PDA

View Full Version : உருகினாள்.... கருகினாள்....



ஷீ-நிசி
29-08-2011, 06:08 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Sengodi.jpg


August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

இந்த செய்தியின் தாக்கத்தால் மனம் வருந்தி விளைந்த கவிதை… இனி மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது இறைவா…

பத்தினி என்று நிரூபிக்க
தீக்குளிப்பார்கள் பெண்கள்....

பத்தி நீ எரிந்தது
எதை நிரூபித்திட பெண்ணே?!!

தூக்கிற்கிரையாக
போகிறவர்களை நினைத்து
தீக்கிற்கிரையாகினாயோ?!! -

செங்கொடியே....
செந்தீயில்தான் கருகினாயோ?!

மூவர்.....
உயிரின் மேன்மையை
உணர்த்த மறைந்தாய்!!

உன்..
உயிரின் மேன்மையையோ
உணர மறந்தாய்!!

'தீ'யவளை முத்தமிட்ட
தூயவளே...

உனக்காகவேனும்
மூவரின் மரணம்
ரத்தாகட்டும்..

மீண்டும் நீ ஜனித்திட
உன்னுயிர் இப்பூமியில்
வித்தாகட்டும்...

ஷீ-நிசி

Nivas.T
29-08-2011, 07:45 PM
தூய தமிழச்சியே உன்போன்றோர் உள்ளவரை தமிழினம் என்றும் பிழைத்திருக்குமம்மா உமக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் நாங்கள்

கீதம்
30-08-2011, 01:48 AM
அன்னா ஹஸாரே போல் வாழ்ந்து சாதிக்கவேண்டும், இப்படி உயிரை மாய்த்து அல்ல!

இனிவரும் தலைமுறையாவது இதுபோன்ற செயல்களில் இறங்காமல் மன உறுதியுடன் போராடி வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை சேர்க்கவேண்டும்.

எத்தனையோ தீக்குளித்தவர்களை மறந்த தேசமிது. அறியாப்பேதை, இவளைப் பெற்றவளை சற்று நினைத்திருக்கலாம்.

போராட எத்தனையோ வழிகளுண்டு. ஏனோ இந்த அவலப் போராட்டம்?

மனம் கனக்கிறது, ஷீ-நிசி!

கலைவேந்தன்
30-08-2011, 06:07 AM
அவள் செய்தது தவறு என்றாலும் அந்த உணர்வை மதிக்கிறேன்..

மனம் கனக்க வைக்கும் வரிகள் ஷீநிசி.. பாராட்டுகள்..!

ஷீ-நிசி
30-08-2011, 02:28 PM
இந்தக் கவிதை எழுதும்போது அப்பெண்ணின் செயலை குற்றம்சொல்லும்படியாய் இல்லாமலும், அதேசமயம் பாராட்டும்படியாய் இல்லாமலும் எழுதவேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொண்டேன்...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...

seguwera
30-08-2011, 05:04 PM
தூக்கிற்கு முன்னே துணிந்துவிட்டாய்
இழப்பதற்கு உன் உயிரை.
உன் ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் இதேவேளையில்
எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் தூக்கு தண்டணனை ரத்து செய்தியை. இன்னும்ஒரு உயிரை இதுபோல நாங்கள் இழக்காமல் இருக்க.
நிச்சயம் தூக்கு தண்டனை ரத்தாக வேண்டும்

Mano.G.
31-08-2011, 01:06 AM
உயிர் தியாகம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று, வேற்று வழிகளில் அதை சாதித்திருக்கலாமே, ஏன் உன் உயிரை பலிகொடுத்துதான் இதை சாதிக்க வேண்டுமோ, எனகென்னவோ அன்ன ஹசாரேயின் ஊழழுக்கு எதிரான உண்ணாவிரத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களை திசைதிருப்ப எடுக்கப்பட்ட திட்டமோ என படுகிரது இந்த மூவரின் தூக்கு தண்டனை விவகாரம்.

ஷீ-நிசி
31-08-2011, 01:52 AM
@சேகுவேரா....

நல்லதே நடக்கும் காத்திருப்போம்

@மனோ அண்ணா...

திசை திருப்பவதற்காக கருணை மனு நிராகரிப்பு நடந்திருக்கலாம்... ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியும் எதிர்ப்பும் தமிழ்ச்ச்கோதரர்களின் உயிர் மீது கொண்ட அக்கறையினால் ஏற்பட்டவை என்பதை நாம் மறுக்க முடியாது.