PDA

View Full Version : தன்மானம்



seguwera
28-08-2011, 02:13 PM
பொதுவா தமிழர்களுக்கு தன்மானம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது போன்று கவிஞர் பட்டுக்கோட்டை வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். ஒரு திரைப்படத்துக்கு அவர் பாடல் எழுதி, அப்படமும் வெளிவந்துவிட்டது. ஆனால் அவருக்கு தயரிப்பாளரிடமிருந்து அவருடைய சம்பளம் மட்டும் வரவில்லை. எத்தனையோ முறை அவரும் கேட்டுபார்த்தார். பணம் மட்டும் வரவில்லை. பொறுத்திருந்த பட்டுக்கோட்டையார் ஒருமுறை அவர் வீட்டுக்கே சென்று பணத்தைகேட்டார். அப்பவும் தயாரிப்பாளர் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கையை விட்டு எழுந்தார். இவர் ஐய்யா நான் என்னுடைய பணம் கேட்டு நிற்கிறேன் என்றார். அதற்க்கு தயாரிப்பாளர் "அப்படியே நில்லு ஆனால் பணம் இல்லை" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். உடனே பட்டுக்கோட்டையார் அங்கு மேஜையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து " தாயால் பிறந்தேன், தமிழால் வளர்ந்தேன் நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன் நீ யாரடா என்னை நில் என்று சொல்ல" என எழுதி விட்டு வந்துவிட்டார். அடுத்த நாள் பணம் பட்டுக்கோட்டையார் வீடு தேடி வந்தது.

sarcharan
07-09-2011, 09:38 AM
அந்த தயாரிப்பாளர் எப்பேர்பட்ட நீதிமான்...

Nivas.T
07-09-2011, 02:02 PM
சுவையான சம்பவம்

இதுபோல் கண்ணதாசனும் ஒரு அனுபவம் பற்றி கூறியதாய் நினைவு

நன்றி அண்ணா

vseenu
20-09-2011, 02:53 PM
இக்கால தயாரிப்பாளராக இருந்து பட்டுக்கோட்டையார் இம்மாதிரி கவிதை எழுதியிருந்தால் நாம் அவரை அடுத்த நாள் மருத்துவ மனையில்சென்று தான் பார்த்திருபோம்

Ravee
20-09-2011, 08:27 PM
இக்கால தயாரிப்பாளராக இருந்து பட்டுக்கோட்டையார் இம்மாதிரி கவிதை எழுதியிருந்தால் நாம் அவரை அடுத்த நாள் மருத்துவ மனையில்சென்று தான் பார்த்திருபோம்

அட இந்த குடும்பத்தை சந்திக்கு இழுப்பதே எல்லோருக்கும் வேலையா போச்சு ..... :lachen001: :D :lachen001:

seguwera
20-09-2011, 09:44 PM
பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கும் போகலாம் அல்லது தயாரிப்பாளர் சொரணையே இல்லாம "இதவிட எவ்வளவோ திட்டு வாங்கியாச்சி இது என்ன... "எனவும் இருக்கலாம் இல்லையா

சரண்,நிவாஸ், சீனு ரவி பின்னூட்டத்துக்கு நன்றி
ரவி

sures
03-10-2011, 12:11 PM
இப்படி நடந்த பிறகும், அவருக்கு அந்த பணம் கிடைக்கா விட்டால், அவர் அதே வசனங்களை ஒரு பாடலாக தொகுத்து அடுத்த பாடலில் வெளியிட்டிருப்பார். இவருடைய மானம் கப்பல் ஏறியிருக்கும்.
அதற்கு பயந்து தான் உடனே காசை கொடுத்து விட்டார் போல.

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-03-2012, 09:51 AM
பட்டுக்கோட்டையார் குறித்து கேள்விப்படாத ஒன்று...ஆயினும் அவரின் சுயமரியாதை மிகவும் பெரியதே :)