PDA

View Full Version : மரண வேதனை.........



meera
08-09-2011, 08:13 AM
இதயத்தின் வலி
இன்று தான் உணர்ந்தேன்
தாயின் பாசம்
தாய் நாட்டின் அருமை
உணர்ந்த நேரம்
உறவிழந்து உரிமையிழந்து
அன்னிய நாட்டில் அனாதையாய்..

"வா பா சாப்பிடலாம்"
அம்மாவின் அழைப்பு..
"வா மாமா விளையாடலாம்"
அக்கா குழந்தையின் மழலை மொழி
மனதில் ஒலிக்க
மரண வேதனை
மனதை பிசைய...
கண்களை இறுக மூடிக்கொண்டேன்
கனவில் கண்ட உறவுகள்
கலைந்துவிடாமலிருக்க..........

கீதம்
08-09-2011, 09:55 AM
பிரிவின் வேதனைகள் பழகப் பழக மரத்துப் போகுமாம். பழகாத, பழகவிரும்பாத மனங்களுக்கு அது என்றுமே மரணவேதனைதான். உணர்ந்து எழுதியிருக்கீங்க, மீரா.

sathyalan
08-09-2011, 12:36 PM
நல்ல பதிவு

seguwera
08-09-2011, 02:55 PM
"அன்னிய நாட்டில் அனாதையாய்.."

இந்த வரிகளே போதும் வலியை உணர்த்த

நன்றாக இருக்கிறது மீரா

meera
09-09-2011, 06:32 AM
பிரிவின் வேதனைகள் பழகப் பழக மரத்துப் போகுமாம். பழகாத, பழகவிரும்பாத மனங்களுக்கு அது என்றுமே மரணவேதனைதான். உணர்ந்து எழுதியிருக்கீங்க, மீரா.

நன்றி கீதம். பழகிக்கொள்ள நினைத்தாலும் இந்த உணர்வுகளை வெல்வது சாத்தியமல்ல தோழி:eek::eek:

meera
09-09-2011, 06:38 AM
நல்ல பதிவு

பின்னூட்டத்திற்கு நன்றி தயா.

meera
09-09-2011, 06:39 AM
"அன்னிய நாட்டில் அனாதையாய்.."

இந்த வரிகளே போதும் வலியை உணர்த்த

நன்றாக இருக்கிறது மீரா


மிக்க நன்றி சேகுவரா . வெளிநாடு வாழ் நண்பர்களின் இன்றைய நிலை இப்படித்தானே இருக்கிறது

Nivas.T
09-09-2011, 04:11 PM
சொல்வதற்கு ஒன்றுமில்லை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

உணர்ச்சி வரிகள்

கவிதை அருமை

பாரட்டுகளுங்க மீரா

அமரன்
13-09-2011, 08:45 PM
இந்தக் கனவு பூத்தது
எந்த மனச்செடியில்..?

வறுமை அறுத்து எறிந்த
உருக் குலைந்த புலம்பெயர் மனத்திலா?

கொடி உறவு இடம் மாற்றிய
தலை மாறிய இடம்பெயர் மனத்திலா?

உரிமை பிடுங்கி எறிந்த
பேரிடி விழுந்த பெயரிலா மனதிலா?

பூ ஓரினம்தான்..

வேதனை வீச்சோ பல விதம்.

அதிலும்
பெயரில்லா மனசில் பூத்தது
கைப்பெண் முற்றத்து மல்லிகைப் பூ.

மீராக் கவிதை!
இயல்பு மீறாக் கவிதை.

aren
14-09-2011, 05:34 AM
என்ன செய்வது மீரா. நம்ம பிரச்சனை ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லையே. அவர்கள் நாம் ஏதோ சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.

அகத்தியன்
14-09-2011, 05:48 AM
ஆரம்பிக்கும் போது அப்படித்தான் இருக்கும் பிறகு அதுவே பழகிவிடும்..

கவிதை - உறவுகளின் பிரிவுத் துயர் சுமந்து வந்தது.. நன்றாக உள்ளது

meera
15-09-2011, 06:05 AM
சொல்வதற்கு ஒன்றுமில்லை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

உணர்ச்சி வரிகள்

கவிதை அருமை

பாரட்டுகளுங்க மீரா

பல நேரங்களில் அனுபவித்த வலிகளே கவிதைகளாய் உருமாருகிறது.

பாராட்டுக்கு நன்றி நிவாஸ்.:traurig001:

meera
15-09-2011, 06:11 AM
இந்தக் கனவு பூத்தது
எந்த மனச்செடியில்..?

வறுமை அறுத்து எறிந்த
உருக் குலைந்த புலம்பெயர் மனத்திலா?

கொடி உறவு இடம் மாற்றிய
தலை மாறிய இடம்பெயர் மனத்திலா?

உரிமை பிடுங்கி எறிந்த
பேரிடி விழுந்த பெயரிலா மனதிலா?

பூ ஓரினம்தான்..

வேதனை வீச்சோ பல விதம்.

அதிலும்
பெயரில்லா மனசில் பூத்தது
கைப்பெண் முற்றத்து மல்லிகைப் பூ.

மீராக் கவிதை!
இயல்பு மீறாக் கவிதை.


அமரன் அண்ணா பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஒரு முறை வறுமையை காரணம் காட்டி வேற்றிடம் வந்துவிடுகிறோம். ஆனால் வறுமை மறைந்தாலும் வந்த வழி திரும்பும் மார்க்கம் தான் கண்களுக்கு தெரிவதே இல்லை.

நீங்கள் சொல்வதின் ஆழம் புரிகிறது. வறுமை தான் காரணம் என்றால் என்றாவது ஒரு நாள் திரும்பிவிடுவோம். ஆனால் காரணம் வேறானால்?????????:confused::confused:

meera
15-09-2011, 06:16 AM
என்ன செய்வது மீரா. நம்ம பிரச்சனை ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லையே. அவர்கள் நாம் ஏதோ சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.

உண்மை தான் அண்ணா. நம் வேதனை நமக்கு.

வெளிநாட்டில் வாழ்வதை விட சொர்க்கம் வேறென்னா என்பது சொந்தங்களின் எண்ணம். ஆனால் சொந்தமண்ணில் கணவரோடும் குழந்தைகளோடும் வாழ்வதே சொர்க்கம் என்பது யாருக்கு தெரிகிறது.

நன்றி அண்ணா.

meera
15-09-2011, 06:18 AM
ஆரம்பிக்கும் போது அப்படித்தான் இருக்கும் பிறகு அதுவே பழகிவிடும்..

கவிதை - உறவுகளின் பிரிவுத் துயர் சுமந்து வந்தது.. நன்றாக உள்ளது

நன்றி அகத்தியன். எல்லாம் பழக பழக சரியாகிவிடும் என்று தேற்றிக்கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது.

பூமகள்
15-09-2011, 11:39 AM
என்ன செய்வது மீரா. நம்ம பிரச்சனை ஊரில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லையே. அவர்கள் நாம் ஏதோ சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.

நிதர்சனம்... சொர்க்கத்தில் இருப்பவருக்கு இங்குள்ள கஷ்டம் தெரியுமா என்ன என்பது போல் சொல்வது இன்னும் கொடுமை...

அன்பின் ஆழம் பிரிந்திருப்பதில் தான் கூடுகிறது.. உறவுகள் புரிந்து கொண்டால் இல்லை இவ்வேதனை. :frown:

அமர் அண்ணாவின் பின்னூட்டம் முத்தாய்ப்பு...

பாராட்டுகள் மீராக்கா. :)

சிவா.ஜி
20-09-2011, 03:58 PM
பிரிவின் வலி இருபுறமும் இருந்தாலும், சுற்றமும், நட்பும் சூழ்ந்த சூழலில்..அந்தப்பக்கம் கொஞ்சமே கொஞ்சம் வலி குறைவாய் தெரியும்....ஆனால்....கனவில் மட்டுமேக் காணக்கிடைக்கும் உறவுகளின் நினவின் வலி இந்தப்பக்கம் கொஞ்சம் அதிகமே.

அனுபவித்தவன்......இந்த கவி வரிகளையும் அனுபவிக்கிறேன் மீராம்மா. வாழ்த்துக்கள்.

Ravee
20-09-2011, 08:03 PM
பிரிவின் வலிகளை வாங்கி கொண்டு வாழும் போது எப்போது பிரிகிறீர்கள் என்று காலடியில் உள்ள நிலமும் பிளக்கிறதே .... இந்த வலிகளை பற்றி என்ன சொல்விர்கள் ... மீரா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-09-2011, 04:26 PM
இப்படித்தான் நானும் ஒரு காலத்தில் புலம்பிக்கொண்டிருந்தேன். காக் கஞ்சியெனினும் அது நம் தேசக் கஞ்சியாக வேண்டுமென்று அரக்க பறக்க வந்து சேர்ந்தேன் எல்லாம் துறந்து. நல்ல கவிதை மீரா. உணவுக்காக உறவுகளை விடுத்தத் தனத்தை வடித்த விதம் அருமை. பாராட்டுக்கள்.

கோபாலன்
24-09-2011, 06:17 PM
நல்ல கவிதை . வலிகளின் தடம் வடுவாய் நெஞ்சில் ....... உங்கள் வலிகளை நாங்களும் பகிர்கிறோம் ..

பிரேம்
25-09-2011, 12:59 AM
அருமை....நானும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்..

kalaiselvan2
25-09-2011, 03:14 PM
அருமையான கவிதை
பிரிவின் வலியை அழகாக பிரதிபளித்துள்ளீர் சகோதரி

பென்ஸ்
28-09-2011, 11:58 AM
பிரிவு வாட்டுவதுதான்... அதன் துயரம் கொடியதுதான்....
சில பிரிவுகள் நம்மை தேடி வருவது.. நில பிரிவுகள் நாமாய் தேடி கொள்வது....

தேவைகளை சரியாக உணர்ந்து கொண்டால் பிரிவோ துயரமோ தாங்கி கொளும் நிலையிலே...
நல்ல கவிதை... வலிக்கிறது...

வெங்கி
28-09-2011, 01:44 PM
கனவுகள் கலைந்தாலும்...உறவுகள் என்றும் கலையாது(பிரியாது).... நல்ல ஒரு வார்த்தை பிரயோகம் ...