PDA

View Full Version : கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)



கலைவேந்தன்
28-08-2011, 06:16 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 1


’’ என்னங்க, நீங்க வெளியில போயிருந்தப்ப மகேந்திரன் வந்து இருந்தான். இன்னும் எத்தனை வருஷத்துக்கு கடனை திருப்பித் தராம இழுத்து அடிப்பார்னு கத்திட்டுப் போறான். ‘’

மனைவி மங்களத்தின் வரவேற்புரையில் மனம் வெறுத்தான் ராகவன். இது ஒன்றும் புதிதில்லை அவனுக்கு. மாதம் நான்கைந்து பேர் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்கேட்டு கத்திவிட்டுப் போவதும் வட்டியை வாங்கிப்போவதும் வழக்கமாகிப்போய் விட்டது.

வெயிலில் அலைந்து திரிந்து ஞாயிற்றுக் கிழமையின் சுகத்தைக் கூட அனுபவிக்க இயலாமல் ஒரு வங்கியின் லோன் மேனேஜரை வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டு களைத்துப்போய் வந்திருந்தான். எப்படியாவது குறிப்பிட்ட தொகையை லோன் போட்டுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து அனுப்பி இருந்தார். உபசாரத்திற்குக் கூட ஒரு காபி குடிக்க விசாரிக்க வில்லை. அதைப் பெரிது படுத்தும் மன நிலையிலும் அவன் இல்லை. ஒருவர் சம்பளத்தில் குடும்பம் ஓட்டும் பலரது நிலைமை இது தான்.

சட்டென்று வங்கிக்கணக்கின் பாஸ்புக் அப்டேட் செய்து வரவேண்டும் என்ற நினைவு வந்தது. வங்கிக்கு திங்கள் விடுமுறை என்பதால் இன்றே சென்று வருவது நல்லது என்று நினைத்தான்.

கழட்டிய சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்ட ராகவன் பேங்க் பாஸ்புக்கை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூன்றாம் மாடியில் இருந்து கீழிறங்கினான்.மூன்றுமாதக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குடியிருப்பில் மாத வாடகைக்கு குடியிருக்கும் 35 வயதான ராகவன் பிசிஏ முடித்து ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் அவனது குடும்பப் பொறுப்பின் - இரண்டு தங்கைகள் ஒரு தம்பி இவர்களைக் கரையேற்றும் முயற்சிகளின் - காரணமாக அளவுக்கதிகமாக கடன் வாங்கி இன்று அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறான்.

கீழே பைக் பார்க்கிங் மிகவும் நெரிசலான ஒன்று. சென்னையின் புற நகர்ப்பகுதியில் அமையும் பல அடுக்குமாடிக் கட்டடங்களின் அவதி நிலை போல் தான் இதுவும். பைக்குகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டு குறுகலான இடத்தில் ஒழுங்கற்று இருக்கும். இதற்கிடையில் கீழ்த்தளத்தில் கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் பழுது பட்ட ஜெராக்ஸ் மெஷின்கள் வேறு தாறுமாறாக போடப்பட்டு பார்க்கிங்குக்கு இருக்கும் குறைந்த இடத்தையும் ஆக்கிரமித்து நின்றன.

தனது பைக்கை எடுக்க முயன்ற போது அது மிகவும் சிக்கலாக மாட்டிக்கொண்டு இருப்பதை அறிந்தான். அடுத்திருந்த ஒரு பைக்கை முக்கி முயன்று ஒதுக்கி கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்தி தனது பைக்கை எடுகக் முயன்ற போது பழைய ஜெராக்ஸ் மெதின்களுக்கிடையில் சிக்கி இருந்த பழுப்பு நிறக்கவரின் சிதைந்த பகுதி பைக்கின் மட்கார்டில் சிக்கிக்கொண்டு இருந்ததை கவனித்தான். மெல்ல அதை கையால் அசைத்து நீக்க முயன்றபோது அது பழைய கொரியர் ஒன்றின் அழுத்தமான உறையின் ஒரு மூலை சிதைந்து மாட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டான்.

அதை வெளியில் எடுத்து கவரைப் பரிசோதித்த போது அதற்குள் சிடி போன்று கடினமாகத் தென்பட்டது. ஈரத்தில் சிதைந்து கலைந்திருந்த கவரில் இருந்த முகவரியைக் கவனமாக ஊகித்து படிக்க முயன்ற போது முகவரி இவ்வாறு இருந்தது.

க. நீலமேகம் எண் : 3/ 19, தெற்கு வீதி, கும்பகோணம்.

தேதி முதலானவை கலைந்து போயிருந்த நிலையில் மறுபக்கம் பார்த்ததில் பலமுறை டெலிவரி செய்ய முயன்று ‘ டோர் லாக்ட் ‘ முத்திரைகள் பதியப்பட்டு இருந்தன.

கேட்பாரற்று சிதிலமடைந்து விட்ட அந்த பழுப்பு நிற கவரைப்பிரித்துப் பார்த்த போது ஒரு கடிதமும் ஒரு சிடி பிளாஸ்டிக் பாக்ஸுடன் இருந்தது தெரிந்தது.

கடிதத்தைப் பிரித்து பார்த்த போது அது மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககத்திலிருந்து அனுப்பப் பட்ட கடிதமென்றும் ‘’ மாற்றுத்திறனாளிகள் - மறுவாழ்வு முறைகள் ‘’ என்னும் தலைப்பிலான ஒரு சிடி அத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்க விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி அரசாங்க எந்திர வார்த்தைகளுடன் எழுதப்பட்டு இருந்தது.

ராகவனுக்கு அதில் ஏதோ வினோதம் தட்டுப்பட்டது. என்னதான் இருக்கும் அந்த சிடியில் என்ற ஆர்வம் அவனுக்குள் எழுந்தது விதியின் வினோத விளையாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும்.


துடிப்புகள்... தொடரும்..!

கலைவேந்தன்
29-08-2011, 02:29 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 2


அமைச்சர் ஆற்காடு ஆறுமுகத்தின் ஒரே முகத்தில் எள்ளும் கொள்ளும் பொரிந்து கொண்டு இருந்தது. அன்று காலைமுதலாகவே அனைவருடனும் சிடுசிடுப்புடன் பேசியது கண்டு அவரது மனைவி விசாலத்துக்கு வியப்பும் பயமும் ஒரு சேர அலைக்கழித்தது.

ஏற்கனவே எழுபதை நெருங்கிக்கொண்டு இருந்த ஆ ஆறுமுகத்துக்கு இரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் ஏகத்துக்கு எகிறி இருந்த நிலையில் இப்படி அதிகப்படியான சிடுசிடுப்பும் சுள்ளென்ற பேச்சும் ( காபி தயாரா இருக்குங்க.... அப்படியா...? என் தலையில் கொட்டு..) நிலைதவறிய நிதானமும் விசாலத்துக்கு சொல்லவொண்ணா பீதி அளித்தது.

இத்தனைக்கும் வசதிக்கும் சொத்துக்கும் ஒரு குறைவும் இல்லை.ஆளும் கட்சியின் அசைக்கமுடியாத பிரமுகரும் சீனியர் மந்திரியுமான ஆ ஆறுமுகத்துக்கு சென்ற இடமெல்லாம் செல்வம். தொட்டதெல்லாம் தோட்டம். சுட்டதெல்லாம் சொத்து. திரும்பின திசைஎங்கும் திருவின் ஆசி.

பல உறவினர்களின் பெயர்களில் பினாமி சொத்தும் மைத்துனன் முதல் மாமனாரின் சகலையின் மைத்துனனின் ஒன்று விட்ட சகோதரன் வரையிலும் எல்லார் பேரிலும் சொத்துகள் குவித்து இருந்தார்.

அரசாங்க அராஜக ஆளும் கட்சியின் தொண்டு கிழத் தலைவரும் எக்கச்சக்கமான திரு விளையாடல்களைச் செய்து வந்ததால் கேட்க ஆளில்லாமல் ஆ ஆறுமுகம் தறிகெட்டுப் பறந்ததில் சகல சுகபோகத்துக்கும் குறைவில்லை. கண் காட்டினாலே ஆளைச் சாய்த்துவிடும் ஆட்படைகள். இத்தனை இருந்தும் இன்று என்ன நேர்ந்தது அவருக்கென்று அனைவரும் வியந்து நின்றனர்.

மாடியிலிருந்து கீழிறங்கிய ஆறுமுகம் அங்கு தென்பட்ட வேலையாளிடம் ‘’ மாணிக்கம் வந்தானா ‘’ என்று 12 ஆவது முறையாகக் கேட்டார்..எங்கு போய் தொலைந்துவிட்டான் மாணிக்கம் என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

மாணிக்கம் - ஆறுமுகத்தின் நிழலிலும் மேம்பட்டவன். நிழல் கூட இருட்டினில் கைவிட்டுவிடும் என்பதால் நிழலுக்கும் மேலானவன் தான்.

ஆறுமுகத்தின் அத்தனை விடயங்களும் ஏன் ஆறுமுகம் அறியாத விடயங்களும் மாணிக்கம் அறிவான். சொத்து விவரம் பங்குச்சந்தையில் அவரது முதலீட்டு விவரம். ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் இருக்கும் தொகையின் முழுவிவரம் ஆக அனைத்தையும் அறிவதோடல்லாமல் திறம்பட நிர்வகித்தும் வருகிறான்.நெய்யெடுக்கும் அவன் புறங்கை நக்காமல் இருக்க இயலுமா..? அதை ஆறுமுகமும் அறிவார். ஆனால் ஆறுமுகத்துக்கு அத்தகையவன் தேவைப்பட்டான். மிகப்பெரிய தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை இடிந்து விடாமல் காப்பாற்றி வரும் மாணிக்க்ம் என்னும் தளபதிக்கு கிடைகக் வேண்டிய ஊழியம் இது அல்லவா..?

இத்தனைக்கும் பி ஏ என்னும் பதவிக்காக மாதம் குறிப்பிட்ட கணிசமான சம்பளம் மாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இது வெளியார் கண்ணில் மண் தூவுவது தான். மற்றபடி மாணிக்கம் தனக்குரிய ஊதியத்தை தானே எடுத்துக்கொள்வது ஆ ஆறுமுகத்துக்கும் நன்கு தெரியும்.

எல்லாமே ஒரு வித கருத்துமேவல் தானே..?

ஐயா மாணிக்கம் ஐயா வந்துட்டாருங்க என்று வேலைக்காரன் வந்து சொல்லும் முன் மாணிக்கம் உள்ளே வந்து ஆறுமுகத்தின் கால் தொட்டு வணங்கினான். இது அவனது வழக்கம். ஆறுமுகத்துக்கு இந்த பணிவு மிகவும் பிடிக்கும்.

வா மாணிக்கம் என்று காலையில் இருந்து இருந்த பரபரப்பின் சுவடறியாமல் அவனை வாஞ்சையுடன் வரவேற்ற ஆறுமுகம் வேலையாட்களிடம் ஒரு மணி நேரத்துக்கு யார் வந்தாலும் போன் வந்தாலும் நான் இல்லை என்று சொல்லிவிடு. என் அறைக்கு யாரையும் வர விட்டுவிடாதே என்று கட்டளையிட்டு விட்டு அமைதியாக நின்ற மாணிக்கத்தின் தோளை அணைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

வேலையாட்களுக்கு இது தெரிந்த விடயம் தான். மிக முக்கிய ஆலோசனையில் மாணிக்கமுடன் அறையில் நுழைந்தார் என்றால் அங்கே முதலமைச்சருக்கு கூட இடமில்லை என்பது அறைந்து வைக்கப்பட்ட மாற்ற முடியாத சட்டம்.

சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அந்த அறைக்குள் சென்றதும் மாணிக்கத்தை ஷோஃபாவில் அமரச்செய்து தனது பர்சனல் லேப்டாப்பை ஆன் செய்து மாணிக்கத்துக்கு சில விடயங்களைக் காட்டினார்.

அதைக்கண்டதும் மாணிக்கம் பேயறைந்தாற் போலானான்.

குறிப்பு : கருத்து மேவல் * = காம்ப்ரமைஸ்

துடிப்புகள் ... தொடரும்..!

கீதம்
30-08-2011, 02:09 AM
முதல் பகுதியில் ஒரு சாமான்யனின் அறிமுகம். இரண்டாம் பகுதியில்தான் கதை சூடுபிடிக்கிறது. அமைச்சர் பெயரில் ஊரையும் பேரையும் பார்த்ததும் அடிவயிற்றில் சிறு பகீர். அரசியல் நுட்பங்களை அதிரடியாய் விளக்குகிறீர்கள். கதை நன்றாகப் போகிறது. தொடருங்கள் கலைவேந்தன் அவர்களே.

கலைவேந்தன்
30-08-2011, 05:26 AM
மிக்க நன்றி கீதம். அவர்களே வேண்டாமே. கலை போதுமே.!

கலைவேந்தன்
30-08-2011, 05:32 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 3

அந்த சிடியில் என்ன தான் இருக்கும் என்று உடனே பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் ராகவனது நெருக்கடிகளைச் சமாளிக்க அவசியமான வங்கிக்கணக்கு அப்டேஷன் முக்கியம் என்பதால் சிடி அடங்கிய அந்த கொரியர் கவரை தனது பைக்கில் பாக்ஸில் வைத்துவிட்டு அதை முடித்துவிட்டு வந்து மதிய உணவை உண்டபின் களைப்புடன் படுத்தான்.

பலவித குழப்பங்கள் மனதில் சுழன்றாலும் உண்ட களைப்பும் காலையிலிருந்து அலைந்ததால் உடல் சோர்வும் அயர்ந்து உறங்க வைத்தன.

ஒரு மணி நேரத்தில் விழித்தெழுந்த ராகவன் கணினியை ஆன் செய்து ஈமெயில் முதலானவற்றை சோதனை செய்த பின் தமிழில் தலை சிறந்த விவாதக்களமான தமிழ் மன்றத்தில் சற்று நேரம் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று தனது பைக்கில் வைக்கப்பட்டு இருந்த கொரியர் கவர் நினைவுக்கு வந்தது..!

அட.. இதை எப்படி மறந்துவிட்டேன் என்று தன்னைத்தானே நொந்த படி மூன்று மாடிகள் கீழிறங்கி தனது பைக்கின் பாக்ஸில் இருந்த கவரை எடுத்துக்கொண்டு மேலே வந்தவன் அந்த சிடி கவரைப்பிரித்து லேசாக ஈரப்பதம் பதிந்திருந்த சிடியை உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட்டு அதை கண்ணியில் செலுத்தினான்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககம் என்னும் அரசின் லோகோவுடன் மிக எளிமையாக வடிவமைக்கப் பட்ட விஷுவல் டிசைனுடன் பக்கங்கள் விரிந்தன. ஃப்ளாஷ் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களுடன் பல வித தகவல்கள் புள்ளி விவரங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் நிவாரணங்கள் முதலான அரசின் தற்பெருமைகள் அழகான பொய்களுடன் விரிந்தன. ஆளும் கட்சியின் கொட்டுப்பறையாக மிகச்சாதாரண நடைமுறை நடவடிககைகளைக்கூட மிகப்பெரிய சாதனைகளாக புள்ளிவிவரப் பொய்களுடன் புளுகப்பட்டு இருந்தன.

எப்படி இருந்தாலும் நாம் இந்த சிடியை வடிவமைத்திருந்தாலோ அல்லது நம் உடன் பிறவாதம்பி செல்வமுரளி வடிவமைத்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இந்த சிடி வந்திருக்கும் என்பதை எண்ணியவாறே மேற்கொண்டு பார்த்துக்கொண்டு போனான்.

நாள் பட்ட சிடி என்பதாலோ என்னவோ ஃப்ளாஷ் கோடிங் டெக்னிகல் பிரசண்ட்டேஷனுக்கு இடையில் ஹெச் டி எம் எல் கோளாறுகள் சில தென்பட்டன. அது போன்ற கோளாறுகள் வெளிப்பட்ட நேரத்தில் சில குறியீடுகளும் எண்களும் கீழ்க்கண்டவாறு விரிந்தன..


<html>

<head>
<meta http-equiv="Content-Language" content="en-us">
<meta name="GENERATOR" content="Microsoft FrontPage 5.0">
<meta name="ProgId" content="FrontPage.Editor.Document">
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title>New Page 1</title>
</head>

<body>

<p>ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3 </p>
<p>&nbsp;</p>

</body>

</html>

ராகவன் ஜாவா டிகோடிங் மற்றும் எச்டி எம் எல் கோடிங் ஃபார்மட்டிங் ரைட்டிங் என்று சகலமும் அறிந்திருந்தாலும் சி டியின் இடையில் ஃப்ளாஷ் ப்ரசெண்டேஷன் தடைப்படுவதையும் இடை யிடையே ஓரிருமுறை இது போன்ற ஹெச்டிஎமெல் எர்ரர் மெசேஜ் வந்ததையும் கவனித்தும் அது எந்தக் காரணத்தால் என்பதை அறிய முயலவில்லை.

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக ரிசோர்ஸ் பர்சன்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற குறிப்பிடுகைகளும் குறியீடுகளும் இன்ஸ்ட்ரக்*ஷன்களும் நிறைந்த மொத்தம் 45 நிமிடங்கள் ஓடிய அந்த சிடியின் இடையில் மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அதற்கான சிறப்புப்பள்ளிகள் செய்து வரும் பிரயத்தனங்கள் வீடியோ க்ளிப்புகளாக இணைக்கப்பட்டு இருந்தது. எதையோ எதிர்பார்த்து சிடியைத் துழாவிய ராகவன் கண்களுக்கு மிகச்சாதாரணமான அரசாங்க தற்பெருமை சிடியாகவே தென்பட்டது.

வேறெதுவும் புரியாத நிலையில் அந்த சிடியை வெளியே எடுத்தவன் அசுவாரசியமாக அந்த சிடியை திரும்பவும் கவரில் போட்டு கணினி மேசைக்குக் கீழே வைக்கப்பட்டு இருந்த சிடி கூடையில் போட்டான்.

மிகப்பெரிய அளப்பரிய புதையலை அலட்சியமாக எறிகிறோம் என்பதை அறியாத ராகவன் மீண்டும் தமிழ் மன்றத்தின் அழகான கவிதைகளில் ஆழ்ந்தான்..!

துடிப்புகள் தொடரும்..!

சிவா.ஜி
30-08-2011, 03:09 PM
பார்த்ததுமே படிக்கத்தூண்டும் தலைப்பு. ஆரம்ப அத்தியாயமும் அதையே சொல்கிறது. ஒரு சாதாரண ராகவனின் கையில் சிக்கியிருக்கும் அசாதாரண மென் தகடால்...விளையப்போவது நன்மையா தீமையா...?

ஆ. ஆறுமுகம்+ மாணிக்கம் கூட்டணியின் அதிரடி அரசியலில் இன்னும் நிகழப்போவது என்னென்ன....காத்திருந்து வாசிக்க ஆவல்.

ஆறுமுகத்தின் ஒரு முகம், அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் இடத்தின் அமைப்பு விளக்கம் என எல்லாமே இது வித்தியாச எழுத்து என்பதைக் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் கலை. தொடருங்கள்...தொடர்ந்து வருகிறேன்.

கௌதமன்
30-08-2011, 05:46 PM
கொன்னுட்டீங்க போங்க!

கலைவேந்தன்
31-08-2011, 07:12 AM
மிக்க நன்றி சிவா மற்றும் கௌதமன்..!

கலைவேந்தன்
31-08-2011, 07:13 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 4

அமைச்சர் ஆற்காடு ஆறுமுகம் நிதானமாக மாணிக்கத்திடம் தனது பர்சனல் லேப்டாப்பைத் திறந்து காண்பித்த சில விடயங்கள் மாணிக்கத்துக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.

ஆ ஆறுமுகத்துக்கு தனது ஸ்விஸ் வங்கிக்கணக்கில் இருக்கும் அப்டேஷனை அறியும் விதத்தை சிறுபிள்ளைக்கு போதிப்பதைப் போல கற்றுக்கொடுத்ததே மாணிக்கம் தான். அத்தனை எளிதான வேலையல்ல அது.

பல அடுக்குகளையும் சில சிக்கலான கேள்விகளையும் கேட்டு அதன் சரியான பதிலை அளித்தும் வாய்ஸ் ரெககனைசிங் மூலம் வெரிஃபை செய்தும் நிறைய இடியாப்ப அடுக்குகளுக்குப் பின் தான் தனது பெயரில் இருக்கும் கணக்கு வழக்கை காண்பிக்கும்.

இந்த செயல் முறை இருவருக்கு மட்டுமே அத்துபடி. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் மாணிக்கத்திற்கும் ஆறுமுகத்துக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள் இவை.

ஒரு வேளை தனக்கு எதுவும் நேர்ந்தாலும் தமது பணத்தை தம் சந்ததியருக்கு பெற்றுத் தரும் பொறுப்பை மாணிக்கத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். இருபத்தைந்து சதவீதம் அதற்கான கட்டணமாக எடுத்துக்கொள்ளலாம் என்பதான ஒரு மறைமுக ஒப்பந்தம் கூட இருக்கிறது.

இப்போது ஆறுமுகம் மாணிக்கத்திடம் அர்த்த பூர்வமாக அதே சமயம் நிதானம் தவறாமல் பேசினார்.

‘’ என்ன தெரியுது மாணிக்கம் .. ? ‘’ - அவனது பிரமிப்பைக் கலைக்கும் விதமாக கேட்டார்.

‘’ ஐயா.. ஐயா.. நான் இதை செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா....? ‘’ - குரல் தழு தழுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ அடடா... இல்லடா மாணிக்கம்... இந்த உலகத்துல உன்னைத் தவிர யாரை நம்பப்போறேன்..? ஆனா திடீர்னு இப்படி 200 கோடி ரூபாய் நம்ம அக்கவுண்ட்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்கு.. என்ன ஏதுன்னு விவரம் தெரிஞ்சுக்க முடியலை.. நம்ம ரெண்டு பேரைத் தவிர இது சம்பந்தமா யாருக்கும் தெரியாது... தெரிஞ்ச மூனாவது ஆளைக்கூட... ‘’’ - இந்த இடத்தில் நிறுத்தினார் ஆறுமுகம். அவரது நினைவுகள் பின்னோக்கிச் சென்றதை அறிய முடிந்தது மாணிக்கத்துக்கு.

‘’ ஆமாம் .. ஐயா.. நீலமேகம்... ‘’ - என்ற வாறு இழுத்தான் மாணிக்கம்.

‘’ ஸ்ஸ்ஸ்... அதைப்பத்தி இப்ப ஏன் பேச்சு... இப்ப இது எப்படி எங்கே யாரால நடந்ததுன்னு கண்டு பிடிக்கனும்டா.. இல்லைன்னா இருக்கும் எலலா பணமும் இப்படி கைவிட்டு போயிடுமே... ‘’ - கவலை மற்றும் பதட்ட ரேகைகள் ஆறுமுகத்தின் முகத்தில் பரவின.

அவரது கவலைகள் முழுக்க முழுக்க நியாயமானதாக மாணிக்கத்துக்கு பட்டது. அவனுக்கே இது பற்றி ஒன்றும் யூகிக்க முடியவில்லை.

‘’ஐயா .. நீங்க வேறு யார் மேலாவது சந்தேகப்படறீங்களா..? ‘’ - மாணிக்கம் அவரது முகத்தைப் பார்த்து கேள்விக்குறியுடன் கேட்டான்.

‘’ இல்லடா மாணிக்கம்... உனக்கே தெரியும்... இது சம்பந்தமா என் மனைவி பிள்ளைகள் கிட்ட கூட ஒன்னுமே சொல்லாம வைச்சு இருக்கேன் தானே..? ‘’ - என்று கவலையுடன் கூறினார் ஆறுமுகம்.

’’ அப்படின்னா இது மாயமா இருக்கே ஐயா..இத்தனை பாதுகாப்பை மீறி .இது எப்படி சாத்தியம் ஐயா...? முதல்ல நம் வங்கிக்கணக்கு தெரியனும்..அப்படியே தெரிந்தாலும் அதை ஆபரேட் செய்யும் விதம் கோடிங் டி கோடிங் வாய்ஸ் ரெகக்னிஷன் இது எல்லாமே வேணும்... எப்படி எப்படி...? ’’- மாணிக்கம் வியந்தான்.

‘’ மாணிக்கம் ...இனி என்ன செய்யலாம்...? எதாவது செய்யனும்.. இலலைன்னா எல்லாம் நம்ம கையை விட்டு போயிடும்.. இப்போதைக்கு 200 கோடியோட நிக்கிது ... ‘’ - ஆறுமுகம் கவலை தோய்ந்த முகத்தை மாணிக்கத்தின் பக்கம் பார்த்துவிட்டு லேப்டாப்பை கவனித்தார்.

’’ ஆமாம் ஐயா... எடுத்தவன் நிறைய எடுக்காம 200 கோடி எடுத்து இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா... நம் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு தெரியாம முதல் வாய்ப்பை தவற விட்டா கோடிங் மாறிவிடும் லாக் ஆகிவிடும் என்னும் சூட்சுமம் புரிஞ்சு வைச்சு இருக்கான்..’’ - மாணிக்கம் டெக்னிகலாக யோசித்தது ஆறுமுகத்துக்கு வியப்பளித்தது.

‘’ உண்மைதான்.. ‘’ - ஒப்புக்கொண்டார் ஆறுமுகம்.

‘’ மேலும் அவன் மிக மிக சாமர்த்தியமாக இந்திய வங்கி எதிலும் மாற்றாமல் சிங்கப்பூர் வங்கியில் மாற்றி இருக்கான். அதுமட்டுமே தெரிய வருது. மற்றபடி வேறு எந்த விவரமும் நம்ம வங்கியும் காட்டாது .. இது நாம் ஆப்ரேட் செய்தது போல் தான் காண்பிக்கிறது. அப்படிஎன்றால் நம் சூட்சுமம் அறிந்த ஒருவன் மிக தெளிவாக திட்டமிட்டு செய்து இருககான்...’’ - மாணிக்கத்தின் அலசல் மிகத்தெளிவாக இருந்தது.

‘’ உண்மைதான் மாணிக்கம். நம்ம கண்ணுல மண்ணு தூவறான் ஒருத்தன் அப்படின்னா நம்மை பத்தி நிறைய விவரங்கள் தெரிஞ்சு வைச்சு இருககான். நம்ம ரெண்டு பேரு குரலையும் நகலெடுத்து இருக்கான். நம்ம கோடிங்கை நம்ம பாஸ்வேர்டை ஒன்னு விடாம சுட்டு இருக்கான்... ‘’ - விரக்தி மிகுந்த குரலில் ஆறுமுகம் கூறிவிட்டு ஷோஃபாவில் சாய்ந்தார் ஆறுமுகம்.

’’ ஐயா .. இது நம்மால் கண்டுபிடிக்க முடிகிற விடயம்னு தெரியலை. மிகத் திறமை வாய்ந்த நிபுணர் மூலமா இதைவிசாரிக்க சொல்லலாம் ஐயா.. ஆனால் அவங்க மிகவும் நம்பகமானவங்களா இருக்கனும்.. தப்பித் தவறி எதிர்க்கட்சிக்கு விஷயம் லீக் ஆனா நாம் இழப்பது பணம் மட்டும் இல்லை ஐயா... ‘’ - மாணிக்கத்தின் குரலில் இயலாமையின் குரோதம் தெரிய வந்தது.

’மாணிக்கம் சொல்வதில் இருந்த கசப்பான உண்மை ஆறுமுகத்தையும் கவலையில் தோய வைத்தது.

’’ எதாவது செய்டா மாணிக்கம்.. இனியும் இருப்பதெல்லாம் இழக்கும் முன்னால எதாச்சும் செய்யனும். எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. பர்சண்டேஜ் பேசிப்பாரு. எப்படியாச்சும் செய்டா எதாச்சும்...’’ - மாணிக்கத்தின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்க வைத்தது.

திருடனுக்கு தேள் கொட்டும் போது உரக்க கத்தி ஊரை எழுப்பவா முடியும்..?

’’ ஐயா... இந்த வேலைக்கு ரொம்ப நம்பகமான திறமைசாலியான ஆளுன்னு சொன்னா என்னைப்பொறுத்த வரை சென்னையின் லீடிங் டிடெக்டிவ் விக்னேஷ் தான் சரின்னு படுது ஐயா.. ‘’ - மாணிக்கம் உறுதியுடன் கூறினான்.

‘’ அப்படியா..? அவர் திறமைசாலியா..? வயசுல சின்னவர்னு கேள்விப்பட்டு இருக்கேனே...’’ - ஆறுமுகத்தின் முகத்தில் ஐயம் படர்ந்தது.

‘’ இல்லை ஐயா ... விக்னேஷ் கைவைக்கும் கேஸ் எதையும் வெற்றிகரமா முடிக்காமல் விடுவதில்லை.. அவர் பார்வைக்கு எதுவும் தப்புவதுமில்லைன்னு பேரு ஐயா... ‘’ - மாணிக்கம் உறுதி குறையாமல் கூறினான்.

‘’ சரிடா... என்னமோ செய்... ஆனா இதை சும்மா விடக்கூடாது... என்ன ஆனாலும் சரி.. ஆனா விஷயம் கமுக்கமா முடிக்கனும்... ‘’’ - சந்திப்பு முடிவடைந்தது என்பது போல் ஆறுமுகம் எழுந்தார்.

மாணிக்கம் துரிதமாக வெளியேறி விக்னேஷை சந்திக்க அண்ணாநகர் விரைந்தான்.

மாணிக்கம் விக்னேஷைச் சந்தித்தபோது விக்னேஷ் தனது அசிஸ்டண்ட் வசந்தியை கட்டி அணைத்துக்கொண்டு இருந்தான்...

துடிப்புகள் தொடரும்..!

கலைவேந்தன்
31-08-2011, 10:01 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 5

ராகவனுக்கு இருந்த பல பிரச்சினைகளில் அந்த சிடி பற்றி மறந்தே போனான். அந்த பேங்க் மேனேஜரை வங்கியில் சந்தித்து பர்சனல் லோன் ப்ரொசீஜர்களை கவனமாக கேட்டுப் பெற்றான். அவர் தனது வங்கியில் கணக்கு திறந்து அந்த அக்கவுண்ட் நம்பரைக் குறிப்பிடச் சொன்னார். எலலா ஃபார்மாலிட்டிகளையும் முடித்து விடைபெற்ற போது அந்த லோன் மேனேஜர் கூறியது கொஞ்சம் வருத்தம் அடையச்செய்தது அவனை.

‘’ என்னமோ ஸ்விஸ் பேங்க்ல அககவுண்ட் ஓபன் செய்தமாதிரி நினைச்சு சும்மா இருந்துடாதீங்க.. மினிமம் பேலன்ஸ் மெயிண்டெய்ன் செய்யனும். லோனுக்குள்ள ஒரு இ எம் ஐ தொகையாவது விட்டு வைக்கனும்.. ’’ - என்று அவர் சொன்ன விதத்தில் ஏழைகளுக்கு கிடைக்கும் மதிப்பு கூட கடன்காரர்களுக்குக் கிடைக்காது என்னும் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டான்.

‘’ யோவ்.. ஓவரா பேசறே இல்ல...? இரு இரு ...எனக்கும் காலம் வரும்.. எதுனா மிராக்கிள் நடக்கும். எனக்கும் வெளிநாட்டு பேங்க்ல கோடிக்கணக்கா கிடக்கும்... அப்ப பாக்கிறேன்.. உன் மூஞ்சை எங்க கொண்டுபோய் வைச்சுப்பேன்னு..’’ - என்று சத்தமாகக் கத்தினான் மனதுக்குள்.

தலைவலியுடன் வீட்டுக்கு வந்த அவனை நேரம் காலம் தெரியாமல் ‘’ என்னங்க... பையனுக்கு அடுத்த வாரம் பர்த் டே வருது... ட்ரெஸ் எடுக்கவேண்டாமா ’’ - என்று மங்களம் கூறியது அவனது ஆவேசத்தை வெளித்தள்ளியே விட்டது.

’’ ஆமாம்... அது ரொம்ப முக்கியம்... உங்கப்பன் எனக்கு ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணி கோடிக்கணக்குல போட்டு வைச்சு இருக்கான் பாரு... போடி .. போய் உன் வேலையை கவனி.. எல்லாம் நடக்கும்..’’.- எரிந்து விழுந்துவிட்டு தன் அறைக்குள் சென்று கணினியைத் திறந்தான்.

மனம் சரியில்லாத போது அவன் கணினியைத் திறந்து நண்பர்களுடன் சாட் செய்வதும் தமிழ் மன்றத்தில் அமரன் பதிவுகளை கூர்ந்து கவனிப்பதும் வழக்கம்.கண்ணில் விளக்கெண்ணை போட்டுக்கொண்டு நுணுக்கமான விவரங்களைக்கூட விடாமல் அலசி புள்ளி விவரங்களுடன் பதிவு இடும் அவர் வழக்கம் இவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்த்தது இல்லை என்றாலும் மூக்கில் வந்து விழும் கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு அவர் கணிணியைப் பார்த்து பதிவு இடுவது போல கற்பனை செய்துபார்த்து சிரிப்பான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென்று சிவா ஜி என்பவர் இட்டு இருந்த செய்திகளில் ஸ்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இட்டு இருந்த அரசியல்வாதிகளின் விக்கிலீக்ஸ் பட்டியல் பதிவு அவனைக் கவர்ந்தது.

மிக சுவாரசியமாக பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் கண்கள் குத்திட்டு நின்றன.

A ARUMUGAM 2800 CRORES ALTERNATE BANK ABS 1 MAIN ACCOUNT.

இந்த இடத்தைப் பார்த்ததும் ஏதோ ஒரு நினைவு சட்டென்று மூளையில் பிரகாசித்தது. எங்கோ ஒரு ஃப்ளாஷ் அடித்தது,.என்ன என்று மூளையைக் கசக்கிப்பிழியும் முன் அடுத்து சிவா இட்டு இருந்த இந்த லிஸ்ட் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தைப் பார்த்ததும் குழப்பத்தை விட்டெறிந்தான் ராகவன்.

ஆயினும் அவனுள் எதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. ஏபிஎஸ் ஏபிஎஸ் என்ற எழுத்துகள் தட்டாமாலை சுற்றி வந்தன..எங்கோ இவ்வெழுத்துகளைப் பார்த்த நினைவும் அது மூளையில் கொடுத்த துடிப்புகளும் அவனை குழம்பச்செய்தன..

ஒரு வேளை லோனுக்காக அப்ளை செய்த வங்கிக்கணக்காக இருக்குமோ என்று யோசித்தான். ஆனால் அது ஓபிஎஸ் அதாவது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அல்லவா..?

ஏபிஎஸ் ஓபிஎஸ் எஸ்ஓபி பிஓபி எஸ்பிஐ என்று அவனது மூளைக்குள் ஆங்கில எழுத்துகள் பட்டாம்பூச்சிகள் போல பறந்துகொண்டே இருந்தது.

மேற்கொண்டு தமிழ் மன்றத்தில் மனம் லயிக்கவில்லை. கலைவேந்தன் என்பவர் எழுதிய படுத்தலான காதல் கவிதைகள் அவனது எரிச்சலை இன்னும் அதிகமாக்கின. இந்தாளு யாருக்காக கவிதை எழுதறான்..? இங்கே என்ன எலலாரும் தமிழ் இலக்கியம் படிச்சுட்டா இணையத்துக்கு வராங்க... சுத்தமா ஒன்னும் புரியாம அந்த காலத்து ஆதிக்கிரந்த தமிழில் என்னமோ புலம்பித்தள்றான்.. ராகவனது எரிச்சல் அந்த கவிஞனின் மேல் படர்ந்தது..

சரி.. கொஞ்சம் மாலைநேர வாக்குக்காவது போய் வரலாம் என்று கணிணியை அணைக்கப்போகும்முன் அவனது ஜிமெயிலில் வந்து கண்ணடித்த விளம்பரம் அவனைக் கவர்ந்தது.

ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவக்க வேண்டுமா எளிது எளிது எளிது என்று மிக எளிதாக அந்த எளிது மின்னிக்கொண்டு இருந்தது.

என்னதான் அதுல இருக்குன்னு பார்க்கலாமே என்று கிளிக்கியவன் கண்முன் வெளிநாட்டு ஏஜண்டின் விளம்பரம் அசுவாரசியமாக ஸ்விஸ் வங்கி கணக்கு துவக்குவது எப்படி என்று விலாவாரியாக மூளை சிதறிக் கொட்டிவிடும் போல் புள்ளி விவரங்களை அள்ளித்தெளித்துக் கொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த ஏபிஎஸ் அல்டர்நேடிவ் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து என்னும் எழுத்து அவனது மூளையில் மீண்டும் ஒரு வெளிச்சத்தைக் கொணர்ந்தது.

ஆ.... ஐ காட் இட்... என்று மனதுக்குள் கத்தியவன் அவசரமாக அன்று அசுவாரசியமாக விட்டெறிந்த அந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கக விளம்பர சிடியைத் தேடி எடுத்து அதை கணினியில் செலுத்தினான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் அந்த எச் டி எம் எல் எர்ரர் கோடு வந்ததும் அதை பாஸ் செய்துவிட்டு அதை டிகோடிங் செய்ய முயன்றான்.


<html>

<head>
<meta http-equiv="Content-Language" content="en-us">
<meta name="GENERATOR" content="Microsoft FrontPage 5.0">
<meta name="ProgId" content="FrontPage.Editor.Document">
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title>New Page 1</title>
</head>

<body>

<p>ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3 </p>
<p>&nbsp;</p>

</body>

</html>

என்ற அந்த சிடியின் கோடிங்குகளை டி கோட் செய்த போது கீழ்க்கண்ட விவரம் வந்தது.

ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3

மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!


துடிப்புகள் தொடரும்...

கீதம்
31-08-2011, 10:34 AM
எனக்கும் தட்டாமாலை சுற்றுவது மாதிரிதான் இருக்கிறது.:mini023: மிகவும் தீவிரமாகவே யோசித்து எழுதுகிறீர்கள். சம்பவங்கள் அனைத்தும் இயல்பாக இணைகின்றன. துப்பறியும் நிபுணரின் வருகையை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். தொடருங்கள், தொடர்கிறேன்.

கலைவேந்தன்
31-08-2011, 02:16 PM
மிக்க நன்றி கீதம்..!

கலைவேந்தன்
31-08-2011, 02:20 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 6

உண்மையில் மாணிக்கத்தின் கண்கள் ஏமாந்துதான் போயின.

மாணிக்கம் பின்னாலிருந்து பார்த்த போது விக்னேஷ் வசந்தியைக் கட்டிப்பிடித்து நின்ற மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அன்று வசந்தி கண்ணில் விழுந்து ரொம்ப நேரமாக அவளைக் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்த தூசியை அவ்வளவு நெருக்கத்தில் நின்று அவள் கன்னத்தை ஏந்தி நின்று ஊதியதால் மாணிக்கம் இருந்த குழப்பத்தில் கட்டிப்பிடித்ததாக எண்ணிவிட்டான். ( அப்பாடா... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு மு மன்ற வாசிகள் கிட்ட : ) )

மாணிக்கம் தன்னை சுதாரித்துக்கொண்டு கனைத்தான். அப்போது தான் இவனைத்திரும்பிப்பார்த்த விக்னேஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இவனிடம் அங்கே இருந்த சேரைக்காட்டி உட்கார வைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

கண்ணில் இருந்த தூசி வெளியானதும் ஆசுவாசம் அடைந்த வசந்தி - வயது 27 - கல்வி பி ஏ பி எல். - கல்யாணம் ..? ஊஹூம். இன்னும் இல்லை. ராஜ சக்தி விமல் சிவஹரி போன்ற எளிஜிபில் பேச்சலர்களுக்காகக் காத்திருக்கும் கொள்ளை அழகி வசந்திக்கு ஒரே லட்சியம் விக்னேஷ் போல மிகப்புகழ் பெற்ற டிடெக்டிவாக ஆக வேண்டும் என்பது தான்.வசதி மிக்க பெற்றோரின் செல்ல மகள்.சுருக்கமா சொல்லப்போனால் ஓர் ஆண் பாரதி..!

அவள் விக்னேஷிடம் அசிஸ்டண்டாக சேர்ந்து இரண்டே வருடம் தான் ஆகிறது. அதற்குள் மிக சிக்கலான கேஸ்களில் இருக்கும் முடிச்சுகளைக் கூட அவிழ்க்கும் திறமையை விக்னேஷ் கற்றுக்கொடுத்து இருந்தான்.

விக்னேஷ் போன்ற டிடெக்டிவ் புலியுடன் இணைந்து செயலாற்றுவதில் கர்வம் உண்டு அவளுக்கு.

ஏன் இருக்காது...?

விக்னேஷ் தமிழகத்தின் மிகச்சிறந்த துப்பறிவாளனாக பெயர்பெற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. 35 வயதில் அவன் இத்தனை பேர் பெற்றதுக்கு முக்கிய காரணம் அவனது சுறுசுறுப்பான மூளை. அவனிடம் வருபவர் தரும் சிற்சில நுனிகளைக் கொண்டு உடனேயே ஐம்பது சத விகிதம் என்ன நடந்தது என்பதை ஊகித்துவிடுவான். ஆனால் அதை யாரிடமும் பகிரமாட்டான். அவனுக்குரிய தனிபாணியில் விவரம் சேகரிப்பான்.

இத்தனை தகுதி இருந்தும் மணம் முடிக்காமைக்கு காரணம் - அவன் கல்யாண வாழ்க்கையை நம்புபவன் இல்லை. அது போகட்டும். அது அவன் தனிப்பட்ட பிரச்சினை.

’’ போய் நல்லா முகம் கழுவி கலைஞ்சு போன மேக்கப்பை டச் பண்ணிக்கிட்டு வா வசந்தி’’ - என்று புன்முறுவலுடன் அவளை தன் அலுவலக உள் அறைக்கு அனுப்பிய விக்னேஷ் ‘’ சொல்லுங்க மாணிக்கம் ... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ’’.. - என்றான்.

மாணிக்கம் வியப்பின் உச்சியில் சேரின் நுனிக்கே வந்தான்.

’’ என் பெயர் மாணிக்கம்னு எப்படி உங்களுக்கு தெரியும் ’’ - என்றான்..

’’ அது மட்டுமா ..? நீங்க அமைச்சர் ஆ ஆறுமுகத்தின் அந்தரங்க ஆலோசகர் என்பதும் தெரியும்..’’ - மாணிக்கத்தின் வியப்பை இன்னும் அதிகமாக்கினான் விக்னேஷ்.

என்ன தான் அமைச்சரின் பி ஏ என்றாலும் கூடிய வரை பொது இடங்களில் தன்னைத் தலை காட்டிக்கொள்ளாமல் இருந்தான் மாணிக்கம். அவன் நேரடியாக அரசியலிலும் தலையிடுவது இல்லை. நெருங்கிய சொந்தமான ஓரிருவருக்கு மட்டுமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவி இருக்கிறானே தவிர வேறு எதிலும் தலையிட்டதும் இல்லை.

மாணிக்கம் அப்படி பட்டும் படாமலும் இருக்க வலுவான காரணம் ஒன்றும் உண்டு. என்ன தான் மாணிக்கம் ஆறுமுகத்தின் அந்தரங்க நிழல் என்றாலும் அவன் அவர் சார்ந்த கட்சியையும் அதன் போக்கையும் அறவே வெறுத்தான். நிறைய படித்து அரசியல் ஞானமும் உலகவியலும் மனோதத்துவமும் பொருளாதாரமும் கணிணி அறிவும் நிறைந்த மாணிக்கம் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை விரும்பாமல் இருப்பதில் வியப்பில்லை.

தன் அறிவுக்கும் திறமைக்கும் தக்க மேடை கிடைக்காமல் ஏழ்மையில் உழன்ற மாணிக்கத்தை இப்போது கோடியில் புரளும் மனிதனாக மாற்றிய அமைச்சருக்கு அவன் மிகுந்த நன்றியுடன் இருக்கிறான். அவ்வளவுக்குமேல் அவன் யோசிப்பதும் இல்லை. விரும்புவதும் இல்லை.

இப்படி இருக்க இப்போது தன்னை அடையாளம் தெரிந்துகொண்டு விக்னேஷ் அப்படி கேட்டதும் அவன் வியப்பில் ஆழந்தான்.

’’ என்ன யோசிக்கிறீங்க...?நான் சொன்னது தப்பா...? ’’- என்ற விக்னேஷின் கேள்வி அவனைச் சுயத்துக்கு கொண்டு வந்தது.

‘’ நான் கேள்விப்பட்டதை விட நீங்க வெரி ஸ்மார்ட்...’’ - மனம் விட்டு பாராட்டினான் மாணிக்கம்.

’’ஓகே தாங்க் யூ ’’- வெட்கத்துடன் நெளிந்த விக்னேஷ் கேட்டான். ‘’ நான் எப்படி உங்களுக்கு உதவனும்..? ‘’

இதை இங்கே பேசுவது உசிதமான்னு தெரியலை. நீங்க விரும்பினா அமைச்சர் வீட்டுக்கே வரலாம். - என்று கூறிய மாணிக்கம் விக்னேஷைக் கூர்ந்து கவனித்தான்.

அதற்குள் அங்கே வந்த வசந்தியைக் கண்டதும் மாணிக்கம் இவள் முன் பேசலாமா என்பது போல் அர்த்தமுள்ள பார்வையை விக்னேஷ் மேல் வீசினான்.

’’ இவமுன்னால எதையும் நீங்க சொல்லலாம். இவளை விட்டு என்னை விட்டு வெளியில் கசிவதில்லை எதுவும். என் க்ளையண்ட்ஸ் என் மேல் அபரிதமான நம்பிக்கை வைப்பதே இந்த நம்பகத்தன்மை காரணமாத்தான்.. கேரி ஆன் ப்ளீஸ்... - மாணிக்த்தின் மனதை வாசித்தது போல் விக்னேஷ் கூறினான்.

மாணிக்கம் எல்லா விவரத்தையும் விரிவாகக்கூறினான். இந்த பிரச்சினை தீர்த்து வைத்தால் குறிப்பிட்ட சதவீதம் ஃபீஸ் ஆக தருவதாகவும் கூறினான்.

‘’ வாவ்’’ - சத்தமாகவே விசிலடித்தான் விக்னேஷ்.

’’என் ஃபீஸ் என்ன தெரியுமா ..? ‘’ - என்று கண்களில் குறும்புடன் கேட்ட விக்னேஷை சட்டென கூர்ந்து பார்த்தான் மாணிக்கம்.

’’ மொத்த மதிப்பில் நாற்பது சதவீதம்’’. - இப்படி விக்னேஷ் சொன்னதும் அவனை மிரண்டு போய் பார்த்தான் மாணிக்கம்.


துடிப்புகள் தொடரும்...!

கலைவேந்தன்
01-09-2011, 10:28 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 7


மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!

உடனடியாக தமிழ்மன்றத்தில் பதியப்பட்டு இருந்த விக்கிலீக்ஸின் ஸ்விஸ் வங்கிக் கணக்குப்பட்டியலை மீண்டும் பார்த்தவன் இந்த சிடியில் இருக்கும் கோடிங்குக்கும் அதற்கும் எதோ தொடர்பு இருக்கவேண்டும் என உறுதியாக முடிவெடுத்தான்.

உடனடியாக இணையத்தில் ஸ்விஸ் வங்கிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விவரங்களைப் பற்றி தகவல்கள் சேகரித்தான். வங்கிக்கணக்கு துவக்குவது எப்படி செயல்பாடுகள் எவ்விதம் என்றெல்லாம் முழுக்கவனத்துடன் வாசித்தான்.

இடையில் உணவுக்காக வந்து அழைத்த மனைவியிடம் உணவு பிறகு சாப்பிடுவதாகவும் காபி மட்டும் கொண்டு வரும்படியும் சொன்னான். மிகத்தீவிரமான சிந்தனைகள் அவனை அலைக்கழிக்கும் போதும் தீவிரமாக எதிலும் ஈடுபடும் போதும் காபி அவனுக்கு மிகவும் உபயோகமான உற்சாகமூட்டியாக இருந்து வந்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொன்றுக்கும் தனிவித லாகின் முறைகள் இருப்பினும் பொதுவான வழிமுறைகள் என்னவென்பதை கூர்ந்து அவதானித்தான். அவற்றில் யுபிஎஸ் வங்கியின் நடைமுறைகளில் பயன்பாட்டு விதிகளின் டெமோக்களும் தென்பட்டன.

கிட்டத்தட்ட அனைத்து ஸ்விஸ்வங்கிகளின் நடைமுறைகளைப் படித்த அவன் முக்கிய வழிமுறைகளைத் தொகுத்து கீழ்க்கண்ட பட்டியலை எழுதினான்.

முக்கியமான தேவைகள் மற்றும் குறியீடுகள்.

1.பி ஏ எஸ். ( பர்சனல் அக்ஸசிங் சிஸ்டம்.)

2.காண்ட்ராக்ட் எண்.(ஒவ்வொரு முறைக்கும் இது மாறுபடும். குறிப்பிட்ட நேரம் வரையே செல்லுபடும்.தலை சொரிய அங்கே நேரமில்லை. மிகச்சரியாக ஆறு இலக்கம்.)

3.பி ஐ என். ( பர்சனல் ஐடண்ட்டிஃபிகேஷன் நம்பர்.) யூனிக்.தொலைந்தால் / மறந்தால் கிட்டத்தட்ட கோவிந்தா.

4.அக்செஸ் கார்ட் நம்பர்.கார்ட் ரீடர் மற்றும் அக்செஸ் கீ. மிக மிக முக்கியமானது.

5.வாய்ஸ் ரெகக்னிஷன். ( சில கேஸ்களில் )

6.ரேகை ரெகக்னிஷன். ( ஆப்ஷனல் )

7.எஸ் எஸ் எல். ( செக்யூரிட்டி சாக்கெட் லேயர் ) கோட். உயர்ந்த வகை பாதுகாப்புக்கு.

8. காம்பினேஷன் ஆஃப் அல்காரிதம். ( பொதுவாக அனைத்து ஸ்விஸ் வங்கிகளின் நடைமுறை. மிகவும் உயர்தர பாதுகாப்பு உறுதி.

9. ஐ எஸ் பி காம்பினேஷன் ஐடண்டிஃபிகேஷன். ( ஆப்ஷனல். ஆனால் பாதுகாப்பானது )

10. பிரௌசர் காம்பினேஷன் ஆப்ஷன். ( சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் எனேபில்ட், ஆப்ஷனல்.)

11. இண்டர்னெட் கேஷ் மெமரி எரேசர். ( ஆப்ஷனல் ஆனால் சிபாரிசிக்கப்பட்டது.)

இந்த குறிப்புகளுடன் எச்சரிக்கை விதிமுறைகள் நிறைய கிடைத்தன. லாகின் எளிதென்றாலும் குறிப்பிட்ட பெனிஃபிசரிக்கு பணம் செலுத்தும் போது ட்ரான்சாக்சன் பாதுகாப்புமுறைகள் பக்கங்களாக நீண்டதால் அவற்றை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கிவிட்டு லாகின் முறைகளை வரிசைப்படுத்தி கீழ்க்கண்டவாறு எழுதி தயாரித்தான்.

1.முதலில் லாகின் பக்கம் திறக்க வேண்டும்.

2.அடுத்து அக்செஸ் எண் அல்லது காண்ட்ராக்ட் எண் குறிப்பிட்ட இடத்தில் பதியவேண்டும். காபி பேஸ்டிங் முதலானவை தடை செய்யப்பட்டு இருக்கும். நேரடியாக தவறின்றி தட்டச்சு செய்தல் மிக முக்கியம். அவசியமெனில் விர்ச்சுவல் கீபோர்ட் பயன்படுத்தலாம். இது பாதுகாப்பு மேம்பாட்டின் மிக உயர் தரமான வழிமுறை.

3.உள்நுழை விதிகள் கவனிக்கப்படவேண்டியவை.

அ. சரியான குறியீடுகள்.
ஆ. செக்யூரிட்டி கோடிங் சிஸ்டம் சரி பார்த்தல்.
இ. ஸ்டெப் பை ஸ்டெப் டெமொக்கள். சரியான முன்பயிற்சி.

4. செக்யூரிட்டி கேள்விகள் ( குறைந்த பட்சம் மூன்று ) அவற்றின் சரியான பதில். குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக அளிக்கவேண்டியவை. மூன்று தடவைகளுக்கு மேல் கணக்கு முடக்கப்படும் அபாயம்.

5. தாங்கள் தேர்ந்தெடுத்த வாய்ஸ் மற்றும் ரேகை ரெகக்னிஷன் ப்ரொசீஜர்ஸ்.

6 உள் நுழைந்து விட்டீர்கள்.

ராகவன் மலைத்துப் போனான்.

கணிணித்துறையில் பலவித சவால்களை எடுத்துக்கொண்டு முறியடித்தவன். ஹாக்கிங் டிகோடிங் முதல் வலுவான பாஸ்வேர்ட் க்ராக்கிங் வரை அவனது திறமை அவன் அலுவலகத்தில் மிகப்பிரசித்தம்.

பலமுறை இவன் மங்களத்தின் மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் வேளையிலும் ஹன்சிகா மோத்வானியின் சுகமான கனவு அணைப்பில் இருக்கும் போதும் அவனது மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான கொலம்பியா தலைமை அலுவலகத்திலிருந்து ஹாரிசன் ஸ்டோன்மேன் மற்றும் நிகோலஸ் ஆகியோரின் தொலைபேசி கால்களால் துரத்தப்பட்டு அதிவேக தனது இணைய இணைப்பின் மூலம் அவர்களின் பிரச்சினைகளை மூன்று முறை இடையில் கொட்டாவி விட்டுக்கொண்டே தீர்த்துவைப்பவன்.

எனினும் இது புதுமையானதாகவும் சுவாரசியமாகவும் தென்பட்டது.மேலும் இதுவரை இவன் பணியில் குறுக்கிடாத ஒரு விசிலடிக்க வைக்கும் பணியாகப் பட்டது.

சிடியில் இருந்த கோடிங்குகள் அவனது சிந்தையைக் கிளறியது. மீண்டும் மீண்டும் அந்த சிடியை ஓடவிட்டான். பல வீடியோ கிளிப்புகளை முதன் முறை பார்த்த போது ஸ்கிப் செய்தவன் இப்போது ஒரு கணம் விடாமல் கூர்ந்து கவனித்தான். சில பல ஆளும்கட்சியின் திருமுக மந்திரிகளின் உப்புக்கு மதிப்பு பெறாத உரைகளைக் கவனித்தான். பார்த்துக்கொண்டே வந்தவன் ... அட ... அமைச்சர் ஆ ஆறுமுகம் கூட பேசி இருக்கிறாரே... கேட்டுக்கொண்டு வந்தவன் அமைச்சர் ஆறுமுகம் பேசும் பகுதிகள் மிக அமைதியாக குண்டூசி விழுந்தால் கேட்கும் பின்னணியில் பேசியது வியப்பாக இருந்தது... அட அட... சட்டென அவன் முகம் பிரகாசித்தது... வாய்ஸ் ... வாய்ஸ் ... மைகாட்.. அவன் தனது சேரின் முன் நுனிக்கு வந்தமர்ந்தான்.

‘’ இந்த ஆட்சியில் மனித வளம் பெருகியுள்ளது. ஔவை பாடினார்.. கூன் குருடு செவிடு பேடி நீங்கிப் பிறத்தல் அரிது என்று... ஆயினும் அவ்வம்மையார் இன்று இருந்தால் இந்த திருமுக ஆட்சியில் பிறந்தால் எவ்வித குறைபாடு இருந்தாலும் ஒன்று எட்டு பதினாறு எழுபத்திரண்டு நூற்று ஒன்பது நூறு ஆயிரம் கோடி என்ற வகையில் மக்கள் மிகவும் மேம்பாடு அடைந்து இன்று ஒரு அரசனைப்போல் எல்லா மக்களும் வாழ்கிறார்கள் என்றால் அந்த பெருமை என் யானை பூனை பானை சேனை தானைத் தலைவனுக்கே சென்று சேரும் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.. ‘’

சட்டென்று சில பிரகாசமான பொறிகள் அவனது மூளையில் பறக்கத்தொடங்கின.அதே சமயம் எச்சரிககை உணர்வொன்றும் அவனைத் தொற்றிக்கொண்டது.

இந்த விடயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டிய அவசியம் அவனுக்கு தென்பட்டது. நெட் மாஸ்கிங் ஏற்படுத்தினான். ஃபேக் ஐ எஸ் ப்ரோட்டோகால் தயார் செய்தான்.இதில் அவன் மிக மிக கைதேர்ந்தவன்.

ஆஹா... இப்போது எந்த கொம்பனாலும் இவனது நடவடிக்கைகளை ட்ரேஸ் செய்ய இயலாது.

’’ மங்கள்ம் இன்னொரு காபி...’’- உள்பக்கம் குரல் கொடுத்தவன் தீவிரமாக அந்த சிக்கல்களில் மூழ்கிப்போனான்.

துடிப்புகள் தொடரும்...!

கலைவேந்தன்
02-09-2011, 05:01 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 8

’’ நாற்பது சதவீதமா ...? ’’ - வாயைப் பிளந்தான் மாணிக்கம். ‘’ இது பத்தி ஐயாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கனும் விக்னேஷ் சார்..’’ - என்று பரிதாபமாக விழித்தான்.

‘’ அட கவலைப்படாதீங்க சார்... நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன். வேலை முடித்த பிறகு என் ஃபீஸ் என்ன என்பதையும் என்னென்ன வகையில் செலவினங்கள் என்பதையும் பில் அனுப்புவேன். அதை கொடுத்தால் போதும். கோடிக்கணக்கா வாங்கி உங்களைப்போல நெருப்பை வயித்தில் கட்டி அலையனுமா நான்..’’ - குறும்புடன் விக்னேஷ் கூறும் போது அவனைப் பெருமிதமாக விழுங்கிவிடுவதைப் போல பார்த்தாள் வசந்தி.

‘’ சரி சரி ... எனக்கு சில விவரங்கள் வேண்டுமே.. ‘’ - என்று மாணிக்கத்திடம் சீரியசான முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ கேளுங்க சார்.. ‘’ - உண்மையில் மாணிக்கத்தின் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவிட்டான் விக்னேஷ். இப்போது இருக்கும் நெருக்கடியில் பாதிக்குப் பாதி கிடைத்தாலே கூட சரியென்று சொல்லி இருபபார் ஆ ஆறுமுகம். இந்த நிலையில் முன்பே சொன்னபடி திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல தான் அவர்களின் நிலை இருந்தது.

நினைத்து இருந்தால் போலீசின் உதவியோடும் சைபர் க்ரைம் போலீசார் உதவியோடும் செயலில் இறங்கி பிரச்சினையைத் தீர்த்து இருக்கலாம். ஆனால் இப்போது தேர்தல் நெருக்கத்தில் இருக்கும் நிலையில் போலீசார் இவருக்கு நன்றியுடன் உண்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. மேலும் தேர்தலுக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏற்கனவே இந்தியா முழுக்க கறுப்புப்பணத்திற்கு எதிரான முழ்க்கம்வேறு வலுப்பட்டு இருக்கும் நிலையில் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலை.

இத்தகைய இக்கட்டில் விக்னேஷ் கேட்ட தொகையைக் கொடுக்க தயாராக இருந்தார்கள் தான். இருப்பினும் விக்னேஷின் இந்த நேர்மையும் பேராசைப்படாத இயல்பும் மாணிக்கத்துக்கு இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வியக்க வைத்தது.

’’ முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... முதன்முதலில் இப்படி ஒரு தொகை ட்ரான்ஸ்ஃபர் செய்யபப்ட்டதை எப்போ கண்டு பிடிச்சீங்க...? இதுக்கும் முன் இப்படி நடந்து இருக்கா..? - விக்னேஷ்.

‘’ இல்லை சார். இன்னைக்கு காலையில் அமைச்சர் என்னை அழைத்து விவரம் சொன்னப்பதான் எனக்கும் தெரியும். ‘’ - மாணிக்கம்.

‘’ மொத்தம் எத்தனை கோடி கணக்கில் இருந்தது..? ’’ - விக்னேஷ்.

இந்த கேள்விக்கு பதில்சொல்ல சற்று தயங்கினான் மாணிக்கம். அவன் கண்கள் ஒருமுறை வசந்தியைப் பார்த்துவிட்டு தாழ்ந்தன.

‘’ இதோ பாருங்க மாணிக்கம்.. டாக்டர் மற்றும் வக்கீல்கள்கிட்ட மாத்திரம் இல்லை. எங்களைப்போன்ற டிடெக்டிவ் கிட்டயும் எதையும் மறைக்கக்கூடாது. நான் முன்பே சொல்லிட்டேன். ரகசியம் காக்கப்படும்னு. நீங்க நம்பித்தான் ஆகனும். வேற வழியும் இல்லை. ‘’ - விக்னேஷின் வார்த்தைகள் திட்டவட்டமாக வந்தன.

’’ உண்மைதான் சார் ... மொத்தம் 3300 கோடிகள். ‘’ - தயக்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னான் மாணிக்கம்.

‘உய்ய்ய்ய்ய்’ - வியப்பான சீழ்க்கை ஒலி கிளம்பியது விக்னேஷிடமிருந்து.

வசந்தியோ மயங்காத குறையாய் கண்கள் இடுங்க புன்னகைத்தாள்.

’’ ஓகே ஓகே... இந்த தொகைஅளவும் கணக்கு விவரங்களும் யாருக்கெல்லாம் தெரியும்..? - விக்னேஷ் தொடர்ந்து கேட்டான்.

’’ கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்குத்தான் தெரியும். ‘’ - மாணிக்கத்தின் கண்கள் தாழ்ந்தன.

‘’ கம் ஆன் மாணிக்கம் சார்... கண்டிப்பா நீங்க எதையோ மறைக்கிறீங்க.நீங்க அனுபவிப்பது யாரோ ஒரு கலைநுணுக்க நிபுணர் நிர்மாணித்த எழில் கூடத்தைத் தான். சொல்லுங்க ... அந்த டெக்னீஷியன் - அந்த மூனாவது ஆள் - யாரு..? எங்க இருக்கார்..? ‘’- விக்னேஷின் திறமை மாணிக்கம் சொல்லத்தயங்கிய விஷயத்தைச் சட்டென வெளிக்கொணர்ந்தது.

நாம் லேசுப்பட்ட ஆள்கிட்ட வரலை. மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர் கிட்ட வந்து இருக்கோம் என்பதை உணர்ந்த மாணிக்கத்துக்கு கண்டிப்பா இதைக் கண்டுபிடிச்சு துப்பு துலக்கத்தான் போகிறான் விக்னேஷ் என்பதை நொடியில் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டான்.

‘’’ ஆமாம் விக்னேஷ்.. ( ஓரளவு நட்புணர்வு வந்துவிட்டு இருந்தது. எனவே சாரைத் தவிர்த்தான் மாணிக்கம். ) நீலமேகம்னு ஒருத்தர். அவர் பன்னாட்டு வங்கிகளின் இண்டர்நேஷனல் ஏஜண்ட். அவர் சிங்கப்பூரில் ஒரு வங்கியில் பத்து வருடங்கள் பி ஆர் ஓ ஆக இருந்து விட்டு தமிழகம் வந்துவிட்டார். அவர் சில பல நிழலான அமைச்சர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளின் பி ஆர் ஓ ஆக இருந்து வந்தார். ..’’ - நிறுத்திய மாணிக்கம் ‘’ குடிக்க தண்ணீர் கிடைக்குமா..? ‘’- என்றான்.

உடனே வசந்தி அடுத்த அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

குடித்து ஆசுவாசப்பட்டுக்கொண்ட மாணிக்கத்துக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது.

விக்னேஷ் வியக்கவில்லை. ஏனென்றால் இது போன்ற மல்டிக்ரோர்ஸ் விவகாரத்தில் மனம் பரபரத்ததிலும் வியர்த்ததிலும் வியப்பில்லை தானே..?

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அவர் தான் அமைச்சர் ஆறுமுகத்துக்கு கார்ப்பரேட் அக்கவுண்ட் ஓபன் செய்து கிட்டத்தட்ட 18 நாட்கள் எங்கள் இருவருக்கும் ட்ரெயினிங் கொடுத்தார். கொடுக்கல் வாங்கல் ஹவாலா பணம் மாற்றல் முதலான அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தந்தார்.அது நடந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது.’’ - நிறுத்தினான் மாணிக்கம்.

‘’ ம்ம்ம் ... அப்படியானால் உங்கள் மூன்று பேருக்கும் இந்த கணக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களும் தெரியும் இல்லையா..? ‘’ - கேள்வியை கேட்டுவிட்டு மாணிக்கத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம் விக்னேஷ்... இன்ஃபாக்ட் அவர்தான் வாய்ஸ் ரெகக்னிஷன் முறையில் பல லேயர் செக்யூரிட்டியுடன் கணக்கை ஆபரேட் செய்யவைத்தார். ‘’ - இப்போது ஓரளவுக்கு சகஜப்பட்டு விட்டிருந்தான் மாணிக்கம்.

இவர்கள் உரையாடலில் எந்த ருசியும் காட்டாதது போல் சில ஃபைகளை திறந்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் அத்தனையையும் ஒரு தலை சிறந்த உளவாளியைப்போல கவனித்துக்கொண்டு இருந்தாள் வசந்தி.

’’ மிஸ்டர் மாணிக்கம்.. ஒருவேளை இந்த வேலையை அந்த நீலமேகம் செய்து இருக்கலாமில்லையா...? நீங்கள் சொன்னதை வைச்சுப் பார்க்கும் போது இந்த 200 கோடி சிங்கப்பூர் வங்கிக்கு மாற்றப்பட்டு இருக்கு. மேலும் மிகவும் சாதுரியமான முறையில் இந்த வேலை செய்து இருக்காங்க.. நீலமேகம் முன்பே சிங்கையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருக்கீங்க... அப்படி பார்க்கும் போது இது ரெண்டும் ரெண்டும் நாலு என்பது போல் பொருந்தலையா...? ‘’ - விக்னேஷ் இதைக் கூறி தானே அதை நம்பாதவன் போல லேசாக சிரித்தும் கொண்டான்.

’’ இல்லை விக்னேஷ்... கண்டிப்பாக இல்லை.என்னால் நிச்சயம் உறுதியாக கூற முடியும்.. ‘’ - மாணிக்கத்தின் குரலில் உறுதி இருந்தது.

‘’ எப்படி நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுது..?’’ - விக்னேஷின் முகத்தில் கேள்விக்குறி.

‘’ காரணம் ... வந்து ... நீலமேகம் இறந்துட்டார்... ‘’ - மாணிக்கத்தின் குரலில் பதட்டம் துலங்கியது.


துடிப்புகள் தொடரும்..!

நாஞ்சில் த.க.ஜெய்
02-09-2011, 07:11 AM
வித்யாசமான திருப்பத்துடன் ஒரு கதை அருமை தோழர் தொடருங்கள் ..நேரம் கிடக்கும் போது படிக்க முடியாததை தொடர்கிறேன்....

sarcharan
02-09-2011, 10:11 AM
சந்தடி சாக்குல ராகவரு கால வாரி விட்டுடீங்க.

seguwera
02-09-2011, 03:42 PM
கதை நல்ல விறு விறுப்புடன் போகிறது. தொடருங்கள் கலை

கலைவேந்தன்
04-09-2011, 06:44 AM
மிக்க நன்றி ஜெய், சாய் சரண் மற்றும் செகுவேரா..!

கலைவேந்தன்
04-09-2011, 06:49 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 9

மாணிக்கத்தின் அந்த பதிலை எதிர்பார்த்திருந்த விக்னேஷுக்கு அது வியப்பளிக்கவில்லை தான். ஆனால் அவரகளின் உரையாடல்களைக் கண்டு கொள்ளாதது போல் கவனித்துக்கொண்டிருந்த வசந்திக்கு அது அதிர்ச்சியை அளித்தது. பிறந்ததுமுதல் பணப் பற்றாக்குறையைப் பார்த்திராத வசந்திக்கு பணத்தின் மீது பற்றும் இல்லை. அந்த மனநிலையில் இருக்கும் வசந்திக்கு பணத்திற்காக கொலையும் செய்துவிட்டார்களா பாவிகள் என்ற வருத்தம் அவள் முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது.

’’ கொன்றே விட்டீர்களா நீலமேகத்தை..? ‘’ - முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விக்னேஷ் வினவினான்.

‘’ இல்லை விக்னேஷ்.. நாங்கள் கொல்லவில்லை. அவருக்கு மாரடைப்பு வந்தது.இயற்கையான மரணம் தான் ‘’ என்ற மாணிக்கம் நடந்ததை விரிவாகக் கூறலானான்.

‘’ நீலமேகம் எலலா அரசியல் வாதிகளுக்குமே நிழலான குருவாக இருந்து வந்தார். முறைகேடான முறையில் லைசன்ஷியேட் மற்றும் தொழிற்சாலை அனுமதி என்று பலவகைகளில் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கையூட்டுகள் அன்பளிப்புகள் அதீதமாக இருக்கும். அப்படிப்பட்ட பணத்தை - அதுவும் கோடிக்கணக்கான பணத்தை - இந்திய வங்கிகளிலோ அல்லது இந்திய சொத்துக்களிலோ முதலீடு செய்து வைத்தால் அரசியல் வாதிகளுக்குப் பெரும் பிரச்சினை வரும் என்பதால் பல வருடங்களாக இதற்கு என்ன வழி என்பதை யோசித்துக்கொண்டு இருந்த அரசியல் வாதிகளுக்கு நீலமேகம் போன்ற வெளி நாட்டு வங்கிகளின் ஏஜண்ட்கள் வரப்பிரசாதமாக அமைந்தனர். ’’ - இடையில் குறுக்கிடாமல் அமைதியாகக்கேட்டுக்கொண்டு இருந்தான் விக்னேஷ்.

மாணிக்கம் தொடர்ந்தான்.

’’ இந்தியாவில் இது போன்ற ஏஜண்ட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் பல மாநிலங்களில் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தோற்றத்தில் மிகச்சாதாரணமாக இருப்பார்கள். பெயருக்கு எந்த கம்பெனியிலாவது லீகல் அட்வைசர் அல்லது பொதுஜன தொடபாளர்களாக விளங்குவார்கள். ஏன் இந்தியாவில் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.’’ - சற்று நிறுத்தி விக்னேஷின் முகத்தைப்பார்த்து ‘’ தயவு செய்து அவங்க எல்லாம் யார் யாருன்னு கேட்டுடாதீங்க.. இது எல்லாம் டாப் சீக்ரெட். நான் இதை வெளியிட்டதாக சந்தேகம் வந்தாலும் என்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள். ’’- என்ற மாணிக்கத்தின் முகத்தில் மரண பயம் தெளிவாகத் தெரிந்தது.

‘’ இல்லை. கேட்கமாட்டேன். தொடருங்க மாணிக்கம். ‘’ - விக்னேஷ் ஊக்குவித்தான். அவனுக்கு இதெல்லாம் அதிக வியப்பைத் தரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வியப்பின் உச்சிக்கு போனவள் வசந்தி மட்டும் தான்.

மாணிக்கம் விவரிக்க விவரிக்க ஏற்கனவே சிவந்த அழகான வசந்தியின் முகம் வியப்பில் இன்னும் சிவந்து அவளது அழகை அதிகரிக்கச்செய்தது. இத்தனை சுவாரசியத்திலும் வசந்தியின் முகத்தில் மாறிமாறி வரும் அழகியல் மாற்றங்களைக் கவனிக்கத் தவறவில்லை விக்னேஷ்.

இதை எல்லாம் கவனிக்காத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அப்படிப்பட்ட எஜண்ட்களில் ஒருவர் தான் நீலமேகம். இவர் முன்பே பத்து வருடங்கள் சிங்கப்பூரில் இருந்த அனுபவம் இவருக்கு கை கொடுத்தது. ஸ்விஸ் வங்கிகளில் எலலாவற்றிலும் இவருக்கு பரிச்சயம் இருந்தாலும் இவர் அதிகம் டீல் செய்வது என்னவோ ஏபிஎஸ் பேங்க் தான். இவர் நினைத்தால் ஒரே நாளில் வங்கிக்கணக்கு துவக்கவும் உடனடி ட்ரான்சாக்சன் செய்து தரவும் இயலும்.

எங்க மந்திரி ஆறுமுகம் இவரைப்பற்றி கேள்விப்பட்டதும் இவரை தன் வீட்டுக்கே வரவழைத்து இது சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டார். அவரது ஹை டெக் லேப்டாப்பிலேயே நீலமேகத்தை கணக்கு துவக்க வழி கேட்டார். இத்தனைக்கும் அமைச்சர் ஒரு முறை கூட ஸ்விட்சர்லாந்து போனது இல்லை. வீட்டிலிருந்தபடியே எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.பதினெட்டு நாட்கள் அமைச்சர் வீட்டுல தங்கி எல்லா வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.

ஒரு முறை கணக்கு துவங்குவது தான் கடினம். மேலும் அந்த அக்கவுண்ட்டிலிருந்து பணம் இன்னொரு பெனிஃபிசரிக்கு அனுப்புவதும் கடினம். நீலமேகம் அதில் சில சிக்கலான வாய்ஸ் கீ எண்ட்ரி செய்து வைத்தார். அதன்படி அமைச்சர் அல்லது நான் எங்கள் சொந்தக்குரலால் சில கோடிங்கு களைச் சொல்லி ட்ரான்சாக்ட் செய்ய வேண்டிய முறைப்படி அமைத்து தந்தார்.

அதற்குப்பிறகு தாராளமாக பல லைசன்ஷியேட் கார்ப்போரேட் பர்மிட்கள் மூலம் கிடைத்த நூறு இருநூறு கோடிகள் எல்லாம் அமைச்சர்கணக்கில் போடப்பட்டு வந்தது.’’’ - கொஞ்சம் நிறுத்தி நிதானித்துக் கொண்டான் மாணிக்கம்.

எல்லாவற்றியும் கவனமாகக் கேட்டுக்கொண்ட விக்னேஷ் .’’ அதெல்லாம் சரி ..நீலமேகம் எப்படி இறந்தார்..? ‘’ - என்று கேள்வி போட்டான்.

’’ இப்படி எல்லாம் நீலமேகம் செய்து தந்தாலும் ஆறுமுகம் அவரை நம்பவில்லை. எங்கே தனது ரகசியங்களை வெளியிட்டு விடுவாரோ என்று அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்தார். நீலமேகம் எவ்வளவொ சத்தியம் செய்தும் அவரை வெளியில் விட மறுத்தார். நானும் சொன்னேன் இது கிட்நாப்பிங் கேஸ் ஆகிடும் ஐயா... வேண்டாம் அவரை விட்டு விடுஙக்ள். அவர் அப்படி எதுவும் செய்ய நினைத்தால் அவரை நாம் கவனித்துக்கொள்ளலாம் என்று ஆசுவாசம் தந்த பிறகு வெளியில் விட சம்மதித்தார்.’’

‘’ இப்படி மிரட்டப்பட்டதால் நீலமேகம் மனதளவில் மருண்டு போய் ஆறுமுகம் ஐயா கொடுத்த இரண்டு கோடி ரூபாய் கேஷைக்கூட ( அவருக்கு ஃபீஸ் ) வாங்க மறுத்து தன் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு சென்றுவிட்டார். பிறகு அவரிடமிருந்து சில மாதங்கள் தகவலும் இல்லை. கடந்த மூன்று மாதங்கள்முன் சென்னைக்கு வந்து சென்றதாகவும் ஹார்ட் அட்டாக் வந்து சில நாட்களில் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் செய்தி வந்தது. ஆனால் எங்க ஐயாமேல் பத்திரிகைகளின் சந்தேகங்கள் கறுப்புப்பண விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளி வந்த சமயம் என்பதால் அவரைப்போய் பார்க்க பயந்து நாங்கள் செல்லவில்லை. இதான் விக்னேஷ் நடந்தது. இதில் எந்த பொய்யும் நான் கூறவில்லை ’’ - என்று மாணிக்கம் கூறினான்.

‘’ சரி மாணிக்கம் .. எனக்கு நீங்க கண்டுபிடிச்ச டிரான்சாக்*ஷன் ரெஃபரென்ஸ் நம்பர் இதெல்லாம் கொஞ்சம் தர முடியுமா..? - விக்னேஷ் கேட்டுக்கொண்டு இருந்தபோது மாணிக்கத்தின் மொபைல் ஒலித்தது.

‘’ ம்ம்ம் சொல்லுங்கய்யா.. நான் விக்னேஷ் ஆபீசில் தான் பேசிக்கிட்டிருக்கேன்... என்னது ...? ஐயோ... இது எப்போ ஐயா...? அடக்கடவுளே...நீஙக் கவலைப்படாதீங்கய்யா.. உடல் நலம் கவனம்.. ‘’

- பேசிமுடித்த மாணிக்கம் , ‘’ விக்னேஷ், இன்னொரு 250 கோடி ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்குதாம்... இம்முறை லண்டன் கணக்குக்கு .. ’’ - என்று பதட்டத்துடன் கூறினான்..!

துடிப்புகள் தொடரும்..!

sarcharan
07-09-2011, 09:52 AM
250 கோடி பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகி மூன்று நாட்கள் ஆகிடுச்சே... விக்னேஷ் என்ன பண்றாரு?:redface:;):confused:

சிவா.ஜி
11-09-2011, 03:22 PM
ரொம்பவும் மெனக்கெட்டு பல விஷயங்களை சேகரித்து எழுதுகிறீர்கள். மிகவும் சுவாரசியமாய் செல்லும் கதையின் அடுத்தடுத்த பாகங்களைப் படிக்கும் ஆவல் கூடுவதை தவிர்க்க முடியவில்லை கலை. தொடருங்கள்....தொடர்கிறேன்.

கலைவேந்தன்
29-03-2012, 05:46 AM
தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். விரைவில் தினம் ஒரு அத்தியாயமாக பதிந்துவிடுகிறேன்.!

கலைவேந்தன்
29-03-2012, 05:49 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 10

இன்னும் 250 கோடி கணக்கிலிருந்து ஸ்வாஹா ஆனதைக்கேட்டு விக்னேஷ் அதிக வியப்படையவில்லை. மாணிக்கம் தான் தன் குடியே மூழ்கினதைப்போல தலைகவிழ்ந்து கிடந்தான்.

‘’ என்ன மாணிக்கம் சார்...? நீங்க இன்னும் உங்க அக்கவுண்ட்டை லாக் செய்யலையா.? அல்லது பாஸ்வேர்டை மாத்தலையா..? சேகர் சுப்ரமணியம்னு எனக்கு தெரிந்த பேங்கர் எனக்கு சொல்லி இருக்கார். மாதம் ஒருமுறை கணக்கை மாற்றி லாகின் மற்றும் ட்ரான்சாக்சன் பாஸ்வேர்டை மாற்றனும் அடிக்கடி சொல்லுவார். நீங்க ஏன் அதை செய்யலை...? ‘’ - விக்ரம் அமைதியாகக் கேட்டான்.

‘’ முயற்சி செய்தோமுங்க... ஐபி லாக் செய்யப்பட்டு இருக்கு. அக்செஸ் மட்டும் ஆகுது. ஆனா பாஸ்வேர்ட் சேஞ்ச் ஆப்ஷன் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கு. நாங்க எவ்வளவு முயற்சி செய்தும் எங்க இன்னொரு பிரைமரி அக்கவுண்ட்டுக்கு இந்த அமௌண்ட்டை ட்ரான்ஃபர் செய்ய முடியவே இல்லை. ப்யூர் ஹாக்கிங் இது. ‘’ - மாணிக்கம் சோர்ந்த முகத்துடன் நிராசையுடன் சொன்னான்.

‘’ என்னது ..? பிரைமரி அக்கவுண்ட்டா...? அது என்ன ...? விளக்கமா சொல்லுங்க... ‘’ - முதன்முறையாக தனது சிமிழ் போன்ற சிவந்த உதடுகளைத் திறந்து வசந்தி கேட்டாள்.

மாணிக்கம் வசந்தியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னான்.

‘’ பொதுவா ஸ்விஸ்ல மொத்தம் 400 க்கும் மேல வங்கிகள் இருந்தாலும் ஒரு சில வங்கிகள் தான் மிகப்பெரியவை. உதாரணத்துக்கு யூபிஎஸ் ( யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாண்ட் ) மற்றும் சி பி எஸ் (கிரெடிட் ஸ்யூஸ்ஸெ க்ரூப்) இந்த ரெண்டு வங்கிதான் மிகப்பெரியது. பொதுவா இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான்கள் அனைவரும் இந்த இரண்டில் தான் பெரும்பாலும் தங்கள் கணக்கை வைத்து இருப்பாங்க.நம்பர்ட் அக்கவுண்ட் அப்படின்னு சொல்லுவாங்க.. அக்செஸ் நம்பருக்கு அவங்க ஒரு கிலோ சுத்த தங்கத்திலானான அக்செஸ் கீ தருவாங்க.. அப்படி ஓபன் செய்பவங்க பிரைமரி மற்றும் சப் அக்கவுண்ட் வைச்சுக்கலாம். எப்போது வேணும்னாலும் தங்கள் கணக்கில் தொகையை மாற்றிக் கொள்ளலாம். பாதுகாப்பு கருதி இந்த வசதி தந்து இருக்காங்க. ‘’ - மாணிக்கம் கொஞ்சம் நிறுத்திவிட்டு தன் பர்சில் வைத்திருந்த சிறிய புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.

http://static.howstuffworks.com/gif/swiss-bank-account-8.jpg

அதைக்கண்டதும் வசந்தியின் முகம் வியப்பால் மலர்ந்து இன்னும் அழகு பெற்றது.

விக்னேஷ் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் மாணிக்கத்திடம் கொடுத்தான்..

‘’ இன்னைக்கு காலை அமைச்சர் அந்த ட்ரான்சாக்சனைக் கண்டு பிடிச்சதும் என்னிடம் அழைத்துக் காட்டியதும் நாங்க முதலில் செய்ய முயன்றது அக்கவுண்ட் லாக் தான். ஆனா அதை லாக் செய்ய முடியாதபடியும் பாஸ்வேர்ட் மாற்றும் வாய்ப்பில்லாத படியும் முடக்கப்பட்டு இருக்கு. ஆனா ஆச்சரியம் என்ன என்றால் அக்சேஸ் கோட் மற்றும் பாதுப்பாப்பு சமாச்சாரங்கள் எல்லாமே மாற்றப்படவே இல்லை.இதனால் ரெண்டு பிரச்சினை எழும்..’’ - என்று கூறிவிட்டு விக்னேஷின் முகத்தைப் பார்த்தான் மாணிக்கம்.

மேல சொல்லுங்க என்று சைகையால் காட்டிய விக்னேஷ் லேசாக கண்களை இடுக்கிக்கொண்டு யோசித்தான். அவன் அப்படி அரைக்கண் மூடினால் பிறருக்கு தூங்குவது போல் தோன்றினாலும் அதன் உண்மையான பொருள் வசந்தி மட்டுமே அறிவாள். தீவிரமாக சிந்திக்கும் போது விக்னேஷின் கண்கள் இடுங்கி அரைத்தூக்கம் போல் தென்படும்.

இதை எல்லாம் அறியாத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ முதல் பிரச்சினை என்ன என்றால் பாஸ்வேர்ட் மாற்றும் போது சிறிய தவறுகள் கூட கணக்கை முடக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதனால் இதைக் கையாள்பவன் மாற்றாமல் இருக்கிறான். அதே சமயம் நாங்க மாத்திடுவோம்னு நினைச்சு அந்த ஆப்ஷனை டிசேபிள் செய்து இருக்கான். இதை முதல் அக்செஸ் போது செய்து இருக்கிறான். அதனால் எங்களால் அதை மீண்டும் எனேபிள் செய்ய முடியவில்லை.

இரண்டாவது பிரச்சினை என்ன என்றால் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றாமல் நாங்கள் பேங்குக்கு புகார் செய்தாலும் அதை வங்கி ஏற்காது. ஏன்னா எங்களுக்கு முதல் இன்ஸ்ட்ரக்*ஷன் என்னன்னா எந்த நெருக்கடியிலும் அக்செஸ் கோடை மாற்றிவிடனும் என்பது தான். அது செய்யாமல் இழப்பிற்கு வங்கியின் உதவி நாடினால் பயன் எதுவும் இல்லை.

இதை எல்லாம் நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கும் கில்லாடி தான் இதை செய்கிறான்.’’ - என்று முடித்தான் மாணிக்கம்.

‘’ செய்கிறாள் என்று கூட எடுக்கலாம் இல்லையா ‘’ - புன்னகைத்தான் விக்னேஷ்.

‘’ என்ன சொல்றீங்க விக்னேஷ்..? ‘’ - பீதியில் முகம் வெளுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ பயப்படாதீங்க .. பாசிபிளிட்டியைச் சொன்னேன் ’’ - ஆசுவாசம் அளித்தான் விக்னேஷ்.

‘’ இனி என்ன செய்யலாம் விக்னேஷ்... நீங்க தான் இதை எபப்டியாவது சால்வ் செய்யனும்... ‘’ - எழுந்து கெஞ்சாத குறையாக விக்னேஷின் கைகளைப் பிடித்து வேண்டுகோள் விடுத்தான் மாணிக்கம்.

’’ மாணிக்கம் ஒரு விஷயம் கவனிச்சீங்களா...? இந்த வேலை செய்பவன் நிதானமாக ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டுக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறான். ஆனால் எல்லா பணமும் ஒரு கணக்குக்கு போகாமல் வெவ்வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றுவது ஏன்..? அப்படியானால் அவனுக்கு எத்தனை நாட்டில் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்..? இது ஒரு வேளை தீவிர வாதிகள் வேலையாகக் கூட இருக்கலாம். ஒரு மிகப்பெரிய கும்பலின் வேலையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மேலும் உங்க ஒருத்தர் கணக்கிலிருந்து தான் எடுக்கிறான் என்றும் நிச்சயமாகக் கூற முடியாது....ம்ம்ம்... நான் சில வேலைகளை முடித்து இன்று மாலை 6 மணி சுமாருக்கு அமைச்சர் வீட்டுக்கு வரேன். எனக்கு அந்த லேப்டாப்பைப் பார்க்கனும்.சில விவரங்கள் சேகரிக்கனும்.. அதுக்கும் முன் நீலமேகம் முகவரி கொடுத்துட்டு போங்க நான் உங்களை சந்திச்சதும் இன்றிரவே நீலமேகம் ஊரான கும்பகோணம் போகிறேன்.’’ - சந்திப்பு முடிந்தது என்று சொன்னது போல எழுந்தான் விக்னேஷ்.

’’ அதுக்குள் இன்னொரு முறை பணம் எடுத்தான்னா...? - மாணிக்கத்தின் நியாயமான கவலை ( சுப்ரமணியம் சேகரின் கவலையும் கூடத்தான் . ) அவனைப் படர்ந்தது

‘’ பயப்படாதீங்க... 24 மணி நேரத்துல ஸ்விஸ் பேங்குல இருந்து இரண்டு ட்ரான்சாக்*ஷனுக்கு மேல் செய்ய இயலாது. சிறப்பு அனுமதி பெற்றுஇருந்தால் ஒழிய.. இது உங்களுக்கு தெரியாதா ...? ‘’ - விக்னேஷ் கேள்விக்குறியுடன் மாணிக்கத்தைப் பார்த்தான்.

‘’ தெரியும் விக்னேஷ்... ஆனா... ஐயாக்கு அந்த அனுமதி உண்டு .. ‘’ - கவலையில் அவன் முகம் பொலிவிழந்தது.

’’அப்படின்னா இறைவனை வேண்டிக்கோங்க... நான் மந்திரவாதி இல்லை. குறைந்த பட்சம் எனக்கு 24 மணி நேரம் அவசியம் ..'' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு ..வசந்தியிடம் ‘’’ வசந்தி லேப்டாப்பை ஆன் செய்து வை. இதோ வரேன் என்று கூறிவிட்டு வெளியில் வந்து மாணிக்கம் சென்ற காரின் வழியை கவனித்தான். அவன் முகம் சந்தேகத்தால் இறுகியது.

துடிப்புகள் தொடரும்..!

Dr.சுந்தரராஜ் தயாளன்
29-03-2012, 10:42 AM
கொஞ்சம் தான் படித்தேன் இன்னும் நிறைய படிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது தொடர்வேன். விறுவிறுப்பாக உள்ளது. நன்றி கலைவேந்தன் அவர்களே.:)

sarcharan
29-03-2012, 12:57 PM
அப்பாடி கதை பின்னும் விறுவிறுப்போடு டாப் கியரில் பயணிக்குது. கலக்குங்க... வேகமா போங்க

கலைவேந்தன்
29-03-2012, 04:10 PM
நன்றி..தயாள்..சரண்..!

கலைவேந்தன்
29-03-2012, 04:15 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 11

மாணிக்கம் வெளியில் சென்றதும் விரைந்து அவனைப் பின் தொடர்ந்து சென்ற விக்னேஷ் அவன் காரில் ஏறும்முன் வெளியில் காத்துக்கொண்டு இருந்த ஒரு பெண்ணும் காரில் ஏறியதைப் பார்த்தான். அவன் மனதில் பல வித யோசனைகள் தோன்றின.

சொன்னதை உடனே செய்யும் பணிவுமிக்க சகதர்மிணியைப் போல இவன் கேட்டதும் லேப்டாப்பை ஆன் செய்து இணையத்தையும் இணைத்து அவன் முன் மேஜைமீது வைத்தாள் வசந்தி.

தனது சேரில் அமர்ந்து கொண்ட விக்னேஷ் வசந்தியையும் பக்கத்தில் இருந்த இன்னொரு சேரில் அருகில் அமர்த்திக்கொண்டான்.

‘’ வசந்தி.. நீ ஒரு வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டால் என்ன விதமாக பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வாய்.? ‘’ - தொடர்பில்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு கண்களை அகல விரித்து குழ்ந்தைத் தனமாகச் சிரித்தாள்.

‘’ ம்ம்ம்... எனக்கு பிடிச்ச ஜாஸ்மின் பூவை பாஸ்வேர்டாக வைப்பேன். .’’ - இனிய குரலில் பதிலளித்தாள்.

‘’ சரி ... ஒரு ஆளின் பெயரை பாஸ்வேர்டாக வைக்கனும் என்றால் என்ன பெயர் வைப்பாய்..? ’’- குறும்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ விக்னேஷ் மை டியர் அல்லது மை டியர் விக்னேஷ் என்று வைப்பேன். ‘’ - தயக்கமின்றி பதில் வந்தது வசந்தியிடம்.

விக்னேஷின் கவனம் அவள் சொன்னதில் லேசாக அசைந்தாலும் அவன் கண்கள் லேசாக இடுங்கி மங்கியது.

சட்டென ‘’ வசந்தி... நீ உடனே எனக்கு ஒரு தகவல் விசாரிச்சு சொல்லனும். செய்வியா ?‘’ - என்று கேட்டான்.

‘’ சொல்லுங்க விக்னேஷ்.. ‘’ - விக்னேஷ் எது செய்யப்பணித்தாலும் புன்முறுவலுடன் உடனே மகிழ்ச்சியுடன் செய்வது வசந்தியின் சுபாவம்.

‘’ அமைச்சர் ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்துக்கு தம் மனைவியர் தவிர வேற பெண் தொடர்பு இருப்பதா கேள்விப்பட்டு இருக்கேன். அவங்க யாரு என்ன விவரம்னு தெரியனும்.’’ - விக்னேஷ் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இதைச் சொன்னான்.

'' இப்படி ஒருவேலை தரேன்னு நீ ஒன்னும்நினைக்கலையே வசந்தி..? ‘’ - மனதில் வேதனயுடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ இல்லை விக்னேஷ்.இதுவும் நம் தொழிலுக்கு மிக அவசியமான வேலைன்னு தெரியுமே... மேலும் நீங்க சொல்லி எதையாவது தட்டியதுண்டா நான்..? ‘’ - வசந்தியின் அழகான கண்களைச் சந்திக்க திடமின்றி தலைகுனிந்தான் விக்னேஷ்.

.வசந்திக்கு் விவரம் சொல்லி சேகரிக்க வேண்டிய செய்திகளைப் பற்றி விவரித்துக்கூறி அனுப்பியபின் ஸ்விஸ்வங்கியின் அடிப்படை விடயங்களைக் குறித்து சில குறிப்புகள் தேடி எடுத்துக் கொண்டான். மாலை ஐந்து மணி ஆன பின் பக்கத்து நாயர் கடையில் இருந்து வந்த டீயைக் குடித்துவிட்டு தன் டி வி எஸ் ஸ்டார் சிட்டியை எடுத்துக் கொண்டு மந்திரியின் வீட்டுக்கு போனான்.

மந்திரியின் பங்களா ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சற்றும் குறையவில்லை. மிக உயரமான அழகிய பி ஓ பி கூரையும் அதில் விலை உயர்ந்த சாண்டிலியர்களும் உயர்தர தேக்கிலான தளவாடப் பொருட்களும் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய கூடமும் அதன் நடுவில் அழகான மாடிப்படிகளும் கண்களைக் கவர்ந்தன.

உயர் தர திரைச்சீலைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் சுவர்ச்சித்திரங்களும் ஆறுமுகம் எப்படிப்பட்டவராயிருப்பினும் கலை நுணுக்கம் அறிந்தவர் என்பதைக் காட்டிக்கொண்டு இருந்தன.

விக்னேஷ் வருவது முன்பே அறிந்திருந்த செய்தி என்பதால் அவனை அழைத்து அமரச்செய்து உயர்ந்தவகை குளிர் பானமும் அளிக்கப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டான். ’’ ஐயா பூஜையில் இருக்காரு.. பத்து நிமிடத்தில் வந்துடுவாரு. மாணிக்கம் ஐயாவும் இப்ப வந்துடுவாங்க ’’ - என்று சொல்லிவிட்டு பவ்யமாக ஒதுங்கினர் பணியாட்கள்.

மாணிக்கம் வெளியிலிருந்து வரவும் ஆறுமுகம் மாடிப்படியில் இறங்கி வரவும் மிகச்சரியாக இருந்ததைப் பார்த்த விக்னேஷ் இது அதிசயப்புரிதலா இல்லை ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பின் விளைவா என்று வியந்தபோது அவனை மேலே தனது பிரைவேட் ஹாலுக்கு அழைத்துச்சென்றார் ஆறுமுகம்.பணியாட்களுக்கு சில சைககளைச் செய்துவிட்டு மாணிக்கமும் அவர்களுடன் மேலே விரைந்தான்.

அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் லேப்டாப்பில் தாம் கண்ட விஷயங்களை விவரித்தார்.

இரண்டு பணமாற்றமும் செய்யப்பட்ட சிங்கப்பூர் வங்கி மற்றும் லண்டன் வங்கி விவரங்களையும் விக்னேஷ் குறிப்பெடுத்துக்கொண்டான்.

திடீரென்று விக்னேஷ் கேட்ட கேள்வி இருவரையும் திடுக்கிட வைத்தது.


துடிப்புகள் தொடரும்..!

கலைவேந்தன்
30-03-2012, 04:52 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி * 12.

விக்னேஷ் அப்படி ஒரு கேள்வி கேட்பானென்று எதிர்பார்க்கவில்லை இருவரும்.

இத்தனைக்கும் அமைதியாகத்தான் விக்னேஷ் கேட்டான், ‘’ உங்களுக்கு ஏதாவது ஆனால் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் எல்லாப் பணமும் யாருக்குச் சேரும்..? ‘’ - விக்னேஷ் கேட்டது மிகப்பெரிய சிக்கலான கேள்வி.

இருவருமே தமது பணத்திற்கு மிகத்தெளிவாக வாரிசுகளை அறிவித்து இருந்தார்கள். தமது அதிகாரப் பூர்வமான மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் பங்கையும் அதாவது எழுபத்தைந்து சதவீதமும் ரகசிய உறவுகளுக்கு இருபத்தைந்து சதவீதமும் தெளிவாக வாரிசுரிமைப் பத்திரம் எழுதி வங்கிகளுக்கு அளித்திருந்தனர். இதை எப்படி விக்னேஷுக்கு தெரிவிப்பது..? பின்னாளில் சிக்கல் ஏற்பட ஏதுவாகிவிடுமே என்ற கவலை அவர்களை சிந்திக்க வைத்தது.

மாணிக்கம் தான் அதிர்ச்சியிலிருந்து தெளிந்தான்.

‘’ பொதுவாக வங்கிகளுக்குரிய வாரிசுமைப் பங்கீடுகள் ஸ்விஸ் வங்கிகளுக்கும் உண்டு. அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். கணக்காளர்கள் தங்கள் வாரிசுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கும் பட்சத்தில் வங்கியே உரியவர்களுக்கு பிரித்து வழங்கிவிடும்.இதில் சிறப்பு என்ன என்றால் எத்தனை இருந்தது யாருக்கு என்ன பங்கு என்பதை விரிவாக அனைவருக்கும் அறிவிக்காமல் பொது வக்கீல் முன்னிலையில் அவரவர்களுக்குச் சேரவேண்டிய தொகையை மட்டும் அறிவித்து வழங்கிவிடும். இதற்கென தனிக் கட்டணம் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.’’ - மாணிக்கம் விவரித்தான்.

‘’ ஒரு வேளை உங்களுக்கு எதுவும் ஆனது வங்கிகளுக்கு தெரியாமல் போய்விடும் நிலையில்.. என்னவாகும்..? வாரிசுகளுக்கும் உங்கள் பங்கீடு பற்றிய தெளிவு இல்லாதிருக்கும் பட்சத்தில்..’’ - என்று இழுத்தான் விக்னேஷ்.

‘’ உண்மைதான். வாரிசுகள் யாரென்பது வங்கிகளின் ஊழியர்களுக்கு அறியப்படாமல் இருக்கும். கணக்காளர் இறந்த செய்தி உரிய முறையில் அவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். இதற்காக வருடம் ஒருமுறை உயிருடன் இருப்பதாகப் பிரமாணம் ஒன்றை கணக்காளர்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு பிரமாணம் கிடைக்காத சூழலில் பத்து வருடங்கள் கழிந்தபின் கணக்காளர் இறந்ததாகக் கருதி வாரிசு உயிலைப்பிரித்து யாருக்குச் சேரவேண்டுமோ அவரவருக்குப் பங்கிட்டு அளிக்கப்படும். ஒரு வேளை வாரிசு தெரிவிக்கப்படாமல் மறைந்துவிடும் கணக்காளர்களின் கணக்குகளை பத்து வருடங்கள் வரை உரியவர் க்ளெய்ம் செய்யாத நிலையில் அவை டார்மெண்ட் அக்கவுண்ட்ஸ் (Dormant accounts ) * எனப்படும் தர்மக்கணககாக மாறி வங்கிகளுக்கே உரிமையாகிவிடும். ’’ - மாணிக்கம் விவரமாகக் கூறினான்.

’’ அப்படியா ... ? ‘’ - என்று வியந்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம். இது போன்ற டார்மெண்ட் கணக்குகளின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் குவிந்துகிடக்கும் அனாமதேயச் சொத்துகள் பல ஆயிரம் ட்ரில்லியன்களைத் தொடும். இந்தியாவில் இருந்து மட்டும் இது போன்ற தொகை ஐம்பதினாயிரம் கோடிகளுக்கும் மேல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ‘’ - மாணிக்கத்தின் இந்த வார்த்தைகள் விக்னேஷின் மனதை வேதனைப்படுத்தின.

‘’ ஓ இத்தனை சிரமம் இருக்கா இதுல..? இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து பணம் சேர்த்து என்ன தான் செய்யப்போறீங்க..? பொசுக்குன்னு நீங்க போயிட்டா எல்லாம் போச்சு தானே..? ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் வேதனை நிறைந்த விரக்தி தெரிந்தது. ‘’ மேலும் இந்தியாவின் ஏழை மக்களின் உழைப்பில் வந்த கோடிக்கணக்கான பணம் இப்படி ஒரு அன்னிய நாட்டில் தர்மக்கணக்காக மாறி கொள்ளை போகவேண்டுமா...? இதுக்கெல்லாம் விடிவே வராதா ? ‘’ - விக்னேஷ் நெகிழ்ந்து போய் குரல் தழுதழுக்கக் கூறினான்.

’’ சரி ஐயா... இன்னைக்கு இரவே நான் கும்பகோணம் புறப்படுகிறேன். நீலமேகம் பற்றி விசாரித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனக்கு ஃப்ளைட் ஏற்பாடும் செய்து கும்பகோணத்தில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்துவிடுங்க.. - என்றான் விக்னேஷ்.

‘’ அதெல்லாம் நீங்க சொன்னதுமே மாலையே ஏற்பாடு செய்துட்டேன் விக்னேஷ். இரவு 11 மணிக்கு திருச்சி வரை ஃப்ளைட்டுக்கு ஏற்பாடு செய்துட்டேன். திருச்சி விமான நிலையத்தில் உங்களுக்காக இன்னோவா கார் தயாரா இருக்கு,. சரியா ஆறுமணிக்கு கும்பகோணம் ஹோட்டல் ராயாஸ் ல செக் இன் செய்றீங்க..’’ - விவரங்களை ஒப்புவித்தான் மாணிக்கம்.

விக்னேஷ் நிஜமாகவே மாணிக்கத்தின் ஏற்பாட்டையும் சுறுசுறுப்பையும் கண்டு அதிசயித்தான். ஆறுமுகத்தின் சாய்ஸ் மிகவும் சரிதான் என்று மனதுக்குள் முடிவு செய்துகொண்டான்.

’’ சரி ..இப்ப மணி ஒன்பது ஆகுது. இப்ப புறப்பட்டா சரியா இருக்கும். நீங்க கவலைப்படாதீங்க. அதிக பட்சம் அவன் இன்னொரு ட்ரான்சாக்*ஷன் செய்துகொள்ள முடியும். அதற்குள் பிரச்சினையை சால்வ் செய்துவிடலாம்.நான் புறப்படறேன் ‘’ - விக்னேஷ் விமான நிலையம் செல்லும் வழியில் வசந்தியை தொடர்பு கொண்டான். தான் கும்பகோணம் செல்லும் விவரத்தை அறிவித்துவிட்டு அவள் சேகரித்த விவரத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். இருவரின் அந்தரங்க உறவுப்பெண்கள் கணிணித்துறையில் பூஜ்யம் என்பதை அறிந்து அவர்கள் மேலிருந்த ஐயத்தை நினைவிலிருந்து அழித்தான்.

திட்டமிட்டபடி கும்பகோணம் சென்று ஹோட்டல் ராயாவில் செக் இன் செய்து அலுப்புத் தீர குளித்துவிட்டு அருமையான டீயைக் குடித்துவிட்டு நீலமேகம் வீட்டுக்குச் சென்றான்.

நீலமேகத்தின் மனைவி பார்வதியம்மாளிடம் தான் அவரது க்ளையண்ட் ரங்கசாமியின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது மறைவுக்கு துக்கம் விசாரித்தான் விக்னேஷ்.

தனது தந்தைக்கான சில ஆவணங்கள் நீலமேகம் அறையில் வைத்திருந்ததாகவும் பார்வதியம்மாள் அனுமதித்தால் அந்த டாகுமெண்ட்ஸைத் தேடிக்கொள்வதாகவும் கூறினான்.

பார்வதியம்மாள் நடுங்கியவாறே கேட்டாள், ‘’ நீங்க அமைச்சர் ஆறுமுகம் ஆள் இல்லையே..? ‘’

துடிப்புகள் ... தொடரும்..!


* Dormant accounts
As with anything that's "secret," you have to deal with what happens when one of the few people who know about it die. Accounts whose owners die without having passed on information to others concerning the existence of the account become dormant after a period of time. The account can be passed on to heirs but that becomes difficult if no one knows about it and the bank doesn't know you've died.

Your banker could try to search for you, but that would "spill the beans" so to speak. After 10 years of no contact, however, the bank has a legal obligation to search for you. If they can't find you, or if they learn you have died, they will search for your heirs. If they can't find any heirs, they will report the account to the Swiss banking ombudsman, an official who represents the public by investigating complaints made by individual citizens.

Therefore, it's important to take some measures to make sure your money goes to people you want it to. For example, give the banker another contact person that he can contact if he doesn't hear from you for a specific period of time (that person still doesn't have to know about the account). Or, you could have information about the account stored in a special envelope to only be opened when you die [Source: Swiss-Bank-Accounts.com].

சிவா.ஜி
30-03-2012, 08:50 PM
சுறுசுறுப்பாய்...விறுவிறுப்பாய்....கலகலப்பாய் போகும் கதைக்கு வாழ்த்துக்கள் கலை...தொடருங்க....அசத்துறீங்க...!!!

கலைவேந்தன்
31-03-2012, 01:51 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 13

பார்வதி அம்மாளின் நடுக்கமான பயந்த கேள்வி விக்னேஷின் மனதை உலுக்கிவிட்டது.

தெரிந்து கொண்ட செய்திகளை விட தெரியாத பல சம்பவங்கள் நீலமேகம் குடும்பத்தை மிகவும் உலுக்கியுள்ளது என்பதை உணர்ந்த விக்னேஷ், ‘’ இல்லை அம்மா.. நான் நீலமேகம் ஐயாவால் பயனடைந்த ஒருவரது மகன். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வந்துஇருக்கிறேன். ‘’ என்றான்.

’’ உள்ளே வாங்க தம்பி..’’ - அன்புடன் அழைத்த பார்வதி அம்மாள் அவனை அமரவைத்து குடிக்க சூடான காபி கொண்டு வந்து தந்தார்.

‘’ சொல்லுங்க தம்பி.. உங்களுக்கு என்ன தெரியனும்..? ‘’ - பார்வதியம்மாளும் இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டு நிதானமாகக்கேட்டார். விக்னேஷின் குற்றமற்ற முகம் அவருக்குள் நம்பிக்கை வளர்த்திருந்தது.

‘’ நீங்க நீலமேகம் ஐயா பத்தி விவரமா சொல்லுங்கம்மா...’’ - கனிவுடன் விசாரித்தான்.

‘’ அவர் ஒரு பத்து வருடம் சிங்கப்பூர்ல இருந்து நிறைய சம்பாதித்து கும்பகோணத்தில் செட்டில் ஆகனும்னு தான் திரும்பி வந்தார் தம்பி.ஆனா இங்கே வந்ததும் அவரைத் தேடி நிறைய பேரு வர ஆரம்பிச்சாங்க.. பெரிய பெரிய கார்ல அரசியல்வாதிங்க அண்டர்வேர்ல்ட் டானுங்க மும்பையில இருந்தும் தேடி வர ஆரம்பிச்சாங்க. நான் ஓரளவு தெரிஞ்சுகிட்டது என்னன்னா அவர்களுக்கும் வெளி நாட்டு வங்கிக்கும் இவர் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார் என்பது தான்.’’ - கொஞ்சம் நிறுத்தினார் பார்வதி அம்மாள்.

‘’ மும்பையில இருந்து என்றால் தமிழர்களா இல்லை வட நாட்டாரா..? ‘’ - விக்ரம் கிடைத்த இடைவெளியில் கேட்டான்.

‘’ எல்லாம் கலந்து இருந்தாங்க தம்பி.. இங்கே வசதிப்பட்டு வரலைன்னு சென்னைக்கு இவரே அடிக்கடி போயிடுவார். அங்க நட்சத்திர ஹோட்டலில் அவருக்கு தங்குறதுக்கு வசதி எல்லாம் செய்து கொடுத்தாங்க.. என்ன வேலையோ தெரியலை தம்பி ... ஆனா அவர் கையில் காசு நிறைய புழங்கிச்சு.. லட்சக்கணக்கில் சில சமயம் கோடிக்கணக்கில் கூட புரண்டுச்சு. அப்போதான் கும்பகோணத்திலயும் திருச்சியிலும் வீடுகள் ஃபார்ம் ஹவுஸ் எல்லாம் வாங்கிப்போட்டார்.’’ - அவரது குரலில் ஏக்கப்பெருமூச்சு காணப்பட்டதை அறிந்து விக்னேஷ் குறுக்கிட்டான், ‘’ ஏன்ம்மா... இப்ப அந்த சொத்துகள் எல்லாம் இல்லையா...? ‘’

‘’ இல்லைப்பா... எல்லாம் இந்த திருமுக அரசாங்கத்துல கேஸ் போட்டு எல்லாம் பறிமுதல் செய்துட்டாங்க.. அப்ப இடிஞ்சு போனவர் தான்.. அப்புறம் எழவே இல்லை.. எழவு தான் இருந்திச்சு..! ‘’ - அவரது குரலில் அளப்பரிய சோகம் இருந்தது.

ஆக இந்த அரசின் திட்டமிட்ட பறிமுதல் அதான் அவை என்பதும், அதற்கு முக்கிய காரணம் ஆற்காடு ஆறுமுகம் போன்றோர் என்பதையும் புரிந்து கொண்டான் விக்னேஷ்.

‘’ இந்த வீடு அப்பறம் என் அக்கவுண்ட்ல அவர் போட்டுவைச்சு இருந்த 25 லட்ச ரூபாய் மட்டும்தான் மிஞ்சிச்சு தம்பி.. அதுல வரும் வட்டியில தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு குழந்தைகளும் இல்லை. என் காலம் வரை வாழ்ந்துட்டு என் வழிபார்த்து போயிடுவேன். ஆனா எங்களை இந்த கதிக்கு ஆளாக்கி என் கணவர் சாவுக்கு காரணமா இருந்தவங்களை கடவுள் தான் தண்டிக்கனும் தம்பி..’’ - முடித்த பார்வதி அம்மாள் தனது கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

‘’ அம்மா , அவர் உபயோகித்த கணிணி மற்றும் அவரது டைரி எதாவது இருக்கா ? ‘’ என்று கேட்டான் விக்னேஷ்.

’’ அவர் போனபின் அவர் அறை எதையும் கலைக்காம அவரது நினைவா வைச்சு இருக்கேன் தம்பி..கொஞ்சமெல்லாம் போலீஸ் அள்ளிக்கிட்டு போச்சு.. மிச்சம் இருப்பதை பூட்டி வைச்சு இருக்கேன் தம்பி ‘’ - என்றவள் எழுந்து அந்த அறையைத் திறந்து விட்டாள்.

அறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஒரு உயர் தர லேப்டாப்பும் நூற்றைம்பது சிடிக்கள் அடங்கிய சிலிண்டர் வடிவ சிடி கேஸும் சில பல காகிதங்கள் மட்டுமே அவரது மேஜை மேல் இருந்தது.

‘’ என்னமோ தெரியாது தம்பி .. இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் மட்டும் போலீஸ் சோதனைககு கண்ல தென்படாம மறைச்சு வைக்கச்சொல்லி என்னிடம் தந்தார். சுவாமிலையில் என் தங்கை வீட்டில் கொஞ்சநாள் மறைச்சு வைச்சு இருந்தேன். அவர் இறக்கும் முன் அந்த லேப்டாப்பில் தான் என்ன என்னமோ டைப் செய்துகிட்டு இருந்தார். அப்படியே இடிஞ்சு போய் சாய்ந்தவர் தான்... மிஞ்சலை தம்பி. ‘’ - அவரது கண்களில் இமாலய சோகம் இருந்தது.

’’அது என்னமோ தம்பி உங்களைப்பாத்தாஎனக்கு ஒரு பிள்ளை இருந்து இருந்தா எப்படி இருப்பானோ அப்படி தோணுது. உன் கிட்ட எல்லாம் சொல்லி அழனும் போல இருந்திச்சு..’’ - கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘’ கண்டிப்பா ... இனி என் வாழ்நாள் முழுக்க உங்க பிள்ளையாவே என்னை நினைச்சுக்கோங்க அம்மா.. எனக்கும் தாயில்லை. உங்கள் மேல் எனக்கும் தாய்ப்பாசம் ஏற்பட்டுடுச்சு.. ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் சத்தியம் நிறைந்திருந்தது.

‘’ அம்மா .. நான் இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் கொஞ்ச நாள் என்னுடன் வைச்சு இருக்கப்போறேன். ஒரு மாதத்தில் நான் மீண்டும் வந்து எல்லாம் திருப்பித்தரேன். அனுமதிப்பீங்களா..? கண்டிப்பா என் செயல்களால் நீலமேகம் ஐயாவின் ஆதமா சாந்தி அடையும். என்னை நீங்க நம்பித் தரலாம் ..’’ என்று அன்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ எடுத்துக்கோங்க தம்பி.. நான் உங்களை நம்பறேன். என் பிள்ளை எனக்கு துரோகம் செய்யமாட்டான் என்னும் நம்பிக்கை இருக்கு..’’ - என்றவள் அவனை லேப்டாப்பை கவனிக்கச்சொல்லிவிட்டு அவசரமாக தோசையும் சட்டினியும் மணக்க மணக்க தயாரிக்கச் சென்று விட்டார் பார்வதி அம்மாள்.

லேப்டாப்பைத் திறந்த விக்னேஷ் அதில் பொதிந்திருந்த சாரங்களை - நீல மேகத்தின் குறிப்புகளை - சுரங்கத்தை - புதையல்களை - இந்தியாவின் தலைவிதியை - ஒவ்வொன்றாய்ப் பார்த்து வியந்தான்.


துடிப்புகள் தொடரும்..!

கலைவேந்தன்
02-04-2012, 02:17 PM
கொல்லத் துடிக்குது மனசு – பகுதி -14

குறைந்த நேரத்தில் பார்வதி அம்மாளுக்கு விக்னேஷை மிகவும் பிடித்ததற்கான காரணம் விக்னேஷுக்குத் தெரியவில்லை.

மனிதமனத்துக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. யாரையாவது முதல் முறை பார்த்த பின் சட்டென்று மனதுக்கு மிகவும் பிடித்துவிடும். அதற்குக் காரணம் என்ன என்பதைஉணர முடியாது. அதே சமயம் ஒரு சிலரை முதல் பார்வையிலேயே சுத்தமாகப் பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.

பார்வதி அம்மாளுக்கும் அதே மனநிலைதான் எனினும் அவளின் ஆழ்மனதில் பதிந்து விட்ட இளம்வயது நண்பன் ( இவள் மட்டும் மனதுக்குள் காதலித்திருந்தாள். ) ஒருவனுடைய முகச்சாடையில் விக்னேஷ் இருந்ததால் தானோ என்னவோ அவனிடம் மிகவும் அன்புடன் பேசிப் பரிவுடன் உபசரித்தாள்.

பரபரப்பாய் அவனுக்காக தோசையும் தேங்காய்ச்சட்டினியும் மணம் மிக்க தோசைப்பொடியும் வைத்து அன்புடன் பரிமாறினாள். நீலமேகத்தைப் பற்றி மேலும் பேசிக்கொண்டே விக்னேஷும் தமது சொந்த இல்லத்தில் பழகுவது போலப் பேசிப்பழகினான்.

சிற்றுண்டியை முடித்ததும் ’’ சரிம்மா நான் கிளம்புகிறேன். இனி அடிக்கடி கும்பகோணம் வருவேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று மனதில் எந்த கவலையும் வேண்டாம். நான் இருக்கேன்.’’ என்று கூறிப்புறப்படும் சமயம், ‘’ தம்பி உங்கள் போன் நம்பரும் முகவரியும் குறிச்சுக் கொடுங்க ‘’ என்ற பார்வதி அம்மாள் ஒரு காகிதத்துண்டைஎடுத்து விக்னேஷிடம் நீட்டினாள்.

'என்னிடம் விசிட்டிங் கார்ட் இருக்கும்மா '' -என்றவன் தனது பர்சில் இருந்து கார்டை எடுத்துக் கொடுத்தவன் பார்வதி அம்மாள் நீட்டிய காகிதம் வித்தியாசமாய் இருக்கவே கையில் வாங்கிப் பார்த்தான்.
அது ஒரு கொரியர் கம்பெனியின் மெமோ ரசீது.

ஃப்ளாஷ் ஃபாஸ்ட் கொரியர் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்து இல்லம் தாழிட்டு இருந்ததற்கான நினைவுறுத்தும் காகிதம்.

’’ ஏன்மா..? நாலைந்து மாதம்முன் எதுவும் கொரியர் வந்ததா..? ‘’ – விக்னேஷ் கேட்டான்.

‘’ தெரியாதுப்பா.. நான் மனம் சரியில்லாம அவங்க போயிட்ட வேதனையில என் தங்கை வீட்டுக்கு திருச்சிக்குப்போயிருந்தேன். அங்க ஒரு மாதம் இருந்துட்டு வந்தப்ப. வீட்டுக்குள் இந்த காகிதம் கிடந்தது. கதவு இடுக்கு வழியா போட்டு இருந்தாங்க.’’ – சோகமுடன் பார்வதி அம்மாள் கூறினாள்.

’’ இது கொரியர் டெலிவரிக்கு வந்து வீடு பூட்டி இருந்ததாக ரிமைண்ட் செய்யும் நோட்டீஸ் அம்மா. நீங்க வந்தபின் அந்த கொரியர் பத்தி விசாரிக்கலையா..? ‘’ – எதையோ யோசித்தவாறு விக்னேஷ் கேட்ட கேள்வி பார்வதி அம்மாளுக்கு மீண்டும் தன் கணவன் நினைவைக் கொண்டு வந்து கண்ணீர் திரண்டது.

‘’ ஹூம் .. அவரே போயிட்ட பின் எது பத்தியும் கவலைப்பட என்ன இருக்குப்பா..? ‘’ – என்றவள் அவன் காபி குடித்துவைத்த கப் சாசரைக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.
அந்த கொரியர் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டு இருந்ததைக் கண்டறிந்த விக்னேஷ் அந்த மெமோ காகிதத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

‘’ சரிம்மா நான் புறப்படறேன் ’’ என்று பார்வதி அம்மாளை வணங்கிப் புறப்பட்டவனை பார்வதி அம்மாள் ’’ ஏன்ப்பா லேப்டாப் கொண்டு போவதாக சொன்னாயே ‘’ என்று நினைவு படுத்தினாள்.

‘’ இல்லைம்மா.. தேவையான தகவல்களை நான் சேகரித்துக்கொண்டு விட்டேன். ‘’ என்றவன் தன்னிடமிருந்த பாக்கெட் ஹார்ட் டிஸ்கைக் காட்டினான்.

’’ சரிப்பா அடிக்கடி வந்துபோங்க தம்பி ‘’ என்று விடைகொடுத்தாள் பார்வதி அம்மாள்.

தனது அறைக்கு வந்தவன் தனது லேப்டாப்பில் அனைத்துத் தகவல்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு வசந்தியைத் தொடர்பு கொண்டு தான் அடுத்த நாள் காலை சென்னை வருவதைக் கூறிவிட்டு அவளிடம்சில விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டான்.

தான் மிகவும் எதிர்பாராத பல வியப்பான தகவல்கள் கிடைத்த திருப்தியில் நிம்மதியாக உறங்கிய விக்னேஷ் அதிகாலையில் ஹோட்டலைச் செக் அவுட் செய்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தான்.

தனது அறைக்குச் சென்று குளித்து ஃப்ரெஷ் ஆகி தனது அலுவலகத்திற்கு வந்தவன் என்றும் இல்லாத பேரழகுடன் புதிய உடையில் நாணமும் புன்முறுவலும் அழகு சேர்க்க வசந்தி இவனை வரவேற்றாள்.

’’என்ன இன்னைக்கு எதுவும் விசேஷமா வசந்தி..? ’’ - அவள் அழகைக் கவனித்தும் கவனியாத பாவனையுடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ இன்னைக்குஎன் பிறந்த நாள்னு தெரியாதா விக்னேஷ் ..? ‘’ - ஏமாற்றம் வசந்தியின் குரலில் தெரிந்தது.

‘’ ஓ ஐயாம் சாரி வசந்தி...மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே .. ‘’ - என்றவன் அவள கன்னத்தைத் தட்டி கண்ணடித்துப் புன்னகைத்தான்.

‘’ அவ்வளவு தானா ...? பரிசெதுவும் இல்லையா ...? ‘’ - வசந்தியின் குரல் சன்னமாக ஒலித்தது.

தான் விரும்பும் ஒருவன் தன் பிறந்த நாளை மறந்து விடும் சோகமும் அறிந்த பின்னும் ஒரு சின்ன மலராவது பரிசாக அளிக்க மறந்தால் பெண்ணின் மனம் எத்தனை வேதனைப்படும் என்பதை நாமும் ஒரு பெண்ணாகப் பிறந்தால் தான் உணரமுடியும்..

ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டாள் வசந்தி.

‘’ அட என் செல்லம் வசந்தி... நான் நினைச்சால் உனககு நாற்பதினாயிரம் கோடி ரூபாய் உன் பிறந்த நாள் பரிசாகத்தரமுடியும் .. தெரியுமா ..? - என்ற விக்னேஷ் அவளைப்பார்த்து மீண்டும் கண் சிமிட்டினான்.

வியப்பால் அதிர்ந்தாள் வசந்தி.

துடிப்புகள் ..தொடரும்..!

கலைவேந்தன்
04-04-2012, 05:03 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 15

‘’ என்ன விக்னேஷ் சொல்லுறீங்க..? நாற்பதினாயிரம் கோடியா..? பயமா இருக்கே... விவரமா சொல்லுங்க விக்னேஷ் ‘’ - படபடப்பு அடங்காமல் விம்மிய மார்புகள் ஏறி இறங்க திகிலுடன் விக்னேஷைப்பார்த்தாள் வசந்தி.

‘’ சொல்றேன்.. சொல்றேன்.. பொறுமையா கேளு..’’ - என்றவன் கும்பகோணம் சென்றது முதல் நடந்தது ஒன்றுவிடாமல் விலாவாரியாகக் கூறினான்.

‘’ வசந்தி, என்னை சென்னை அனுப்பிய மந்திரி அல்லது மாணிக்கம் இரண்டு பேரில் யாரோ ஒருத்தர் என்னை கண்காணிக்க ஆளும் அனுப்பி இருந்தாங்க.. நான் ஹோட்டலில் செக் இன் செய்த நிமிடம் முதல் நான் எங்கே போகிறேன் வருகிறேன் என்பதை எனக்குப் பின்னாலேயே ஒருவன் ஃபாலோ செய்து என்னை கண்காணிச்சான். பார்வதி அம்மாள் வீட்டுக்குப் போகும் போதுகூட தெருமுனையில் இருந்து நோட்டமிட்டான். ஆறுமுகமும் மாணிக்கமும் நம்மை நம்பவில்லை என்பது மட்டும் அல்ல.. என்னிடம் எதையோ மறைக்கவும் செய்கிறார்கள்.. எல்லாத்தையும் கண்டுபிடிக்கனும். சரி வசந்தி வா நாம் இப்ப ஒரு இடத்துக்கு போறோம் ‘’ - என்று கூறிய விக்னேஷ் அவளது பதிலை எதிர்பாராமல் அவளை இழுத்துக்கொண்டு பைக்கைநோக்கி விரைந்தான்.

அந்த நேரம் அவனது செல்போன் ‘’ ஓம் பூர்புவஸ்ய..’’ என்று இனிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்தது.

அடுத்த முனையில் மாணிக்கம்.

‘’ என்ன விகெனேஷ் .. போன காரியம் என்னாச்சு.. எதுனா தகவல் கிடைச்சுதா..? ‘’

‘’ ஓரளவுக்கு ... இல்லை இல்லை... நிறைய தகவல்கிடைச்சு இருக்கு மாணிக்கம் சார்.. ஆனா சிக்கல் இன்னும் விரிவா போகுது.. மந்திரிக்கு மும்பைல தெரிஞ்ச யாரும் இருக்காங்களா ... சொல்லுங்க..’’ - சாவதானமாக கொக்கி போல் கேள்வி போட்டான் விக்னேஷ்.

மறுமுனை கொஞ்சம் மென்று விழுங்கியது விக்னேஷுக்கு புரிய வந்தது. எதையோ சொல்ல தயங்குவது போலவும் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போலவும் குரல் தடுமாறியது.

‘’ நீங்க எப்ப இங்கே வர்றீங்க விக்னேஷ்.. நாம நேர்ல பேசுவோம் சொல்ல விஷயங்கள்நிறைய இருக்கு. போன் ல வேண்டாம்..’’ - ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் மாணிக்கத்தின் பதில் தெரிந்தது.

‘’ சரிங்க மாணிக்கம் .. இப்போ நான் ஒரு வேலையாக போய்க்கிட்டு இருக்கேன்.. மதியம் மூனு மணிக்கு உங்களை வந்து சந்திக்கிறேன்.’’ கூறியதும் போனை அணைத்து பாக்கெட்டில் போட்ட விக்னேஷ் தனது பைக்கை உதைத்துக் கிளப்பினான்.

சுவற்றில் ஒட்டும் பல்லியைப்போல் வசந்தியும் அவனது முதுகை ஒட்டி அமர்ந்து கொண்டாள். இது போன்ற வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை வசந்தி.

விக்னேஷின் பைக் அந்த புறநகரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் உள்ளே நுழைந்தது.

எல்லாமே மூன்று மாடிக்குடியிருப்புகள். உள்ளே சிறிய மார்க்கெட்டும் அதைச்சுற்றிலும் படை சூழ்ந்தது போல வீடுகளும் பார்க்க அழகாக இருந்தன.

மார்க்கெட் இடத்தில் பைக்கை நிறுத்தியவன் தனது பாக்கெட்டிலிருந்த கொரியர் ரிமைண்டர் தாளின் அனுப்புதல் முகவரியில் இருந்த ஃப்ளாஷ் ஃபாஸ்ட் கொரியரின் அந்த சென்னை முகவரியைச் சரிபார்த்துக்கொண்டு நேராக அந்த கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான்.

’’ நீ பைக் கிட்ட நில்லு நான் இப்ப வரேன்..’’ - என்று கூறி விக்னேஷ் அந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்றான். அந்த கடையும் ஒரு குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அமைந்த ஒன்றுதான்.

கடையில் இருந்த பையனிடம் தான் கொண்டு வந்திருந்த மெமோவைக் காட்டினான்.

‘’ இந்த கொரியர் எங்களுக்கு மூனு மாதம் முன்னால வந்தது.அந்த சமயம் எங்க அப்பா நீலமேகம் இறந்து ஒருமாதமாயிருந்ததால எல்லாரும் காசிக்குப் போயிருந்தோம். வீடு பூட்டி இருந்தது. அந்த சமயம் இந்த கொரியர் கையில கிடைக்காம போச்சு.. இப்ப அந்த கொரியர் வாங்கிப்போக வந்தேன்.. இதுக்காகவே கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கேன்.. பார்த்து தேடி கொஞ்சம் எடுத்துத்தரீங்களா ’’ என்று அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு கேட்ட விக்னேஷை ஏற இறங்கப்பார்த்த கடைக்காரப் பையன் கொரியர் பதிவு ரிஜிஸ்தரில் குறிப்பிட்ட மாதத்தில் தேடினான்.

’’ இது ரொம்ப நாள் ஆனதால தேடிக்கண்டு பிடிக்க கஷ்டமா இருக்கும். நீங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்.. தேடிக்கண்டு பிடிச்சு வைக்கிறேன். ’’ - எந்திரத்தனமான பதில் கடைக்காரப்பையனிடம் இருந்து வந்தது.

‘’ என்ன நீங்க ... நிலைமை புரிஞ்சுக்காம பேசறீங்க..? இதுக்காக கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கேன். நான் கொரியர் கம்பெனில ஹெல்ப் லைன்ல கேட்டேன்..நீங்க தான் ஏஜண்ட்ன்னும் உங்ககிட்டதான் டாக்கெட் இருக்குன்னும் சொன்னாங்க... நான் வேணும்னா அவங்ககிட்டயே கேட்டுக்கவா மீண்டும்..? ‘’ - மிகச்சரியான அஸ்திரம் எங்கு பாயும் என்பதை உணர்ந்த விக்னேஷ் அந்தப் பையனைக் கூர்ந்து கவனித்தான்.

இவர்களது உரையாடலைக் கண்டுகொண்டிருந்த கடையின் முதலாளி தனது சேரிலிருந்து எழுந்து இவர்களிடம் வந்தார்.

அவரிடம் விவரம் கூறிய விக்னேஷ் ;; நான் வேணும்னா ஒரு மணி நேரம் காத்திருக்கேன். கொஞ்சம் தேடிக்கண்டுபிடிங்க.. இது முக்கியமான டாக்கெட். ப்ளீஸ் ‘’ - என்றான்.

தனது மூக்குக்கண்ணாடியை கீழிறக்கி பதிவு ரிஜிஸ்தரில் தேடிய முதலாளி ‘’ உங்க அப்பா பேரு என்ன சொன்னீங்க..’’ என்று கேட்டார்.

‘’ நீலமேகம்.’’

’’ லிஸ்ட்ல கிடைச்சுடுச்சு..கொஞ்சம் இருங்க .. டாக்கெட் டீட்டெயில் பார்க்கிறேன்.. சதீஷ்.. நீ போய் பின்னாடி கொரியர் ஸ்டோர் பாக்ஸ்ல தேடி டெலிவரி ஆகாத பாக்கெட் இருக்கான்னு தேடிப்பாரு. பேரு நீலமேகம்னு போட்டு இருக்கும்.. ‘’ - விக்னேஷிடமும் பையனிடமும் மாறி மாறிச் சொன்ன முதலாளி ’’ கொஞ்சம் பொறுங்க சார் பையன் கொண்டு வருவான்.. எதுனா ஐடி ப்ரூஃப் வைச்சு இருக்கீங்களா..? ‘’ - முதலாளி அனுசரனையாகப் பேசினார்.

’’ இருக்குங்க..சரிங்க நான் காத்திருக்கேன் ‘’ - என்ற விக்னேஷ் வசந்தியை ஜாடை காட்டி அழைத்தான்.

‘’ கொஞ்ச நேரம் காத்திருக்கனுமாம்.. வா வசந்தி .. எதுனா கோல்ட்ரிங்க் குடிச்சு வரலாம் ’’ என்றவன் கடைக்காரரிடம் ‘’ இங்கே கோல்ட்ரிங் எங்கே கிடைக்கும் ?’’ என்று கேட்டான்.

’’ இதோ கடைக்குப் பின்புறமும் நாலைந்து கடைகள் இருக்கு பாருங்க .. ’’ என்று கூறிவிட்டு முதலாளி அடுத்த கஸ்டமரைக் கவனிக்க விரைந்தார்.

வசந்தியை அழைத்துக்கொண்டு அந்த கடையின் பக்கவாட்டில் சென்று பின்பக்கம் இருந்த கடைகளைப் பார்வையிட்டான்.

மூன்று திசைகளிலும் முகப்பு இருக்கும் படியும் ஒரு பக்கம் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் பார்க்கிங் வசதி இருப்பதையும் நெரிசலான குறுகிய பார்க்கிங் முன்புறம் ஜெராக்ஸ் கடையின் வீண் தளவாடங்கள் இடப்பட்டு இருந்ததையும் விக்னேஷின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

இரண்டு கோல்ட்ட்ரிங்க் சொல்லிவிட்டு அந்த குடியிருப்பைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது பார்க்கிங்கிலிருந்து தனது பைக்கை சிரமத்துடன் வெளியில் எடுக்க முயன்றுகொண்டு இருந்தான் ராகவன்..!


துடிப்புகள் ...தொடரும்..!

sarcharan
04-04-2012, 09:18 AM
பலே.. கதை த்ரில்லிங்கா போகுது...

கலைவேந்தன்
05-04-2012, 02:12 PM
மிக்க நன்றி சர்சரண்..

தனியா பதிய பயமா இருந்தது. நல்லவேளை துணைக்கு வந்தீங்க.. :lachen001:

கலைவேந்தன்
05-04-2012, 02:13 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி * 16


” என்னங்க. இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிடாம காத்திருப்பது..? சாப்பிட்டுட்டு தான் போய் அந்த கம்ப்யூட்டரைக் கட்டி அழுங்களேன்.’’

மங்களத்தின் திடுக்கென்ற இடையூறினால் சற்றே கலவரப்பட்ட ராகவன் , ‘’ மாடே.. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ? திடீர்னு பின்னால வந்து கத்தி பயமுறுத்தாதேன்னு..? உனக்கு பசின்னா நீ போய் சாப்பிட்டு தூங்கு. சின்ன வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன் ‘’ என்று கூறிவிட்டு தன் வேலையில் கவனமாக ஈடுபட்டான் ராகவன்.

இதுக்குமேல் அவனிடமிருந்து ஒற்றை வார்த்தை வராது என்பதை உணர்ந்த மங்களம் அப்படி என்னதான் கம்ப்யூட்டர்ல செய்வாரோ எதும் கேர்ள்ஃப்ரெண்ட் கிடைச்சு இருப்பாளோ..? அவகிட்ட ஓயாம சாட் செய்கிறானோ என்று பெண்களுக்கே உரிய சந்தேகப்புத்தியுடன் நகர்ந்தாள் மங்களம்.

தன் பணியில் ஆழ்ந்திருந்த ராகவன் மிகவும் கவனமாக மாஸ்கிங் இண்டர்னெட் முறையுடன் இந்தியாவில் இருந்து துல்லியமாக இருநூறு இருநூறு கோடிகளாக வெளிநாட்டு வங்கிகளின் தேர்ந்தெடுத்த கணக்குக்கு அனுப்பிக்கொண்டு இருந்தான்.

கோடிங் டிகோடிங் முறைகளில் கைதேர்ந்த ராகவன் ஆ ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக்கணக்கில் இருந்த கொள்ளைப்பணத்தை மிக கவனத்துடன் கையாண்டு கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு முறையின் ட்ரான்சாக்ஷனிலும் கோடிங் மாற்ற மறக்கவில்லை.

அவன் ஏற்றிவைத்த வங்கிக்கணக்குகள் விவரங்களை தனியாக ஒரு ஃபோல்டரில் குறித்துவைத்துக்கொள்ள தவறவில்லை.

1. Oversea-Chinese Banking Corporation அக்கவுண்ட் ( யுனிசெஃப் ) எண் : ***********************************

2. Deutsche Bank அக்கவுண்ட் ( ஈழம் ஃபெடரேஷன் ஆஃப் லண்டன் ) எண் : ****************************************

3.Amana Bank அக்கவுன்ட் ( ஈழமக்கள் மறுவாழ்வு இயக்ககம் ) எண் : *******************************************

4. HDFC THE RAMAKRISHNA MISSION INSTITUTE OF CULTURE ( முதியோர் மறுவாழ்வுத்திட்டம் ) எண் : ********************

WHAT NEXT..?

அவனது குறிப்பேட்டில் அனைத்தையும் குறித்துக்கொண்டே வந்தவன் அடுத்து இணையத்தில் சமூக சேவை நிறுவனங்கள் பற்றிய விவரங்களைத் தேடும் முன் மங்களத்தின் குரல் மீண்டும் ஒலிக்கவே, ’’ இதோ வந்துட்டேன் சாப்பாடு எடுத்துவை.’’ என்றவன் கணிணியை உறக்கநிலையில் வைத்துவிட்டு மனத்திருப்தியுடன் எழுந்தான்.

சாப்பிடுகையில் மங்களம் கூறிய ‘’ என்னங்க பையன் ஸ்கூலில் எக்ஸ்கர்ஷன் போறாங்களாம்..1250 ரூபாய் வேணும்னு கேட்டான்.. ‘’ என்ற வார்த்தைகளுக்கு எந்திரம் போல் பதிலளித்தான் ராகவன்.

‘’ நாளை என் கலீக் யாரிடமாவது கைமாற்று வாங்கித்தரலாம். மாதக்கடைசி இல்லையா மங்களம் ? ‘’


அங்கே மாணிக்கம் விக்னேஷின் போனில் அழுதுகொண்டே சொன்னான்.

‘’ விக்னேஷ் இதுவரைக்கும் 800 கோடிகள் துடைத்தெடுத்தாச்சு.. எதுவும் செய்ய முடியாதா..? ‘’


துடிப்புகள் தொடரும்...

கலைவேந்தன்
06-04-2012, 06:37 AM
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி - 17

கொரியர் ஏஜண்ட்டிடம் எத்தனை போராடியும் விக்னேஷ் அந்த காணாமல் போன கொரியர் டாக்கெட் கிடைக்கப்பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டி வந்தது.

அரைமணி பொறுக்கச்சொன்ன முதலாளி ஒரு மணி ஆகியும் தகவல் கூறவில்லையே என்று விக்னேஷ் அவரை அணுகிக் கேட்டபோது ‘’ சாரி சார். பையன் எவ்வளவோ தேடியும் அந்த டாக்கெட் கிடைக்கலை. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.. எப்படியாச்சும் தேடிக்கண்டுபிடிச்சு ஒப்படைக்கிறேன்..’’ என்று பணிவுடன் தன் இயலாமை வியர்வையாய் வழியக் கூறினார்.

’’ பரவாயில்லை சார்.. எங்கே அந்த டாக்கெட் இருந்தது நான் கொஞ்சம் பார்க்கலாமா ? ‘’

இதோ என்றவர் விக்னேஷை உள்ளே அழைத்தார். வசந்தியை கடை வாசலில் இருக்கச்சொல்லிவிட்டு விக்னேஷ் உள்ளே நுழைந்தான்.

கடையின் பின்புறம் அந்த கட்டிடத்தின் வாகன பார்க்கை நோக்கி திறந்ததால் அங்கே இருந்த தட்டுமுட்டு சாமான்கள் கவனக்குறைவாகவே வைக்கப்பட்டு இருந்தது.

கடையின் உடனடிப் பின்பக்கம் ஏழெட்டு பைக்குகள் பார்க் செய்யப்பட்டு இருந்தன.

கடைக்காரப்பையனை உதவிக்கு அழைத்த விக்னேஷிடம் பையனை ஒப்படைத்துவிட்டு கடையைக் கவனிக்க விரைந்தார் முதலாளி.

‘’ உன் பேர் என்னப்பா..?’’ விக்னேஷ் அவனிடமிருந்து தகவல்களை வரவழைக்கும் நோக்கில் அன்பாகத் தொடங்கினான்.

‘’ மாரிமுத்து சார்..’’

’’அது சரி.. இத்தனை அலட்சியமா எல்லா தளவாடங்களும் போடப்பட்டு இருக்கே ..? திருட்டு போகாதா..? ‘’

’’ இல்ல சார்.எல்லாம் பழைய ஜெராக்ஸ் மெஷின். பொண கனம் கனக்கும். இத்தை எடுத்துக்கினு போய் என்னா செய்யமுடியும்..? ‘’

’’ அது சரி .. டெலிவரி ஆகாத கொரியரை இப்படித்தான் இங்கே குப்பையாக கொட்டிவைப்பீங்களா..? ‘’

‘’ ஐயோ இல்ல சாரே.. தப்பித்தவறி உங்க கொரியர் டாக்கெட் மட்டும் எப்படியோ இங்க விழுந்து இருக்கும் போல.. கிடைச்சுடும் சார்.. நான் தேடித்தரேன்.. ‘’

விக்னேஷ் புன்னகைத்தான்.

‘’ வேண்டாம் மாரிமுத்து. விடுங்க.. சரி இதைச் சொல்லுங்க .. இங்கே நிறுத்தி இருக்கும் பைக்குகள் எல்லாம் தினம் தினம் அதே இடத்தில் நிறுத்துவாங்களா இல்லை மாற்றி மாற்றி நிறுத்துவாங்களா..? ‘’

‘’ இல்ல சார்.. எல்லாருக்கும் தனி இடம் இருக்கு.. மாத்தி நிறுத்த மாட்டாங்க.. ‘’

‘’ ஓ.. உங்க கடையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருக்கே ஒரு டிவிஎஸ்.. அது யாருதுன்னு தெரியுமா..? ‘’

‘’ சரியா தெரியாது சார்.. அனேகமா டாப் ஃப்ளோர்ல இருக்காரு ஒருத்தர். ராகவன்னு பேருன்னு நினைக்கிறேன். ‘’

‘’ ஓ .. என்ன வேலை செய்றார்..? ‘’

‘’ அது தெரியாது சார்.. ஆனா ஸ்கேன் எடுக்க.. சில சமயம் பிரிண்ட் எடுக்க எங்க கடைக்கு வருவார்..லோனுக்கு டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி வருவாரு.. அப்படிதான் பழக்கம்.. ‘’ - ஏதோ குற்றம் செய்தவனைப்போல் அவன் குரல் சன்னமாக ஒலித்தது.

சன்னமாக சீட்டி அடித்தான் விக்னேஷ்.

’’கமான் அவர் என்ன வேலை செய்றார்னு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கனும். சும்மா சொல்லுப்பா.. உன்னை ஒன்னும் போலீஸ் விசாரணை செய்யலை. பயப்படாதே..’’

‘’ சரி சார்... அது வந்து... அவர் சி ஐ டி எஸ் ல வேலை செய்றார். சாஃப்ட்வேர் எஞ்சினியர். ரொம்ப நல்லவர் சார்..’’ இப்போது மாரிமுத்து குரலில் தயக்கமேதும் இல்லை.

கண்களை லேசாக இடுக்கிக்கொண்டு ஒரு கணம் யோசித்த விக்னேஷ் , ‘’ சரி சரி .. ரொம்ப நன்றிப்பா.. முடிஞ்சா அந்த டாக்கெட்டை சீக்கிரம் தேடிக்கண்டுபிடிச்சு எனக்கு கால் பண்ணு ‘’ என்றவன் தனது எண்ணைக் குறித்துக்கொடுத்துவிட்டு முன்பக்கம் விரைந்தான்.

கடைமுதலாளியிடமும் அதையே சொல்லிவிட்டு வசந்தியின் கைகளை இறுகப்பற்றியவண்ணம் விரைவாக தனது பைக்கை நோக்கி விரைந்தான் விக்னேஷ்.

அவன் பிடித்த இடம் கன்றிச்சிவந்து வலி எடுத்தாலும் வசந்திக்கு அது இன்பவேதனையாக இருந்தது என்பது அவள் கண்ணில் தெரிந்த பளபளப்பு காட்டியது.

தனது ஹெல்மெட்டை மாட்டிய விக்னேஷ் , ’’ வசந்தி, நான் கொஞ்சம் ஃபாஸ்டா பைக் ஓட்டப்போறேன். நீ பயப்படாமல் என்னை பிடிச்சுக்கோ .. சரியா..? ‘’ என்றவனின் குரலில் கண்டிப்பாக காதல் இல்லை.

ஆனால் வசந்திக்கு அந்த வார்த்தைகள் சொர்க்கத்துக்கே கொண்டு சென்றன.

உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் அவன் பின்னால் அமர்ந்து அவனுடன் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.

சென்னையின் இரவு நேர இதமான சில்லென்ற காற்றும் விக்னேஷின் முதுகு வசந்தியின் மார்புக்கு அளித்த கதகதப்பும் அவளுக்கு தன்னை இழக்கவைத்தன.

இதை ஒன்றும் அறியாத விக்னேஷ் விரைவாகச் செல்லவேண்டிய அவசியம் உணர்ந்து பைக்கை வேகமாகச்செலுத்தி தனது அலுவலகம் வந்து சேர்ந்தான்.

அங்கே காரில் ஆ ஆறுமுகமும் மாணிக்கமும் கப்பல் கவிழ்ந்தாற் போல இவனுக்காகக் காத்திருந்தனர்.


துடிப்புகள் தொடரும்..

கலைவேந்தன்
07-04-2012, 12:21 PM
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 18

தனது டி வி எஸ் மூச்சிரைக்க நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விக்னேஷின் பார்வை அமைச்சர் மற்றும் மாணிக்கத்தின் கவலையை அறிந்தே இருந்திருந்தான்.

கிட்டத்தட்ட ஆறுமுகத்தின் ஸ்விஸ் கணக்கு வழித்தெறியப்பட்டு இருக்கலாம் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியது தானே..?

இருவரையும் தனது அலுவலகத்துக்குள் வரவழைத்த விக்னேஷ் வசந்தியிடம் குடிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்யும்படி பணித்துவிட்டு அமைச்சரை கூர்ந்து நோக்கினான்.

அமைச்சரின் முகம் செத்த பிணத்தை விட மிகமோசமாக வெளுத்துப் போயிருந்தது. அடித்துப்பிடித்து கொள்ளையடித்த அத்தனை பணமும் பறிபோன வெறி முகத்தில் தாண்டவமாடியது.

'' தம்பி, உங்களை ரொம்ப நம்பி இந்த வேலையை ஒப்படைச்சோம். ஆனா பயனே இல்லாம போயிடுச்சே.. என் கணக்கு முழுக்க முடக்கப்பட்டுடுச்சு. முடக்கப்படுமுன் நான் பார்த்த பேலன்ஸ் ஜஸ்ட் 700 கோடி தான். இப்ப அதுவும் இல்லாம அக்செஸே போயிடுச்சு.. இதான் உங்க திறமைக்கு அழகா..? ''

அமைச்சரின் வயிற்றெரிச்சல் குரலில் பரிபூரணமாக பிரதிபலித்தது.

'' ஐயா, நீங்க என்னை இல்லை, ஸ்காட்லாந்த்யார்ட் போலீசைக் கான்டாக்ட் செய்து இருந்தாலும் இது தான் நடந்து இருக்கும். நல்லா யோசிங்க.. ஒரு கஜானா சாவி ஒருத்தனுக்கு கிடைச்சுடுச்சு. அவன் என்ன கொஞ்சம் வழித்தெடுத்துக்கிட்டு மிச்சம் உங்களுக்காக விட்டு வைப்பானா..? '' விக்னேஷின் குரலில் தனது திறமையின் மீது அவர் செய்த விமரிசனம் குறித்த எரிச்சல் தென்பட்டது.

மேலும் கூறினான். '' ஐயா நான் ஒன்னும் கண்டு பிடிக்கலைன்னு நினைக்காதீங்க. நீலமேகம் உங்களுக்கு உங்க கணக்கை செட் செய்து கொடுத்தபின் நீங்க அவருக்குக் கொடுத்த டார்ச்சரில் எரிச்சலாகி அனைத்து விவரங்களையும் நீங்க அப்ப வகிச்ச அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சிகள் பற்றிய சிடியில பதிஞ்சு தனது கும்பகோணம் முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பிவைத்தார். அது போய் சேருமுன் அவர் ஊருக்குச் சென்று சேர்ந்து அதைக்கைப்பற்றிவிடலாம்னு நினைச்சப்ப விதி வேறமாதிரி விலையாடிடுச்சு. அவர் மன இறுக்கத்தில் ஹார்ட் அட்டாக்ல இறந்தும் போயிட்டார்..'' என்று கூறி நிறுத்தினான் விக்னேஷ்.

அமைச்சரின் முகத்தில் பதட்டத்தின் சாயலும் இவன் எப்படி துல்லியமாக எல்லாம் விசாரித்தறிந்திருக்கிறான்னு வியப்பும் படர்ந்தது.

மாணிக்கத்தின் நிலைமையும் கிட்டத்தட்ட அதே தான்.

மேலும் விக்னேஷ் கூறினான், '' ஐயா துரதிருஷ்டவசமாக அந்த கொரியர் அமைச்சகத்திலிருந்து சென்னை சென்று சேர்ந்தபோது அதைப் பெற்றுக்கொள்ள யாருமில்லாத நிலையில் அந்த கொரியர் திரும்பிவிட்டது. ஆனால் அதை லாவகமாக யாரோ கைப்பற்றி இருக்காங்க.. இது வரை நான் கன்டறிந்த சுருக்கம் இது தான். அதை யார் கைப்பற்றினாங்கன்னு கண்டு பிடிப்பது தான் அடுத்த கட்ட நடவடிக்கை.. ''

அமைச்சரின் முகத்தில் கோபம் ரத்தமெனப்பாய்ந்தது.

'' அந்தத் ....... மவனைக் கண்டுபிடிச்சு என் கண்முன்னால நிறுத்து விக்னேஷ். அவனைக் கொல்லத்துடிக்கிது என் மனசு.. அவனைக் கண்டம் துண்டமாக வெட்டி கடல்ல வீச வைக்கிறேன்... '' என்றவர் நற நறவெனப்பல்லைக்கடித்தார்.

மாணிக்கம் சொல்லவொண்ணா சோகத்தில் இருந்தாலும் அவனது மனநிலையும் அமைச்சரையே ஒத்திருந்தது.

அமைச்சரது ஆவேசம் கண்ட வசந்தி இடிமின்னலைக்கண்ட புள்ளிமானாகத் திடுக்கிட்டாள்.

இதுதான் அமைச்சரின் அசலான முகம் என்பதை அறிந்திருந்த விக்னேஷுக்கு மட்டும் வியப்பேதும் ஏற்படவில்லை.

'' சொல்லு விக்னேஷ், உன் ஃபீஸ் எவ்வளவுன்னாலும் தரத்தயாரா இருக்கேன். எனக்கு அவன் மட்டும் என் கைக்கு கிடைக்கனும் '' என்று மேலும் புலி போல உறுமினார் அமைச்சர்.

'' அதைக்கண்டுபிடிக்கத்தான் இப்போது முயன்றுகொன்டு இருக்கிறேன்.. அனேகமாக நாளை மாலைக்குள் கண்டிப்பாக நான் கண்டுபிடிச்சுடுவேன். உங்கள் பணத்தை என்னால் மீட்கமுடியவில்லை. அதன் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். காரணம் நாம் காலத்தின் இயக்கத்தில் செயல்படுகிறோம். அவனோ கணிணியின் வேகத்தில் செயல்படுகிறான். இப்போது அந்த வித்தியாசம் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்..'' என்று அமைதியாகக் கூறினான் விக்னேஷ்.

'' இதுவரைக்கும் யார் மேலாவது சந்தேகம் இருக்கா சொல்லு விக்னேஷ்.. நம்ம ஆளுங்களை விட்டு அவனை அலாக்காகத் தூக்கி வரச்சொல்றேன்..''

அமைச்சரின் குரலில் இருந்த ஆத்திரத்தில் தொடர்புடையவன் கிடைத்தால் அப்படியே கடித்தே தின்றுவிடுவார் போலிருந்தது.

''பொறுங்க ஐயா.. நாளை மாலை தெளிவாக எல்லாம் தெரியவந்துடும். '' விக்னேஷின் குரலில் எச்சரிக்கை உணர்வு தொனித்ததை வசந்தி மட்டுமே உணர்ந்து கொன்டாள். மீதி இருவரும் தான் ஆத்திரத்தின் ஆதிக்கத்தில் இருந்தார்களே..

அமைச்சரும் மாணிக்கமும் புறப்பட்டுச்சென்றதும் புலியிடமிருந்து தப்பித்த புள்ளிமானைப்போல் நடுக்கம் நிற்காதிருந்த வசந்தியை அன்புடன் பார்த்தான் விக்னேஷ்.

'' சாரி வசந்தி, உன்னை இது போன்ற ராட்சதர்களுக்கிடையில் இருக்கவிட்டிருக்கக்கூடாது தான் ..'' விக்னேஷ் குரலில் தெரிந்த நிஜமான கரிசனத்தில் எல்லாம் மறந்தாள் வசந்தி. அவள் மனம் ரெக்கை கட்டிப்பறந்தது.

அவளை ஆதரவுடன் கையைப்பற்றிய விக்னேஷ் , '' எனக்கு நீ இன்னொன்னு செய்யனுமே வசந்தி..'' என்றான்.

'' சொல்லுங்க விக்னேஷ் என்ன செய்யனும்..? '' அலாதீனிடம் பவ்யமாகக் கேட்ட பூதம் போலிருந்தது அவளது பாவனை.

’’ இன்னைக்கு இரவு எனக்கு கணிணியில் கொஞ்சம் நிறைய வேலை இருக்கு. களைப்பாகிவிடக்கூடாது நான். அதுக்கு உன் பேச்சுத்துணையும் தேனீர்ச்சேவையும் வேணும். நீ அலுவலகத்தில் இன்றிரவு தங்க இயலுமா..? என் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே.. '' விக்னேஷின் குரலில் தயக்கமும் லஜ்ஜையும் தெரிந்தது. உண்மையில் அவன் இன்றிரவுக்குள் நிறைய கண்டுபிடித்தாகவேண்டும்..!

'' அடடா மழைடா அடைமழைடா '' என்று கார்த்திக்கும் தமன்னாவும் வசந்தியின் மனதுக்குள் ஆடத்தொடங்கினார்கள்..!

‘’ பரவாயில்லை விக்னேஷ், நான் வீட்டில் சொல்லிடறேன். உங்களுக்கு துணையா இருக்கேன் ..’’ என்று உற்சாகம் பொங்க பதில் அளித்தாள் வசந்தி..!

துடிப்புகள் ... தொடரும்..!

கலைவேந்தன்
08-04-2012, 05:05 AM
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 19

இரவு முழுக்க கண்விழித்து லேப்டாப்பில் கவிழ்ந்திருந்த தலையை அவ்வப்போது வசந்தி கொடுத்த அருமையான டீ பிஸ்கட்டுக்காக மட்டும் நிமிர்ந்துவிட்டு வசந்தியின் சேவைக்கு மெல்ல புன்முறுவல் மட்டுமே செய்து நிறைய விடயங்களைக்கண்டறிந்தான் விக்னேஷ்.

அவன் வேலை செய்யும் நேர்த்தியை கண்கொட்டாமல் அருகில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வப்போது உறக்கம் கண்களைச் சுழற்றினாலும் விக்னேஷுக்கு துணையாக விழிக்கவேண்டிய கடமைகளை நிரைவேற்றினாள் வசந்தி.

விக்னேஷ் மிகவும் லாஜிக்காக பிரச்சினைகளைக் கண்டறிந்தான்.

ஆறுமுகமும் மாணிக்கமும் கொடுத்த அக்செஸ் தரவுசொற்களின் மூலம் அவர்களின் கணக்கினை துல்யமாக ஆராய்ந்த விக்னேஷுக்கு நிறைய செய்திகள் அறியவந்தன.

அவற்றை அவ்வப்போது வசந்தியிடமும் விவாதித்தான். அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு வசந்தி வியந்து மூக்கில் விரலை வைத்து அழகாக திகைத்தாள்.

அனைத்து ட்ரான்சாக்ஷனும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் அனாதை இல்லங்களுக்கும் தொன்டு நிறுவனங்களுக்கும் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக தமிழர்களின் நல்வாழ்வு குறித்த அனைத்து ப்ராஜக்ட்களுக்கும் தலா 200 கோடிகளை வாரி வழங்கியிருந்தான் அந்த முகமறியா சமூக சேவகன்.

ஒரு பைசாகூட தனிப்பட்ட நபர் கணக்கில் செலுத்தப்படாத நேர்மையை விக்னேஷ் கண்டு மனதுக்குள் அந்த தயாளனை சல்யூட் செய்தான்.

விடிய மூன்றுமணி நேரம் இருக்கும் போது வசந்தியை சற்று உறங்கச்செய்துவிட்டு விக்னேஷும் கண்ணயர்ந்தான்.

காலை ஆறுமணிக்கு காபியின் அருமையான மணத்துடன் வசந்தி அன்று பூத்த நிலவாக விக்னேஷ் முன் வந்தாள்.

காபியைக்குடித்துவிட்டு மிகவும் சுறுசுறுப்பாக தன்னைத் தயார் செய்துகொண்டு வசந்தியை அவளது வீட்டில் கொண்டுவிட்ட விக்னேஷ் அந்த சாகர் அபார்ட்மென்ட்ஸை நோக்கி விரைந்தான்.

கொரியர் மற்றும் டாகுமென்ட்ஸ் கடைப்பையன் சொன்ன மூன்றாம் டாப் ஃப்ளோரில் அந்த வீட்டுக்கு முன் நின்று காலிங் பெல்லை விக்னேஷ் அழுத்தும் போது காலை மணி 8.

இரண்டாம் முறை அழுத்த எத்தனிக்கும் முன் கதவு திறந்தது.

கதவை லேசாகத் திறந்த எளிமையான நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் விக்னேஷைக் கண்டு முறுவலித்து கதவை முழுமையாகத்திறந்து

'' வாங்க விக்னேஷ். இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும். '' என்ற ராகவனை வியப்புடன் பார்த்தான் விக்னேஷ்.

உள்ளே நுழைந்த விக்னேஷ் ராகவனைக் கைகுலுக்கி '' ஐ யாம் விக்னேஷ். பிரைவேட் டிடெக்டிவ் '' என்றான்.

'' தெரியும் விக்னேஷ்.சென்னையின் லீடிங் டிடெக்டிவை அறியாதவர் இருக்காங்களா என்ன..? அதிலும் இத்தனை பெரிய குற்றத்தைச் செய்த நான் உங்களைக் கவனிக்காமல் இருப்பேனா..? நேற்று இரவே எதிர் பார்த்தேன் உங்களை. ''

இப்போது விக்னேஷ் மேலும் வியந்தான்.

''அது எப்படி ? '' என்று தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் கேட்ட விக்னேஷை அடக்கி , '' வாங்க அந்த ரூமுக்கு போய் பேசுவோம். மங்களம். சாருக்கு எதுனா குடிக்க கொண்டுவா '' என்று மங்களத்திடம் கூறிய ராகவன் விக்னேஷைத் தன் தனியறைக்கு அழைத்துப்போனான்.

அங்கே இருந்த பிளாஸ்டிக் சேரில் விக்னேஷை அமரவைத்த ராகவன் தானும் ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.

'' கோடிக்கணக்கான பணத்தை அங்கும் இங்கும் மாற்றிக்கொடுத்த வள்ளல் இத்தனை எளிமையா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை ராகவன் ..'' விக்னேஷின் குரலில் நிஜமாகவே வியப்பு இருந்தது.

'' ம்ம்ம்... சொல்லுங்க விக்னேஷ்.. உங்களுக்கு என்ன தெரியனும்..? '' என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் ராகவன்.

'' அதுக்கும் முன்னால நானே சில விவரங்களைச் சொல்கிறேன். சொல்லி முடித்தபிறகு எதுவும் சந்தேகம் இருந்தா மட்டும் கேளுங்க.. '' என்று சொல்லத்தொடங்கிய ராகவனின் குரலில் தடுமாற்றமோ குற்ற உணர்ச்சியோ எதுவுமே இல்லை.

துடிப்புகள் தொடரும்..

கலைவேந்தன்
09-04-2012, 04:18 AM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 20

‘’ தினந்தோறும் செய்திகளைப் பார்க்கும் போதும் நடப்பினைக் கூர்ந்து கவனிக்கும் போதும் எந்த ஒரு சராசரி இந்தியன் மனதில் எழும் கேள்விகளை நானும் கேட்டுக்கொண்டதுண்டு விக்னேஷ்.

அம்பானிகளும் விஜய் மல்லையாக்களும் இன்னும் பல தொழில் முதலைகளும் இந்திய வங்கிகளில் கடனைப்பெற்றுக்கொண்டு நட்டக்கணக்கைக் காட்டி அந்த கடன்களில் இருந்து தப்பிக்க அரசியல் வாதிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்வதை கவனிக்கலையா நீங்க..?

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் பத்தாயிரம் இருபதாயிரம் கடன் இருந்தால் அவனை வங்கிகள் கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகின்றனதானே..? ஏன் மேற்சொன்ன பணமுதலைகளைக் கண்டுக்காம இருக்காங்க..?

இன்றைய தேதிக்கு உலக வங்கியின் இந்தியக்கடன் லட்சக்கணக்கான கோடிகள்..!

அதேசமயம் இந்திய பணம் வெளிநாட்டுவங்கிகளில் பல லட்சக்கணக்கான கோடிகளில் முடங்கிக்கிடங்கின்றன.. இது வினோதமாக இல்லையா..?

அரசாங்கம் * அது ஆண்ட அரசாங்கமா இருந்தாலும் ஆளும் அரசாங்கமா இருந்தாலும் ஆளப்போகும் அரசாங்கமா இருந்தாலும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஏன் ..? திருடர்கள் ... அனைவருமே திருடர்கள்..

இதோ ஆற்காடு ஆறுமுகம் மந்திரி ஆவதற்கு முன் அல்லது எம் எல் ஏ ஆவதற்கு முன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்..?

இப்போது நமக்கு தெரிய வந்த ஒரே கணக்கில் மட்டும் 3300 கோடிரூபாய்கள்.. !

இவை எல்லாம் யாருடையது..? அந்த ஆளுடைய பரம்பரைசொத்தா..? உழைத்து ரத்தமாய் வியர்வை சிந்தி உண்டாக்கிய பணமா..?

இல்லை விக்னேஷ்,, இவை எல்லாம் நம் உழைப்பு..

ஒருபக்கம் விவசாயிங்க எலிகளை சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இன்னொரு பக்கம் இந்த கொள்ளையர்களின் ஆர்ப்பாட்டம்..கேட்கவே வேதனையா இல்லையா..? ‘’

ராகவன் சொல்ல சொல்ல விக்னேஷின் மனம் அவன் பால் கொண்டிருந்த மதிப்பை பலமடங்காக்கியது.

ராகவனுக்கு சில ஆயிரங்கள் கடன் இருப்பதை ஓரளவுக்கு அறிவான் விக்னேஷ். ஆயினும் தனக்காக அந்த பெரும் தொகையில் இருந்து ஒற்றை பைசாகூட பயன்படுத்திக்கொள்ளாத அசாத்திய நேர்மை ராகவனை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி இருந்தது. இப்போது அவன் சொன்ன ஒவ்வொரு உண்மையும் பொட்டில் அறைந்தாற்போல இருந்ததால் அமைதியாக அவன் சொன்னவற்றை ஆமோதிக்கும் விதமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

ராகவன் தொடர்ந்தான்.

‘’ விக்னேஷ், நானாக எதையும் தேடிப்பிடித்து திட்டமிட்டு இறங்கவில்லை. எனது பைக் பார்க்கிங்கிலிருந்து பைக்கை எடுக்கும்போது இடையில் சிக்கிய ஒரு பழைய கொரியர் பாக்கெட் என் சிந்தனைகளை தீவிரமாக்கி இறங்க வைத்தது.

அந்த பாக்கெட்டில் நீலமேகம் என்பவர் அமைச்சகம் ஒன்றின் விழாக் காட்சியை பதிய வைத்து அதில் சில கோடிங் மூலம் ஆற்காடு ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்களையும் அதை அணுகும் அனைத்து விதங்களையும் குறித்து வைத்திருந்தார்.

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த நான் இதற்காக நிறைய வாசித்தேன். ஒரு கவிதை எழுத பல நாள் சிந்தித்து பலமுறை திருத்தி எழுதி பதிப்பிக்கும் கலைவேந்தன் என்பவரை நான் இணையத்தில் அறிவேன். அந்த அக்கறையும் கவனமும் என்னை இந்த சிடியில் ஈடுபடுத்த ஊக்கிகளாய் உதவின. நிறைய கண்டுபிடிச்சேன்.

நான் நினைத்திருந்தால் எனக்கும் ஒரு வெளிநாட்டு கணக்கை உருவாக்கி அனைத்து கோடிகளையும் என் கணக்கில் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அந்த அளவுக்கு விவரங்கள் கிடைத்தன. ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏன்..?

பிறகு எனக்கும் இந்த திருடர்களுக்கும் என்ன வித்தியாசம்..?

ஆம் நானும் திருடனாய் மாறினேன். ராபின் ஹூடைப்பற்றி படிச்சிருப்பீங்க.. யெஸ். நானும் தமிழக ராபின் ஹுட் ஆக என்னை நினைத்துக்கொண்டேன்.

ஒரே நாளில் அனைத்து பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு மாற்ற முடிந்தாலும் அதற்கு என் உழைப்பு கடந்த 20 நாட்கள்..!

இந்தாங்க விக்னேஷ்.. இந்த சிடியில் நான் செய்த அனைத்துமே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

என்னைக்காவது நான் மாட்டுவேன் என்பது தெரியும். அதிலும் ஆறுமுகம் போன்ற முதலை வெளிப்படையா இறங்காவிட்டாலும் மறைமுகமா இறங்கி விசாரிப்பார்னு தெரியும். அவர் உங்களை அணுகியது அறிந்து கொண்டேன். எப்படின்னு கேக்கறீங்களா..?

ரெண்டு நாள் முன்பு உங்க லேப்டாப்பிலிருந்து அக்சஸைப் பார்த்தேன். உங்க ஐபி முகவரி தேடி நீங்க இதில் விசாரிக்க இறங்கி இருப்பதையும் அறிந்தேன்.

உங்களையும் ஃபோலோ செய்து பாத்து நிலைமையைக் கண்டறிந்தேன்.

இனி தப்பிக்க இயலாதுன்னு தெரிஞ்சு உங்களை எதிர்பார்த்தேன். நேற்று நீங்கள் கீழே இருக்கும் கொரியர் கடையில் விசாரித்ததையும் பார்த்தேன்.

நேற்று இரவு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க முழுவிவரம் தெரிஞ்சுக்காம வரவிரும்பலைன்னு புரிஞ்சுகிட்டேன்.

காலிப்பானையைச் சுரண்டிப்பார்ப்பது போல் நேற்று இரவு நீங்க ஆறுமுகம் அக்கவுண்ட்டை அக்செஸ் செய்து முயன்றதையும் கண்டுபிடிச்சு இதோ இப்ப உங்களை எதிர்பார்த்து தான் காத்திருந்தேன்.

என்னை நீங்க போலீஸில் ஒப்படைக்கலாம் விக்னேஷ்.

அட்லீஸ்ட் என் செயல்கள் இந்தியா முழுக்க வெளிவந்தா... என்னைப்போல பல ராகவன்கள் உருவாகலாம். எல்லா கறுப்புப்பணங்களும் அம்பலமாகலாம். நான் ரெடி விக்னேஷ். ‘’

கொஞ்ச நேரம் ராகவனையே உற்றுப்பார்த்த விக்னேஷ்..

அமைதியாக ‘’ என்னை உங்க நெருங்கிய நண்பரா ஏற்பதில் உங்களுக்கு மறுபரிசீலனை இருக்குமா ..? ‘’ என்று துல்லியமான ஆங்கிலத்தில் கேட்டான் ..


துடிப்புகள் விரைவில் அடங்கும்..!

sarcharan
09-04-2012, 02:08 PM
மூன்று நாட்கள் விடுமுறையில் சீக்கிரமாக கதையை மொத்தமாக பதித்துவிட்டீர்கள். படிக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது...

கலைவேந்தன்
09-04-2012, 02:37 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 21

ராகவனைச் சந்தித்து அலுவலகம் திரும்பிய விக்னேஷ் அடுத்து செய்யவேன்டியதை அமைதியாக ஆலோசித்தான். அவனது கண்கள் இடுங்கி அரைத்தூக்கத்தில் இருந்தது போல் இருந்தது.

அவனது இயல்பை அணுஅணுவாகப்புரிந்திருந்த வசந்தி அமைதியாக அவனருகே அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சற்று நேர ஆலோசனைக்குப் பின் விக்னேஷ் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டு அவனையும் அமைச்சரையும் சந்திக்க அமைச்சர் வீட்டுக்கு வருவதாகக் கூறினான்.

வசந்திக்கு இதயமே கையில் வந்துவிடும் போலிருந்தது.

'' விக்னேஷ், எதைச் செய்தாலும் தீர ஆலோசிச்சுதான் செய்வீங்க என்பது எனக்கு தெரியும். ஆனாலும் என்னமோ எனக்கு பயமா இருக்கு விக்னேஷ். நீங்க ராகவனைக் காட்டிக்கொடுக்கப் போறீங்களா..? அந்த பாவிகள் அவரைக் கொன்றே போட்டுவிடுவாங்க விக்னேஷ்..'' அவள் குரலில் பதட்டமும் நடுக்கமும் இருந்தது.

ராகவனைக்காட்டிக்கொடுக்க விக்னேஷ் மனம் இடம் தராது என்று அவனை நன்கறிந்த வசந்தி அறிவாள். தன் மனதுக்கு இசைந்தவனின் அனைத்து இயல்புகளையும் குணங்களையும் தெரிந்து வைத்திருப்பவள் தான் உண்மையான துணைவி இல்லையா..?

விக்னேஷ் அவளைக் கண்கொட்டாமல் சிரிது நேரம் கவனித்தான்.

மெல்லியதாய் கண்மை இட்டு சிவந்த கன்னங்களில் பயத்தின் காரணமாய் இன்னும் சிவப்பேறி ஒரு பட்டுப்பூவாய்த் தோற்றமளித்தாள்.

இவளைக் கட்டிக்கொள்ள நான் எத்தனை கொடுப்பினை செய்து இருக்கவேண்டும்.. தான் விரும்புவளை மணப்பதை விட தன்னை உயிராக நேசிப்பவளை அடைவது என்பது எத்தனை பெரிய நல்வாய்ப்பு..? பேசாமல் அமைச்சர் பிரச்சினையை முடித்துவிட்டு வசந்தியின் அப்பாவிடம் சென்று பெண்கேட்கலாமா..?

ஏற்கனவே சிலமுறைகள் வசந்தியின் பெற்றோரைக் கண்டிருக்கிறான் விக்னேஷ். இவன் மேல் அவர்களுகு வாஞ்சையும் மதிப்பும் அதிகம் உண்டு. வசந்தியும் இவனைக் காதலிப்பதை அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறாள். எனவே திருமணத்துக்கு கண்டிப்பாக சம்மதிப்பார்.

பெருமையும் ஏக்கமும் கலந்த பெருமூச்சொன்று எழுந்தது விக்னேனஷுக்கு.

'' வசந்தி டியர், ஒரு நல்ல மனிதனாய் இருப்பவன் நல்லவர்களைக் காட்டிக்கொடுக்கமாட்டான். மேலும் நான் ராகவனிடம் பெரிதும் மதிப்பு மட்டும் வைச்சு இருக்கலை. சிறந்த நண்பனாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். காதலில் கூட துரோகம் மன்னிக்கப்பட*லாம். நட்பில் கூடவே கூடாது. நான் ராகவனை நிச்சயம் காட்டிக்கொடுக்கமாட்டேன்.. நீ கவலைப்படாதே.. பாரு பயத்துல இன்னும் சிவந்து ரொம்ப அழகாய்த்தான் இருக்கே.. இப்பவே உன்னைக் கட்டிக்கலாம் போல தோணுது.. '' என்ற விக்னேஷைக் கண்கொட்டாமல் பார்த்து வியந்தாள் வசந்தி.

ஆகா... என்னை டியர் என்றானே.. இவன் நல்ல இயல்பு எனக்கு முன்பே தெரியுமே..திருடன்... என்னைக்கட்டிக்க தோணுதாமே.. அதை உடனே செய்தா என்னவாம்.. நானும் எப்போ எப்போன்னு காத்து இருக்கேனே.. பாவி.. பாவி.. அதை முதல்ல செய்யிடா..

கனவிலிருந்து நினைவுக்கு மீண்ட வசந்தி '' அப்படியானால் அமைச்சரை என்ன சொல்லி சமாதானம் செய்யப்போறீங்க விக்னேஷ்.. கோபத்துல உங்களை எதுவும் செய்துடக்கூடாதே... எனக்கு அதான் பயமா இருக்கு.. '' மிரண்ட குரலில் மெலிதாய்க் கூறினாள் வசந்தி.

'' ஹாஹா... நீயும் தான் என்னுடன் வரப்போறே.. எப்படி சமாளிக்கலாம்னு பார்ப்போம்.. என்னோடு அமைச்சர் வீட்டுக்கு வருவதில் பயமில்லையே..? '' என்று கண்ணடித்துக் கேட்டான் விக்னேஷ்.

'' இல்லை விக்னேஷ்.. உங்க எங்க வேணும்னாலும் வரத்தயார். உங்களுக்கு ஒன்னுன்னா அது எனக்கு அப்புரம் தான் நடக்கனும்.வாங்க போகலாம்..'' குரலில் உறுதியும் தெளிவும் இருந்தது வசந்தியிடம்.

'' இல்லை வசந்தி.. நீ வரவேண்டாம். அவர்கள் பொல்லாதவர்கள்.. நீயும் வந்து என்னுடன் ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நான் விளையாட்டாகத்தான் வருகிறாயா என்று கேட்டேன்.. உன்னை அழைத்துப் போக எனக்கு விருப்பமில்லை.. '' விக்னேஷ் குரலில் முதன் முதலாய் முழுக்காதலும் சொட்டியது.

'' நோ நோ விக்னேஷ்... உங்களை தனியா அந்த ஆபத்தில் அனுப்ப மனமில்லை. எதுவானாலும் ஒன்றாக நடக்கட்டும். நான் வரப்போவதை தடுக்காதீங்க ''' உறுதியாகக் கூறிவிட்டு அவனுடன் புறப்பட தன்னை சற்றே திருத்திக் கொண்டு தயாரானாள்.

பைக்கில் அவன் முதுகுப்புறமாகத்தொத்திக்கொண்டு அட்டை போல் ஒட்டிக்கொண்டாள் வசந்தி.

ஏற்கனவே அவன் மேல் இருந்த காதல் பலமடங்காகியது. காரணம் அவன் அவள் மேல் காட்டிய அக்கறையும் பொறுப்பும் தான்.

தனக்கு மிகவும் பாதுகாப்பாக தன் துணையை நம்பும் எந்தப்பெண்ணும் அவன் மேல் பலமடங்கு காதலைப் பொழிவாள் தானே..?

விக்னேஷின் பைக் அமைச்சர் வீட்டு வாசலில் நிறுத்தியபோது அமைச்சரும் மாணிக்கமும் தாமே முன் வந்து அவனை எதிர்கொண்டார்கள்.

அமைச்சரின் முகத்தில் எரிமலை போல் கோபம் கொப்பளித்திருந்ததைக் கண்ட வசந்தி அரண்டே போனாள்.


அடுத்த பகுதியில் .. நிறைவு பெறும்..!

கலைவேந்தன்
09-04-2012, 02:38 PM
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

இருவர் தமது வீட்டுக்கு வந்து இருக்கிறார்களே, அவர்களை வரவேற்க வேண்டும் என்னும் பண்பாட்டைக் கூட இழந்துவிட்ட அமைச்சர், விக்னேஷை கையைப்பிடித்து இழுக்காத குறையாய் அழைத்துக்கொண்டு தமது அறைக்குப் போனார்.

மாணிக்கமும் வசந்தியும் சிறந்த கவிஞர்கள் பின்னால் தொடர்ந்து செல்லும் சொற்களின் கூட்டம் போல பின் தொடர்ந்தனர்.

மாணிக்கத்தை உட்கார வைத்துவிட்டு அமைச்சர் மட்டும் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்துகொண்டே கேட்டார்.

‘’ சொல்லுங்க தம்பி... யாரந்த **** மகன்..? ‘’ *ஒரு பெண் உடன் இருக்கும் நினைவுகூட இழந்தவராய் அமைச்சர் ஆவேசமுடன் கேட்டார்.

‘’ சொல்றேன் ஐயா.. அதுக்கும் முன்னால எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்குங்க.. இறந்து போன நீலமேகத்துக்கு மும்பய்ல தொடர்பு இருந்ததா..? ‘’ விக்னேஷ்.

ஏதோ சிந்தித்தவராய் மாணிக்கத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அமைச்சர் சொல்லத்தொடங்கினார்.

’’ நீலமேகம் எங்களைப் போல அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லாம மிகப்பெரிய தொழிலதிபர்கள் பணமுதலைகளுடன் கூட தொடர்பு வைச்சு இருந்தார். எல்லாருக்கும் ஹவாலா மற்றும் கறுப்புப்பண பதுக்கல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வந்தார். ஏன் என்னாச்சு விக்னேஷ்..? முப்பய் இல்லை இந்தியாவுல அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப்பிடிச்சு கொல்லத்துடிக்குது என் மனசு.. சொல்லுங்க தயங்காம.. ‘’ ஆவலை அடக்க முடியாதவராய் பரபரத்தார்.

‘’ ஐயா, நான் உங்க நலன் மேல அக்கறை கொண்டவன். உங்க பாதுகாப்பை மிகவும் முக்கியமாகக் கருதிச் சொல்லுகிறேன். இந்த ஸ்விஸ் வங்கிக்கணக்கை இத்தோடு மறந்திடுங்க.. போனதொகை போகட்டும். அந்த தோகை மீண்டும் கிடைக்கவும் செய்யாது, அது மட்டுமில்லாம.. ‘’

அவனை முடிக்க விடவில்லை அமைச்சர்.

‘’ விக்னேஷ், என் பலம் உனக்கு தெரியாது. தமிழ்நாட்டுல மட்டும் இல்லை. இந்தியாவுல எங்கும் என்னால ஆளைப் பிடிச்சு காரியத்தைச் சாதிக்கமுடியும். அதைப்பத்தி கவலைப்படாம நீங்க அவன் விவரம் மட்டும் கொடுங்க.. மீதி நான் பாத்துக்கிறேன். ஒன்னு இல்லை ரெண்டு இல்லை. மூவாயிரம் கோடி ... ஹூம்..’’ அவர் கிட்டத்தட்ட சிங்கம் போலவே கர்ஜித்தார்.

‘’ ஐயா.. நான் சொல்லபோற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். பொறுமையா கேளுங்க..’’ என்ற விக்னேஷ் தொடர்ந்தான்.

‘’ நீலமேகம் உங்கள் ஸ்விஸ் அக்கவுண்ட்டை தொடங்கி வைத்து விவரங்களைச் சொல்லியதுடன் அதை எப்பவோ மறந்தும் இருப்பார். அவருக்கு தேவை கமிஷன் தொகை மட்டுமே.. அது நாள் வரை அவர் அனைவருக்கும் செய்ததும் அதுதான்..

ஆனா உங்க விஷயத்துலமட்டும் அவர் மாறா நடந்துகிட்டார். அதுக்கு காரணம் நீங்க அவருக்குக் கொடுத்த மெண்ட்டல் டார்ச்சர். அவரை அறையில் சிறைவைத்து ஆட்டிப்படைத்த செயல்கள் அவரைக் காயபபடுத்திவிட்டது. எத்தனையோ பேருக்கு அவர் இந்த மாதிரி சேவைகளைச் செய்து கொடுத்தும் யாருமே தராத மன அழுத்தங்களை நீங்க கொடுத்ததால் உங்க மேல அவர் மிகுந்த ஆத்திரம் அடைந்தார்..உங்க அக்கவுண்ட் விவரங்களை எல்லாம் ரெககனைஸ் செய்து அதை அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சி சிடி மூலமாக பதிந்து கோடிங் செய்து அதை தனக்கே கொரியர் அனுப்பிக்கிட்டார். அந்த கொரியர் முகவரில அவரது மும்பை முகவரி போட்டிருந்தார். ஏன்னா நீங்க அவரை ட்ரேஸ் செய்துடுவீங்கன்னு பயந்தார். மும்பைல அவருக்கு ஒரு ஃப்ளாட் அரேஞ்ச் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே இருந்த நம்பிக்கையான வேலையாள் மூலம் கொரியரைக் கைப்பற்றுவது என்றும் பிற்பாடு அவர் மும்பை செல்லும் போது அந்த கொரியரை வைத்து உங்களுக்கு பிரச்சினை கொடுப்பது அவரது நோக்கம்.

ஆனா நீங்க ஒருவழியா அவரை விடுவித்தபின்னால் கும்பகோணம் போனவர் அங்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். கிட்டத்தட்ட அது கொலை போலதான். ஏன்னா அவர் மிகுந்த மனத்தெளிவும் ஆரோக்கியமும் கொண்டவரா இருந்தார். உங்க கஸ்டடில இருந்த பதினைந்து நாட்கள் அவரைத் தகர்த்துடுச்சு.

அவர் மும்பைக்கு அனுப்பின கொரியர் அவர் கையில் கிடைக்காமலேயே போயிடுச்சு.

ஆனா அந்த கொரியர் யார் கையில் கிடைச்சது தெரியுமா..? ‘’

சற்று நிறுத்தினான் விக்னேஷ். அவனை வியப்போடும் பயத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தாள் வசந்தி.

ஆ ஆறுமுகத்தின் ஒரே முகம் இருண்டு போயிருந்தது. உணர்வுகள் பல வந்து வட்டமடித்துச் சென்றன.

மேலே சொல்லு என்பது போல் சைகை காட்டினார். தொடர்ந்தான் விக்னேஷ்.

‘’ அவருக்கு மும்பையில் தனி ஃப்ளாட்டும் வேண்டிய வசதிகளையும் கொடுத்து வைத்திருந்தவன் மும்பையின் டான் சாவூத் சுப்ராஹீம். அவன் கையில் தான் அந்த கொரியர் கிடைத்தது. உங்க பணத்தின் சாவி கிடைத்தது. ‘’ என்று விட்டு ஆறுமுகத்தின் முகத்தை ஆராய்ந்து நோக்கினான் விக்னேஷ்.

ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்தின் முகம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மரணக்களை பிராண பயம் தாண்டவமாடியது.

இதைத்தானே விக்னேஷ் எதிர்பார்த்தான்.

‘’ ஐயா.. சுப்ராஹீமுக்கு ரொம்ப உதவிசெய்த நீலமேகத்தின் அறிமுகம் சுப்ரமணிய சேகர் என்னும் ஒரு பெரிய வங்கி வல்லுனர் மூலமாக சுப்ராஹீமுக்கு கிடைத்தது. நீலமேகத்தை இழந்த கோபம் இன்னும் சுப்ராஹீமை விட்டு அகலவில்லை. உங்களைக் கொல்ல நினைத்தவன் ஏதோ காரணத்தால் விட்டுவைத்துவிட்டான். ஆனால் அந்த ஆத்திரம் அடங்காமல் உங்க கணக்கைச் சுரண்டி அவனது உலகம் முழுக்க இருக்கும் கணக்குகளில் செலுத்திக்கொண்டுவிட்டான். இந்த வகையில் சுப்ரமணியம் சேகர் மிக உதவியாக இருந்தார். இனி என்ன செய்யப்போறீங்க..? ‘’ என்று கேட்டுவிட்டு அவரைக்கூர்ந்து நோக்கினான்.

துளிக்கூட அச்சமில்லாமல் பேசும் விக்னேஷையே கூர்ந்து பார்த்த ஆறுமுகத்தின் முகம் ரத்தமிழந்த சவக்களை பெற்றது.

’’ இனி என்ன ஆகும் ..? ‘’ என்று அவனையே கேட்டார் ஆ ஆ.

‘’ இந்த விடயத்தை கண்டுக்காம விட்டுவிடுவது தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்ன தான் உங்க கிட்ட பலம் இருந்தாலும் இந்த சாவூத் சுப்ராஹீமை அசைக்கக் கூட முடியாது என்பது தான் உண்மை. அவன் கில்லர்களை வெளி நாட்டில் இருந்து தருவிப்பவன். அவனைப்பத்தி நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.’’

ஹூம் என்று பெருமூச்செறிந்தார் ஆறுமுகம்.

’’ நான் கும்பகோணம் சென்றிருந்தப்ப என்னை சிலர் கண்காணித்தாங்க.. முதலில் அது நீங்களாக இருக்கும்னு நினைச்சேன். பிறகுதான் தெரிந்தது. உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் சுப்ராஹீம் ஆளுங்க தான் என்னையும் ஃபாலோ செய்தது. இனி நீங்க கவனமா இருப்பது நலம். ‘’ பேச்சு முடிந்தது என்பதைப்போல தலை அசைத்துவிட்டு அமைதியானான் விக்னேஷ்.


ஆறுமுகத்தின் இல்லத்திலிருந்து வெளியேறிய விக்னேஷும் வசந்தியும் பைக்கில் மௌனமாகப் பயணித்தனர்.

சட்டென்று யாருமில்லாத சாலையில் நிறுத்தச் சொன்னாள் வசந்தி.

‘’ விக்னேஷ்.. நீங்க பொய் சொல்லுவீங்களா..? அதுவும் இத்தனை கோர்வையாக..? ‘’ என்று அவன் முகத்தைப் பார்த்து தன் தலையைச் சாய்த்து ஸ்டைலாகக் கேட்டாள் வசந்தி.

‘’ நான் சொன்னது முழுக்க உண்மை வசந்தி, ஒரே ஒரு விடயம் தவிர. ராகவன் கையில் சிடி கிடைத்ததைத் தவிர. சுப்ராஹீம் ஆறுமுகத்தைக் கருவிக்கொண்டிருப்பது நிஜம். என்னைக்காவது ஒரு அமைச்சர் படுகொலை என்று செய்தி வந்தால் பதறாதே..’’ என்று கண்சிமிட்டினான்.

‘’ மேலும் வசந்தி... பொய்ம்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் என்று வள்ளுவர் சொல்லி இருக்கார்.. ‘’ என்றான் விக்னேஷ்.

சட்டென்று பாய்ந்து அவனை இறுகத்தழுவி அவன் எதிர்பாராத வண்ணம் அவன் இதழில் ஆழமாக தன் இதழைப் பதித்து நீண்டதொரு முத்தம் தந்தாள் வசந்தி.

பைக் இப்போது உல்லாசமாகப் போய்க்கொண்டிருந்தது.

’’ இனி என்ன விக்னேஷ்..? ‘’ வசந்தியின் குரலில் ஆர்வம் தொனித்தது.

‘’ இப்போ நேரா ராகவன் கிட்ட போய் அவன் தப்பித்த தகவல் கொடுத்துட்டு ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் நாம் சாப்பிடப்போகிறோம். ‘’

‘’ அப்புறம்... ‘’

‘’ ஒரு முக்கியமானவரைச் சந்திக்கனும்.. ‘’

‘’ யாரை..? ‘’

’’ உங்க அப்பாவை.. ’’

வசந்தி மௌனமாக அவனை பின்னால் இறுக்கி அணைத்துக்கொண்டாள். விக்னேஷுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது.


நிறைவடைந்தது.

கலைவேந்தன்
09-04-2012, 02:42 PM
மூன்று நாட்கள் விடுமுறையில் சீக்கிரமாக கதையை மொத்தமாக பதித்துவிட்டீர்கள். படிக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து விட்டது...

உங்களை விடுத்து வேறு எவருடைய ஊக்கப்பின்னூட்டமும் இல்லாத நிலையில் ஏன் தொடங்கினோம் என வேதனித்து தொடங்கியதை முடித்தால் போதும் என்று முடிக்க நேர்ந்தது சர்சரண்.

இன்னொரு கதையின் நிலையும் இதுவேதான். எனவே அதையும் முடித்துவிட்டேன்.

இனி இங்கே தொடர் கதை எழுதுவதில்லை என்னும் முடிவுக்கும் வந்துவிட்டேன்.

எழுத்தாளனுக்கு தேவை ஊக்கம். அது இல்லாதபோழ்து எழுதி என்ன பயன்..?

உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சர்சரண்..!

sarcharan
09-04-2012, 02:54 PM
நன்றாய் இருந்தது கதை. தொடர்ந்து எழுதுங்கள்.

இடையில் நிறுத்தி விடாதீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் கற்பனை குதிரையை என் அனாவசியாமாக (பட்டினி போட்டு) கொல்கின்றீர்கள்? :D:D:D

கலைவேந்தன்
09-04-2012, 03:00 PM
நான் எழுதப்போவதில்லை என்று சொல்லவில்லை நண்பரே.. கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப்போல் ஆன நிலையில் இங்கே பதிவதில்லை என்றுதான் சொன்னேன்.

என் எழுத்துகளை என் உயிர் இருக்கும்வரை யாரும் தடுக்க இயலாது நண்பரே..

மிக்க நன்றி..!

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2012, 07:30 AM
இக்கதையினை முன்பு ஒரு முறை பாதிவரை படித்திருந்தாலும் தொடரமுடியவில்லை இன்று அந்த வாய்ப்பு கிட்டியது ..அருமையான கதை டாப் கியரில் பயணித்து சுபமாக முடிந்தது ..இக்கதையில் தங்களின் தகவல் சேகரிப்பு அதில் மன்றத்தினை இணைத்து சொன்ன பாங்கு அருமை ..மற்றொன்று சுவிஸ் வங்கி பற்றிய தகவல்களையும் அறிய முடிந்தது ..இது போல் நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கற்பனையையும் தோற்றுவித்தது....நிச்சயம் மீண்டும் இது போல் பல தொடரவேண்டும் கலைவேந்தன் அவர்களே....

pasupathi
30-08-2016, 05:08 PM
கதை ரொம்ப சூப்பரா இருந்தது