PDA

View Full Version : நாக்கு!M.Jagadeesan
24-08-2011, 06:47 AM
நாக்கைப் பற்றிக் கேவலமாக நாலுபேர் பேசினால் பேசட்டும்
நாக்கைப் பற்றி ஏளனமாக நாலுபேர் ஏசினால் ஏசட்டும்
அதற்காக
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவா முடியும்?

நாக்கிலே நரம்பில்லாமல் பேசுவோரைக் கேட்கிறேன்
அப்பர் நாவுக்கரசர் ஆனதும்
அனுமன் சொல்லின் செல்வன் ஆனதும்
நாக்கினால் தான் என்பதை இந்த நாடறியும்.

அண்ணாவின் நாக்குதான் அழகு தமிழை அள்ளிக் கொடுத்தது
திரு.வி.க.வின் நாக்குதான் தூய தமிழை சொல்லிக் கொடுத்தது.
வாரியாரின் நாக்குதான் பக்திச்சுவையை வாரி வழங்கியது.
பாரிலே நாக்கினால்தான் பலபேர் புகழ் பெற்றார்.

நாக்கின் நீளமோ நான்கு அங்குலம்தான்
மருமகளுக்கு நாக்கு நீளம் என்று மாமியார் சொல்வதும்
மாமியாருக்கு நாக்கு நீளம் என்று மருமகள் சொல்வதும்
புரியாது பேசுகின்ற புன்மொழிகள் அன்றோ!

நாக்கு! அதை
ஆளத் தெரிந்தோர்க்கு அற்புதமான ஆயுதம்
ஆயிரம் பீரங்கிகளின் வலிமை கொண்டது.
பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கும்
மேடையில் முழங்கும் அரசியல் வாதிக்கும்
கச்சேரி செய்கின்ற பாடகர் தமக்கும்
வழக்காடு மன்றத்தில் வக்கீல் களுக்கும்
நாக்கு இல்லையென்றால்
நாறிப்போகும் பிழைப்பு!

நாக்கிலே சரஸ்வதி வாழ்வதும்
நாக்கிலே சனி வாழ்வதும்
நாக்கின் குற்றமா? அல்லது நம் குற்றமா?
நாக்கு!
வாயெனும் கோவிலில் வாழுகின்ற தெய்வம்
வழிபடுவோர் தமக்கு வரமளிக்கும் தெய்வம்!

aren
24-08-2011, 07:03 AM
அருமையான கவிதை.

மூளை என்ன சொல்கிறதோ அதைத்தானே நாக்கு செய்கிறது. ஆனால் எல்லாவற்றையும் செய்துவிட்டு மூளை சிவனே என்று இருந்துவிடுகிறது. ஆனால் நாக்குதான் படாதபாடு படுகிறது பாவம்.

இன்னும் நிறைய கொடுங்கள்.

சான்வி
24-08-2011, 08:01 AM
வரம் கொடுக்கும் சாமியோ
உயிர் எடுக்கும் கொடும்வாளோ
இதுதான் நான் என்று
நீதான் தீர்மானிக்கிறாய்
நான் அல்ல

இப்படிக்கு உன் நாக்கு - ன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

M.Jagadeesan
24-08-2011, 08:20 AM
சான்வி,ஆரென் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

Ravee
24-08-2011, 09:21 AM
இருந்தாலும் நாக்கின் ஒரு முகம் பார்த்து புலம்பி இருக்கிறீர்கள். அதன் சுவை அறியும் திறன் வைத்து எத்தனை பிரச்சனை வருகிறது. அதற்கும் ஒரு கவி தாருங்கள் கவிஞரே.... :aetsch013:

Nivas.T
24-08-2011, 02:11 PM
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் :aetsch013:

த.ஜார்ஜ்
24-08-2011, 04:23 PM
//நாக்கின் நீளமோ நான்கு அங்குலம்தான்
மருமகளுக்கு நாக்கு நீளம் என்று மாமியார் சொல்வதும்
மாமியாருக்கு நாக்கு நீளம் என்று மருமகள் சொல்வதும்
புரியாது பேசுகின்ற புன்மொழிகள் அன்றோ!//
:D:D:D:D:D:D

innamburan
24-08-2011, 08:03 PM
நாக்கின் போக்கே அலாதி!
சாக்குப் பல சொல்லும்;
அக்கம் பககம் பாக்காது.
சக்கம்மா! அதை காப்பாத்து!

M.Jagadeesan
25-08-2011, 03:23 AM
இரவி,நிவாஸ்,ஜார்ஜ் மற்றும் இ.பூ. அவர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி!

கீதம்
26-08-2011, 03:06 AM
நல்மனத்தின் உரைகல்லாம் நாக்கு பற்றி நல்லதோர் கவிதை.

கல் தடுக்கிவிட்டது என்றேன் நான். நீயல்லவா உன் காலால் கல்லை இடறினாய் என்று திருத்தம் செய்து என் நா உரைத்த தவற்றை நயமாய் உணர்த்தியுள்ளீர்கள். நன்றியும் பாராட்டும் ஐயா.

M.Jagadeesan
26-08-2011, 09:40 AM
கீதம் அவர்களுக்கு!
" நாக்கு " பற்றி நீங்கள் பார்த்த கோணம் வேறு; நான் பார்த்த கோணம் வேறு. உங்கள் பணியை நீங்கள் சிறப்பாகவே செய்துள்ளீர்கள். உங்கள் கவிதைக்கு மறுப்புக் கவிதை எழுதியதாக எண்ணவேண்டாம். நாக்கு பற்றி நல்ல விதமாகவும் எழுதலாம் என்பதற்காகவே எழுதினேன்.

seguwera
26-08-2011, 08:21 PM
ஒரு வாக்கு வெல்லும் ஒரு வாக்கு கொள்ளும்
தீயினால் சுட்ட புண் உல் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல்லிளுக்கு பட்டு

saguna
27-08-2011, 02:38 AM
செகுவேரா அவர்களே,,ஒரு நாக்கு வெல்லும்..ஒரு நாக்கு கொள்ளுமா??? கொல்லுமா????

கீதம்
27-08-2011, 02:54 AM
கீதம் அவர்களுக்கு!
" நாக்கு " பற்றி நீங்கள் பார்த்த கோணம் வேறு; நான் பார்த்த கோணம் வேறு. உங்கள் பணியை நீங்கள் சிறப்பாகவே செய்துள்ளீர்கள். உங்கள் கவிதைக்கு மறுப்புக் கவிதை எழுதியதாக எண்ணவேண்டாம். நாக்கு பற்றி நல்ல விதமாகவும் எழுதலாம் என்பதற்காகவே எழுதினேன்.

என் கவிதை பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் இதை மறுப்புக் கவிதையாக எண்ணவில்லை ஐயா. என் கவிதையில் வெளிப்படுத்தியக் கருத்தின் மாற்றுக் கோணமென்றே எண்ணினேன். இந்தக் கோணத்தை நான் மிகவும் ரசித்தேன். அதையே என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் கவிதைகளின் கருவிலும், அதை வெளிப்படுத்தும் பாங்கிலும் மிகவும் வியப்பு கொள்பவள் நான். இந்தக் கவிதையில் வெளிப்பட்ட கருத்திலும் வியப்பெழுந்த காரணமாய் எழுந்த பின்னூட்டமே அது.:)

அமரன்
28-08-2011, 04:56 PM
இருந்தாலும் நாக்கின் ஒரு முகம் பார்த்து புலம்பி இருக்கிறீர்கள். அதன் சுவை அறியும் திறன் வைத்து எத்தனை பிரச்சனை வருகிறது. அதற்கும் ஒரு கவி தாருங்கள் கவிஞரே.... :aetsch013:

அண்ணே... அண்ணிக்கு ஒரு காப்பி................:)

அமரன்
28-08-2011, 04:59 PM
உலகின் அழிவுக்கு ஆயுதங்கள் காரணம் என்று குரல் கிழியக் கத்துகிறோம். ஆனால் அதை உற்பத்தி செய்யும் எங்களைப் பற்றி கதைப்பதே இல்லை. மனித மனக் குரங்கு சொல்றதைக் கேட்டால்தானே.. அதன் தொடர்ச்சிதான் நா மீதான பழியோ.. அட.. நா மீதான பழியையும் வழக்கப்படி நாக்குத்தானே சொல்லுது. துரோகி..

பாராட்டுகள் ஐய.

கீதம்
28-08-2011, 09:29 PM
இருந்தாலும் நாக்கின் ஒரு முகம் பார்த்து புலம்பி இருக்கிறீர்கள். அதன் சுவை அறியும் திறன் வைத்து எத்தனை பிரச்சனை வருகிறது. அதற்கும் ஒரு கவி தாருங்கள் கவிஞரே.... :aetsch013:


அண்ணே... அண்ணிக்கு ஒரு காப்பி................:)

அண்ணி கொடுத்த காப்பியால் வந்த வினைதான் இதுவாம்.:)

M.Jagadeesan
29-08-2011, 01:30 AM
அமரன், சேகுவேரா , சுகுணா ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு நன்றி!

கலைவேந்தன்
29-08-2011, 04:13 AM
நமீதான உலகமாய் மாறிவரும் போழ்தில் நாமீதான பெருமைகளை அள்ளி வழங்கிய ஜகதீசருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!

M.Jagadeesan
29-08-2011, 06:27 AM
கலைவேந்தன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கௌதமன்
31-08-2011, 03:12 PM
யாகாவாராயினும் நாகாக்கன்னு வள்ளுவரே சொல்லிட்டாரே..

(ஒரு ஐயம்..வள்ளுவர் வாசுகியிடம் தனிப்பட்ட முறையில் சொன்னதை பிற்பாடு குறளாக்கிட்டாரோ? )

கௌதமன்
31-08-2011, 03:17 PM
யாகாவாராயினும் நா காக்கன்னு ஐயன் வள்ளுவர் சொன்னார் அன்று

பாதுக்காப்பாய் இருக்க வேண்டும் பெருமைமிகு நாக்கு என்று ஐயா சொல்கிறார் இன்று

seguwera
31-08-2011, 03:27 PM
செகுவேரா அவர்களே,,ஒரு நாக்கு வெல்லும்..ஒரு நாக்கு கொள்ளுமா??? கொல்லுமா????
மன்னிக்கவும் saguna கொல்லும்தான் தவறை சுட்டி கட்டியதற்கு நன்றி