PDA

View Full Version : மூக்கு



M.Jagadeesan
31-08-2011, 06:58 AM
மூக்கின் அழகே முகத்தழகு என்பது
முன்னோர்கள் சொன்ன மொழி.

பெண்கள்
மூக்கும் முழியுமாக இருந்தால்
பாக்கும் வெற்றிலையும் வைத்து
பரிசம் போட வருவார்கள்.

திருமணச் சந்தையில்
கிளிமூக்குப் பெண்களுக்கு வரதட்சிணை
துளிகூடக் கொடுக்காமல் திருமணத்தை
முடித்திடலாம்.

நாக்கும் மூக்கும் நல்ல நண்பர்கள்
மூக்கிலே சளி பிடித்தால்
நாக்கிலே சுவை தெரியாது.
நாக்குக்கு சுவையாக உணவிருந்தால்
மூக்குப் பிடிக்க சாப்பிடும் வழக்கமுண்டு

முன்னாள் பிரதமர்
இந்திரா காந்தியின் மூக்குக்கு
இணையான மூக்கு ஒன்று
இந்தியத் துணைக் கண்டத்தில் யாருக்கும்
இதுவரையில் இருந்ததில்லை..

நமக்குத் தெரியாத விஷயங்களில்
மூக்கை நுழைத்தால்
மூக்கறுபட்டு மூலையிலே உட்கார வேண்டியதுதான்.

என்றுமே மூக்குக்கும் கண்ணுக்கும்
ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணிலே அணிகின்ற கண்ணாடிக்கு
மூக்குக் கண்ணாடி எனப்பெயர் வருவானேன்?
மூக்கிலே அணிகின்ற மூக்குத்திக்கு
" கண்குத்தி " என்றால் ஒப்புவரோ?

மூக்குத்தி அணிந்தால்
முகத்தின் அழகு
மும்மடங்கு அதிகமாகும்.

மூக்கின் இருபுறமும்
மூக்குத்தி அணிந்து
எம்.எஸ். அவர்களின்
பாடும் அழகைக் காணக்
கண்கோடி வேண்டும்.

கமலக்கண்ணன் என்றும் செந்தாமரைக்
கண்ணன் என்றும் முண்டகக்கண்ணி என்றும்
அங்கயற்கண்ணி என்றும் ஆயிரம் பெயர்வைத்து
கண்ணுக்குப் பெருமை செய்வோர்
மூக்கழகு கொண்டவனை ' மூக்கன்' என்றும்
மூக்கழகு கொண்டவளை ' மூக்கி' என்றும்
முன்மொழிய யாரும் வருவதில்லையே!

இதயத்தின் வாசல் கண்கள் என்றால்
நுரையீரலின் வாசல் மூக்கு ஆகும்
அவ்வாசலை
மூக்குப் பொடியிட்டு அடைத்து
சாக்கடையாய் மாற்றாதீர்!

மூக்குக்கு மேலே கோபம் வருவதால்
மூண்ட சண்டைகள் ஏராளம் உண்டு.
இலக்குவனால்
மூக்கறுபட்ட சூர்ப்பனகை இராமாயணத்தின்
போக்கையே மாற்றி அமைத்தாள்.

நம் வீட்டில்
அடை சுட்டாலும், வடை சுட்டாலும்
அண்டை வீட்டுக்காரனுக்கு மூக்கிலே வியர்த்து
அடுத்த நிமிடம் நம்வீட்டின் அடுக்களையில் வந்து நிற்பான்.

நம்மிடம்
வாக்கிலே நேர்மையும்
நோக்கிலே தூய்மையும்
இருந்தால் பிறர் தங்கள் மூக்கிலே விரல் வைத்து
அதிசயத்துடன் பார்ப்பர்.

கலைவேந்தன்
31-08-2011, 07:25 AM
மூக்கைப் பற்றிய ’மூக்கிய’ விவரங்களைப் பொதிந்து வரையப் பட்ட கவிதை அருமை ஜகதீசன்..!

M.Jagadeesan
31-08-2011, 07:49 AM
பாராட்டுக்கு நன்றி! கலைவேந்தன்.

கீதம்
31-08-2011, 11:07 AM
மூக்கின் அழகே முகத்தழகு என்பது
முன்னோர்கள் சொன்ன மொழி.

பெண்கள்
மூக்கும் முழியுமாக இருந்தால்
பாக்கும் வெற்றிலையும் வைத்து
பரிசம் போட வருவார்கள்.

திருமணச் சந்தையில்
கிளிமூக்குப் பெண்களுக்கு வரதட்சிணை
துளிகூடக் கொடுக்காமல் திருமணத்தை
முடித்திடலாம்.

சிருங்காரம் :icon_blush:


நாக்கும் மூக்கும் நல்ல நண்பர்கள்
மூக்கிலே சளி பிடித்தால்
நாக்கிலே சுவை தெரியாது.
நாக்குக்கு சுவையாக உணவிருந்தால்
மூக்குப் பிடிக்க சாப்பிடும் வழக்கமுண்டு

கருணை :innocent0002:


நமக்குத் தெரியாத விஷயங்களில்
மூக்கை நுழைத்தால்
மூக்கறுபட்டு மூலையிலே உட்கார வேண்டியதுதான்.

பயம் :sprachlos020:


என்றுமே மூக்குக்கும் கண்ணுக்கும்
ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணிலே அணிகின்ற கண்ணாடிக்கு
மூக்குக் கண்ணாடி எனப்பெயர் வருவானேன்?
மூக்கிலே அணிகின்ற மூக்குத்திக்கு
" கண்குத்தி " என்றால் ஒப்புவரோ?


கமலக்கண்ணன் என்றும் செந்தாமரைக்
கண்ணன் என்றும் முண்டகக்கண்ணி என்றும்
அங்கயற்கண்ணி என்றும் ஆயிரம் பெயர்வைத்து
கண்ணுக்குப் பெருமை செய்வோர்
மூக்கழகு கொண்டவனை ' மூக்கன்' என்றும்
மூக்கழகு கொண்டவளை ' மூக்கி' என்றும்
முன்மொழிய யாரும் வருவதில்லையே!

வீரம் :icon_nono:


மூக்குத்தி அணிந்தால்
முகத்தின் அழகு
மும்மடங்கு அதிகமாகும்.

மூக்கின் இருபுறமும்
மூக்குத்தி அணிந்து
எம்.எஸ். அவர்களின்
பாடும் அழகைக் காணக்
கண்கோடி வேண்டும்.

சாந்தம் :)


இதயத்தின் வாசல் கண்கள் என்றால்
நுரையீரலின் வாசல் மூக்கு ஆகும்
அவ்வாசலை
மூக்குப் பொடியிட்டு அடைத்து
சாக்கடையாய் மாற்றாதீர்!

அருவருப்பு :aetsch013:


மூக்குக்கு மேலே கோபம் வருவதால்
மூண்ட சண்டைகள் ஏராளம் உண்டு.
இலக்குவனால்
மூக்கறுபட்ட சூர்ப்பனகை இராமாயணத்தின்
போக்கையே மாற்றி அமைத்தாள்.

கோபம் :sauer028:


முன்னாள் பிரதமர்
இந்திரா காந்தியின் மூக்குக்கு
இணையான மூக்கு ஒன்று
இந்தியத் துணைக் கண்டத்தில் யாருக்கும்
இதுவரையில் இருந்ததில்லை..


நம் வீட்டில்
அடை சுட்டாலும், வடை சுட்டாலும்
அண்டை வீட்டுக்காரனுக்கு மூக்கிலே வியர்த்து
அடுத்த நிமிடம் நம்வீட்டின் அடுக்களையில் வந்து நிற்பான்.

ஹாஸ்யம் :lachen001:


நம்மிடம்
வாக்கிலே நேர்மையும்
நோக்கிலே தூய்மையும்
இருந்தால் பிறர் தங்கள் மூக்கிலே விரல் வைத்து
அதிசயத்துடன் பார்ப்பர்.

அற்புதம்:icon_b:

நவரசங்களையும் மூக்கிலே ஏற்றிவிட்டு நல்லதோர் கவி படைத்துவிட்டீர்.

மூக்கிலே விரல்வைத்து நானும் வியந்து பாராட்டுகிறேன். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
31-08-2011, 12:20 PM
மூக்குக் கவிதையை அலசிய விதம் அருமை!
பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்.

Nivas.T
31-08-2011, 01:20 PM
பிரமாதம் ஐயா

மிக வித்தியாசமான கவிதை

கீதம் அவர்களின் அலசலும் மிக நன்று

ரசிக்கவைத்தது

seguwera
31-08-2011, 01:51 PM
மூக்கப்பத்தி இவ்வளவு சுவாரஸ்யமாக யாரும் சொன்னதில்லை.
சும்மாவா அவர் ஊரும் "கார" ப்பக்கம்
அதான் காரம் முக்குல ஏறுது.
நன்றி ஜெகதீசன் அய்யா

கௌதமன்
31-08-2011, 02:57 PM
இதைத்தான் எந்தமிழ் நாட்டின் எல்லோரும் உணரும் வண்ணம் 'நாக்க மூக்க' என்ற ஒலிக்காவியத்தை படைத்திட்டார் நம் இனிய திரையுலகினர்.

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2011, 05:18 PM
:aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033:

M.Jagadeesan
31-08-2011, 05:28 PM
பாராட்டுக்கள் நல்கிய நிவாஸ், சேகுவேரா, கெளதமன், நாஞ்சில் த.க.ஜெய் ஆகியோருக்கு நன்றி!

jaffer
11-10-2011, 10:32 AM
மூக்கு பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் கவிதை வரிகள் பிரமாதம்