படி .... தம்பி இன்னும் இரு முறை கவிதையை வாசியுங்கள் .... தாய்மை , கடமை , அக்கறை , பாசம் என பெண்மை காட்டும் பல முகங்களும் காட்டி உள்ளேனே ... பெண்மையில் உள்ள சில குறைகள் என அதை காளி வடிவில் சுட்டி காட்டி உள்ளேன். பெண்மையின் அகங்காரத்தை களைய வைத்து மீண்டும் அவளின் பெண்மையை விழிப்படைய சிவன் ஆடிய நடனம்தான் என் வார்த்தைகள் இங்கே ... :p

Ravee
10-09-2011, 09:48 PM
நம்ம ரவீ ஆத்துக்காரியோட தொலைபேசி இலக்கம் யாருக்காவது தெரியுமா???
நாராயணா!!!! பாவம் ரவீக்கு அடிக்கடி கனவு வருதாம் என்னன்னு கவனிக்கச்சொல்லனும்!


நாரதா நாரதா முதல்ல உங்க வீட்டு இலக்கம் என்னன்னு சொல்லுங்க ... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :frown: :sprachlos020: :lachen001:

Narathar
10-09-2011, 09:49 PM
எந்த வீட்டு இலக்கம்???
நமக்கு யாதும் ஊரே
யாவரும் கேளீர்.

Ravee
10-09-2011, 09:53 PM
எந்த வீட்டு இலக்கம்???
நமக்கு யாதும் ஊரே
யாவரும் கேளீர்.

ஆஹா எந்தப்பக்கம் போனாலும் எஸ்கேப் ஆகுரிரே நாரதா ... சரி இந்தப்பக்கம் வரும் போது தகவல் தாருங்கள் ... சந்திப்போம் ... :lachen001: