PDA

View Full Version : தமிழின் சொல்வளம்



குணமதி
07-09-2011, 10:52 AM
தமிழின் சொல்வளம் - மாலைகள்

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தொகுத்தளித்தவை.

கண்ணி - இரு, இரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை.

தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டிய மாலை.

தார் - கட்டிய மாலை.

கதம்பம், கத்திகை - பல்வகைப் பூக்களால் தொடுத்த மாலை.

படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை.

தெரியல் - தெரிந்தெடுத்த மலரால் ஆய மாலை.

அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை.

தொடலை - தொடுத்த மாலை.

பிணையல் - பின்னிய மாலை.

கோவை - கோத்த மாலை.

கோதை - கொண்டை மாலை.

சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை.

சூட்டு - நெற்றி மாலை.

ஆரம் - முத்து மாலை.


17-8-2011 "தெளிதமிழ்" இதழுக்கு நன்றி.

seguwera
07-09-2011, 03:21 PM
மாலைகளில் இத்தனை உண்டா உண்மையில் பாவாணர் தொகுப்பு அருமை.

கீதம்
08-09-2011, 09:25 AM
கண்ணி, கதம்பம், ஆரம் ஆகியவை மட்டுமே இன்று புழங்கப்படும் வார்த்தைகளாக உள்ளன. மற்றவை இதுவரை அறிந்திராதவை. பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

குணமதி
18-11-2011, 06:37 AM
கருத்துரைத்த இருவர்க்கும் நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2011, 09:56 AM
அமுது மொழியின் மாலை அணிவகுப்புகள் அருமை குணமதி அவர்களே ...என்ன ,அதில் உள்ள ஒன்றிரெண்டை தவிர மற்ற எதையும் கேள்வி பட்டதில்லை ..